ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அந்தமானை பாருங்கள் அழகு.......
- ஒரு பேய் காத்திருக்கிறது........
- நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி
- உலகின் முதல் 'செல்பி'
- பேஷ்... பேஷ்...வரவேற்க வேண்டிய தீர்ப்பு
- புதிய தமிழ் ஸ்பெல் செக்கர்
- கொளுத்தும் வெயிலை 'கூல் செய்யுங்க...
- தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட தென் ஆப்பிரிக்கா...!
- வாட்ட டயலாக்... இது வாட்ஸ் அப் ‘தேவர் மகன்’...!
- தொடத் தொடத் தொல்காப்பியம்(354)
- எது?
- ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகர் 'அமராவதி'
- பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி?
- அறிமுகம் இரா.ஜெகதீசன்
- குற்றம் கடிதல் படத்திற்கு விருது
- மாஜி அமைச்சர் மரணம்: ஜெ., இரங்கல்
- 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
- தாரகை - பாகம் 02 - ரா.கி.ரங்கராஐன்
- சாலாமிசிரி
- எங்க ஊரு பண்ணையாரு..!! -Mano Red
- டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி
- வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்!
- விரைவில் விற்பனைக்கு வரும் 'பறக்கும் கார்'
- காதல் கவிதை...!!
- ஆஹா மெல்ல நட மெல்ல...
| அந்தமானை பாருங்கள் அழகு....... Posted: 24 Mar 2015 12:55 PM PDT இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................) ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு ... |
| ஒரு பேய் காத்திருக்கிறது........ Posted: 24 Mar 2015 11:03 AM PDT யாரெல்லாம் இப்ப free - யா இருக்கறீங்க....... ம்..? நன்றி: முகநூல். |
| நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Posted: 24 Mar 2015 10:32 AM PDT அன்பு ஈகரை உறவுகளுக்கு, ஏற்கனவே சொல்லியிருந்தேன் இல்லையா? இதோ நானும் பறக்கப்போகிறேன். எங்கேயா.....? அ..... அது சஸ்பென்ஸ். அதை போய்வந்து சொல்கிறேன். ஒரு சின்ன க்ளு...! அது மிக, மிக அழகான இடமாம். லோக்கல் தான். சுற்றுலா ஸ்தலம். எங்கே என்று யூகியுங்கள் பார்ப்போம்...? அங்கே நம்ம ஆளுங்க யாரும் இல்லை என்று நினைக்கிறேன். சென்று வருகிறேன். பை....! நாளை காலை 9.50-க்கு flight - நிறைய வேலை இருக்கிறது. மறுபடியும் திங்களன்று சந்திப்போம். . . . . . . . . . . . . . . . . . அதுவரை, ... |
| Posted: 24 Mar 2015 10:27 AM PDT உலகின் முதல் செல்பி எடுத்தவர் எனும் பெருமை இப்போதைக்கு ராபர்ட் கர்னேலியஸிடம் தான் இருக்கிறது. 1839-ம் ஆண்டு அவர் உலகின் முதல் செல்பியை எடுத்தார். கேமராவை ஸ்டாண்டில் நிற்க வைத்துவிட்டு அதன் முன்பக்க லென்ஸ் மூடியைத் திறந்தார். பிறகு ஓடிப் போய் கேமராவின் முன்னால் அசையாமல் ஒரு நிமிடம் நின்றார். பிறகு மீண்டும் போய் கேமராவின் கதவை மூடினார். பின்னர் அந்த பிலிமை டெவலப் செய்து பார்த்தபோது கிடைத்தது தான் உலகின் முதல் செல்பி! ஆனால் அந்தப் படத்துக்கு 'செல்பி' எனும் பெயர் வைக்க அவருக்குத் தோன்றவில்லை. ... |
| பேஷ்... பேஷ்...வரவேற்க வேண்டிய தீர்ப்பு Posted: 24 Mar 2015 09:49 AM PDT புதுடில்லி: சமூகவலைதளங்களில் தங்கள் கருத்தை வௌியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் 66 ஏ சட்டப் பிரிவை ரத்து செய்து இன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது, இது குறித்து வழக்கு தொடர்ந்த இளம் பெண் ஷாஹீன் தாதாவின் தந்தை முகமது ப்ரூக் தாதா கூறுகையில், "எனது மகள், பேஸ்புக் பகிர்வுக்காக கைது செய்யப்பட்டபோது அவரை நான் திட்டவில்லை. அவர் எந்த தவறும் செய்யவில்லை என எனக்குத் தெரியும். இது குறித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்" என்று தெரிவித்துள்ளர். - |
