Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு'

Posted: 10 Mar 2015 02:36 PM PDT

புதுடில்லி: தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, அன்றாட செயல்பாட்டிற்காக அரசின் பணத்தை காலி செய்து வரும், ஏர் - இந்தியா விமான நிறுவனம், எம்.டி.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனம், இந்துஸ்தான் ஷிப்யார்டு போன்ற, ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை, லோக்சபாவில், கனரகத் துறை அமைச்சர் ஆனந்த் கீதே, நேற்று வெளியிட்டார். பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும்; அதே சமயத்தில் போட்டிகளை சமாளித்து, லாபத்தில் இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொதுத்துறை நிறுவனங்கள் ...

ஜெ., வழக்கில் கேள்விக்கணை தொடுத்த நீதிபதி: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?

Posted: 10 Mar 2015 02:26 PM PDT

பெங்களூரு: "முதல்வர் என்பவர், ஒரு மாநிலத்தின் தலைவர்; அவர் மீது, எந்த சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்; இவ்வழக்குக்கு, 'கூட்டு சதி' எந்த வகையில் பொருந்தும். அதற்கான, ஆதாரம் உள்ளதா," என, அரசு வழக்கறிஞரிடம், நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேருக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி முன், 40வது நாளாக, நேற்று நடந்தது.ஜெயலலிதா, சசிகலா, ...

நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

Posted: 10 Mar 2015 02:22 PM PDT

புதுடில்லி : நிலம் கையகப்படுத்துதல் மசோதா, நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. ஆனாலும், ராஜ்ய சபாவில், இந்த மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு கடும் பிரயத்தனம் செய்ய நேரிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சில திருத்தங்களை செய்து, கடந்த ஆண்டு அவசர சட்டமாக அமல்படுத்தியது.அந்த அவசர சட்டமானது, ஏப்ரல், 5ம் தேதிக்குள் பார்லிமென்டில் மசோதாவாக நிறைவேற்றப்பட வேண்டும். ...

சூரியஒளி விமானம் இந்தியாவில் தரையிறங்கியது

Posted: 10 Mar 2015 02:16 PM PDT

உலகை சுற்றிவரும் சாதனைப்பயணத்தை துவங்கியிருக்கும் சூரிய ஒளியால் இயங்கும் விமானம் தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக இந்தியாவின் அகமதாபாத் நகரில் வெற்றிகரமாக தரையிறங்கியிருக்கிறது. "சோலார் இம்பல்ஸ்-2' என்று அழைக்கப்படும் அந்த விமானம் தனது பயணத்தை நேற்று திங்கட்கிழமை அபுதாபியிலிருந்து தொடங்கியது. ஒமானின் தலைநகர் மஸ்கட்டில் திங்கள் இரவு தரையிறங்கியது. அங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது இரண்டாம் கட்டப்பயணத்தை துவங்கியிருக்கிறது. அரேபியக்கடலை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த விமானம், பாகிஸ்தான் ...

இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர்

Posted: 10 Mar 2015 01:47 PM PDT

கோயில் தரிசனத்துக்காகச் செல்லும்பொழுது கோயிலும் இடமும் இயற்கை வளமும் நன்றாக அமைந்துவிட்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதுவும் உலகளாவிய பெருமையும் அழகும் சேர்ந்திருப்பின் சொல்லவா வேண்டும்? மங்களூர் தொடங்கி, சுப்பிரமணியா வரை கர்நாடகாவில் பல ஆன்மிகச் சுற்றுலா தலங்கள் உள்ளன.. இயற்கையை ரசித்தபடி ஆன்மிகச் சுற்றுலா என்றும் சொல்லலாம். இயற்கை வளம், மலை வலம் என எல்லா ஊர்களும் சிறப்பே. ஆயினும் கோயிலுக்காக முருடேஸ்வராவையும் இயற்கை அழகுக்காக ஹோர நாட்டையும் கண்டு களிக்கலாம். மங்களூரில் ...

