Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 43 பேர் காரைக்கால் வந்தனர்

Posted: 14 Mar 2015 01:30 PM PDT

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட காரைக்கால், நாகப்பட்டினம் மீனவர்கள் 43 பேர் காரைக்கால் துறைமுகத்துக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தனர்.

கேரளத்தில் முழு அடைப்பு: தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்

Posted: 14 Mar 2015 01:29 PM PDT

கேரளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கோவையில் இருந்து இயக்கப்படும் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

உளுந்தூர்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி 4 சிறுமிகள் சாவு

Posted: 14 Mar 2015 01:29 PM PDT

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே குட்டையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள், நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.

செம்மங்குடியில் மார்ச் 18-ல் மக்கள் நேர்காணல் முகாம்

Posted: 14 Mar 2015 01:26 PM PDT

கும்பகோணம் வட்டம், செம்மங்குடி கிராமத்தில் வரும் மார்ச் 18-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறவுள்ளது.

"பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தால் தமிழர்களுக்கு எந்தப் பலனும் கிடையாது'

Posted: 14 Mar 2015 01:26 PM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தால் ஈழத்தமிழர்களுக்கும், தாயக தமிழர்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தெரிவித்தார்.

மேக்கேதாட்டுவில் தடுப்பணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியைத் தடுக்க வேண்டும்

Posted: 14 Mar 2015 01:26 PM PDT

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக மாநிலத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வரி பாக்கி செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைப்பு

Posted: 14 Mar 2015 01:26 PM PDT

பட்டுக்கோட்டையில் வரி பாக்கியை செலுத்தாத கடைகளை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனர்.

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 14 Mar 2015 01:25 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஏழை, எளியோர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா கும்பகோணம் மகாமகக் குளம் மேல்கரையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் விழா

Posted: 14 Mar 2015 01:25 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மேலவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் விழா பள்ளி வாளகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்துவது அவசியம்'

Posted: 14 Mar 2015 01:25 PM PDT

பட்டுக்கோட்டை - சாயல்குடி மாநில நெடுஞ்சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்த வேண்டும் என மக்களவையில் தஞ்சாவூர் தொகுதி உறுப்பினர் கு. பரசுராமன் அண்மையில் வலியுறுத்தினார்.

வெவ்வேறு சாலைவிபத்துகளில் இருவர் சாவு

Posted: 14 Mar 2015 01:24 PM PDT

தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். கோவை மாவட்டம், சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ஏ. நடராஜன் (80). இவர் தஞ்சாவூர் அருகே வல்லம் அசோக் நகரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

மகாமகக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடக்கம்

Posted: 14 Mar 2015 01:24 PM PDT

கும்பகோணம் மகாமகக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி சனிக்கிழமை முதல் தொடங்கியது. மகாமகக் குளம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவும் 30 அடி ஆழமும் உடைய இந்த குளத்தில் எப்போதும்

ரயிலில் பெண்ணிடம் 17 பவுன் திருட்டு

Posted: 14 Mar 2015 01:24 PM PDT

ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் சுமார் 17 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

குடுமியான்மலையில் எண்ணெய்வித்து தொழில்நுட்பப் பயிற்சி

Posted: 14 Mar 2015 01:23 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு எண்ணெய்வித்து தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக சார்பில் மரக்கன்று நடும் விழா

Posted: 14 Mar 2015 01:23 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு புலியூர் பள்ளியில் சனிக்கிழமை 1067 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு ரூ.4.40 லட்சம் தீருதவித்தொகை

Posted: 14 Mar 2015 01:23 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு தீருதவித்தொகையாக (யண்ஸ்ரீற்ண்ம் தங்ப்ண்ங்ச் ஊன்ய்க்) ரூ. 4 லட்சத்து 40 ஆயிரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

திருட்டு வழக்கில் 2 பெண்கள் கைது

Posted: 14 Mar 2015 01:22 PM PDT

அரியலூர் பேருந்து நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட புதுச்சேரியைச் சேர்ந்த 2 பெண்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நீதித்துறைதான் உலகையும், நாட்டையும் வழி நடத்துகிறது'

Posted: 14 Mar 2015 01:22 PM PDT

நீதித்துறைதான் உலகையும், நாட்டையும் வழி நடத்துகிறது என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன்.