| Posted: 24 Mar 2015 09:46 AM PDT இதுவரை தமிழில் எழுதுபவர்கள் கூகிள் சொல் பரிந்துரை வழியாகவோ, நேரடியாக வாசித்தோ எழுத்துப் பிழைகளைத் திருத்திவந்தனர். தனிச் சொற்களுக்குச் சில பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைத்தாலும் முழுமையான ஒரு ஸ்பெல் செக்கர் இதுவரை இல்லை. இந்நிலையில் தமிழில் புதிதாக இணையத்தில் வாணி என்ற ஒரு எழுத்துப் பிழை திருத்தி வெளிவந்துள்ளது. இது 70 மில்லியனுக்கும் மேற்பட்ட சொற்களைப் புரிந்து கொள்வதால் தற்கால வழக்கு நடையில் உள்ள தமிழ் படைப்புகளைத் திருத்திக் கொள்ள முடியும். http://vaani.neechalkaran.com/ தமிழ்ச் சொற்களைப் ... |
| கொளுத்தும் வெயிலை 'கூல் செய்யுங்க... Posted: 24 Mar 2015 09:36 AM PDT வந்தாச்சு கோடை வெயில். இனி இதன் உக்கிரத்திற்கு குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாக வேண்டும். இந்த கோடை உஷ்ணத்தின் தாக்கத்தை தவிர்க்க முடியாது. இருந்தாலும், கோடை யிலிருந்து தப்பிக்க நமக்கு இயற்கை கொடுத்த கொட தான் தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, நுங்கு, கொய்யாபழம், பலாப்பழம். இவற்றின் மூலம் கோடையை கூலாக எதிர்கொள்ளலாம். வெயிலின் கொடுமையால் இந்த பழங்களின் விற்பனையும் தெருவுக்குத் தெரு சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறும். அதற்கு ... |
| தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட தென் ஆப்பிரிக்கா...! Posted: 24 Mar 2015 07:50 AM PDT ஆக்லாந்து: பீல்டிங்குக்குப் பெயர் போனது தென் ஆப்பிரிக்கா. ஆனால் இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் படு பரபரப்பாக செயல்பட்ட அவர்கள் பீல்டிங்கில் பெரிய அளவில் சொதப்பி, தங்களது தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர். நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடியது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தங்களது மோசமான பீல்டிங்கால், நியூசிலாந்தை சிறப்பாக ஆட தென் ஆப்பிரிக்கர்கள் அனுமதித்து விட்டனர் என்று சொல்வதே சரியாக இருக்கும். பல கேட்ச்களை தென் ஆப்பிரிக்கா இன்று மிஸ் செய்தது. அருமையான ரன் அவுட்கள் ... |
| வாட்ட டயலாக்... இது வாட்ஸ் அப் ‘தேவர் மகன்’...! Posted: 24 Mar 2015 07:05 AM PDT பிரபலமான சினிமா டயலாக்குகளை வைத்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் மக்கள் தங்களைத் தாங்களே கலாய்ப்பது உண்டு. அப்படித் தான் குரூப் அட்மினும், மெம்பர் ஒருவரும் பேசிக் கொள்வது போன்ற உரையாடல் ஒன்று தற்போது வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதோ, உங்களுக்காக அந்த உரையாடல். ப்ளீஸ் பின்வரும் உரையாடலை தேவர் மகன் சிவாஜி - கமல் ஸ்டைலில் படிக்கவும்... (ஜஸ்ட் படிங்க, ரசிங்க, சிரிங்க) குரூப் அட்மின்: என்னப்பா குருப்பவிட்டு விலகறியாம. மெம்பர்: ஆமாங்க ஐயா. எனக்கு பிடிக்கல குரூப் அட்மின்: என்னப்பா ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(354) Posted: 24 Mar 2015 06:36 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 24 Mar 2015 05:29 AM PDT ![]() |
| ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகர் 'அமராவதி' Posted: 24 Mar 2015 05:23 AM PDT ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகருக்கு 'அமராவதி' என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு, ஹைதராபாத் நகரம் தெலங்கானாவின் தலைநகராக மாறியது. இதனால் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆந்திராவில் புதிதாக பதவியேற்ற மாநில அரசு, தலைநகர் உருவாக்குவதை முக்கிய பணியாக கொண்டது. மேலும் புதிய தலைநகர் உருவாக்கத்துக்காக சிவராம கிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. ... |
| பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி? Posted: 24 Mar 2015 04:59 AM PDT பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் இன்று ஜெர்மனியின் டஸ்சல்டிராப் நகரில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. அதில், 142 பயணிகள்,2 விமானிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணம் செய்தனர். இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேலே பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ... |
| Posted: 24 Mar 2015 04:47 AM PDT பெயர்:இரா.ஜெகதீசன் சொந்த ஊர்:கோவில்பட்டி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணையம் பொழுதுபோக்கு:படிப்பது,கணினி தொழில்:ஓய்வுபெற்ற பொறியாளர் மேலும் என்னைப் பற்றி: சித்தமருத்துவம் ஈடுபாடு. தற்சமயம் வசிப்பது சென்னையில் |
| குற்றம் கடிதல் படத்திற்கு விருது Posted: 24 Mar 2015 03:57 AM PDT புதுடில்லி: - - தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் மொழியில் சிறந்த படத்திற்கான விருது 'குற்றம் கடிதல்' என்ற படத்திற்கு வழங்கப் பட்டுள்ளது, கல்வித்துறை சீர்திருத்தம் குறித்த கருத்துக்களை விளக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. - படத்தின் இயக்குநர் பிரம்மா, எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. 'ஜஸ்ட் வோட்' என்ற சமூக விழிப்புணர்வு படத்தையும், ஒரு குறும் படத்தையும் இயக்கிய அனுபவம் அவருக்கு ... |
| மாஜி அமைச்சர் மரணம்: ஜெ., இரங்கல் Posted: 24 Mar 2015 03:56 AM PDT சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் பரமசிவம் காலமானார். இது குறித்து இரங்கல் செய்தி வௌியிட்டுள்ள ஜெயலலிதா, 'பரமசிவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார். - -மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகேயுள்ள நெல்லியேந்தல் பட்டியைச் சேர்ந்தவர் அ.மா.பரமசிவம். மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் அதிமுக செயலரான பரமசிவம், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தார். சர்க்கரை ... |
| 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி Posted: 24 Mar 2015 03:51 AM PDT சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து. பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ... |
| தாரகை - பாகம் 02 - ரா.கி.ரங்கராஐன் Posted: 24 Mar 2015 12:22 AM PDT ஸிட்னி ஷெல்டன் எழுதிய If Tomorrow Comes நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவலாகும். இந்நாவலை வாசிக்க தொடங்கினால் முடிக்கும் வரை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் ரா.கி.ரங்கராஐன் வெற்றிபெற்றுள்ளார் என்பதை நீங்கள் படிக்கும் பொழுது உணர்வீர்கள். http://www.mediafire.com/download/h7ckz7cwmecwd2b/Tharakai+-+Part+02.pdf என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 24 Mar 2015 12:13 AM PDT சாலாமிசிரி என்பது என்ன ? என்ன பயன்சாதாரண பலசரக்கு கடைகளில் கிடைக்குமா? அல்லது மருந்து கடைகளில் கிடைக்குமா? தெரிவித்தால் நலமாயிருக்கும் ஜெகதீசன் |
| எங்க ஊரு பண்ணையாரு..!! -Mano Red Posted: 23 Mar 2015 11:52 PM PDT வெறும் பேருக்கும், எங்க ஊருக்கும், அவரு தான் பெரியாளு, சந்தனத்த நெஞ்சுல பூசி சாக்கடை வாசம் வீசுவாரு எங்க ஊரு பண்ணையாரு..!! சீமையில இருந்து சில்லுனு வந்தாரு , சிலுக்கு சட்ட போட்டு கிளுக்குன்னு சிரிச்சாரு, உதவின்னு கேட்டா போதும் ஊர விட்டே ஓடுவாரு, காஞ்சு போன கையால காக்கா வெரட்ட மாட்டாரு . !! பொத்தாம் பொது அடயாளமா வெக்கங்கெட்ட அவுகளுக்கு எட்டு மொழத்துல வெள்ளை வேட்டியும், மானங்கெட்ட அவுகளுக்கு மஞ்ச பூசுன ரெண்டு மைனர் துண்டும்..!! தலையாரி அவரு தான், தர்மகர்த்தா அவரு ... |
| டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி Posted: 23 Mar 2015 11:23 PM PDT டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி புதுடில்லி: நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். ஒரு நல்ல பெண்ணுக்கு இரவு 9 மணிக்கு மேல் ரோட்டில் என்ன வேலை என டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முகேஷ் சிங் அடித்துள்ள கமெண்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில், கடந்த, 2012ம் ஆண்டு டிசம்பரில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கொடூர முறையில், பாலியல் ... |
| வண்டுகளை நம் எண்ணப்படி இயக்கலாம்! Posted: 23 Mar 2015 10:13 PM PDT பறவைகள் வானில் பறந்து வசந்த கீதம் இசைக்கின்றன. வண்டுகள், பூச்சிகள் அந்தரத்தில் மிதந்து ஆனந்தத்தில் ரீங்காரமிடுகின்றன. அவைகள், நாம் இந்த உலகை காணாத கோணத்தில் கண்டு ரசிக்கின்றன. மனிதன் பறவைபோல பறக்க விரும்பியதன் விளைவாகவே விமானம் உருவாக்கினான். நாம் ஆறறிவுடன் மேம்பட்டு இருந்தாலும், இதுபோன்ற சின்னச்சின்ன உயிரினங்களின் பின்னால் பயணித்து அறிந்து கொண்ட விஷயங்கள்தாம் அதிகம். பெர்கிலி நகரில் இயங்கும் கலிபோர்னியா பல்கலைக் கழக கிளை மற்றும் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ... |
| விரைவில் விற்பனைக்கு வரும் 'பறக்கும் கார்' Posted: 23 Mar 2015 10:06 PM PDT கடந்த சில வருடங்களாகவே பறக்கும் கார் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இவை நடைமுறையில் சாத்தியமா என எண்ணி முடிக்கும் கால இடைவெளியில் பறக்கும் கார்கள் விற்பனைக்கும் தயாராகி விட்டன. இதன்படி எதிர்வரும் 2017-ம் ஆண்டில் முதன் முறையாக பறக்கும் கார்கள் விற்பனைக்கு விடப்படவுள்ளதாக அதனைத் தயாரித்த ஸ்லோவேக்கியாவை சேர்ந்த 'ஏரோமொபில்' நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். இக்கார்கள் தரையில் மணிக்கு 100 மைல் வேகத்தில் ஓடக்கூடியதாக இருப்பதுடன், பறக்கும்போது மணிக்கு 124 மைல் வேகத்தில் ... |
| Posted: 23 Mar 2015 08:48 PM PDT அதிருஷ்டசாலிகள்…!! * என் சவ ஊர்வலத்தைப் பார்த்து அழுவதற்கு நீயில்லை. உன் சவ ஊர்வலத்தைப் பார்த்து நான் அழுததை நீ பார்க்கவில்லை. நாம் எவ்வளவு அதிருஷ்டசாலிகள் பார்…!! * |
| Posted: 23 Mar 2015 07:26 PM PDT படம்- புதிய பறவை இசை- எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்- டி.எம்.சௌந்தரராஜன் ==== ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும் வண்ண சிங்காரம் குலைந்துவிடும் ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ… ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் படுக்கையை இறைவன் விரித்தான் வரும் பனித்திரையால் அதை மறைத்தான் படுக்கையை இறைவன் விரித்தான் வரும் பனித்திரையால் அதை மறைத்தான் பருவத்தில் ஆசையை கொடுத்தான் வரும் நாணத்தினால் அதை தடுத்தான் வரும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
