Tamil News | Online Tamil News |
- ஒன்பது மணி நேர மீனவர்கள் பேச்சில் உடனடி தீர்வு இல்லை: தமிழக தரப்பு கோரிக்கைக்கு மே மாதம் முடிவு
- 'ஏசி' பஸ்கள் இயக்கும் திட்டம் 'அம்போ': கண்டுகொள்ளப்படாத அரசின் அறிவிப்பு
- பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் விமானம் மோதி 150 பேர் பரிதாப பலி
- நன்னடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்துங்க: தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி
- கெஜ்ரிவால் கைவிரித்ததால் நிதி நெருக்கடியில் டில்லி மாநகராட்சிகள்
- புகார் தெரிவிக்க புதிய இணையதளம்: துவக்குகிறார் மோடி
- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் கட்சி தலைவர்கள் கலக்கம்
- கருத்துக்கு எதிரான தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு ரத்து: உடனடியாக நீக்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- நெல்லை வேளாண் அதிகாரியை மிரட்டியவர்கள் யார்? முதல் முறையாக குடும்பத்தினர் மனம் திறந்து பேட்டி
| ஒன்பது மணி நேர மீனவர்கள் பேச்சில் உடனடி தீர்வு இல்லை: தமிழக தரப்பு கோரிக்கைக்கு மே மாதம் முடிவு Posted: சென்னை: தமிழக - இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சு சுமுகமாக நடந்தாலும், உடனடி தீர்வுகள் ஏதும் எட்டப்படவில்லை. தமிழக மீனவர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை, கொழும்பில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் ஆலோசித்து மே மாதம் முடிவை அறிவிப்பதாக, இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.எல்லை தாண்டி மீன்பிடித்தல் தொடர்பாக, தமிழக - இலங்கை மீனவர்கள் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண, ஏற்கனவே இரு கட்ட பேச்சு நடந்தது. இதில், உடன்பாடு எட்டப்படவில்லை. மூன்றாம் கட்ட பேச்சு, சென்னை, மீன்வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இலங்கை தரப்பில், மீனவ ... |
| 'ஏசி' பஸ்கள் இயக்கும் திட்டம் 'அம்போ': கண்டுகொள்ளப்படாத அரசின் அறிவிப்பு Posted: 'மாவட்ட தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு, 'ஏசி' பஸ்கள் இயக்கப்படும்' என்ற அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், இந்தாண்டு கோடையிலும் பயணிகள் வெயில் தாக்கத்துடனே பயணிக்க வேண்டியுள்ளது.அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 50க்கும் மேற்பட்ட, 'ஏசி' பஸ்கள் இயக்கப்பட்டன. சரியான பராமரிப்பின்மை மற்றும் போதிய வருவாய் இல்லாதது போன்ற காரணங்களால், 2011க்கு பின், பெரும்பாலான பஸ்கள் ஓரங்கட்டப்பட்டன. அத்துடன், 30க்கும் மேற்பட்ட பஸ்கள், 'ஏசி' வசதியில்லாத, 'அல்ட்ரா டீலக்ஸ்' பஸ்களாக மாற்றப்பட்டன. கடந்த, 2012 - 13ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், 'மாவட்ட தலைநகரங்களில் ... |
| பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் விமானம் மோதி 150 பேர் பரிதாப பலி Posted: பாரீஸ்: பிரான்சில் நேற்று நிகழ்ந்த மோசமான விமான விபத்தில், ஜெர்மனி விமானம் நொறுங்கியதில், அதில் இருந்த, 150 பேரும் உடல் சிதறி இறந்தனர்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து, மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகருக்கு, 146 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன், 'ஏர் பஸ் ஏ - 320' பயணிகள் விமானம் நேற்று சென்று கொண்டிருந்தது. இந்திய நேரப்படி, நேற்று மதியம், 3:15 மணிக்கு, ஸ்பெயின் - ஜெர்மனி நாடுகளுக்கும் நடுவே உள்ள, பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது. ''இந்த பயங்கர விபத்தில் ஒருவர் கூட உயிருடன் ... |
| நன்னடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்துங்க: தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி Posted: கவுகாத்தி: ''தேர்தல் நன்னடத்தை விதிகள், அனைத்து மாநிலங்களிலும், ஒரே விதமாக அமல்படுத்தப்படுவதில்லை. எனவே, நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம்,'' என, தலைமை தேர்தல் ஆணையர் பிரம்மா கூறினார். |
| கெஜ்ரிவால் கைவிரித்ததால் நிதி நெருக்கடியில் டில்லி மாநகராட்சிகள் Posted: புதுடில்லி: டில்லியில், முதல்வர் அரவிந்த் அரசுக்கும், அங்குள்ள மூன்று மாநகராட்சிக்கும் இடையேயான மோதல், தீவிரமான நிதி நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், குப்பை அள்ளுவது உட்பட, மாநகராட்சிகளின் பணி பாதிக்கப்படுவதோடு, ஊழியர்கள் சம்பளம் பெற முடியாத சூழ்நிலையும் உருவாகும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உள்ளது. ஆனால், டில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளும், பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதாவது, மேயர்களாக அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே உள்ளனர். ... |
| புகார் தெரிவிக்க புதிய இணையதளம்: துவக்குகிறார் மோடி Posted: புதுடில்லி: மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க, 'பி.எம்.ஓ., சிபிகிராம்ஸ்' என்ற பெயரில், இணையதளம் செயல்பட்டது. அதில், ஊழல் தொடர்பான புகார்களை தெரிவிக்க வேண்டும் எனில், 'ஊழல் மற்றும் முறைகேடு' என்ற பிரிவை, கிளிக் செய்து தெரிவிக்க வேண்டும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்க உள்ள, புதிய இணைய தளமான, 'பிரகதி'யில், ஊழல் என்ற பிரிவு, ஒன்பது துணை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு மூலம், தொலை தொடர்பு, ரயில்வே, மின்துறை, பெட்ரோலியம் உட்பட, துறை ரீதியான ஊழல் புகார்களை தனித்தனியே ... |
| சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் கட்சி தலைவர்கள் கலக்கம் Posted: புதுடில்லி: 'அரசியல் அமைப்புச் சட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ள, கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 - ஏ பிரிவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது' என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பா.ஜ., தலைமையிலான இப்போதைய, தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் சிக்கலாக அமைந்துள்ளது. ஏனெனில், இந்த கடுமையான சட்டம், காங்கிரஸ் அரசில் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தை இப்போது சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது, அக்கட்சிக்கு தர்ம ... |
| Posted: புதுடில்லி: 'அரசியல் அமைப்புச் சட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ள, கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 - ஏ பிரிவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது' என, நேற்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அந்த சட்டப்பிரிவை ரத்து செய்து, அதிரடியாக உத்தரவிட்டது.கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் வாயிலாக, சமூக வலைதளங்கள் மூலம், நண்பர்கள், தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு, தங்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ளும் போக்கு, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதனால், ... |
| நெல்லை வேளாண் அதிகாரியை மிரட்டியவர்கள் யார்? முதல் முறையாக குடும்பத்தினர் மனம் திறந்து பேட்டி Posted: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி, தற்கொலை செய்து கொள்ளும் முன், உள்ளூர் அ.தி.மு.க.,வினர், இரண்டு உயரதிகாரிகள் மிரட்டிய சம்பவம் அம்பலமாகி உள்ளது. முத்துக்குமாரசாமியின் மைத்துனர் வெளியிட்டுள்ள இந்த தகவலால், இந்த வழக்கின் விசாரணையில் திருப்பம் ஏற்படும் என, தெரிகிறது.வேளாண் பொறியியல் துறையில், நெல்லையில், உதவி செயற்பொறியாளராக பணியாற்றியவர், முத்துக்குமாரசாமி. தன் துறையில், காலியாக இருந்த ஏழு ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பிய விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு விட்டது, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 25,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |