Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அ.தி.மு.க., ஆதரவு உலகிற்கு தெரியும்: கருணாநிதி

Posted:

சென்னை: 'நிலம் கையகப்படுத்தும் மசோதா, லோக்பாவில் ஓட்டெடுப்புக்கு வந்தபோது, பா.ஜ., கூட்டணி கட்சியான, சிவசேனா கூட புறக்கணித்த நிலையில், அ.தி.மு.க., ஆதரவு அளித்த காரணம், உலகிற்கு தெரியும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, 2013ல் கொண்டு வந்தது. அதில், நிலம் கையகப்படுத்த, 80 சதவீத விவசாயிகள் ஒப்புதல் வேண்டும்; விவசாயம் செய்யும் நிலமா என பார்க்க வேண்டும் என்று இருந்தது.இதில், திருத்தம் செய்து, பா.ஜ., அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தில், ...

தென் மாவட்ட தொடர் கொலைகள்: உளவு துறை செயல்படாததே காரணம்?

Posted:

தென் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முடியாமல், தமிழக அரசு தடுமாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு, உளவு போலீசார் சரிவர செயல்படாததே காரணம் என, நெல்லை, துாத்துக்குடி மாவட்ட மாவட்ட போலீசார் கூற ஆரம்பித்துள்ளனர்.இரண்டு மாதங்கள்:நெல்லை மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், அன்றாடம் இரண்டு அல்லது மூன்று கொலை கள் என்ற கணக்கில், கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன், துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள கொக்கராயன் குறிச்சியின் அ.தி.மு.க., ...

அரசின் காய்கறி விற்பனை திட்டம் தோல்வி: இழுத்து மூட முடியாமல் அதிகாரிகள் அவதி

Posted:

மலிவு விலை காய்கறி கடைகளில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, அதை மூடவும் முடியாமல், தொடர்ந்து நடத்தவும் முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர். தமிழகத்தில், ெவளிச்சந்தையில், காய்கறி விலை உயர்ந்ததை அடுத்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம், மலிவு விலை காய்கறி கடைகளை, 2013 ஜூன் மாதம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். கூட்டுறவு கடன் சங்கங் களில் கடன் பெற்ற விவசாயிகளிடம் இருந்து காய்கறி வாங்கப்பட்டு, மலிவு விலை கடைகளில், குறைந்த விலையில் விற்கப்பட்டதால், மக்களிடம், நல்ல வரவேற்பு காணப்பட்டது. தற்போது, சென்னை, 42 (இரண்டு நடமாடும் கடை); கோவை, 10 என, மொத்தம், 52 ...

அதிகாரி தற்கொலை வழக்கில் மாஜி மந்திரியின் உதவியாளர் சிக்கினார்: சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் அடுத்து கைதாவாரா 'அக்ரி?'

Posted:

நெல்லை வேளாண் அதிகாரி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், முன்னாள் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையாவை, 50, விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். விரைவில் அவர் கைதாகக் கூடும் என, தெரிகிறது. அத்துடன், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியும் சிக்குவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. நெல்லை, வேளாண்மை பொறியியல் துறையில், உதவி செயற்பொறியாள ராக இருந்தவர் முத்துக்குமாரசாமி, 57. அத்துறையில், டிரைவர் காலி பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்த, ஏழு பேரை பணி அமர்த்தினார். இதனால், அப்போது வேளாண்மைத் ...

தமிழர்களுக்கு சம உரிமையும், மரியாதையும் வேண்டும்: யாழ்ப்பாணத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted:

கொழும்பு: ''இலங்கையில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சம உரிமையும், மரியாதையும் அளிக்கப்பட வேண்டும்,'' என, யாழ்ப்பாணத்தில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, முதல் நாளான நேற்று முன்தினம், இலங்கை பார்லிமென்டில் உரை நிகழ்த்தினார். பின், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், மோடியின் இரண்டாவது நாள் சுற்றுப் பயணம் நேற்று துவங்கியது. இலங்கை அனுராதபுரத்தில் உள்ள பழமையானதும், மிகவும் பிரசித்தி பெற்றதுமான மகாபோதி கோவிலில், பிரதமர் மோடி ...