சோலார் விமானம் இம்பல்ஸ்- 2

Posted: 10 Mar 2015 01:40 PM PDT

சுற்றுச் சூழலுக்கு தீங்கு தராமல் சூரிய மின் சக்தியில் இயங்கும் உலகின் முதல் சோலார் விமானம் தனது உலக சுற்றுப் பயணத்தை அபுதாபியில் நேற்று துவங்கியது. அங்கிருந்து 12 மணி நேர பயணத்திற்கு பின் ஓமன் நாட்டில் தரையிறங்கிய அந்த விமானம் இன்று இந்தியாவை நோக்கி தனது இரண்டாவது கட்ட பயணத்தை துவங்கியிருக்கிறது. ஆமதாபாத் மற்றும் வாரணாசி நகரங்களுக்கு வருகை தரும் இந்த சோலார் விமானம், கங்கை நதியின் மேலே பறந்து சுற்றுச்சூழல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் வழியாக பறந்து ...

2500 ஆண்டு பழமையான மனித மூளை கண்டுபிடிப்பு

Posted: 10 Mar 2015 01:25 PM PDT

இங்கிலாந்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் போர்க் பகுதியில் சேறும் சகதியும்  நிறைந்த பகுதியில் தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு மண்டை ஓடு  கண்டெடுக்கப்பட்டது. அதில் மூளை பத்திரமாக இருந்தது.  இந்த மூளையை 34 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு மேற்க்கொண்டு  வருகிறது. அந்த மண்டை ஒடு தாடையுடனும், முதுகெலும்பு ஒட்டிய  நிலையிலும் உள்ளது.  சமீபத்தில் கிடைத்த தகவல்படி அந்த மண்டை ஓட்டுக்குள் இருக்கும் மூளை  2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என  கருதப்படுகிறது. இதுகுறித்து நிபுணர்கள் தொடர்ந்து ...

மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை

Posted: 10 Mar 2015 01:22 PM PDT

மருத்துவ முறைப்படி மேற்கத்திய கழிப்பறைகளைக் காட்டிலும் இந்திய கழிப்பறைகளே சிறந்தவை என சீன மருத்துவ நிபுணர் ஹாங்சி சியோ தெரிவித்தார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டாக்-வி.எச்.எஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் விழாவில் சீன மருத்துவ நிபுணர் ஹாங்சி சியோ பேசியது: இயற்கையாகவே மனித உடலுக்கு அனைத்து வகையான நோய்களையும் சரிசெய்து கொள்ளும் ஆற்றல் உள்ளது. அதனை சரியான விதத்தில் தூண்டிவிட்டு குணப்படுத்துவதுதான் பைடா-லாஜின் எனும் சீன மருத்துவ முறை ஆகும். இந்த மருத்துவ முறையில் உள்ளங்கையைக் ...

“மீனவர்களை நீங்கள் சுட்டால் நாங்களும் சுட வேண்டி வரும்” - இந்தியா

Posted: 10 Mar 2015 01:19 PM PDT

இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் பிரமரை சந்தித்த போது தாம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய ராஜ்ய சபாவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கருத்து தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார். மீனவர்கள் சுட்டுக் ...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 10 Mar 2015 01:16 PM PDT

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

நோய் தீர்க்கும் கணபதி மந்திரம்

Posted: 10 Mar 2015 12:42 PM PDT

கணபதி மந்திரத்தை தினமும் சொல்லி வர, தீராத நோயும் தீரும். ஸ்ரீ வைத்யநாதம் கணநாத நாதம் பாலாம்பிகை நாதம் அலம் குஜர்த்த ஸதா ப்ரபத்தயே சரணம் ப்ரபத்தயே முதே ப்ரபத்தயே சிவலிங்க ரூபம் பொருள்: ஸ்ரீ வைத்தியநாதா, கணநாதா, பாலாம்பிகை நாதா, சிவலிங்க ரூபனே, உன்னை எப்பொழுதும் பூஜிக்கிறேன். என் நோய்களை நீக்கி நலம் அருள்வாய்.

உப்பும் கைகால்களில் வீக்கமும்!

Posted: 10 Mar 2015 12:38 PM PDT

உப்பு உடலுக்குத் தேவையான உணவுப்பொருள். உணவு ஜீரணமாகி சத்தாக மாற உதவும் பொருள். தானே சத்தாகி நின்று உடலைத் தாங்கும் தாதுப்பொருள். காலரா முதலிய உடலிலுள்ள நீரின் அம்சம் பெருமளவில் வெளியேற்றப்பட்ட நிலையில் உப்புக் கரைசலே உட்செலுத்தப்பட்டு ஜீவனை நிலைக்க வைக்க உதவுகிறது. உணவின் மூலப்பொருளான சாதத்திற்கு ருசியும், மணமும் அளித்து விருப்புடன் ஏற்கச் செய்து ஜீரணிக்க உதவி களைப்பை நீக்குவதும் உப்பே தான். மற்ற கடுகு, வெந்தயம் போன்ற தனித்த உருவில் நிற்காமல் உப்பு கரைந்து மறைந்து எங்கும் பரவி நிற்கிறது. ...

ஆர்கானிக் புடவைகள்!

Posted: 10 Mar 2015 12:37 PM PDT

எந்தவிதமான ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லி மருந்துகளோ பயன்படுத்தாமல் விளைவிக்கப்படுகிற ஆர்கானிக் உணவுப் பொருட்களின் பக்கம் இப்போது காற்று வீசுகிறது. பெரிய நகரங்களில் இப்போது ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்கும் கடைகள் அதிகமாக முளைத்துவிட்டன. உணவு மட்டுமா? இப்போது ஆர்கானிக் உடைகளும் வந்துவிட்டன. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ ஆப்டெக்ஸ்) இப்போது, ஆர்கானிக் புடவைகளை அறிமுகம் செய்திருக்கிறது. அதைப் பற்றித் தெரிந்து கொள்ள கோ ஆப்டெக்ஸின் நிர்வாக இயக்குநர் டி.என். வெங்கடேஷை, சென்னை ...

உலகச் செய்திகள்!

Posted: 10 Mar 2015 12:35 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

யார் இந்த மஸ்ரத் ஆலம்? தலைக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர், தேச துரோக குற்றவாளி!

Posted: 10 Mar 2015 12:32 PM PDT

ஸ்ரீநகர்: பத்து லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்தான் முஸ்லிம் லீக் இயக்கத்தின் முக்கியத் தலைவரான மஸ்ரத் ஆலம். கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட அவர், தற்போது காஷ்மீர் அரசால் விடுவிக்கப்பட்டிருப்பது மத்திய அரசுக்கு தலை வலியை ஏற்படுத்தி உள்ளது. யார் இந்த மஸ்ரத் ஆலம்? அவரது பின்னணி என்ன? தெரியுமா.. 2010ம் ஆண்டு, ஏப்ரல் 30ம் தேதி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக இந்திய ராணுவம் கூறியது. ஆனால் ரஃபியாபாத் பகுதியைச் ...

ரியாலிட்டி ஷோ விபரீதம்: ஹெலிகாப்டர் விபத்தில் பிரபலங்கள் உட்பட10 பேர் பலி!

Posted: 10 Mar 2015 12:27 PM PDT

அர்ஜென்டினாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய எதார்த்த நிகழ்ச்சி (Reality show) ஒன்றில், இரு ஹெலிகாப்டர்கள் மோதி, பிரபலங்கள் உட்பட 10 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில், ஹெலிகாப்டரில் பறந்த படியே போட்டியாளர்கள் தரையில் இருக்கும் தங்களது தங்குமிடம் மற்றும் உணவு பொருட்களைப் படம் பிடிக்க வேண்டும் என்று இரு அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. அர்ஜென்டினாவில் வடமேற்கில் உள்ள லாரி ரியோஜா மாகாணத்தின் மலைப்பகுதியில் ...

ஓமக்குச்சி நரசிம்மன் இறந்த தினம்: மார்ச் 11- 2009

Posted: 10 Mar 2015 12:25 PM PDT

ஓமக்குச்சி நரசிம்மன் ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் ஔவையார் (1953) திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு சென்னையில் எல்.ஐ.சியில் பணிபுரிந்தபடியே 1969 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் படத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் ...

பழ.நெடுமாறன் பிறந்த தினம் (மார்ச்.10, 1933)

Posted: 10 Mar 2015 12:23 PM PDT

தமிழ் தேசியவாதி பழ.நெடுமாறன் பிறந்த தினம் (மார்ச்.10, 1933) தமிழ் தேசியவாதியான பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி கி. பழநியப்பனார் - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய ...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடங்கிய நாள் (மார்ச்.10, 1949)

Posted: 10 Mar 2015 12:21 PM PDT

இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லா கான் 'அகில இந்திய முஸ்லிம் லீக்கை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் முகமது அலி ஜின்னா அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் காயிதே மில்லத் இதன் தலைவரானார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போகாமல் இந்தியாவிலேயே ...

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Posted: 10 Mar 2015 12:20 PM PDT

பன்றிக் காய்ச்சல்: மக்களைக் கைவிடுகிறதா அரசு? இது 'H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸு'க்கும் மனிதர்களுக்குமான வாழ்வா, சாவா போராட்டம். கடந்த 2009-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்காப்புக்காக ஆண்டுதோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது. இப்படியாக 5 ஆண்டுகளில் அதன் வீரியம் பல மடங்கு பெருகிவிட்டது. அதன் மரபணு மாற்றத்தின் வேகமும் அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின் நியதி இது. ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது அரசு இயந்திரம் பரிணாமம் அடைந்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். புள்ளிவிவரங்கள் ...

1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம்

Posted: 10 Mar 2015 12:13 PM PDT

பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், சமுதாய மாற்றத் துக்காகவும் உழைத்தவர்களில் முக்கியமானவர் சாவித்ரிபாய் பூலே. பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலரும் தங்களின் முன்னோடியாகக் கருதுவது இவரைத்தான். மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள நைகாவ் கிராமத்தில் 1831-ல், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் சாவித்ரிபாய். அந்தக் கால வழக்கப்படி 9-வது வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. சாவித்ரிபாயைத் திருமணம் செய்தவர், பின்னாட்களில் இந்திய சமூகப் புரட்சியின் தந்தையாக உருவெடுத்த ஜோதிராவ் பூலே. சாதியக் ...

The Man With The Golden Gun Tamil Dubbed

Posted: 10 Mar 2015 12:10 PM PDT



தலைவர் இனிமேல் டீ சாப்பிட மாட்டார்...!

Posted: 10 Mar 2015 09:52 AM PDT

சூரியசக்தி விளக்கு எப்படி எரிகிறது?

Posted: 10 Mar 2015 09:46 AM PDT

சூரியசக்தி விளக்கு 3 முக்கிய பாகங்களை கொண்டது. சூரியசக்தி தகடு, மின்கலம் (பேட்டரி) மற்றும் விளக்கு ஆகியவையே அந்த மூன்று பகுதிகள். சூரியசக்தி தகடு பல அடுக்குகளில் சூரியசக்தி செல்களை கொண்டிருக்கும். ஒவ்வொரு செல்களும் குறை மின்கடத்தியாக செயல்படும். சூரிய ஒளி, தன் மீது படும்போது அந்த கடத்திகள் மின்னாற்றலை உற்பத்தி செய்கின்றன. இப்படி அதிகப்படியான செல்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம், அதனுடன் இணைப்பாக உள்ள பேட்டரியில் சேகரமாகிறது. சூரிய ஒளி விழும் பகல் பொழுது முழுவதும் இதே முறையில் மின்சாரம் உருவாக்கப்பட்டு ...

அன்பே வா , எனதன்பே வா.

