Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேசியமய வங்கி ஊழியர்களின் கோபம் வெடிக்கிறது: கடன் வாங்கி ஏப்பம் விட்ட நிறுவனங்கள் மீது...

Posted:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், கடன் வாங்கி ஏப்பம் விட்ட நிறுவனங்கள் மீது, வங்கி ஊழியர்கள் கோபம் வெடித்துள்ளது. கடன் பணத்தை வசூலிக்க, அந்த நிறுவனங்கள் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் புதிய யுக்தியை கையாள துவங்கி உள்ளனர். மற்ற எல்லா தேசிய மய வங்கிகளுக்கும் வழிகாட்டியாக, ஆந்திரா வங்கியின், அண்ணா சாலை கிளை ஊழியர்கள், நேற்று, சென்னையில், 'ஜெய்ப்பூர் சுகர்ஸ், எம்ப்பீ சுகர்ஸ்' ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முன், 'கடனை திருப்பிக் கொடு' என்ற, வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி, தர்ணாவில் ஈடுபட்டனர்.நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ...

நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்: மின்சார உற்பத்தியில் தமிழக அரசுக்கு சவால்

Posted:

'மெட்ரோ ரயில் பணி திட்டத்தை துரிதப்படுத்தி, விரைவில் திறக்காவிடில், சென்னையில் நான்கு மாவட்ட தி.மு.க., இளைஞர்களை திரட்டி, பெரும் போராட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.ஒப்புதல்: சென்னை, தி.நகரில் நடந்த, தி.மு.க., பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தல் வெற்றி, தோல்விகள் குறித்து, தி.மு.க., கவலைப்பட்டதில்லை. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், 55,445 ஓட்டுகள் பெற்றுள்ளோம். கடந்த தேர்தலை விட, 600 ஓட்டுகள் கூடுதலாகத் தான் பெற்றுள்ளோம். அதனால், தி.மு.க., தோல்வி அடைந்ததாக எடுத்துக் கொள்ளத் தேவைஇல்லை. மெட்ரோ ரயில் திட்டம், 2006ல் தி.மு.க., ...

'டிராபிக்' ராமசாமியை சுற்றி வளைத்த போலீசார்: அதிகாலையில் கைது; உடனே சிறையில் அடைப்பு

Posted:

சென்னையில், போக்குவரத்துக்கு இடையூறு செய்த, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி கைது செய்யப்பட்டார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வட சென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு ஏற்பாட்டில், சென்னை, புரசைவாக்கம், விக்டர் அழகப்பா தெருவில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம், ரத்த தான முகாம் நடந்தது. இதையொட்டி, புரசைவாக்கம் பகுதியில், 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட, 50க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுஇருந்தன.வந்தார் 'டிராபிக்': இந்த பேனர்களை அகற்ற, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ...

பாரத் ரத்னா பதக்கங்கள் தயாரிக்கப்பட்டதா? மத்திய அரசு புதிய விளக்கம்

Posted:

புதுடில்லி: 'பாரத் ரத்னா பதக்கங்கள் ஐந்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம், கடந்தாண்டு ஆர்டர் கொடுத்தது, யாருக்கும் வழங்குவதற்காக அல்ல; ஜனாதிபதி மாளிகையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் வைப்பதற்கே' என, தகவல் உரிமைச் சட்டம் மூலம் விடுக்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளது.வழங்கப்படலாம்: கடந்தாண்டின் மத்தி யில், 'பாரத் ரத்னா' பதக்கங்கள் ஐந்தை தயார் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் ஆர்டர் கொடுத்தது. இதனால், நாட்டின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா, ஐந்து முக்கிய நபர்களுக்கு வழங்கப்படலாம் என, செய்திகள் வெளியாகின. ...

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் சுயேச்சைகள் போட்டியிட தடை விதியுங்கள்: நன்கொடை விதிகளை கடுமையாக்கவும் சட்ட கமிஷன் பரிந்துரை

Posted:

புதுடில்லி: 'அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்; விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கடும் தண்டனை வழங்க வேண்டும்; சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிட, தடை விதிக்க வேண்டும்' என்பது உட்பட, பல பரிந்துரைகளை, மத்திய அரசுக்கு, மத்திய சட்டக் கமிஷன் வழங்கி உள்ளது.தேர்தல் களத்தை சந்திக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, நிதி மற்றும் நன்கொடைகள் பெறுவது வழக்கமாகி விட்டது. தற்போதைய விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில், 20 ...

