Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மானிய காஸ் இணைப்பை வேண்டாம் என்ற 10,000 பேர் முன்னுதாரணம்: அதிக வருமானம் உள்ள நடிகர்கள், தொழிலதிபர்கள்

Posted:

தமிழகத்தில், பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர், 'மானிய விலை, சமையல் காஸ் சிலிண்டர் வேண்டாம்' என, எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்புதல் படிவம் கொடுத்துள்ளனர். இதன் மூலம், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அவர்கள் உருவாகி உள்ளனர்.தமிழகத்தில், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.53 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர்.மத்திய அரசு, உணவு, உரம், பெட்ரோலிய பொருட்களை, மானிய விலையில், மக்களுக்கு வழங்கி வருகிறது. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ...

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு தீர்வு அவசியம்: மனிதாபிமான அடிப்படையில் அணுக மோடி வலியுறுத்தல்

Posted:

கொழும்பு: ''நீண்டகாலமாக நிலவும், மீனவர் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்; அந்த நடவடிக்கை, மனிதாபிமான அடிப்படையில் அமைய வேண்டும்,'' என, பிரதமர் மோடி, இலங்கை பார்லிமென்டில் பேசினார்.இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள செஷெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தன் பயணத்தின் இறுதிகட்டமாக, நேற்று அதிகாலை, கொழும்பு சென்றடைந்தார்.விமான நிலையத்தில் அவரை, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார்.அதன்பின், இலங்கை பார்லிமென்டில், பிரதமர் மோடி உரையாற்றினார். மாலையில், இந்திய அமைதி ...

கேரளா சட்டசபையில் வரலாறு காணாத ரகளை : சபாநாயகர் இருக்கை தகர்ப்பு

Posted:

திருவனந்தபுரம்:கேரள சட்டசபையில் நேற்று வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. மதுபான பார் ஊழலில் சிக்கிய நிதியமைச்சர், கே.எம்.மோனி, 82, மாநில பட்ஜெட்டை சமர்ப்பிக்கக் கூடாது என, முதல்வர் உம்மன் சாண்டியை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதை, காங்கிரஸ் அரசு ஏற்றுக் கொள்ளாததால், சட்டசபையில் அதை தடுக்கும் முயற்சியில், கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டனர்.நிதியமைச்சர், கே.எம்.மோனி, மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது என தெரிவித்து, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் சபையில் கடும் ரகளையில் ஈடுபட்டு, கம்ப்யூட்டர், மேஜை, மைக் போன்ற பொருட்களை உடைத்து தகர்த்தனர். ...

புதிய தலைமை செயலக வழக்கில் 72 கேள்விகளுக்கு என்ன பதில்? கருணாநிதிக்கு கிடுக்கிப்பிடி போடும் விசாரணை கமிஷன்

Posted:

புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரிக்கும் நீதிபதி ரகுபதி கமிஷன், முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், 72 கேள்விகளை எழுப்பியுள்ளது.சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.கடந்த, 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.அது குறித்து விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, ...

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஆதரித்தது ஏன்? ஜெயலலிதா விளக்கம்

Posted:

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில், சில திருத்தங்களை, தற்போதைய பா.ஜ., அரசு செய்து, அதை அவசர சட்டமாக, கடந்த டிசம்பர், 31ம் தேதி அமல்படுத்தியது.அந்த அவசர சட்டத்தை, சட்டமாக்கும் மசோதா, கடந்த, 9ம் தேதி, லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது, எதிர்க்கட்சிகள் தெரிவித்த கவலைகள் அடிப்படையில், பா.ஜ., அரசு மேலும், ஒன்பது திருத்தங்களை செய்து மறுநாள் தாக்கல் செய்தது.நில எடுப்பு தொடர்பான, இந்த சட்டத் திருத்தத்தில், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் ...

'இந்தியாவால் நான் தோற்றேன்' : விரக்தியில் ராஜபக் ஷே பிதற்றல்

Posted:

கொழும்பு:''இலங்கை அதிபர் தேர்தலில் நான் தோல்வி அடைய, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே காரணம்,'' என, ராஜபக் ஷே பிதற்றியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவின் உளவுப் பிரிவான 'ரா', எனக்கு எதிராக வேலை செய்தது. இந்தியர்களும், அமெரிக்கர்களும், நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டினரும், வெளிப்படையாகவே என்னை எதிர்த்தனர்.இந்தியாவும், அமெரிக்காவும், என்னை கவிழ்க்க, இலங்கையில் உள்ள அவற்றின் தூதரகங்களை பயன்படுத்திக் கொண்டன.நான், இந்தியா போன்ற தோழமை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயல்களை, அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி கூறினேன். ஆனால், ...

மின் கட்டண உயர்வு அறிவிப்பு ரத்தாகுமா: வரும் 16ம் தேதி தீர்ப்பாயத்தில் விசாரணை

Posted:

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு, வரும் 16ம் தேதி, விசாரணைக்கு வருகிறது.தமிழகத்தில், மின் கட்டணம் உயர்த்தும் அதிகாரம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மின் வாரியத்திடம் இருந்தது.கடந்த 2003 மின் சட்டப்படி, இந்த அதிகாரம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்கப்பட்டது.மின் கட்டணத்தில் மாற்றம் செய்ய விரும்பினால், மின் வாரியம், ஆண்டுதோறும், நவ., 30ம் தேதிக்குள், ஒழுங்குமுறை ஆணையத்திடம், தன் வருவாய் தேவை அறிக்கையை சமர்ப்பித்து, மனு தாக்கல் செய்ய வேண்டும்.அதனடிப்படையில், ஆணையம், ...

கார்ப்பரேட் நிறுவன வராக் கடன் வசூல்: ஆந்திர வங்கி ஊழியர்களுக்கு கைகொடுக்க ஆளில்லை

Posted:

பல கோடி ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்காமல், ஏப்பம் விட நினைக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கடனை வசூல் செய்ய, ஆந்திரா வங்கி ஊழியர்களுக்கு, கைகொடுக்க, பிற வங்கிகள் முன் வரவில்லை.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், கடன் பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள், பல ஆண்டுகளாகியும், கடனை திருப்பிக் கொடுக்காமல், 'டிமிக்கி' கொடுத்து வருகின்றன.வங்கிகளின், வராக் கடன் தொகை, மொத்த கடன் தொகையில், 6 சதவீதத்தை எட்டினால், அந்த வங்கிகளை, நலிவடைந்த வங்கியாக அறிவிக்கும், அபாயமும் நிலவுகிறது.இந்நிலையில், 5.99 சதவீத வராக் கடன் தொகையைக் கொண்டுள்ள, ...

காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட ரூ.25 கோடி: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசு அதிரடி

Posted:

பெங்களூரு: காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட, தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தடுப்பணைகள் கட்ட, பட்ஜெட்டில், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டார்.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், தடுப்பணைகளை கட்டுவதில் உறுதியாக இருப்பதாக, கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு, தமிழக அரசும், தமிழக விவசாயிகளும், கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தடுப்பணைகளை கட்ட, பட்ஜெட்டில், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.விவசாயம் மற்றும் ...

லக்வி விடுதலைக்கு இந்தியா கண்டனம்

Posted:

இஸ்லாமாபாத்:மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜகியுர் ரஹ்மான் லக்வியை சிறை யில் இருந்து விடுவிக்க, இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லியில், வெளியுறவு செயலர் பொறுப்பு வகிக்கும் அனில் வாத்வா, பாக்., தூதர் அப்துல் பசீத்தை அழைத்து, லக்வி விவகாரத்தில் பாக்., அரசின் அணுகுமுறை குறித்து கடுமையான அதிருப்தியை தெரிவித்தார். கடந்த ஆண்டு, டிசம்பர் 18ம் தேதி, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, இஸ்லாமாபாத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட், லக்விக்கு, ஜாமின் வழங்கியது. ஆனால், பாக்., ...

மத்திய அரசுக்கு மீண்டும் பின்னடைவு: பட்ஜெட் விவாதத்தை துவக்க எதிர்ப்பு

Posted:

புதுடில்லி: மத்திய அரசுக்கு, பார்லிமென்டில் நேற்று மீண்டும் ஒரு அதிர்ச்சியை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தின. 'பட்ஜெட் மீதான விவாதத்தை, நிதியமைச்சர் தான் துவக்க வேண்டும்; அவர் வரும் வரை விவாதம் துவக்கப்படக் கூடாது என தெரிவித்து, பட்ஜெட் மீதான விவாதத்தை துவக்க தடை செய்தன. சில நாட்களுக்கு முன், ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, எதிர்க்கட்சிகள் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றின. அது போன்றதொரு நிலைமை, நேற்று ஏற்பட்டது. லோக்சபாவில் நேற்று காலை, பட்ஜெட் மீதான விவாதத்தை துவக்க அலுவல் குறிக்கப்பட்டிருந்தது. நிதியமைச்சர் ...

இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி!

Posted:

சென்னை: கடந்த, 2012 டிச., 16ல், புதுடில்லியில், ஓடும் பேருந்தில், நிர்பயா என்ற மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம், நாடு முழுவதும் கடும் கண்டனத்தை பெற்றது. போலீசாரின் தீவிர முயற்சியால், குற்றவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் மைனர் என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். மற்ற நான்கு பேருக்கும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இச்சம்பவம் நடந்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பி.பி.சி., நிறுவனம், 'இந்தியாவின் மகள்' என்ற தலைப்பில், ஒரு ஆவணப்படத்தை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™