Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பெங்களூர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கொலையா?: சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை

Posted: 17 Mar 2015 11:42 PM PDT

பெங்களூரில் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி நேற்று முன்தினம் தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிகாரி டி.கே.ரவி நேர்மையானவர் என பெயர் எடுத்தவர். கோலார்

புதிய அரசு பங்களாவில் ஏர்–கண்டிஷன் வசதி வேண்டாம்: கெஜ்ரிவால் உத்தரவு

Posted: 17 Mar 2015 11:04 PM PDT

டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரில் தங்கி சிகிச்சை பெற்ற பின்பு நன்கு உடல் நலம் தேறியுள்ளார். நேற்று முன்தினம் டெல்லி திரும்பிய அவர் மீண்டும் முதல்–மந்திரி பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார். தற்போது கெஜ்ரிவால் டெல்லி புறநகரான காசியாபாத்தில் தனது மனைவி சுனிதாவுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளுக்கான

2–வது முறையாக மேற்கு வங்காள முன்னாள் மந்திரிக்கு பன்றிக்காய்ச்சல்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Posted: 17 Mar 2015 11:00 PM PDT

மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் கவுதம் தேவ். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். அதன்பிறகு கொல்கத்தா திரும்பினார். தற்போது அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. கொல்கத்தா 'சால்ட் லேக்' பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில்

பிளஸ்-2 தேர்வில் தவறான வினாத்தாளை வழங்கிய ஆசிரியர்கள்

Posted: 17 Mar 2015 09:30 PM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. பறக்கும் படையினரின் கண்காணிப்பில் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்ற நிலையில், சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டது: மத்திய அரசு மீது மோடியின் இளைய சகோதரர் தாக்கு

Posted: 17 Mar 2015 08:16 PM PDT

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நேற்று அகில இந்திய நியாய விலைக்கடைகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடியும் கலந்து கொண்டார். இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவரான அவர்

நிலம் கையகப்படுத்தும் மசோதா ஓட்டெடுப்பின்போது ஆஜராகாத எம்.பி.க்களை கண்டித்த மோடி

Posted: 17 Mar 2015 08:08 PM PDT

டெல்லியில் நேற்று காலை பா.ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு பணிகளில் ஜாட் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு ரத்து: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 17 Mar 2015 07:59 PM PDT

2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அரியானா, டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாழும் ஜாட் இனத்தவருக்கு மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பட்டியலின் கீழ் இட ஒதுக்கீடு செய்யும் வகையில் அறிவிக்கை வெளியிட்டு இருந்தது.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக உயருகிறது

Posted: 17 Mar 2015 07:53 PM PDT

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயருகிறது. நபர் ஒருவருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக கட்டணம் அதிகரிக்கும் என்று ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரி

பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் நவீன கருவிகளுடன் இம்மாத இறுதியில் விண்ணில் ஏவ திட்டம்

Posted: 17 Mar 2015 07:37 PM PDT

பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்டில் பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி

அகமதாபாத்தில் ஒரு வாரமாக நின்றிருந்த சோலார் இம்பல்ஸ் விமானம் இன்று அதிகாலை வாரணாசி செல்கிறது

Posted: 17 Mar 2015 03:52 PM PDT

சூரிய சக்தியால் இயங்கும் உலகின் ஒரே விமானமான சோலார் இம்பல்ஸ்-2, இன்று காலை 5.30 மணியளவில் அகமதாபாத்திலிருந்து புறப்பட்டு வாரணாசி செல்கிறது. இன்றைய பயணத்தின் போது விமானத்தை விமானி ஆன்ட்ரே போர்ஸ்ச்பெர்க் ஓட்டிச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர்களில் 58 பேர் பெண்கள் - 18 பேர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள்

Posted: 17 Mar 2015 01:44 PM PDT

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 142 வேட்பாளர்கள் பட்டியலை மாநில பா.ஜ.க இன்று வெளியிட்டது. அக்கட்சியின் மேற்கு வங்க மாநில தலைவர் ராகுல் சின்ஹா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கூறுகையில்; 142 வேட்பாளர்களில் 58 பெண் வேட்பாளர்களையும், 17 முஸ்லிம் மற்றும் 1 கிறிஸ்துவ வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளதாக அவர் கூறினார்

கோவாவில் நிலக்கரி சுரங்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக்கொண்டது மத்திய அரசு

Posted: 17 Mar 2015 11:56 AM PDT

கடற்கரை மாநிலமான கோவாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களுக்கு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மந்திரியாக இருந்த ஜெயந்தி நடராஜன் தடை விதித்து உத்தரவிட்டார். நீண்ட காலமாக நீதிமன்றத்தில் இருந்த தடை நேற்று உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில்

ஆப்கன் வழியாக பாகிஸ்தானை ஸ்திரத்தன்மையற்ற நாடாக மாற்ற இந்தியா முயற்சிக்கிறது: பாகிஸ்தான் தூதர்

Posted: 17 Mar 2015 09:33 AM PDT

ஆப்கன் வழியாக பாகிஸ்தானை ஸ்திரத்தன்மையற்ற நாடாக மாற்ற இந்தியா முயற்சிப்பதாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார். பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் இந்தியாவில் கதையளக்கப்படுகிறது. ஆனால் எங்கள் சார்பில் நாங்கள் வேறு கதையை சொல்கிறோம். அதாவது ஆப்கன் வழியாக பாகிஸ்தானை ஸ்திரத்தன்மையற்ற நாடாக மாற்ற இந்தியா முயற்சிப்பதாக நாங்கள் கூறுகிறோம் என பாசித் தெரிவித்தார்.

ரூ. 3 கோடி வைரத்துடன் பட்டை தீட்டும் நிறுவன ஊழியர் ஓட்டம்

Posted: 17 Mar 2015 09:10 AM PDT

குஜராத் மாநிலத்தில் உள்ள தொழில் நகரமான சூரத்தில் பச்சை வைரக்கற்களுக்கு பட்டை தீட்டும் ஏராளமான பட்டறைகள் இயங்கி வருகின்றன. அவ்வகையில், இங்குள்ள கட்டார்கம் பகுதியில் இருக்கும் ஒரு வைர ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் சுமார் 2500 கேரட் வைரங்களை தனது ஊழியரான சாகர் ரமேஷ் கபூரியா என்பவரிடம் பட்டை தீட்டுவதற்காக நேற்று தந்தனுப்பினார்.

கருப்பு பண மசோதாவிற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்: இனி பணத்தை மறைத்தால் 10 ஆண்டு ஜெயில்

Posted: 17 Mar 2015 09:00 AM PDT

தனி மனிதன் அல்லது நிறுவனத்தின் வருவாய்க்கு வரி கட்டாமல் ஏமாற்றி, அதை கருப்பு பணமாக வைத்துள்ளவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு இயற்றியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்த நிதி மந்திரி அருண் ஜெட்லி, கருப்பு

ஸ்பெக்ட்ரம் ஏலம்: 12-வது நாளான இன்று வரை மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்

Posted: 17 Mar 2015 08:40 AM PDT

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் டெல்லியில் இன்று 12-வது நாளாக நடந்தது. இதில் 2-ஜி மற்றும் 3-ஜிக்கான அலைக்கறை ஏலத்தில் ஆச்சர்யப்படும் விதமாக அரசுக்கு அதிக அளவிலான வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முந்தைய ஆட்சியில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையில் நடந்ததால் அரசிற்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தியது. ஏல முறை

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் 1100 கிலோ மீட்டர் தூர பாதயாத்திரை திடீர் ரத்து

Posted: 17 Mar 2015 08:07 AM PDT

மத்திய அரசின் புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதா ஏழை விவசாயிகளுக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்த காந்தியவாதி அன்னா ஹசாரே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மாதம் 30-ம் தேதி தொடங்கி 1100 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். மராட்டிய மாநிலம் வர்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்தில் இருந்து தொடங்கும் இந்த பாதயாத்திரை பல மாநிலங்களை கடந்து வரும் ஏப்ரல் 30-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து சோனியா தலைமையில் எம்.பி.க்கள் பேரணி: ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்

Posted: 17 Mar 2015 07:58 AM PDT

மத்திய அரசின் நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று மாலை 11 எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியின் நிறைவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சோனியா தலைமையில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவேகவுடா உள்பட 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். நிலம் கையகப்படுத்தும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் கடந்த 10–ந்தேதி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. டெல்லி

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்ட தோல்வி: மத்திய அரசு மீது மோடியின் தம்பி கடும் தாக்கு

Posted: 17 Mar 2015 06:31 AM PDT

பிரதமர் மோடியை எதிர்த்து அவரது தம்பியே போராட்டத்தில் குதித்துள்ளார். மத்திய அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் உணவு தானியம் மற்றும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படுவதை கண்டித்து நியாய விலைக்கடை வியாபாரிகள் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று ரேஷன் கடை உரிமையாளர்கள் போராட்டத்தில்

ஜனாதிபதி மாளிகையை நோக்கி தடையை மீறி மாபெரும் பேரணி: சோனியா, மன்மோகன் பங்கேற்றனர்

Posted: 17 Mar 2015 05:42 AM PDT

மத்திய அரசின் நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று மாலை 10 எதிர்க்கட்சிகள் நடத்திய பிரமாண்ட பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் ஒருங்கிணைத்து நடத்திய இந்த பேரணி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இருந்து புறப்பட்டு ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்று கொண்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™