கோட்டைப்பட்டினத்தில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்

Posted: 14 Mar 2015 01:22 PM PDT

அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

"பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு மதுவே அடிப்படைக் காரணம்'

Posted: 14 Mar 2015 01:21 PM PDT

இன்றைய கால கட்டத்தில் நடக்கும் சமூக குற்றங்கள், விபத்துகள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் ஆகியவற்றிற்கு மதுவே அடிப்படைக் காரணமாக உள்ளது என்றார் சர்வோதய மண்டல் தலைவர் (காந்தி மியூசியம் மதுரை) கே.எம். நடராஜன்.

"புத்தகங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தும்'

Posted: 14 Mar 2015 01:21 PM PDT

புத்தகங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தும் என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார்.

ராஜகிரியில் மக்கள் குறைகேட்பு முகாம்: ரூ.4.80 லட்சம் நல உதவி

Posted: 14 Mar 2015 01:21 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ராஜகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் ரூ. 4.80 லட்சம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Mar 2015 01:20 PM PDT

தமிழக முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்:நலத் திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 14 Mar 2015 01:20 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள பசுபதிகோவில் திமுக கிளை சார்பில், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் 63-வது பிறந்த நாள் விழாவையொட்டி, ரத்த தான முகாம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்தில் 1,719 வழக்குகளுக்குத் தீர்வு

Posted: 14 Mar 2015 01:19 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,719 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

"இலவச பயிற்சி வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

Posted: 14 Mar 2015 01:19 PM PDT

நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில், சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் தொழில்முறை வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 14 Mar 2015 01:18 PM PDT

நாகப்பட்டினம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், பாப்பாகோயில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனமும் இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாமை அண்மையில் நடத்தின.

"மக்கள் நலனுக்காகவே நலத் திட்டங்கள்'

Posted: 14 Mar 2015 01:18 PM PDT

மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அதிமுக அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது என்றார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

அருவாப்பாடி ஊராட்சியில்"அம்மா' திட்ட முகாம்

Posted: 14 Mar 2015 01:17 PM PDT

மயிலாடுதுறை வட்டம், அருவாப்பாடி ஊராட்சியில் "அம்மா' திட்ட சிறப்பு மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தனியார் தங்கும் விடுதிகளில் போலீஸார் ஆய்வு

Posted: 14 Mar 2015 01:17 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடியில் சனிக்கிழமை தனியார் தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

காணாமல் போனவர்களை அறிய காவல் துறை வலைதளம்

Posted: 14 Mar 2015 01:17 PM PDT

மாநிலம் முழுவதும் காணாமல் போனவர்கள், இறந்து அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் குறித்து அறிந்து கொள்ள தமிழக காவல் துறை வலைதளம் தொடங்கியுள்ளது.

இந்த வார கலாரசிகன்

Posted: 14 Mar 2015 01:16 PM PDT

சில நேரங்களில் நம் மீதே நமக்குக் கோபம் ஏற்படுவதுண்டு. கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் "செம்புலம்' என்கிற பன்னாட்டுத் தமிழாராய்ச்சிக் காலாண்டிதழை எப்படி நான் கவனத்தில் கொள்ளாமல் விட்டேன் என்று நினைக்கும்போது, எனக்குள் ஏற்பட்ட உணர்வு அத்தகையது.

"விழிப்புணர்வால்தான் ஆரோக்கியம் கிடைக்கும்

Posted: 14 Mar 2015 01:16 PM PDT

நுகர்வோர் விழிப்புணர்வோடு இருந்தால்தான் ஆரோக்கியமாக வாழ முடியும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

வேலைவாங்கித் தருவதாக மோசடி: இருவர் மீது வழக்கு

Posted: 14 Mar 2015 01:16 PM PDT

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த இருவர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிந்தனர்.

