ஈகரை தமிழ் களஞ்சியம் |
- புலிக்கு பயந்து
- பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம்
- சொல்ல மறந்த காதல்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (100)
- இரண்டு வரி கவிதை
- சோலார் விமானம் இம்பல்ஸ்- 2
- பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!
- பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள்
- பேஸ்புக் மெசஞ்ஜரில் பணப்பரிமாற்ற வசதி!
- ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
- மோடி அரசாங்கம்: பதவியேற்ற 10 மாதங்களில் 111 வெளிநாட்டுப் பயணம்
- ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள்
- விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?
| Posted: 20 Mar 2015 02:04 PM PDT நண்பர்களே வணக்கம் எனக்கு புகை பழக்கம் உள்ளது இதை நிறுத்த நினைக்கேறேன் உடனே நிறுத்த முடிய வில்லை அதனால் இ சிகரெட்டுக்கு மாறலாம் என்று நினைக்குறேன் புகை கெடுதல் தான் சிகரெட்டுக்கும் இ சிகரெட்டுக்கும் கெடுதல் எதில் அதிகம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என் நண்பர் சொல்லுகிறார் இ சிகரெட்டுக்கு மாறினால் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடலாம் என்று சொல்லுகிறார் உதாரணம் புலிக்கு பயந்து சிங்கத்தின் குகைக்குள் புகுந்த கதையாக ஆகி விடக்குடாது |
| பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம் Posted: 20 Mar 2015 11:03 AM PDT - 18-2-15 அன்று எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க ஆன்லைனில் என் பெயரில் மனு செய்யப்பட்டது. - மனுவை ஏற்றுக்கொண்டதாகவும் ரூ 1500- கட்டணம் செலுத்தும்படி உடனே தகவல் பெறப்பட்டது - அதன்படி அன்றே ஆன்லைனில் தொகை செலுத்தினோம். - உடனே நேர்முக ஆய்வுக்கு வருமாறு மூன்று சென்டர்கள் பெயரும், ஆய்வுக்கான நாள் காலியாக இருக்கும் விபரமும் வந்தது. - அவற்றில் சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் 24-2-15 அன்று வருவதற்கு விருப்பம் தெரிவித்து, அதுவுஉம் உடனடியாக ஏற்றுக கொள்ளப்பட்டதாக தகவல் அன்றே 18-2-15ல் பெறப்பட்டு ... |
| Posted: 20 Mar 2015 10:40 AM PDT என் பிரியமானவளே! உன்னை தோழி என்பதா? காதலி என்பதா? புரியவில்லை இந்த அர்த்தங்கள். உன்னை முதன்முதலில் சாலையோரத்தில் கண்டேன். அன்று,செந்நிற சல்வார் புனைந்து புத்தகப்பையை மார்பில் அனைத்து அன்னப் பேடாக சென்றாய்,அந்த இதமான செந்நிற பொழுதில்......., சேர்ந்திருக்கும் வேளை மனதுக்குள் பனிமூட்டம். தனித்திருக்கும் பொழுதுகளில் மனதை சுட்டெறிக்கும் வெம்மை எந்நிலையை உன்னிடம் சொல்ல வந்தேன்.புருவத்தின் அழகில் வியந்து காதலை கவிதையால் சொல்லாமல் மழலையால் கொட்டினேன். என்னை புரிந்தவள் ... |
| Posted: 20 Mar 2015 10:38 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 20 Mar 2015 08:14 AM PDT உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறந்த கூற்று இவன் கவிவேல் உடையவர்தீயனுர்(அரியலுர் மாவட்டம்) |
| Posted: 20 Mar 2015 03:50 AM PDT சுற்றுச் சூழலுக்கு தீங்கு தராமல் சூரிய மின் சக்தியில் இயங்கும் உலகின் முதல் சோலார் விமானம் தனது உலக சுற்றுப் பயணத்தை அபுதாபியில் நேற்று துவங்கியது. அங்கிருந்து 12 மணி நேர பயணத்திற்கு பின் ஓமன் நாட்டில் தரையிறங்கிய அந்த விமானம் இன்று இந்தியாவை நோக்கி தனது இரண்டாவது கட்ட பயணத்தை துவங்கியிருக்கிறது. ஆமதாபாத் மற்றும் வாரணாசி நகரங்களுக்கு வருகை தரும் இந்த சோலார் விமானம், கங்கை நதியின் மேலே பறந்து சுற்றுச்சூழல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் வழியாக பறந்து ... |
| பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு! Posted: 20 Mar 2015 02:47 AM PDT பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு! அப்பாக்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத் தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலை முறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்க ளால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக, சமர்த் தாக நிர்வகிக்க முடிவதில்லை. மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், பல இளம் தம்பதிகளுக்கு 30ம் தேதி அக்கவுண்ட் பேலன்ஸ் 'நில்'(nil) என்பதே இன்றைய நிலைமை. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே! உங்கள் ... |
| பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் Posted: 20 Mar 2015 01:26 AM PDT தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்கள் பறக்கும் படையினரைப் பார்த்து பயந்து நடுங்குவதுதான் வழக்கம். ஆனால் காப்பி அடிக்கும் மாணவர்களின் தந்திர நடவடிக்கைகளைப் பார்த்து பறக்கும் படை அதிகாரிகள் மட்டுமல்ல பீகார் போலீசாரே செய்வதறியாமல் திணறி வருகின்றனர். பீகார் மாநிலம் ஹாஜிபூரில் 10-ம் வகுப்பு தேர்வு நடக்கும் பள்ளி ஏதோ யுத்தக்களம் போல் காட்சியளிக்கிறது. மாணவர்கள் சகஜமாக கையில் கொண்டு வந்திருக்கும் பிட்டைப் பார்த்து தேர்வெழுதுகின்றனர். அவர்கள் கொண்டு வர முடியாமல் போன பிட்டை கொடுப்பதற்காக அவர்களின் ... |
| பேஸ்புக் மெசஞ்ஜரில் பணப்பரிமாற்ற வசதி! Posted: 20 Mar 2015 12:55 AM PDT பொழுதுபோக்கு அம்சங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த நட்பு ஊடகங்கள் வர்த்தக பயன்பாட்டிற்கும் ஆயத்தமாகி வருகின்றன. அதன் தொடக்கம் தான் பேஸ்புக் மெசஞ்ஜரில் அறிமுகமாகி உள்ளபணப்பரிமாற்ற வசதி. பேஸ்புக் மெசஞ்ஜரில் நண்பர்கள் அளவளாவிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ஒருவர் மற்றவரிடம், அவசரமாக 30 டாலர்கள் பண உதவி கேட்கிறார். உடனே பயனர், தனது பேஸ்புக் மெசெஞ்ஜரில் உள்ள 'பே' (Pay) வசதி மூலம் தனது நண்பருக்கு தேவையான பண உதவி செய்கிறார். இது சாத்தியமா என்றால், சாத்தியமே என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ... |
| Posted: 19 Mar 2015 04:07 PM PDT ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ... |
| மோடி அரசாங்கம்: பதவியேற்ற 10 மாதங்களில் 111 வெளிநாட்டுப் பயணம் Posted: 19 Mar 2015 04:00 PM PDT இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற கடந்த 10 மாதங்களில், அவரது தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் கடந்த 10 மாதங்களில் 111 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவு அமைச்சர் வி.கே சிங் எழுத்துப் பூர்வ பதிலில் இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார். இதில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான் அதிகமான பயணங்களை மேற்கொண்டுள்ளார். 111 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும், மூன்றில் ... |
| ஹுடுட் சட்டமும் மலேசியாவும் - செய்திகள் Posted: 19 Mar 2015 03:54 PM PDT பிரதமர்: அரசாங்கம் ஹுடுட்டை நிராகரித்ததில்லை ஆனால்…… அரசாங்கம் ஹுடுட் சட்டத்தை நிராகரிக்கவில்லை ஆனால், அதைச் செயல்படுத்துமுன்னர் பல விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். ஹுடுட்டை அதன் நோக்கங்கள் சிதைவுறாமல் அமல்படுத்துவதற்குமுன் பல கட்டுப்பாடுகளையும் விவகாரங்களையும் ஆராய்ந்து தீர்வுகாண வேண்டும். "ஹுடுட்டை நிராகரிப்பதற்கும் அதைச் செயல்படுத்தாமலிருப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு", என்று நஜிப் கூறினார். |
| விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? Posted: 19 Mar 2015 03:44 PM PDT விண்டோஸ் 8 ஏற்படுத்திய வர்த்தக தாக்கத்தை சரி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் 10, கோடை காலத்தில் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் டெர்ரி மயர்சன் இது தொடர்பாக தனது வலைப்பதிவில் கூறியிருப்பதாவது:- "கோடை காலத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்". "சுமார் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் விண்டோஸ் 10 அனைத்து கருவிகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |