Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!

Posted: 13 Mar 2015 02:55 PM PDT

விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் .



GT-P3100
ROM: Sungsonic™ HD

கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

Posted: 13 Mar 2015 02:46 PM PDT


கருத்துக் கணிப்பு

இந்தப் பகுதியில் நீங்கள் விரும்பும் தலைப்பில் கருத்துக் கணிப்பு திரி துவங்கலாம்.

சிறந்த கருத்துக் கணிப்பு பதிவுகள் தளத்தின் முகப்பில் (தற்பொழுது உள்ள உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?) போன்று இடம்பெறும்!

தவறான தலைப்புகளில் கருத்துக் கணிப்புகள் துவங்கினால் நிர்வாகக் குழுவினரால் நீக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்!

Posted: 13 Mar 2015 11:51 AM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30 அளவில் இலங்கையை வந்தடைந்தார். மோடி சென்ற விசேஷ விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வரவேற்றார். இந்தநிலையில் மோடி, பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்படுகிறார். கொழும்பில் இன்று அவர் முற்பகலில் அதிபர் செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இதனையடுத்து மாலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். அத்துடன் பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதனையடுத்து ...

உண்மையா இது ?

Posted: 13 Mar 2015 11:30 AM PDT

உண்மையா இது ? மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா? 100% முடியும்... //எச்சரிக்கை, படித்து பகிருங்கள்// மும்பையில் நடந்த உண்மை சம்பவம். 21 வயதுடைய பொறியியல் மாணவன் தனது நண்பர்களுடன் கல்வி சுற்றுலா சென்றான். வீடு திரும்ப இவர்கள் இரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் group photo எடுத்துக் கொண்டிருந்தனர். அதை கண்டபின் இந்த மாணவனும் கையில் டிஜிட்டல் கேமராவை எடுத்துக்கொண்டான். அவனுக்கு அருகே 40,000 volt மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ...

காவல் நிலையங்களில் துருபிடிக்கும் வாகனங்களின் மதிப்பு ரூ.10,000 கோடி

Posted: 13 Mar 2015 11:28 AM PDT

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில், மண்ணில் புதைந்து மக்கிப் போகும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை பாதுகாக்க, கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் தரப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அப்படி கைது செய்யப்படும் போது, குற்றவாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. அந்த வகையில், திருட்டு மற்றும் மோசடிக்கு பயன்படுத்தும் வாகனங்களும் ...

கிரானைட் ஊழல்: ஓ.பி.எஸ் இனியும் பதவியியில் நீடிக்கலாமா?

Posted: 13 Mar 2015 11:23 AM PDT

சென்னை: கிரானைட் ஊழல் விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதை சென்னை உயர் நீதிமன்றமே கண்டித்துள்ள நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மனசாட்சி இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அதன் இடைக்கால அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. ...

இணையத்தைத் தானதர்மம் செய்யலாமா?

Posted: 13 Mar 2015 11:16 AM PDT

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல். மொபைல் போன்களில் இணையப் பயன்பாட்டை இந்தியா உட்பட உலகின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்ல மார்க் விரும்புகிறார். ஆனால், அதற்காக அவர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள், இந்தியச் சந்தையில், தங்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும் என்பதுதான் சுனில் மிட்டலின் கோபத்துக்குக் காரணம். 'இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி' (internet.org) என்னும் அமைப்பை 2013 ஆகஸ்ட் 20-ல் தொடங்கினார் மார்க் ஸக்கர்பெர்க். ...

மைதாவில் கோதுமை உண்டா ?

Posted: 13 Mar 2015 11:07 AM PDT

மைதாவில் கோதுமை உண்டா ? எனக்கு ஒரு சந்தேகம்  கோதுமை கிடைக்காமல்தான் மைதாவை பயன் படுத்தினர் சரி . மைதா தயாரிப்பில் கோதுமை ஏன் வருகிறது ! ? கோதுமைமாவின் விலையோ அதிகம் ஆனால் மைதாவின் விலை குறைவுதான் ஏன் மெனக்கெடனும் கெமிக்கல்களை சேர்த்தால் விலைஅதிகமாகனுமே ஏன் இல்லை.? உன்மையில் கோதுமையில் இருந்து மைதா வருவதில்லை மைதாவின் மூலபொருளை பார்த்திருக்கிறேன் . ஜவ்வரிசி போன்று உருண்டையாக உள்ளது அதை அரைத்து மாவு உளுத்து போகாதிருக்கவே மேற்கண்ட கெமிக்கல் சேர்க்கபடுகிறது . இதை நாம் சாப்பிடும் போது மேற்கண்ட ...

தென்னிந்திய பெண்கள் பற்றி சரத்யாதவ் சர்ச்சைக்குரிய கருத்து

Posted: 13 Mar 2015 10:59 AM PDT

டெல்லி மேல்-சபையில் ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் தென்னிந்திய பெண்கள் பற்றி கூறிய கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் தனது கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டார். டெல்லி மேல்-சபையில் நேற்று காப்பீட்டு மசோதா குறித்த விவாதம் நடந்தது. அப்போது ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், தென்னிந்தியாவை சேர்ந்த பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். தென்னிந்திய பெண்கள் அபாரமான நாட்டியத் திறமை கொண்டவர்கள். இங்குள்ள பெண்கள் நிறமாக படைக்கப்படவில்லை என்று பேசி இருந்தார். சரத் ...

எழுத்தாளர்கள் முகில், மருதன், சொக்கன், பா.ராகவன், அரவிந்த்நீலகண்டன் புத்தகங்கள் வேண்டும்!

Posted: 13 Mar 2015 10:45 AM PDT

எழுத்தாளர்கள் முகில், மருதன், சொக்கன், பா.ராகவன், அரவிந்த்நீலகண்டன் புத்தகங்கள் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன் ...  நன்றி

கணவன் மனைவி ஜோக்ஸ்!!

Posted: 13 Mar 2015 10:45 AM PDT

1. கணவன் – "இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?" மனைவி – "அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!" 2. கணவன் – "இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!" மனைவி – "அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?" கணவன் – "உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்." 3. மனைவி – "ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?" கணவன் – "அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை ...

திடுக் தகவல் -விமானத்தைக் கடத்தி ‘அம்மா’வை விடுவிக்க திட்டம் தீட்டிய ஹூசைனி...

Posted: 13 Mar 2015 10:14 AM PDT

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என தன்னைத் தானே சிலுவையில் அறைந்து, கடந்த மாதம் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார் கராத்தே வீரர் ஹூசைனி. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தமிழக முதல்வர் பதவியை இழந்து, மக்களின் முதல்வர் ஆனார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. ஆனால், மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் நிஜ முதல்வர் ஆக வேண்டும்' என மும்மதப் பிரார்த்தனைகளுடன் கடந்த மாதம் கராத்தே வீரர் ஹூசைனி, தன்னை சிலுவையில் அறைந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அம்மாவைக் ...

ஆக்கி உலக லீக்: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Posted: 13 Mar 2015 10:08 AM PDT

இந்திய மகளிர் ஆக்கி அணி உலக லீக் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆக்கி உலக லீக் போட்டியில் டெல்லி மேஜர் தயான் சந்தி தேசிய விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, சிங்கப்பூரை எதிர்கொண்டது. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து பந்தை கோல்கம்பத்திற்கு விரட்டி சிங்கப்பூரை திணறடித்தது. குறிப்பாக 23 வயதான உத்தர பிரதேச வீராங்கனை வந்தனா கட்டாரியா 17, 48, 56 மறறும் 57-வது நிமிடங்களில் கோல்கள் அடித்து அசத்தினார். எதிரணி வீராங்கனைகளுக்கு ...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 13 Mar 2015 09:52 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்

Posted: 13 Mar 2015 09:38 AM PDT

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய சிறப்பு மருத்துவர்கள், உறைவிட மருத்துவர்கள், பெண் நர்சுகள், பெண் டெக்னீசியன்கள் தேவைப்படுகிறார்கள். சிறப்பு மருத்துவர் பணிக்கு இதயப்பிரிவில் 2 ஆண்டு அனுபவம் அவசியம். வயது 55-க்குள் இருக்க வேண்டும். உறைவிட மருத்துவர் வேலைக்கு எம்பிபிஎஸ் பட்டமும் டிப்ளமாவும் தேவை. வயது 45-க்குள் இருக்க வேண்டும். நர்சு வேலைக்கு பிஎஸ்சி ...

