Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 9 பேருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 30 Mar 2015 11:13 PM PDT

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. மசூதி இடிக்கப்பட்டபோது, அந்த இடத்தில் போடப்பட்டிருந்த மேடையில்

ஆந்திராவில் 65 வயது நிரம்பிய பெண் கைதிகளுக்கு ஜெயிலில் சிறப்பு உணவு

Posted: 30 Mar 2015 10:36 PM PDT

விசாகப்பட்டினத்தில் சமீபத்தில் நடந்த சிறைத்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக ஆந்திர சிறைத்துறை டி.ஐ.ஜி. கிருஷ்ணராஜு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–

திருமலை தேவஸ்தானம் சார்பில் அனைத்து மாநில தலைநகரிலும் ஏழுமலையான் கோவில் கட்டப்படும்

Posted: 30 Mar 2015 10:14 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். பக்தர்களின் வசதிக்காகவும், ஏழுமலையானின் பெருமைகளை இந்தியா முழுவதும் பரப்புவதற்காகவும் திருமலை தேவஸ்தானம் சார்பில் அனைத்து

காளஹஸ்தி அருகே சிறுமி கடத்தி பலாத்காரம் : 2 பேர் கைது

Posted: 30 Mar 2015 10:13 PM PDT

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே திகுவமோதுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது பெண், கடந்த 28–ந்தேதி இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது பாட்டியிடம் படுத்துத்தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 22), பிரதீப் (22) ஆகியோர் நள்ளிரவு நேரத்தில் வந்து பெண்ணின் வாயை பொத்தி

பாட்னாவில் வீட்டில் குண்டு வெடித்தது: 4 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

Posted: 30 Mar 2015 10:10 PM PDT

பீகார் மாநிலம் பாட்னாவில் பகதூர்பூர் எனும் பகுதியில் நேற்றிரவு ஒரு வீட்டில் குண்டுகள் வெடித்தது. அந்த பகுதியே அதிரும் வகையில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியும், பரபரப்பும் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பாட்னா நகர போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் குண்டு வெடித்த அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டை முற்றுகையிட்டு

மும்பை ரெயில் நிலையங்களில் ஆஸ்பத்திரி, மருந்து கடை: அவசர டாக்டர்களும் நியமனம்

Posted: 30 Mar 2015 09:57 PM PDT

மும்பை ரெயில் நிலையங்களில் நடைபெறும் ரெயில் விபத்துக்களில் ஆண்டுதோறும் 100 பேர் வரை உயிர் இழக்கிறார்கள். அவர்களுக்கு அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க ரெயில் நிலையங்களில் எந்த மருத்துவ வசதியும் இல்லை. இதையடுத்து ரெயில் நிலையங்களில் மருந்து கடைகள், அவசர கால மருந்துவ அறைகள் தொடங்கவும் டாக்டர்கள், மருந்தாளுனர்கள் உள்ளிட்டோரை பணியில் அமர்த்தவும் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய மேற்கு ரெயில்வே முடிவு

ஜம்மு- காஷ்மீரில் மழை குறைந்தது: வெள்ளம் வடியத்தொடங்கியது

Posted: 30 Mar 2015 09:49 PM PDT

ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த அடைமழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடியதால் அரசு சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்கிடையே ஜீலம் நதியின் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

முன்னாள் மத்திய மந்திரி தாசரி நாராயணராவின் ரூ.2 கோடி சொத்து முடக்கம்: அமலாக்க பிரிவு நடவடிக்கை

Posted: 30 Mar 2015 09:47 PM PDT

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல இயக்குனரும், நடிகருமான தாசரி நாராயணராவ் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். கடந்த 2004–ம் ஆண்டு முதல் 2008–ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மந்திரி சபையில் நிலக்கரி துறை இணை மந்திரியாக இருந்த அவர் மீது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ.

வக்கீல் பெண் குமாஸ்தா மீது ஆசிட் வீச்சு: கணவர் உள்பட 2 பேர் கைது

Posted: 30 Mar 2015 09:40 PM PDT

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ளா கோணி என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 30) வக்கீல் குமாஸ்தா. இவரது கணவர் பெயர் சுனில் குமார் (45). கணவன்–மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஸ்ரீஜா கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீஜாவின்

மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை: சித்தராமையா அறிவிப்பு

Posted: 30 Mar 2015 08:31 PM PDT

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ''கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்டங்களில்

டெல்லியில் 19-ந்தேதி நடைபெறும் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்: காங்கிரஸ் அறிவிப்பு

Posted: 30 Mar 2015 08:23 PM PDT

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் துணைத்தலைவர்

யு.பி.ஏ. அரசின் கொள்கையால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்: சோனியாவுக்கு கட்காரி பதிலடி

Posted: 30 Mar 2015 05:12 PM PDT

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருவதை மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி விமர்சனம் செய்ததற்கு பதிலளித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கட்காரிக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார்.

ஜம்மு காஷ்மீரில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு: 16 பேர் பலி

Posted: 30 Mar 2015 03:56 PM PDT

ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் வறுமையில் வாடுவதால் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 75 சதவீத சம்பள உயர்வு

Posted: 30 Mar 2015 03:15 PM PDT

இந்திய நாட்டின் அரசியலில் தேர்தலில் பணத்தை வாரி இறைப்பதும், வெற்றி பெற்றதும் பணத்தை அள்ளுவதும் வாடிக்கையாகி வருவது நாமெல்லாம் அறிந்ததே. வாக்குகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்க நேர்ந்ததால் கர்நாடக

ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க உதவுமாறு சவுதி மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு

Posted: 30 Mar 2015 10:55 AM PDT

ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி, தலைநகர் சனாவிலிருந்து தலைமறைவானார். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறும் சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஹாதியின்

உத்தர பிரதேசத்தில் முதல் குடிநீர் ஏ.டி.எம்: நடிகை ஹேம மாலினி திறந்து வைத்தார்

Posted: 30 Mar 2015 09:47 AM PDT

அவசர தேவைக்கு கார்டைத் தேய்த்தால் பணம் தரும் அதே ஏ.டி.எம். தான், உத்தர பிரதேச மக்களின் தாகத்தை தீர்க்கும் குடிநீரை தரும் இயந்திரமாகவும் மாறியிருக்கிறது. இதற்கென பிரத்யேகமாக வழங்கப்படும் கார்டை தேய்த்தால், பணம் வருவதற்கு பதிலாக குடிநீர் வருகிறது.

ஆம் ஆத்மி உட்கட்சி பூசல் மகாராஷ்டிராவிலும் எதிரொலித்தது: பல தலைவர்கள் விலக திட்டம்

Posted: 30 Mar 2015 09:04 AM PDT

டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சியில் இப்போது உட்கட்சி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் உச்சகட்டமாக தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை நீக்கப்பட்டனர். செயற்குழுவின் இந்த நடவடிக்கையால் பல தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முன்னணி தலைவரான மேதா பட்கர் கட்சியில் இருந்து விலகினார். மேலும், பலர் எதிர்கால திட்டங்கள் குறித்து யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

பீகாரில் ரெயில் டிரைவர்களை பழிவாங்கும் குரங்கு: விரட்டி விரட்டி தாக்குவதால் பீதி

Posted: 30 Mar 2015 08:19 AM PDT

பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலைய அதிகாரிகளை குரங்கு ஒன்று கதி கலங்க செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 ரெயில் டிரைவர்களை அந்த குரங்கு துரத்தி துரத்தி தாக்கியுள்ளது. கடந்த வாரம் தனது சகோதர குரங்கு ஒன்றை ரெயில் விபத்தால் இழந்த அந்தக் குரங்கு, அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக கண்ணில் படும் ரெயில் டிரைவர்களைத் தேடித்தேடித் தாக்குவதாக அப்பகுதி ரெயில்வே அதிகாரி அக் ஜா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் மேலும் 2 ஆண்டுகளுக்கு பிரீபெய்டு மொபைல் சேவை வழங்க அரசு அனுமதி

Posted: 30 Mar 2015 07:17 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிரீபெய்டு மொபைல் சேவைகளை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், 3.3 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள். ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரீபெய்டு சேவை வழங்கி வரும் நிறுவனங்களுக்கான லைசென்சுகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மத்திய உள்துறை செயலாளர்

உ.பி.யில் கொடூரம்: 75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்

Posted: 30 Mar 2015 07:10 AM PDT

வரதட்சணைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 75 வயது மூதாட்டியை ஒரு கொடூர கும்பல் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மாவட்டமான லகிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள நீம்கான் கிராமத்தை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™