டேங்கர் லாரி - கார் மோதல் : தம்பதி காயம்

Posted: 14 Mar 2015 01:15 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே டேங்கர் லாரியும், காரும் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி காயமடைந்தனர்.

தோகைமலையில் லாரி பறிமுதல்

Posted: 14 Mar 2015 01:15 PM PDT

தேகைமலையில் அதிக பாரமுள்ள கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரியை குளித்தலை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தார்.

லோக் அதாலத் : ரூ. 2 கோடிக்கு நிவாரணம்

Posted: 14 Mar 2015 01:14 PM PDT

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக்அதாலத்) 300 வழக்குகளில் ரூ.2 கோடிக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

வல்லாரா? வல்லுநரா?

Posted: 14 Mar 2015 01:14 PM PDT

பழந்தமிழில் வல்லார், வல்லுநர் என்னும் சொற்கள் முறையே வல்லமை இல்லாதவரையும் வல்லமை உடையவரையும் குறிக்கப் பயன்பட்டன.

அமைதிப் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்

Posted: 14 Mar 2015 01:14 PM PDT

விஷ்வ ஹிந்து பரிஷித் சார்பில், விதிகளை மீறி மணல் அள்ளுவதை கண்டித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை நடைபெறவிருந்த மறியல் போராட்டம் பேச்சுவார்த்தைக்குப்பின் கைவிடப்பட்டது.

கே. பேட்டை ஊராட்சியில் வளர்ச்சிப்பணி ஆய்வு

Posted: 14 Mar 2015 01:14 PM PDT

குளித்தலை ஒன்றியம், கே. பேட்டை ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

அரியலூரில் 1000 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்

Posted: 14 Mar 2015 01:14 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் 1000 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை வழங்கினார்.

விருந்து - ஒளித்தலும் வைத்தலும்

Posted: 14 Mar 2015 01:13 PM PDT

விருந்து உபசரித்தல் என்பது தமிழரின் வாழ்வியலில் முக்கியமான ஒன்று. புறநானூற்றில் மொத்தம் 12 இடங்களில் நேரடியாக "விருந்து' எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

முல்லையும் பூத்தியோ...!

Posted: 14 Mar 2015 01:12 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் (திருமெய்யம்) வட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தைச் சேர்ந்த "ஒலிய மங்கலம்', தமிழக வரலாற்றில் இடம்பெறத்தக்க சிறப்பு வாய்ந்த ஊராகும். ஒலிய மங்கலத்தின் இலக்கியப் பெயர் "ஒல்லையூர்' ஆகும்.

"சொல் புதிது' பகுதியில் இடம்பெற்ற சொற்கள்

Posted: 14 Mar 2015 01:11 PM PDT

Whistle Blower - இடித்துரைப்பாளர்

அறிவியல் தமிழ் 7: சங்க இலக்கியத்தில் புவி வெப்பமாதலும் பருவநிலை மாறுபாடும்

Posted: 14 Mar 2015 01:09 PM PDT

சங்கப் பாடல்களுள் பாலைத் திணைப் பாடல்களில் பயின்றுவரும் பாலை நிலக்காட்சிகள் "நடப்பு உலகளாவிய புவி வெப்பமடைதல்' கருத்தாக்கத்துடன் ஒப்புநோக்கத் தக்கவையாக உள்ளன. தவிர, இன்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிற புவி வெப்பமடைதலும் பருவகால மாறுபாடுகளும் தொன்றுதொட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளதைக் காண்போம்.

நீதிநெறி விளக்கம்: உண்டி சுருங்குவர்

Posted: 14 Mar 2015 01:08 PM PDT

துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம் அயிற்சுவையின் ஆகுவஎன் றெண்ணி - அயிற்சுவையும் பித்துணாக் கொள்பபோல் கொள்ப பிறர்சிலர்போல் மொத்துணா மொய்ம்பி னவர். (பாடல்-85)

ஆலம் விடுதலையில் தவறில்லை: மெஹ்பூபா

Posted: 14 Mar 2015 12:47 PM PDT

"பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலமை விடுதலை செய்ததில் தவறில்லை' என்று ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்தார்.

பேரவை மோதல் எதிரொலி: கேரளத்தில் முழு அடைப்பு

Posted: 14 Mar 2015 12:46 PM PDT

கேரள சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மோதல் சம்பவத்தைக் கண்டித்து, எதிர்க்கட்சி கூட்டணியான இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தால் அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்: 2 பேர் படுகாயம்

Posted: 14 Mar 2015 12:43 PM PDT

கச்சத்தீவு கடல் பகுதியில் சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 2 ரயில்களில் எம்.எல்.ஏ.க்களுக்கான இடஒதுக்கீடு திடீர் ரத்து

Posted: 14 Mar 2015 12:42 PM PDT

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சில ரயில்களில் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டு வரும் முன்பதிவு இடங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

காவிரியில் அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: கர்நாடகத்துக்கு விஜயகாந்த், ராமதாஸ் கண்டனம்

Posted: 14 Mar 2015 12:41 PM PDT

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் தடுப்பணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

ராகுல் குறித்து போலீஸார் திடீர் விசாரணை

Posted: 14 Mar 2015 12:40 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டில் காவல் துறையினர் திடீர் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி தெரிவித்தார்.

ஜயங்கொண்டத்தில் மகளிர் தின விழிப்புணர்வுப் பேரணி

Posted: 14 Mar 2015 12:35 PM PDT

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற "மகளிர் தின விழிப்புணர்வுப் பேரணி' சனிக்கிழமை நடைபெற்றது.

பெண்ணைக் காதலித்து கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணுடன் திருமணம்: இளைஞர் கைது

Posted: 14 Mar 2015 12:35 PM PDT

பெரம்பலூர் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலித்து கர்ப்பமாக்கி, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞரை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

உலக நாடுகளுடனான இந்திய உறவு புதிய நிலையை எட்டியுள்ளது

Posted: 14 Mar 2015 12:35 PM PDT

உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவு புதிய நிலையை எட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பெரம்பலூரில் ஜெ. பேரவை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

Posted: 14 Mar 2015 12:35 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் 1,067 நபர்களுக்கு மா, பலா, நெல்லி உள்பட 14 வகையான பழ மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

" மாணவர்கள் நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

Posted: 14 Mar 2015 12:34 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா' வில் நுகர்வோரின் கடமை,உரிமை குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

Posted: 14 Mar 2015 12:34 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட ஊக்குவிப்பு விழிப்புணர்வு முகாம் மார்ச் 17, 18-ம் தேதிகளில் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.

அரசு பொது சேவை மையத்தில் 636 சான்றுகள் அளிப்பு

Posted: 14 Mar 2015 12:34 PM PDT

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொது சேவை மையத்தின் மூலம், இதுவரையில் பயனாளிகளுக்கு 636 சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.65 ஆயிரம் திருட்டு

Posted: 14 Mar 2015 12:33 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகரில் குடியிருப்பவர் சிங்கராவேல்ராமசாமி மகன் தங்கத்துரை (40). ஆடிட்டர். இவர் கட்டுமாவடி முக்கத்தில் உள்ள தனது

மக்கள் நீதிமன்றத்தில் 1,736 வழக்குகளுக்குத் தீர்வு

Posted: 14 Mar 2015 12:33 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான (லோக் அதாலத்) மக்கள் நீதிமன்றத்தில் 1,736 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மார்ச் 17-ல் சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Mar 2015 12:32 PM PDT

நெடுஞ்சாலைத் துறை தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 17 ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டப் பொறியாளர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென சாலைப் பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திமுக சார்பில் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு 60 யூனிட் ரத்தம்

Posted: 14 Mar 2015 12:32 PM PDT

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் சனிக்கிழமை 60 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.

"கர்நாடகத்தில் நிதி ஒதுக்கியிருப்பதைத் தடுக்க வேண்டும்'

Posted: 14 Mar 2015 12:32 PM PDT

கர்நாடக நிதிநிலை அறிக்கையில் மேக்கேதாட்டில் அணை கட்ட நிதி ஒதுக்கியிருப்பதை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Posted: 14 Mar 2015 12:31 PM PDT

மானிய விலையில் நவீன வேளாண் இயந்திரங்கள் பெற திருச்சி மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமன்றத்தில் 1040 வழக்குகளுக்கு தீர்வு

Posted: 14 Mar 2015 12:31 PM PDT

திருச்சி மாவட்டத்தில் 7 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மகா மக்கள் நீதிமன்றத்தில் 1040 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது. இவற்றில் ரூ. 3.72 கோடி மதிப்புள்ள நட்டஈடு பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுத் தரப்பட்டது.

குஜராத்தில் ரூ. 30 லட்சம் திருட்டு: மேலும் ஒரு பெண் கைது

Posted: 14 Mar 2015 12:31 PM PDT

குஜராத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 30 லட்சத்தை திருடிய வழக்கில் மேலும் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

வீட்டில் நகை திருட்டு: சிறுவன் கைது

Posted: 14 Mar 2015 12:31 PM PDT

திருச்சி கொட்டப்பட்டு அருகே வீட்டில் நகையை திருடிய 15 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஆம்பூர்

Posted: 14 Mar 2015 12:31 PM PDT

ஓய்வூதியத்தைத் திருத்தி வழங்க ஓய்வுபெற்ற காவலர்கள் வலியுறுத்தல்

Posted: 14 Mar 2015 12:31 PM PDT

ஓய்வுபெற்ற காவலர்களுக்கு அரசாணைப் படி உரிய பதவி உயர்வுகள் வழங்கி ஓய்வூதியத்தைத் திருத்தி வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"மாணவர்கள் ஒழுக்கத்துடன் வாழ்வது அவசியம்'

Posted: 14 Mar 2015 12:31 PM PDT

மாணவர்கள் ஒழுக்கத்துடன் வாழ்வது அவசியம் என்றார் சேலம் மாவட்ட ஆட்சியர் கே. மகரபூஷணம். தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 59-வது கல்லூரி நாள் விழாவில் அவர் மேலும் பேசியது:

கடற்கரைச் சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

Posted: 14 Mar 2015 12:31 PM PDT

நாகப்பட்டினத்தில் நீண்ட நாட்களாக கப்பி சாலையாக இருக்கும் முதலாவது கடற்கரை சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதியினர் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

நியாயவிலைக் கடை பணியாளர் சங்கக் கூட்டம்

Posted: 14 Mar 2015 12:30 PM PDT

நாகையில் நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1401 குடும்பங்களுக்கு விலையில்லாப் பொருள்கள்

Posted: 14 Mar 2015 12:30 PM PDT

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் ஊராட்சியில் 1401 குடும்பங்களுக்கு அரசின் விலையில்லா பொருள்களான மின்விசிறி,கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை வழங்கினார்.

அதிமுக சார்பில் நல உதவிகள்

Posted: 14 Mar 2015 12:30 PM PDT

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொட்டையூரில் அண்மையில் நடைபெற்றது.

பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் தேசிய கருத்தரங்கம்

Posted: 14 Mar 2015 12:30 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் மின்னியல், மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

"தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது'

Posted: 14 Mar 2015 12:30 PM PDT

தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது என்று எழுத்தாளர் உமாதேவி பேசினார். திருவண்ணாமலையை அடுத்த சாவல்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சங்கப் பலகை

தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

Posted: 14 Mar 2015 12:30 PM PDT

திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரியின் கணினித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

34 பேருக்கு ரூ.1 கோடி வங்கிக் கடன்

Posted: 14 Mar 2015 12:30 PM PDT

இந்தியன் வங்கியின் செங்கம் கிளை சார்பில் 34 பேருக்கு தொழில் தொடங்க ரூ. 1 கோடி கடன் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சென்னியநல்லூரில் ரேஷன் குறைதீர் முகாம்

Posted: 14 Mar 2015 12:29 PM PDT

குத்தாலம் வட்டம், சென்னியநல்லூர் கிராமத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் மார்ச் 17-ல் விரைவு ரத்த பரிசோதனை முகாம்

Posted: 14 Mar 2015 12:29 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 49 பள்ளிகளில் விரைவு ரத்த பரிசோதனை முகாம் மார்ச் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது.

"அயோடின் கலந்த உப்பு மட்டுமேவிற்பனை செய்ய வேண்டும்

Posted: 14 Mar 2015 12:29 PM PDT

நாகையில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அயோடின் உப்பின் அவசியம் எனும் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 Mar 2015 12:28 PM PDT

மத்திய அரசு மற்றும் எல்ஐசி நிர்வாகத்தை கண்டித்து, மயிலாடுதுறையில் எல்ஐசி முகவர்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரியில் அணை கட்ட நிதி ஒதுக்கியகர்நாடகத்துக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்

Posted: 14 Mar 2015 12:28 PM PDT

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை

Posted: 14 Mar 2015 12:28 PM PDT

தஞ்சை

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

தனியார் சர்க்கரை ஆலைகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.854 கோடி கரும்பு நிலுவைத் தொகை வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் மீது தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் எதிரில் சனிக்கிழமை நடைபெற்றது.

மளிகைக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

அரக்கோணம் அருகே மளிகைக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், பெண் காயம் அடைந்தார்.

இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

குடியாத்தம் செதுக்கரையை அடுத்த பொன்னம்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சங்கர்(31), தற்கொலை செய்துகொண்டார்.

கல்வி நிலையங்களில் ஆண்டு, விளையாட்டு விழாக்கள்

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா, விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

20-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

விவசாயிகள் குறைதீர் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20)காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஓடும் ரயிலில் தவறி விழுந்த அரசு மருத்துவர் சாவு

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

ஓடும் ரயிலில் செல்லிடப்பேசிக்கு "சார்மின்னேற்றம் (சார்ஜ்) செய்ய முயன்ற அரசு மருத்துவ அலுவலர் தவறி விழுந்து இறந்தார்.

2 குடிசை வீடுகள் நாசம்

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

வாணியம்பாடி அருகே 2 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின. வாணியம்பாடி நியூடில்லி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஈசாக். இவரது குடிசை வீடு சனிக்கிழ

அரக்கோணம் நகரில் வார்டுகளை பிரிக்க பாமக வலியுறுத்தல்

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

அரக்கோணம் நகரில் வாக்காளர்கள் அதிகம் உள்ள பெரிய வார்டுகளைப் பிரிக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

வேற்று சாதிப் பெண்ணை காதலித்த இளைஞரை தண்டித்த கிராமத்தினர்

Posted: 14 Mar 2015 12:27 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்த இளைஞரை ஆடைகளை களையச் செய்து அவரை கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்: பல்கலை.களுக்கு பிரணாப் அறிவுறுத்தல்

Posted: 14 Mar 2015 12:26 PM PDT

மத்திய அரசின் திட்டங்களுக்கு, பல்கலைக்கழகங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஹரியாணாவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை

Posted: 14 Mar 2015 12:25 PM PDT

ஹரியாணா மாநிலத்தில், மாட்டு இறைச்சி விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும், பசுவதையில் ஈடுபடும் நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில், மசோதாவையும் அந்த மாநில அரசு தாக்கல் செய்ய உள்ளது.

ரூ.20 கோடி ஹெராயின் பறிமுதல்: 4 பேர் கைது

Posted: 14 Mar 2015 12:25 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹெராயின் கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.20 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை மாநில காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் உத்தம் சந்த் தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சல்: பலி 1,674-ஆக உயர்வு

Posted: 14 Mar 2015 12:24 PM PDT

நிகழாண்டில் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 1,674-ஆக உயர்ந்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,103-ஆக அதிகரித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™