Tamil News | Online Tamil News |
- சுரங்க மசோதாவுக்கு ராஜ்யசபா 'ஓகே!'
- தனியார் எப்.எம்., ரேடியோவிலும் விரைவில் செய்தி வருதுங்கோ!
- வங்கி வட்டி விகிதம் குறையும்: ரிசர்வ் வங்கி துணை கவர்னர்
- 'வாட்ஸ் அப்' மூலம் பிளஸ் 2 கேள்வித்தாள் அனுப்பிய ஆசிரியர்கள் சிக்கினா: ஓசூரில் ஒரே பள்ளியை சேர்ந்த 4 பேரை கைது செய்தது போலீஸ்
- உ.பி., மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 38 பேர் பலி: பிரேக் கோளாறு காரணமாக தடம் புரண்டது?
- இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா தலையிடுகிறதாம்! சீனாக்காரருக்கு கடுப்பு
- விஸ்வ பாரதி பல்கலை வேந்தராக பிரதமர் நரேந்திர மோடி நியமனம்
- வழக்கு சாதகத்துக்காக மத்திய அரசுக்கு ஆதரவா: தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ஜெ.,வுக்கு கருணாநிதி கேள்வி
- மீத்தேன் எரிவாயு திட்டம் அமைச்சர் சொன்னது என்ன?
- ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி மரணம்: சித்தராமையாவுக்கு காங்., மேலிடம் நெருக்கடி
- 66 - ஏ பிரிவின் கீழ் மாணவன் கைது ஏன்?உ.பி., போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்!'
- குடிநீர் கட்டணத்தை குறைப்பதாக கூறி, 10 சதவீதம் உயர்த்திய கெஜ்ரிவால் மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்
| சுரங்க மசோதாவுக்கு ராஜ்யசபா 'ஓகே!' Posted: புதுடில்லி: சில மாதங்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட, அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, சுரங்கங்கள் மற்றும் தனிமங்கள் (அபிவிருத்தி மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது.லோக்சபாவில், சில நாட்களுக்கு முன் அந்த மசோதா நிறைவேறிய நிலையில், ராஜ்யசபாவில் நேற்று, அந்த மசோதாவை, சுரங்கத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு ஆதரவாக, 117 ஓட்டுகளும், எதிராக, 69 ஓட்டுகளும் கிடைத்ததை அடுத்து, மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தன; ஐக்கிய ஜனதா ... |
| தனியார் எப்.எம்., ரேடியோவிலும் விரைவில் செய்தி வருதுங்கோ! Posted: புதுடில்லி: 'தனியார் எப்.எம்., ரேடியோ நிறுவனங்களும், அன்றாட நிகழ்வுகளை, செய்தியாக வழங்க விரைவில் அனுமதி வழங்கப்படும்' என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.பத்திரிகைகளில் செய்திகள் வெளியாவது போல, 'டிவி'க்களிலும் செய்திகள் வெளியாகின்றன. தனியார், எப்.எம்., ரேடியோக்கள், நாடு முழுவதும் ஏராளமாக உள்ளன. அவற்றில், செய்திகள் ஒலிபரப்பப்படுவதில்லை. இந்த முறையை மாற்றி, எப்.எம்., ரேடியோக்களிலும், சில நிபந்தனைகளின் அடிப்படையில், செய்திகளை ஒலிபரப்ப, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தகவல், ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், லோக்சபாவில் ... |
| வங்கி வட்டி விகிதம் குறையும்: ரிசர்வ் வங்கி துணை கவர்னர் Posted: புதுடில்லி: ''ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' வட்டி விகிதத்தை குறைத்ததால் பயனடைந்துள்ள வங்கிகள், கடன்களுக்கான வட்டியை குறைக் கும்,'' என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, இந்தாண்டில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதங்களை, இரு முறை, தலா, 0.25 சதவீதம் என, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. அதற்கேற்ப, வங்கிகள், கடனுக்கான வட்டியை குறைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓரிரு வங்கிகள் மட்டுமே, வட்டியை குறைத்தன. இந்நிலையில், டில்லி யில் பேசிய முந்த்ரா, ''ரிசர்வ் வங்கியால் பெற்ற பயனை, ... |
| Posted: ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தனியார் பள்ளியில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பியதாக, ஒரே பள்ளியைச் சேர்ந்த, நான்கு ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும், கடந்த, 5ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வு நடந்து வருகிறது. ஓசூர் கல்வி மாவட்டத்தில், 9,206 மாணவ, மாணவியர், 17 மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர். பொதுத் தேர்வில், காப்பி அடிப்பதைத் தடுக்க, முறைகேடுகளை கண்காணிக்க, பள்ளி கூடுதல் ஆய்வாளர் சென்னீரப்பன் மேற்பார்வையில், பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.ஓசூர், -தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, தின்னுார், பரிமளம் மெட்ரிக் ... |
| உ.பி., மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 38 பேர் பலி: பிரேக் கோளாறு காரணமாக தடம் புரண்டது? Posted: ரேபரேலி: உ.பி.,யில், டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 38 பேர் இறந்தனர்; 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பிரேக் பிடிக்காததன் காரணமாக இந்த விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து, உ.பி., மாநிலம் வாரணாசிக்கு செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை, உ.பி., மாநிலம் ரேபரேலி மாவட்டத்துக்கு வந்தது. |
| இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா தலையிடுகிறதாம்! சீனாக்காரருக்கு கடுப்பு Posted: பீஜிங்: 'பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை யாழ்ப்பாணம் பயணம், அந்நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவது போன்றது' என, சீன அரசியல் வல்லுனர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் நாடுகளான, செஷெல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கைக்கு, பிரதமர் மோடி சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இலங்கையில் புதிதாக அமைந்துள்ள, அதிபர் சிறிசேன தலைமையிலான அரசு, முந்தைய ராஜபக் ஷே அரசு அனுமதித்திருந்த, பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கொண்ட சீன திட்டங்களை ரத்து செய்திருந்தது.இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு பிரதமர் மோடி சென்று, இரண்டு நாள் தங்கியிருந்து, தமிழர்கள் ... |
| விஸ்வ பாரதி பல்கலை வேந்தராக பிரதமர் நரேந்திர மோடி நியமனம் Posted: புதுடில்லி : மேற்கு வங்கத்தில் உள்ள, விஸ்வ பாரதி பல்கலை துணைவேந்தராக, பிரதமர் நரேந்திர மோடி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேற்கு வங்க மாநிலம், சாந்தினிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக் கழகம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதன் வேந்தராக, பிரதமரே நியமனம் செய்யப்படுவார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்த பல்கலையின் வேந்தர் பதவியிலிருந்து, சமீபத்தில் விலகினார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை, வேந்தராக்குவதற்காக பல்கலை நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு ... |
| வழக்கு சாதகத்துக்காக மத்திய அரசுக்கு ஆதரவா: தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ஜெ.,வுக்கு கருணாநிதி கேள்வி Posted: ''தமிழகத்தில் அமைதியாக ஆட்சி நடத்த முடிந்தால், ஆட்சியை தொடருங்கள்; இல்லை, எங்களால் முடியவில்லை என, ஒப்புக் கொண்டு ஓடிவிடுங்கள்,'' என, அ.தி.மு.க.,வினருக்கு கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார்.நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என வலியுறுத்தியும், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று நடந்தது.தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:மாநில, மத்திய அரசுகளுக்கு அறிவு வர வேண்டும்; அடக்க உள்ளம் வேண்டும்; அராஜகத்தை ... |
| மீத்தேன் எரிவாயு திட்டம் அமைச்சர் சொன்னது என்ன? Posted: சென்னை : ''மீத்தேன் எரிவாயு எடுக்க, தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு இருந்த ஒப்பந்தத்தை, மத்திய பெட்ரொலியத் துறை ரத்து செய்துள்ளது. மீத்தேன் எரிவாயு திட்டத்தை கைவிடவில்லை,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார்.பெட்ரோலியத் துறை அமைச்சர், பார்லி மென்டில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் குறித்து, அவர் கூறியதாவது:காவிரி டெல்டா விவசாய நிலங்களை பாதிக்கும், மீத்தேன் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும் என, தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுக்கின்றனர். இதுதொடர்பாக, பார்லிமென்டில், பலமுறை கேள்வி எழுப்பியுள்ளேன். ... |
| ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி மரணம்: சித்தராமையாவுக்கு காங்., மேலிடம் நெருக்கடி Posted: பெங்களூரு : ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவியின் சந்தேக மரணம் குறித்து, கவர்னர், வஜுபாய் வாலா, முதல்வரை அழைத்து, விளக்கம் கேட்டதுடன், சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தி உள்ளார்.காங்., மேலிடமும், அழுத்தம் கொடுத்துள்ளதால், சி.பி.ஐ., விசாரணை அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கவர்னரிடம் மனுசி.பி.ஐ., விசாரணை கேட்டு, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள், நேற்று முன்தினம், பெங்களூரு விதான் சவுதாவிலிருந்து, ராஜ்பவன் வரை ஊர்வலமாக சென்று, கவர்னர் வஜுபாய் வாலாவிடம் மனு கொடுத்தனர்.இதையடுத்து, கவர்னர் வஜுபாய் வாலா, முதல்வர் சித்தராமையாவை வரவழைத்து, ரவி மரணம் தொடர்பான ... |
| 66 - ஏ பிரிவின் கீழ் மாணவன் கைது ஏன்?உ.பி., போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்!' Posted: புதுடில்லி: 'பேஸ்புக்' சமூக தொடர்பு இணையதளத்தில், உ.பி., மாநில அமைச்சர் அசம் கான் பற்றி, 'கமென்ட்' எழுதிய, பிளஸ் 2 மாணவனை கைது செய்தது ஏன்? என கேட்டு, உ.பி., மாநில போலீசுக்கு, சுப்ரீம் கோர்ட் நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பியது.சமூக தொடர்பு இணையதளங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவித்தவர்கள் மீது, தகவல் தொடர்பு சட்டத்தின், 66 - ஏ பிரிவின் கீழ் கைது நடவடிக்கை அதிக அளவில் எடுக்கப்பட்டது. அது தொடர்பான புகார் கள், சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிக அளவில் வந்தன.அதை அடுத்து, 'அந்த சட்டப்பிரிவை சாதாரணமாக பயன்படுத்தக் கூடாது; கட்டாயம் தேவைப்பட்டால், மேலதிகாரிகளின் அனுமதியின் படி ... |
| குடிநீர் கட்டணத்தை குறைப்பதாக கூறி, 10 சதவீதம் உயர்த்திய கெஜ்ரிவால் மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல் Posted: புதுடில்லி: டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டில்லி முழுவதும் இலவச குடிநீர் வினியோகிப்போம்' என, ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்ததும், 'மாதத்துக்கு, 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்' என, கெஜ்ரிவால் அறிவித்தார். இந்நிலையில் செலவுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, குடிநீர் கட்டணத்தை, 10 சதவீதம் அதிகரிப்பதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. இதற்கு, பா.ஜ., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டில்லி துணை முதல்வர் மணீஷ் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 21,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |