Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காங்கிரசுக்கு எதிராக சசி தரூரும் போர்க்கொடி: பா.ஜ.,வில் இணைய மூத்த தலைவர்கள் திட்டம்?

Posted:

புதுடில்லி: 'அப்சல் குருவை துாக்கிலிட்டது தவறான செயல்' என, முந்தைய காங்., அரசின் நடவடிக்கைகளை, அந்த கட்சியின் எம்.பி.,யான சசி தரூர் விமர்சித்து உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக, காங்., தலைவர்கள் பலரும், முந்தைய காங்., அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து உள்ளது, அவர்கள் பா.ஜ.,வுக்கு தாவ திட்டமிட்டு உள்ளனரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர், சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:பார்லி., தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, முந்தைய காங்., ஆட்சி காலத்தில் துாக்கிலிடப்பட்டார். ...

பிரதமர் மோடியின் ரேடியோ உரையில் மாணவர்களுக்கு தேர்வு ஆலோசனை

Posted:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின், இம்மாத ரேடியோ உரையில், மாணவர்களின் தேர்வு தொடர்பான விஷயங்கள் இடம் பெறும் என, தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், 'மான் கீ பாத்' என்ற தலைப்பில், நாட்டு மக்களுக்காக ரேடியோ மூலமாக உரை நிகழ்த்தி வருகிறார். கடந்த மாதம், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து, பிரதமர் மோடி, ரேடியோவில் பேசினார். இந்நிலையில், பள்ளித் தேர்வுகள் நெருங்குவதை அடுத்து, இம்மாத உரையில், அது தொடர்பான விஷயங்களுக்கு மோடி, முக்கியத்துவம் அளிக்கப் போவதாக, சமூக வலைதளத்தில் அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் ...

சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட கறுப்பு பணம் ரூ.25,000 கோடி: இந்தியர்கள் 1,195 பேர் பெயர்கள் அம்பலம்

Posted:

புதுடில்லி: சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில், கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பாக, புதிய பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், முன்னர் வெளியான பட்டியலில் இடம் பெற்றதை விட, இரு மடங்காக, 1,195 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள், 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை டிபாசிட் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுவிட்சர்லாந்து உட்பட, அன்னிய நாடுகளில் உள்ள வங்கிகளில், கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் தொடர்பாக, 628 பேர் பட்டியல் ஒன்று, கறுப்பு பணம் குறித்து விசாரித்து வரும், நீதிபதி ஷா தலைமையிலான, சிறப்பு புலனாய்வு குழுவிடம் ...

வர்த்தகம் எளிமையாக மூன்றடுக்கு முறையை பின்பற்ற அரசு தீவிரம்

Posted:

புதுடில்லி: இந்தியாவில் தொழில் துவங்குவதும், வர்த்தகம் செய்வதும் எளிது என்பதை, அன்னிய முதலீட்டாளர்களுக்கு தெரிவிப்பதற்காக, மூன்றடுக்கு அனுமதி முறையை பின்பற்ற மோடி அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பான வழிமுறைகளை உருவாக்குவதிலும் அக்கறை காட்டி வருகிறது.நாடு முன்னேற்றம் காண வேண்டும் எனில், அதிக அளவில் அன்னிய முதலீடுகள் குவிய வேண்டும் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசு, அதற்கான பணிகளில் அக்கறை காட்டி வருகிறது. ஆனாலும், இந்தியாவில் தொழில் துவங்க அனுமதி பெறுவதும், வர்த்தகம் செய்வதும் சிக்கலானதாகவும், பல துறைகள் சார்ந்ததாகவும் உள்ளது. ...

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ் குமார்: ஜனாதிபதி முன் அணிவகுக்கவும் தயார் என்கிறார்

Posted:

புதுடில்லி:பீகாரில், பரபரப்பான அரசியல் திருப்பங்கள் தொடருகின்றன. பீகார் கவர்னர் கேசரிநாத்தை, நேற்று சந்தித்த ஐக்கிய ஜனதா தள தலைவர், நிதிஷ் குமார், தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும் படி, கோரிக்கை விடுத்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும், ஜிதன்ராம் மஞ்ஜி நீக்கப்பட்டு உள்ளதாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது.

மோதல் தீவிரம்:
பீகாரில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்ஜி தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. ஜிதன்ராம் மஞ்ஜிக்கும், முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் மூத்த ...

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இலங்கை அதிபர் சிறிசேன விருப்பம்

Posted:

புதுடில்லி: 'இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கும், அதன் பலனை இரு நாட்டு மக்களும் பெறுவதற்கும், இலங்கை தொடர்ந்து முயற்சிக்கும்' என, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள மைத்ரிபாலா சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியிருந்தார். இந்தியாவுக்கு வரும்படியும், அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, வரும், 15ம் தேதி, சிறிசேன இந்தியா வருகிறார். இந்நிலையில், தனக்கு வாழ்த்து ...

ஸ்ரீரங்கம் இடைத்ததேர்தலால் வாக்காளர்கள் வீட்டில் பணமழை: 1,000 ரூபாய் புழக்கம் அதிகரிப்பால் அதிகாரிகள் அதிர்ச்சி

Posted:

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், இலவசங்களை கொடுத்த நிலை மாறி, ஒரு ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை, வீடு வீடாக சென்று பட்டுவாடா செய்வதாக, தகவல் வெளியாகி உள்ளது. கரை வேட்டி கட்டாமல், பேன்ட் சட்டையுடன் சென்று, அரசியல்வாதிகள் பணம் பட்டுவாடாவை செய்வதை, தடுக்க முடியாமல், தேர்தல் பிரிவு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, வரும், 13ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க.,வில் வளர்மதி, தி.மு.க.,வில் ஆனந்தன், பா.ஜ.க.வில் சுப்ரமணியம், மார்ச்சிஸ்ட் சார்பில், அண்ணாதுரை ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். ...

ஸ்ரீரங்கத்தில் முடிந்த பண பட்டுவாடா: இனியாவது விழிக்குமா தேர்தல் ஆணையம்?

Posted:

சென்னை : ஸ்ரீரங்கம் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும், நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாக்காளர்களுக்கு, ஓட்டு ஒன்றுக்கு, 2,000 ரூபாய் வீதம் ஆளுங்கட்சியினரால், அமைச்சர்களின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு விட்டது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:ஒருசில இடங்களில், மனசாட்சியுள்ள வாக்காளர்கள் அ.தி.மு.க.,வினர் கொடுத்த தொகையை வாங்க மறுத்துள்ளனர். அப்போது, அ.தி.மு.க.,வினர் வலுக்கட்டாயமாக அந்த வாக்காளர்களின் வீடுகளில் பணம் அடங்கிய கவர்களை வைத்து விட்டு சென்றிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர், ...

செய்முறை தேர்வில் முழு மார்க் பெற ஆசிரியர்களுக்கு விருந்து: தேர்வில் சாதிக்கும் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு

Posted:

நாமக்கல் : பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், புற மதிப்பீடு மதிப்பெண் வழங்கும் ஆசிரியருக்கு, மாணவ, மாணவியர் சார்பில், 'தடபுடல்' விருந்து நடக்கிறது.எழுத்துத் தேர்வுக்கு முன், செய்முறைத் தேர்வு நடக்கும். தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வு நடக்கிறது. இயற்பியல், வேதியி யல், உயிரியல், தாவர வியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழிற்கல்வி பாடங்கள் உள்ளிட்ட வற்றுக்கு, வரும், 24ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்கும்படி தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

மதிப்பெண் விவரம்:
பிளஸ் 2 தேர்வருக்கு, மொத்தமுள்ள, 200 மதிப்பெண்ணில், 150 ...

தமிழக மீனவர்களின் படகுகள் மீட்பு பணி செலவை அரசு ஏற்கும் என அறிவிப்பு? கோடீஸ்வரர்களுக்கு வக்காலத்து ஏன்?சுப்பிரமணியன் சாமி

Posted:

சென்னை:தமிழக மீனவர்களை விடுவிக்க, வழக்கறிஞர்களை நியமித்து அதற்கான செலவை, தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று, இலங்கையில் உள்ள இந்திய துாதருக்கு, தமிழக மீன்வளத்துறை செயலர் விஜயகுமார், கடிதம் எழுதி உள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:முன்பெல்லாம், கைதான மீனவர்களை விடுவிக்கும்போது, அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும். இதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருந்தது.அதேபோல், படகுகளை, எந்தவித நிபந்தனையுமின்றி, கோர்ட்டில் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என வற்புறுத்தாமல் விடுவிக்கும்படி, மீண்டும் ஒரு முறை, இலங்கை அதிகாரிகளிடம் ...

தவறு செய்யும் அதிகாரிகளுக்கு கருணை கூடாது: நம்பர் பிளேட் வழக்கில் அதிரடி

Posted:

சென்னை : 'போலி வாகன நம்பர் பிளேட்டை தயாரித்து, விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க தவறும் அதிகாரி மீது, கருணை காட்டக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த, கேப்டன் சந்தோஷ் என்பவர், தாக்கல் செய்த மனு:உயர் பாதுகாப்பு வாகன நம்பர் பிளேட் பொருத்தும் திட்டம், கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தால், திருட்டு வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இந்த திட்டத்தை, உடனடியாக அமல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.போலி வாகன நம்பர் பிளேட்களை தயாரித்து, விற்பனை செய்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிட ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™