Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆம் ஆத்மி பிரபலங்கள் மீண்டும் மோதல்

Posted:

புதுடில்லி: 'ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழுவிலிருந்து நீக்கப்பட்ட பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷனின் தந்தை சாந்தி பூஷன் ஆகியோர், டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி தோல்வி அடைய வேண்டும் என பாடுபட்டனர். கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயல்பட்டனர்' என, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.தடுத்தார் பிரசாந்த்: இருமல் காரணமாக, பெங்களூரு இயற்கை மருத்துவ மையத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் மூத்த ...

பிரிவினைவாத தலைவர் விடுதலை: உள்துறை அமைச்சக கடிதத்தால் சர்ச்சை

Posted:

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் விடுதலை தொடர்பாக, அம்மாநில உள்துறை அமைச்சகம், ஜம்மு மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதம், புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.ஜம்மு - காஷ்மீரில், கவர்னர் ஆட்சி அமலில் இருந்த போது, கடந்த பிப்ரவரியில், அம்மாநில உள்துறை அமைச்சகம், ஜம்மு மாவட்ட கலெக்டருக்கு, மசரத் ஆலம் தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.விடுவிக்கும்படி...: கவர்னர் என்.என்.வோராவின் கவனத்திற்கு வராமலேயே எழுதப்பட்டு உள்ள, அந்தக் கடிதத்திலேயே, பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலத்தை விடுவிக்கும்படி தெரிவிக்கப்பட்டு ...

லக்வியை இந்தியாவிடம் ஒப்படையுங்க!

Posted:

புதுடில்லி: 'மும்பை தாக்குதல் சம்பவத்தின் சதிகாரன், ஜாகிர் உர் ரகுமான் லக்வியை, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என, அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர் எட் ராய்ஸ் வலியுறுத்தி உள்ளார்.அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுகள் கமிட்டி தலைவரான, எட் ராய்ஸ், நேற்று டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். ஆசிய பிராந்தியத்தில் நிலவும், பயங்கரவாத அச்சுறுத்தல் உட்பட, பல பிரச்னைகள் குறித்து, அவர்களுடன் விவாதித்தார். பின், ராய்ஸ் கூறியதாவது: ...

வெளிமார்க்கெட்டில் சிமென்ட் விலை கிடுகிடு: அம்மா சிமென்ட் வந்தும் பயன் இல்லை

Posted:

'அம்மா சிமென்ட்' திட்டம் துவங்கப்பட்டு, இரண்டு மாதமாகியும், வெளி சந்தையில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 400 ரூபாயாக உள்ளது. இதனால், இத்திட்டத்தின் பயன் மக்களை சென்றடைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் சிமென்ட் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், சாதாரண மக்களின் வீடு கட்டும் திட்டம் முதல், பெரிய அளவிலான கட்டுமான திட்டம் வரை அனைத்து வகையான கட்டுமான பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில், 50 கிலோ எடை கொண்ட, ஒரு மூட்டை சிமென்ட் விலையை சில மாதங்கள் முன், ...

'தொல்காப்பியர் விருது' பெறுகிறார் 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி

Posted:

சென்னை: செம்மொழி தமிழுக்கான ஜனாதிபதி விருதுகள், கடந்த பிப்., 21ம் தேதி மத்திய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 2011-12, 2012-13ம் ஆண்டுகளுக்கான தொல்காப்பியர் விருது, செ.வை.சண்முகத்திற்கும், 'தினமலர்' ஆசிரியரும் நாணயவியல் அறிஞருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கப்பட உள்ளது.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனம். செம்மொழி தமிழை மேம்படுத்தும் வகையில், தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் அடிப்படையாக கொண்டு, 10 செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.2004 ...

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு'

Posted:

புதுடில்லி: தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, அன்றாட செயல்பாட்டிற்காக அரசின் பணத்தை காலி செய்து வரும், ஏர் - இந்தியா விமான நிறுவனம், எம்.டி.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனம், இந்துஸ்தான் ஷிப்யார்டு போன்ற, ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை, லோக்சபாவில், கனரகத் துறை அமைச்சர் ஆனந்த் கீதே, நேற்று வெளியிட்டார்.பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும்; அதே சமயத்தில் போட்டிகளை சமாளித்து, லாபத்தில் இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய நிறுவனங்கள், அரசின் ...

இந்திய பெருங்கடல் நாடுகளுடன் உறவு வலுப்படணும்: மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் அறிக்கை

Posted:

புதுடில்லி: 'இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் உடனான உறவை, பலப்படுத்த வேண்டும் என்பதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.முதற்கட்டம்:செஷெல்ஸ் தீவுகள், மொரீஷியஸ் மற்றும் இலங்கை என, மூன்று நாடுகளில், ஐந்து நாட்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதற்கட்டமாக, செஷெல்ஸ் தீவுகளுக்கு செல்லும் முன், அவர் வெளியிட்ட அறிக்கை: அண்டை நாடுகள் உடனான உறவை வலுப்படுத்துவதற்கே, நம் வெளியுறவு கொள்கை முன்னுரிமை அளிக்கிறது. அந்த அடிப்படையில், இந்திய பெருங்கடல் ...