தமிழக அரசு அழைப்பை சட்டை செய்யாத நாடுகள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு

Posted:

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டிற்கு, 'பார்ட்னர் நேஷன்' ஆக இருக்க, தமிழக அரசு விடுத்த அழைப்பை, பல நாடுகள் புறக்கணித்துஉள்ளன.தமிழகத்தில், அன்னிய முதலீட்டை ஈர்க்க, 'குளோபல் இன்வெஸ்டார் மீட்' என்ற பெயரில், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது.

தனிப்பிரிவு:
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், மே, 23, 24ம் தேதிகளில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்க இருக்கிறது. இதன் மூலம், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்ட, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு, ...

மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடையால் தமிழகத்தில் பாதிப்பு: தோல் தொழிலுக்கு வந்தது கடும் சிக்கல்

Posted:

தடை மகாராஷ்டிராவில் தான் என்றாலும், இடி தமிழகத்திற்கு தான். மாட்டிறைச்சி விற்பதையும், சாப்பிடுவதையும் தடை செய்ய மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.ஏற்கனவே பிராணிகள் பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக, பசு வதை தடுப்பு அங்கே அமலில் இருக்கிறது. இருந்தாலும், அதில் காளைகள், எருதுகள் மற்றும் கன்றுகளையும் சேர்த்து சமீபத்தில் சட்டத்தை திருத்தியுள்ளது மகாராஷ்டிரா பா.ஜ., அரசு.இந்த தடையால், தமிழகத்தில் அமோகமாக இயங்கி வரும் தோல் சார்ந்த தொழில்களுக்கு தேவையான கச்சா தோல் வரத்து பாதிக்கப்படும் என்றும், உற்பத்தி விலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம் ...

ராகுல் வீட்டை டில்லி போலீஸ் சிறப்பு குழு உளவு பார்த்ததா? பார்லிமென்டில் சர்ச்சை கிளப்ப காங்., திட்டம்

Posted:

புதுடில்லி: டில்லி போலீசின் சிறப்பு குழுவினர், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் வீட்டிற்கு சென்று, சமீபத்தில் விசாரணை நடத்தியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது, 'மோடி அரசின் உளவு பார்க்கும் செயல்' என, விமர்சித்துள்ள காங்கிரஸ் மேலிடம், இந்தப் பிரச்னையை பார்லிமென்டில் எழுப்பப் போவதாகவும், உள்துறை அமைச்சர்பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.லோக்சபா தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து, கட்சியை புனரமைப்பதற்கான நடவடிக்கையில், அந்தக் கட்சியின் துணை தலைவர் ராகுல் ...

ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த முடியாமல் அதிகாரிகள் பரிதவிப்பு: தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள்

Posted:

தமிழகம் முழுவதும் விதிகளுக்கு புறம்பாக, உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும், பிரமாண்டமான விளம்பர போர்டுகளால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். விதிமீறலில், ஆளுங்கட்சியினர் அதிக அளவில் ஈடுபடுவதால், அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர். சென்னை நகரில் அகற்றப்பட்ட விளம்பர போர்டுகள் மீண்டும் முளைக்கத் துவங்கி விட்டன. அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.இந்தியாவின் எந்த நகரிலும் இல்லாத அளவு சென்னை நகரில் விளம்பர போர்டுகள் எல்லா சாலைகளையும் ஆக்கிரமித்து இருந்தன. விதிமுறைகளை மீறி, விபத்து அபாயங்களை ஏற்படுத்தி ...

நீதிபதிகள் பரிந்துரை பட்டியலுக்கு எதிர்ப்பு: கவர்னரை சந்தித்து வழக்கறிஞர்கள் முறையீடு

Posted:

சென்னை: நீதிபதிகள் நியமன பரிந்துரை பட்டியலை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக கவர்னரை, வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், நேற்று சந்தித்து முறையிட்டனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில், 18 நீதிபதிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன. இவற்றுக்கு, முதற்கட்டமாக, ஒன்பது பேரை பரிந்துரைத்து, உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.இந்தப் பட்டியலுக்கு, வழக்கறிஞர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனுப்பப்பட்ட பட்டியலில், அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் இல்லை; பெண்கள் இடம் பெறவில்லை என, கருத்து தெரிவிக்கப்பட்டது.பட்டியலை திருப்பி அனுப்ப, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™