Posted: 10 Mar 2015 09:42 AM PDT

அன்பே வா , எனதன்பே வா. பெண்கள் கூடிய கூட்டம் . கூட்டத்தை கூட்டிய பெண்மணி எல்லோரையும் வரவேற்று பேசிக் கொண்டு  இருந்தார் . வழக்கம் போல் தங்கள் தங்கள் கணவன்மார்களை பற்றிய குறைபாடுகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர் . கூட்டத்தை கூட்டிய பெண்மணி , கூடி இருந்தோரை பார்த்து , " உங்களை எல்லாமொரு கேள்வி கேட்பேன் . உண்மையாக பதில் கூறுங்கள் என்றார் . எல்லோரும் ஒத்துக்கொண்டனர் . பெண்மணி கேட்டக் கேள்வி இதுதான் . " உங்கள் கணவரை அன்புடன் ,I love you  என்று, எவ்வளவு நாட்களுக்கு முன்பு  கூறினீர்கள் ?" என்றார் ...

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை

Posted: 10 Mar 2015 09:36 AM PDT

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் "பி" பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 5 வது லீக் ஆட்டத்தில் இன்று அயர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 260 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ...

ஈசன் திருவடியில் இடம்பெற்ற காரைக்கால் அம்மையார்

Posted: 10 Mar 2015 09:34 AM PDT

யாருக்கும் கிடைக்காத அரும்பேறு பெற்றவர் காரைக்கால் அம்மையார். திருக்கயிலையில் வீற்றிருக்கும் கயிலைநாதனாலேயே, 'அம்மையே' என்று அழைக்கப்பட்டவர். ஈசன் அருளும் இடத்தில் தன் காலடி படக்கூடாது என்பதற்காக தலையால் நடந்து சென்ற அருளாளர் காரைக்கால் அம்மையார் ஆவார். புனிதவதி கடற்கரை பட்டினமான காரைக்கால் பகுதியில் தனதத்தன் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி தர்மவதி. இந்த தம்பதியருக்கு நெடுங்காலமாய் புத்திர யோகம் வாய்க்காமல் இருந்தது. சிவபெருமானை போற்றி துதித்து வழிபட்டு வந்த இந்த தம்பதியருக்கு ...

முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் !

Posted: 10 Mar 2015 09:33 AM PDT

முனிவர் ஒருவர், நடுக்காட்டில் ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவர் மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவராக இருந்தார். கடும் தவத்தின் காரணமாக சில சித்து விளையாட்டுக்கள் அவருக்கு தெரிந்திருந்தது. அதன் காரணமாக அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து முனிவரைப் பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். மக்களின் புகழ்ச்சியானது, முனிவர் மீது படத் தொடங்கியதும், அவருக்கு தன்னைப் பற்றிய கர்வமும் சற்று தலை தூக்கிவிட்டது. ...

usb driver

Posted: 10 Mar 2015 09:29 AM PDT

வணக்கம் நண்பர்களே என்னிடம் சோனி வீடியோ கேமரா மாடல் dcr- hc26e அதற்க்கு usb driver விண்டோஸ் 7 க்கு வேண்டும் எந்த sitel கிடைக்கும் தயு செய்து கூறுங்கள்

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Posted: 10 Mar 2015 09:15 AM PDT

சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து. பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ...

ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை

Posted: 10 Mar 2015 09:09 AM PDT

ஆஸ்திரேலியா நாட்டில் பெங்களூரு பெண் என்ஜினீயர் பிரபா வயது (41) வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். கத்திக்குத்து விழுந்த நிலையிலும், அவர் அங்குள்ள தனது குடும்ப உறவினருக்கு செல்போனில் தகவல் சொல்லி இருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் அவர் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்து விழுந்தார். அவரை போன்றே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தோழி ஒருவர், பிரபா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை ...

ஆல்பா நகரம் என்றால் என்ன?

Posted: 10 Mar 2015 08:44 AM PDT

நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக திகழும் நகரை 'ஆல்பா நகரம்' என்று குறிப்பிடுவார்கள். அது சர்வதேச வணிக மையமாகவும் திகழும். பங்கு வர்த்தகம் மற்றும் முக்கியமான நிதி நிறுவன அமைப்புகளின் கூடாரமாக அந்த நகரம் விளங்கும். பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தங்கள் நிறுவன கிளையை ஆல்பா நகரில் கொண்டிருக்கும். அதனால் முக்கிய ரியல் எஸ்டேட் மையமாகவும், நிறைய வங்கிப் பணிகள் மிகுந்த நகரமாகவும் ஆல்பா நகரம் விளங்கும். ஆல்பா நகரில் ஏற்றுமதி மையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் அதிகமாக செயல்படும். ...