நான் என் அலைபேசியில் பயன்படுத்தும் அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

Posted: 13 Mar 2015 09:22 AM PDT

படம்: நான் என் அலைபேசியில் பயன்படுத்தும் அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! தேவையானவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்! தங்களுக்கு தேவைப்படும் Apps களையும் கேளுங்கள், தருகிறேன்! தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்! https://www.dropbox.com/sh/3spizm6uzyglcnq/vodZ8PMX7D

உ.பியில் கொடூர சம்பவம்: நினைவிழந்த நோயாளியை அடிக்கும் ஜூனியர் மருத்துவர்

Posted: 13 Mar 2015 09:10 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகத்தில் பயிற்சிபெறும் ஜூனியர் மருத்துவர் ஒருவர் நினைவிழந்த நோயாளி ஒருவரை அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் டாக்டர் தாகீத் அகமது என்ற ஜுனியர் மருத்துவர் சக மருத்துவர்களுடன் சேர்ந்து நினைவிழந்த நோயாளி ஒருவரை தாக்குகிறார். நினைவிழந்த நோயாளியை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வருவதற்காக அவ்வாறு தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வியாழக்கிழமை இந்த சம்பம் நடைபெற்றுள்ளது. தாக்கப்பட்ட நோயாளி ...

கேரள சட்டசபையில் அடிதடி: சபாநாயகர் இருக்கை பறந்தது

Posted: 13 Mar 2015 09:05 AM PDT

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் இன்று பெரிய அளவில் வன்முறை தலைவிரித்தாடியது. உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கை பிடுங்கி வீசப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள நிதி அமைச்சர் மானியை பதவி விலக கோரி இந்த களேபரம் நடந்தது. கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. நிதி அமைச்சர் மானி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், லஞ்சம், ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது என்று கூறி ...

தமிழ்ச் சொற்கள் அறிவோம் !

Posted: 13 Mar 2015 09:03 AM PDT

என் மனைவி ரொம்ப நல்லவ...”

Posted: 13 Mar 2015 09:00 AM PDT

- என் மனைவி ரொம்ப நல்லவ" - "அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பன்னிகிட்ட?" - "அவ நல்லவன்னு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகு தான தெரிஞ்சது…" - --------------------------------------- - மூணு வருசமா டிமிக்கி கொடுத்திட்டு இருந்த ஒரு திருடனை மடக்கி பிடிச்சிட்டீங்களாமே அப்புறம்? - அப்புறம் என்ன? மூணு வருஷ மாமூலெல்லாம் வாங்கிட்டப்புறம்தான் விட்டோம்! - ------------------------------------------- - "ஜாக்கட்ல கையவிட்டு பர்ஸ எடுக்கிற வரை என்னம்மா ண்ணிகிட்டு இருந்த?" - "அந்த படுபாவி ...

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Posted: 13 Mar 2015 08:56 AM PDT

- அடடா..! - கல்யாணத்துக்கு முன்னால் வழுக்கை என்று புகைப் படத்தைப் பார்த்து ஆண்களை நிராகரித்த 90 சதவிகித பெண்கள், கல்யாணமான 10 ஆண்டுகளில் வழுக்கை கணவருடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டியது இருக்கிறது..! - கல்யாணத்துக்கு முன்னால், படத்தைப் பார்த்து பெண் குண்டாக இருக்கிறாள் என்று நிராகரித்த 90 சதவீத ஆண்களும், மணமான சில ஆண்டுகளுக்குப் பின் குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! -

மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க ..