ராகுல் எங்கிருக்கிறார்? மூத்த தலைவர்கள் குழப்பம்

Posted:

புதுடில்லி: ஒரு வாரம் விடுமுறை எடுத்துச் சென்ற, காங்., துணைத் தலைவர் ராகுல், பல வாரங்கள் ஆன நிலையிலும், டில்லி திரும்பவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலும் தெரியாததால், கட்சியின் மூத்த தலைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற, சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலை முன்னின்று நடத்தியவர், காங்., தலைவர் சோனியாவின் மகன் ராகுல், 44. வெகு சமீபத்தில் நடந்த, டில்லி சட்டசபைத் தேர்த லில், ஒரு தொகுதியில் கூட காங்., வெற்றி பெறாததால், கடும் சோகமடைந்த ராகுல், டில்லியிலிருந்து திடீரென மாயமானார். பட்ஜெட் கூட்டத்தொட ...

மன்மோகனுக்கு ஆதரவு தெரிவித்தார் சோனியா

Posted:

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், நேற்று அவரின் வீட்டிற்கு பேரணியாக சென்று ஆதரவு தெரிவித்தனர்.ஆஜராக வேண்டும்: 'நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, 83, 'குற்றம் சாட்டப்பட்டவர்' என, நேற்று முன்தினம் தெரிவித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், ஏப்., 8ம் தேதி ஆஜராக வேண்டும்' என, சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டது. ...

மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு

Posted:

போர்ட் லூயிஸ்: இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்காக, மொரீஷியஸ் நாட்டிற்கு, இந்தியா அதிநவீன கப்பலை வழங்கியுள்ளது. அதை, பிரதமர் மோடி நேற்று வழங்கினார். மேலும், இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக, இந்திய பிரதமர் மோடியும், மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் ஜெகந்நாத்தும் விரிவாக பேச்சு நடத்தினர்.இந்தியப் பெருங்கடலில், செஷெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, செஷெல்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து, நேற்று முன்தினம் மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை, அந்நாட்டின் பிரதமர் அனிரூத் ...

காவல் நிலையங்களில் துருபிடிக்கும் வாகனங்களின் மதிப்பு ரூ.10,000 கோடி: கிடங்கு அமைத்து பாதுகாக்கப்படுமா?

Posted:

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில், மண்ணில் புதைந்து மக்கிப் போகும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை பாதுகாக்க, கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் தரப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அப்படி கைது செய்யப்படும் போது, குற்றவாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. அந்த வகையில், திருட்டு மற்றும் மோசடிக்கு பயன்படுத்தும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. மேலும் விபத்து ...

இந்தியாவில் மிகப்பெரிய சீர்திருத்தங்களுக்கு வாய்ப்பில்லை

Posted:

வாஷிங்டன்: ''இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், பல கட்டங்களில் தடை நிலைகள் உள்ளதால், மிகப்பெரிய சீர்திருத்தங்களை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை,'' என, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, வாஷிங்டனில், சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் ஆய்வு மையத்தில், அவர் ஆற்றிய உரை: இந்திய பொருளாதாரம், வளர்ச்சியை நோக்கி முன்னேறவில்லை; வளர்ச்சி பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. அதனால், மத்திய பட்ஜெட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை. சீர்திருத்த வேகத்தை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் ...

பா.ஜ., தேசிய செயற்குழு மாற்றியமைப்பு: இரானி, நஜ்மா, ஹேமமாலினிக்கு 'கல்தா'

Posted:

புதுடில்லி: பா.ஜ., கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நஜ்மா ஹெப்துல்லா, நடிகையும், எம்.பி.,யுமான ஹேமமாலினி ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். பா.ஜ., தேசிய செயற்குழு, 178 உறுப்பினர்களை கொண்டது. இந்தக் குழுவை, கட்சி யின் தலைவர் அமித் ஷா நேற்று மாற்றி அமைத்தார். இதில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் ஆகியோர் செயற்குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதேபோல், மத்திய இணை அமைச்சர்கள் வி.கே.சிங், ராவ் இந்தர்ஜித் சிங், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோரும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™