ரகசிய ஆய்வாளர் எனப்படுபவர்கள் யார்?

Posted: 10 Mar 2015 08:43 AM PDT

நிறுவனங்களும், சந்தை ஆய்வு மையங்களும் பல்வேறு தகவல்களை சேகரிக்க சிலரை நியமிப்பார்கள். குறிப்பிட்ட தயாரிப்பு பொருட்கள் மற்றும் சேவையைப் பற்றி தகவல் சேகரித்து வழங்கும் பணியை இவர்கள் செய்வார்கள். இவர்களை ரகசிய ஆய்வாளர்கள் என குறிப்பிடலாம். ஒரு கடை அல்லது தியேட்டர் அல்லது பொது இடங்களில் நின்றபடி, ரகசிய ஆய்வாளர்கள் தன்னை கடந்து செல்பவர்களிடம் குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை பற்றி கருத்து கேட்பார்கள். அவர்கள் கருத்து கேட்பது ரகசியமாகவோ, மற்றவர்களை சூழ்ந்து கொண்டு ஒரு பொருளை விளம்பரப்படுத்துவது ...

எப்படி அயல்நாடுகளின் பணமதிப்பு கணக்கிடப்படுகிறது?

Posted: 10 Mar 2015 08:40 AM PDT

நீங்கள் அமெரிக்கா சென்றால், அங்கு எந்தப் பொருளையாவது வாங்க விரும்பினால் அந்த நாட்டின் பணமான டாலர்கள் கொடுக்க வேண்டும். அதற்காக நீங்கள் குறிப்பிட்ட இடங்களில் நமது நாட்டு பணத்தைக் கொடுத்து டாலர்களை மாற்றாக பெற்றுச் செல்ல முடியும். அங்கு நமது நாட்டு ரூபாய்க்கும், அந்த நாட்டின் டாலருக்கும் சரியான மதிப்பிட்டு தொகையை வழங்குவார்கள். உதாரணமாக நீங்கள் அறுபது ரூபாய் கொடுத்தால் ஒரு அமெரிக்க டாலரை திரும்ப பெறலாம். அதாவது ஒரு அமெரிக்க டாலர், இந்திய பணமதிப்பில் 60 ரூபாய்க்குச் சமமாகும். இந்த மதிப்பை ...

உப்பு சில சுவையான தகவல்கள்

Posted: 10 Mar 2015 08:39 AM PDT

உப்பு என்றால் தெரியுமா? என்று உங்களிடம் கேட்டால், 'உணவில் சுவைக்கு சேர்ப்பார்களே அதுதானே உப்பு' என்று பதில் சொல்வீர்கள். அது பாதிதான் சரியான பதில். உணவில் சேர்ப்பது உப்பின் ஒரு வகை. 'அமிலத்தில் அல்லது நீரில் கரையும் எந்தப் பொருளும் உப்பு' என்று வகைப்படுத்துகிறார்கள் வேதியியல் விஞ்ஞானிகள். ஏராளமான உப்பு வகைகள் இருக்கிறது. உப்பு பற்றிய சில சுவையான தகவல்கள் இங்கே... * நாம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பு. இதில் ஒரு குளோரின் அணுவுடன், 23 பங்கு சோடியம் ...

பழந்தமிழர் ஆடை நேர்த்தி

Posted: 10 Mar 2015 08:38 AM PDT

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காடுகளில் திரிந்த மனிதன் மரங்களின் பட்டையை உரித்து மரவுரியாகவும், இலைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து இணைத்து ஆடையாகவும் அணிந்து கொண்டிருந்தான் பெண்கள் இலைகளை போலவே பூக்களை ஒன்று சேர்த்து பூவாடையாக அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்தது. குளிர், பனியில் இருந்து பாதுகாக்க மிருகங்களின் தோலை ஆடையாக்கி அணிந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் நாகரீகமும், பயிர்த் தொழிலும் முன்னேற்றம் அடைந்த போது ஆடைக்காக பருத்தியை விளைவித்தனர். தமிழகத்தில் பருத்தி அதிக அளவில் விளைந்தது. அதனை நூலாக ...

மதங்கள்

Posted: 10 Mar 2015 08:35 AM PDT

இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்திக்கும், மனிதனுக்கும் இடையில் இருப்பதாகக் கருதப்படும் நம்பிக்கையே சமயம் அல்லது மதம் என்று சொல்லப்படுகிறது. ஆதிகாலத்தில் இருந்தே இந்த நம்பிக்கை இருப்பதாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமய நம்பிக்கைகள் பொதுவாக புராணங்கள், சித்தாந்தங்கள், சடங்குகள் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுகின்றன. உலகின் முக்கிய மதங்களாக கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து, புத்தம், சீக்கியம், ஜைனம், பார்சி உள்பட பல மதங்கள் உள்ளன. கிறிஸ்தவ மதம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. ...

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையிட்டு மனு மீதானதீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படும்

Posted: 10 Mar 2015 08:23 AM PDT

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையிட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் சுப்பிரமனிய சாமி நாளை தனது தரப்பு எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் அவர் தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யா விட்டாலும் தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி குமாரசாமி கூறினார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் னிலையில் 39 -வது நாளாக நேற்று ...

சாப்பிடும் போது தண்ணீர் பருகினால் அசிடிட்டி ஏற்படும்

Posted: 10 Mar 2015 07:53 AM PDT

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான  காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இரைப்பை சாறுகளை  நீர்க்கச் செய்யும். வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு  சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. 'செரிமான தீ'  என அழைக்கப்படும் செரிமான ...

இந்த உலகத்துல ஃப்ரியா அட்வைஸ் மட்டும்தான் கிடைக்குது...!

Posted: 10 Mar 2015 06:52 AM PDT

வீட்டுக்கு வெளியே முட்டை மந்திரிச்சு வெச்சுடுவோம்...!

Posted: 10 Mar 2015 06:40 AM PDT

அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்!

Posted: 10 Mar 2015 06:38 AM PDT

அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்! இஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசி ஆவணப்படமான  'இந்தியாவின் மகள்' பெண்கள் தினத்தன்று வெளியிடுவதாக இருந்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் பேட்டி வெளிவந்த பிறகு பெரிதும் காயப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட இந்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடை விதிக்கப்படும் என்றார். பிபிசி நிறுவனம்  அசராமல் அந்த ஆவணப்படத்தை youtube தளத்தில் நான்கு நாட்கள் முன்னரே ...

ஒரு தலை காதல் !

Posted: 10 Mar 2015 05:17 AM PDT

என்னை விட்டு போகும் போது
என் நிழலை ஏன் அழைத்துச்சென்றாய் !

உந்தன் நெஞ்சில் நானில்லையா
எந்தன் மூச்சில் நீ மட்டும்தான் !

கண்ணாலே பேசி
உன் இதழ்களை பார்த்து
கைகளை தொடவே
நடுங்கும் கால்கள்

என் அச்சங்கள் போக்க
மிச்சம் நீ வைத்த
கோபங்கள் யாவும்
தித்திக்குதே !

- மோகன் !

காதலிக்க ஆசை

Posted: 10 Mar 2015 04:43 AM PDT

அம்மாவிடம் உண்மைகள் பேச ஆசை
அப்பாவின் சட்டையை போட ஆசை
தங்கையிடம் அடிவாங்க ஆசை
பாட்டியின் சிரிப்பை பார்க்க ஆசை
தாத்தாவுடன் கம்பீரமாக தெருக்களில் நடக்க ஆசை
நண்பர்களுக்கு விட்டுக்கொடுக்க ஆசை
அனைவரையும் காதலிக்க ஆசை !

- மோகன் ! அன்பு மலர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™