Posted: 13 Mar 2015 08:44 AM PDT

- - மாப்பிள்ளை எல்லாத்தையும் ஊதித் தள்ளிடுவார்ன்னு சொல்றீங்களே? என்ன பண்றார்? - நாதஸ்வர வித்வானா இருக்கார்! - ---------------------------------- - கவர்ச்சியா பேசனும்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு! ஏன் என்ன ஆச்சு! - பனியன் ஜட்டியோட கூட்டத்துக்குக் கிளம்பிட்டார்! - -------------------------------------- மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க பார்த்து செய்யுங்க!ன்னு சொல்லி ஏமாத்திட்டாங்களா எப்படி? - கஷ்டத்துல இருக்கிறதைத்தான் இப்படி மாத்தி சொல்லியிருக்காங்க! --------------------------------------- - மன்னர் ...

நீதி என்றும் வெல்லும்; குறுக்கு வழிகளால் அதைத் தடுக்க முடியாது! - ஜெ., வழக்கு குறித்து கருணாநிதி

Posted: 13 Mar 2015 04:19 AM PDT

நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது! என்று ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து கருணாநிதி தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருடைய மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதம் கடந்த 6ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...

மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு

Posted: 13 Mar 2015 03:05 AM PDT

போர்ட் லூயிஸ்: இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்காக, மொரீஷியஸ் நாட்டிற்கு, இந்தியா அதிநவீன கப்பலை வழங்கியுள்ளது. அதை, பிரதமர் மோடி நேற்று வழங்கினார். மேலும், இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக, இந்திய பிரதமர் மோடியும், மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் ஜெகந்நாத்தும் விரிவாக பேச்சு நடத்தினர். இந்தியப் பெருங்கடலில், செஷெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, செஷெல்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து, நேற்று முன்தினம் மொரீஷியஸ் சென்றடைந்தார். ...

வங்கதேச வீரர் மீதான வழக்கு வாபஸ்

Posted: 13 Mar 2015 02:50 AM PDT

- தாகா: இங்கிலாந்துக்கு எதிராக பவுலிங்கில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் ரூபல் ஹொசைன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நஜ்னின். வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ரூபல் ஹொசைன், 25. உலக கோப்பை தொடருக்கு முன் நஜ்னின் அக்தர், 19 என்ற நடிகை கொடுத்த பாலியல் புகாரை அடுத்து, ரூபல் ஹொசைன் சிறையில் அடைக்கப்பட்டார். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில், ஜாமின் பெற்ற இவர், உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்த, ...

சுயேச்சைகள் போட்டியிட தடை விதியுங்கள்: நன்கொடை விதிகளை கடுமையாக்கவும் சட்ட கமிஷன் பரிந்துரை

Posted: 13 Mar 2015 02:36 AM PDT

புதுடில்லி: 'அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்; விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கடும் தண்டனை வழங்க வேண்டும்; சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிட, தடை விதிக்க வேண்டும்' என்பது உட்பட, பல பரிந்துரைகளை, மத்திய அரசுக்கு, மத்திய சட்டக் கமிஷன் வழங்கி உள்ளது.தேர்தல் களத்தை சந்திக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, நிதி மற்றும் நன்கொடைகள் பெறுவது வழக்கமாகி விட்டது. தற்போதைய விதிமுறைகளின்படி, ...

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 13 Mar 2015 01:19 AM PDT

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை விதிக்க வகை செய்யும் சட்டம் மார்ச் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. .இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 என்ற சட்டம் 15ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவிக்கிறது. அதன்படி வரும் 15ஆம் தேதியில் இருந்து ...

இம்சை தத்துவங்கள்!!

Posted: 13 Mar 2015 01:15 AM PDT

1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும். 2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்.... 3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது... 4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும். 5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....? 6. ...

ஆண்கள் ரெம்ப நல்லவங்க

Posted: 13 Mar 2015 12:19 AM PDT

ஆண்கள் ரெம்ப நல்லவங்க 1. சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்... 2. ஆயாவா, ஆண்ட்டியா என்று பார்க்காம எத்தனை பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்... 3. பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்... 4. மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல... 5. லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கிடையாது... 6. எந்த‌ அப்ப‌னும் ம‌க‌னைத் த‌னியாக‌ அழைத்து ''ம‌ரும‌க‌ள் உன்னை ந‌ல்ல‌ப‌டியா ...

ஸ்ரீஹரிகோட்டாவில் அமைகிறது 3வது ராக்கெட் ஏவுதளம்

Posted: 12 Mar 2015 11:52 PM PDT

புதுடில்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளதாக, பார்லி.,யில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து குலசேகரப்பட்டிணத்தில் 3வது ராக்கெட் ஏவுதளம் அமையும் என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போயனது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. தற்சமயம் அங்கு 2 ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளன. வர்த்தகரீதியிலான ராக்கெட் ...

கவிதை எழுதி வெளியிட்ட துருக்கி அழகிக்கு சிறை தண்டனை

Posted: 12 Mar 2015 11:35 PM PDT

- துருக்கி நாட்டின் முன்னாள் அழகி மெர்வே புயுக்சரக் நையாண்டி கவிதை எழுதியதற்காக 4 ஆண்டுளுக்குமேல் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. துருக்கியின் முன்னாள் அழகி மெர்வே புயுக்சரக். இவர் 2006ஆம் ஆண்டு மிஸ் துருக்கியாக தேர்ந்து எடுக்கபட்டவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் நையாண்டி கவிதை ஒன்றை வெளியிட்டார். இந்தக் கவிதை மூலம், துருக்கி அதிபர் எர்டோகனை அவர் களங்கப்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, கடந்த நவம்பர் மாதம் இவர் மீது புகார் செய்யபட்டது. ...

வ‌த்த‌க்குழம்பு

Posted: 12 Mar 2015 11:29 PM PDT

தேவையான பொரு‌‌ள் புளி - எலுமிச்சங்காய் அளவு உப்பு - தேவையான அளவு ‌மிளகா‌ய் பொடி - 2 தே‌க்கர‌ண்டி கடுகு - கா‌ல் தே‌க்கர‌ண்டி உளுத்தம் பருப்பு - மு‌க்கா‌ள் தே‌க்கர‌ண்டி மிளகாய் வற்றல் - 2 அல்லது 3 பெருங்காயம், கடலைப் பருப்பு - 2 தே‌க்கர‌ண்டி தே‌ங்கா‌ய் து‌ண்டுக‌ள் - 1 க‌ப் குழ‌ம்பு தா‌ளி‌க்கு‌ம் வடா‌ம் - ‌சி‌றிதளவு அ‌ரி‌சி மாவு - 1 தே‌க்கர‌ண்டி கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌ப்‌பிலை எ‌ண்ணெ‌ய் - தா‌ளி‌க்க செ‌ய்யு‌ம் முறை குழ‌ம்பு பா‌த்‌திர‌த்‌தி‌ல், எண்ணெயைவிட்டு, கடுகு, உளுத்தம் ...

S. ராமகிருஷ்ணன் அவர்களின் உபபாண்டவம் அல்லது யாமம் புத்தகம் இருந்தால் பகிருங்கள்

Posted: 12 Mar 2015 09:39 PM PDT

ச. ராமகிருஷ்ணன் அவர்களின் உபபாண்டவம் அல்லது யாமம் புத்தகம் இருந்தால் பகிருங்கள்

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Posted: 12 Mar 2015 08:56 PM PDT

- - இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு ...

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.

Posted: 12 Mar 2015 08:33 PM PDT

நித்திய வாழ்க்கை…!! * நல்ல காலம் பிறந்து விட்டதென்று அவசர அவசரமாய் கல்யாணப் பொறுப்புகளைப் படபடவென்று பார்க்கத் தொடங்கினர். ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது ஒன்பது பொருத்தம் பார்த்தனர். இலட்சங்களை வாரி இரைத்து இறுமாப்போடு ஊர்ப் போற்றும் சீர்வரிசையோடு திருமணம் செய்து முடித்தனர். எத்தனை நொடிகள்? நிமிடங்கள்? எத்தனை நாள்கள்? மாதங்கள்? எத்தனை வருடங்கள்? தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியோடு வாழ்ந்தாய். சின்னச் சின்னச் சிணுங்களின் சிக்கல்களில் விழுந்தாய். சிந்தைத் தடுமாறினாய் மனஇறுக்கமானாய் மனமுறிவு ...

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 12 Mar 2015 07:47 PM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™