'பிரிட்டீஷ் கைக்கூலி' : காந்தி மீது கட்ஜு காட்டம்

Posted:

புதுடில்லி: தேசத்தந்தை காந்தியடிகளை, 'பிரிட்டீஷ் கைக்கூலி' என, 'பிரஸ் கவுன்சில்' அமைப்பின் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறி, மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளார்.இதுகுறித்து, அவர், இணைய பக்கத்தில், எழுதியுள்ளதாவது:இந்தியாவில் காந்தியடிகள் மேற்கொண்ட போராட்டங்கள், மத ரீதியாகவே இருந்தன. இதன்மூலம், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை, அவரும் பின்பற்றினார்.அவரின் ஒவ்வொரு பேச்சும், எழுத்தும், இந்து மதம் மற்றும் அதன் கொள்கைகளின் அடிப்படையிலேயே இருந்தது. இவ்வாறு அவர் தொடர்ந்து பேசிய வந்ததால் ...

நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்: ராஜ்ய சபாவில் மத்திய அரசு கடும் பிரயத்தனம்

Posted:

புதுடில்லி : நிலம் கையகப்படுத்துதல் மசோதா, நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. ஆனாலும், ராஜ்ய சபாவில், இந்த மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு கடும் பிரயத்தனம் செய்ய நேரிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சில திருத்தங்களை செய்து, கடந்த ஆண்டு அவசர சட்டமாக அமல்படுத்தியது.அந்த அவசர சட்டமானது, ஏப்ரல், 5ம் தேதிக்குள் பார்லிமென்டில் மசோதாவாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை யெனில், காலாவதியாகி விடும். அதனால், நிலம் ...

ஜெ., வழக்கில் கேள்விக்கணை தொடுத்த நீதிபதி: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?

Posted:

பெங்களூரு: "முதல்வர் என்பவர், ஒரு மாநிலத்தின் தலைவர்; அவர் மீது, எந்த சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்; இவ்வழக்குக்கு, 'கூட்டு சதி' எந்த வகையில் பொருந்தும். அதற்கான, ஆதாரம் உள்ளதா," என, அரசு வழக்கறிஞரிடம், நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேருக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி முன், 40வது நாளாக, நேற்று நடந்தது.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மூல சொத்துகள், கடந்த, 1991ம் ஆண்டு ...

கட்ட பஞ்சாயத்து செய்யும் மனித உரிமை அமைப்புகள் : டி.ஜி.பி., பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Posted:

சென்னை: மனித உரிமை என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளை நடத்துபவர்களின் பின்னணி என்ன; அமைப்புகளை நடத்த எப்படி நிதி திரட்டுகின்றனர் என, டி.ஜி.பி., பதிலளிக்கும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மனித உரிமை என்ற பெயரில், அமைப்புகளை நடத்திக் கொண்டு, கட்டப் பஞ்சாயத்து செய்வதும், அதிகாரிகளை மிரட்டுவதுமாக, புகார்கள் வருகின்றன.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, தனியார் பள்ளி தொடர்ந்த வழக்கை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். போலீஸ் தரப்பில் சில தகவல்களை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.மனித உரிமை என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் எத்தனை, ...

'என்னை விட்டு விடு': கெஞ்சிய இந்திய பெண்

Posted:

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், மர்ம நபரால் குத்திக் கொல்லப்பட்ட இந்திய பெண் இன்ஜினியர், கொலைகாரன் தன் அருகே வந்ததும், தன்னை உயிருடன் விட்டு விடும்படி கெஞ்சியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியாவில், 'மைண்ட் ட்ரீ' என்ற நிறுவனத்தில், ஐ.டி., வல்லுனராக பணியாற்றி வந்த, இந்திய பெண் பிரபா, 41, கடந்த, 7ம் தேதி இரவு, சிட்னியின் புறநகர்ப் பகுதியில், மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.சிட்னி அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கியிருந்த பிரபா, சம்பவத்தன்று வேலை முடிந்து, பூங்கா ஒன்றின் வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ...

மோடி சொன்னது போல ரூ.15 லட்சம் கிடைக்குமா?: அருண்ஜெட்லி பதில்

Posted:

புதுடில்லி: ''அன்னிய நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் மீட்டுக் கொண்டு வரப்பட்டால் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திர மோடி தெரிவித்தது அரசின் பல மதிப்பீடுகளின் அடிப்படையில் உத்தேசமாகச் சொல்லப்பட்டது,'' என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.கறுப்புப் பணம் தொடர்பாக எம்.பி.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராஜ்ய சபாவில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று அளித்த பதில்: கறுப்புப் பணம் தொடர்பான விசாரணையில் இதுவரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு அன்னிய நாடுகளில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™