Tamil News | Online Tamil News |
- மத்திய அரசு திட்டங்களின் எண்ணிக்கை 10 ஆக குறைப்பு? பரிந்துரைகள் வழங்க முதல்வர்கள் குழு நியமனம்
- ரயில் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தீர்களா: தமிழக அரசுக்கு கருணாநிதி கேள்வி
- 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேருங்க: முதல்வர் ஓ.பி.எஸ்., கோரிக்கை
- பீகார் முதல்வராக பதவியேற்க நிதிஷ் குமாரை அழைப்பாரா? கவர்னர் கேசரிநாத் திரிபாதி இன்று முக்கிய முடிவு
- அவல நிலையில் எல்லை பாதுகாப்பு வீரர்கள்: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
- இலக்கை எட்டாத ஆம் ஆத்மியின் வசூல்: நிதி குறைந்ததால் தலைவர்கள் சோகம்
- வெளிநாட்டு நிறுவனங்களிடம் இழப்பீடு கோர முடியாது
- அதிவேக ரயில் பெட்டிகள்: சென்னையில் தயாரிக்க திட்டம்
- தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி
| மத்திய அரசு திட்டங்களின் எண்ணிக்கை 10 ஆக குறைப்பு? பரிந்துரைகள் வழங்க முதல்வர்கள் குழு நியமனம் Posted: புதுடில்லி: மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 66 திட்டங்களை 10 ஆக குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்த பரிந்துரைகள் வழங்குவற்காக மாநில முதல்வர்கள் அடங்கிய துணை குழுக்களை அமைப்பது என நேற்று நடந்த 'நிடி ஆயோக்' கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பணிகளை மத்திய திட்டக் கமிஷன் மேற்கொண்டு வந்தது. 60 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கலைத்தார். திட்டக் கமிஷனுக்கு பதிலாக 'நிடி - ஆயோக்' என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இதன் ... |
| ரயில் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தீர்களா: தமிழக அரசுக்கு கருணாநிதி கேள்வி Posted: சென்னை: 'தமிழகத்தில் முடக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை, ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: முதல்வர் எழுதியுள்ள கடிதத்தை, மத்திய அரசு ஏற்று, தமிழகத்தின் திட்டங்களை ரயில்வே பட்ஜெட்டில் சேர்த்து அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 22 ரயில்வே திட்டங்களும் நிறைவேற போதுமான நிதியை, ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன், ஈரோடு - பழநி ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென, சோனியா மூலமாக பிரதமரிடம் நான் விடுத்த கோரிக்கையை ஏற்று, ... |
| 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேருங்க: முதல்வர் ஓ.பி.எஸ்., கோரிக்கை Posted: சென்னை: ''நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதுடன், திடக்கழிவு மேலாண்மை, சூரிய மின்சக்தி, பாசன திட்டங்கள் போன்றவற்றிற்கான மத்திய அரசின் நிதியை அதிகரிக்க வேண்டும்,'' என, டில்லியில் நேற்று நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.டில்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த, 'நிடி ஆயோக்' அமைப்பின், முதல் நிர்வாகக் குழு கூட்டத்தில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: 'நிடி ஆயோக்' அமைப்பு நேர்மையாக, தொடர்ந்து மாநில அரசுடன் இணைந்து செயலாற்றும் அமைப்பாக இருக்க வேண்டும். இதன் நிர்வாக குழுவில், மாநில முதல்வர்களும் ... |
| பீகார் முதல்வராக பதவியேற்க நிதிஷ் குமாரை அழைப்பாரா? கவர்னர் கேசரிநாத் திரிபாதி இன்று முக்கிய முடிவு Posted: பாட்னா: பீகாரில், ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டசபைத் தலைவராக, நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கு, அவருக்கு, கவர்னர் கேசரிநாத் திரிபாதி அழைப்பு விடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதேநேரத்தில், 'ஜிதன்ராம் மஞ்ஜி பரிந்துரையை ஏற்று, சட்டசபையை கலைக்க, கவர்னர் உத்தரவிடுவாரோ' என்ற கலக்கமும், ஐக்கிய ஜனதா தள கட்சியினரிடையே நிலவுகிறது.பீகாரில், பரபரப்பான அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த லோக்சபா தேர்தலில், ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம், படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று, நிதிஷ் குமார், முதல்வர் ... |
| அவல நிலையில் எல்லை பாதுகாப்பு வீரர்கள்: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Posted: புதுடில்லி: எதிரிகளிடம் இருந்து நாட்டை காக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பி.எஸ்.எப்.,), தூக்கமின்மை, மனச்சோர்வு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுடன், குடும்ப உறவுகளை துறந்து, பரிதாபகரமான நாடோடி வாழ்க்கை வாழ்வதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்: எல்லை பாதுகாப்பு படையினர், நாடோடிகள் போல் வாழ்கின்றனர். இரவுப் பணியின் போது, முகாமில் இருந்து எல்லைக் கோட்டருகே பாதுகாப்புக்கு செல்வோர் நிலை தான் மிகவும் மோசம். கையில் ஒரு சிறிய படுக்கையுடன் செல்லும் இவர்கள், 6 மணிநேரம் ... |
| இலக்கை எட்டாத ஆம் ஆத்மியின் வசூல்: நிதி குறைந்ததால் தலைவர்கள் சோகம் Posted: புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள், ஆம் ஆத்மிக்கு சாதகமாக வெளிவந்துள்ள நிலையில், கட்சி நிதி திரட்டுவதில் அக்கட்சியினர் தோல்வியை சந்தித்துள்ளது, ஆம் ஆத்மி தலைவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.டில்லி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, பொதுமக்கள் மத்தியில் பிரசாரத்தை துவங்கிய, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியை பலப்படுத்த, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நிதி திரட்ட திட்டமிட்டார். தேர்தல் தேதியான, பிப்., 7க்குள், 30 கோடி ரூபாய் திரட்ட அக்கட்சியினர் திட்டமிட்டனர். அதற்காக, ... |
| வெளிநாட்டு நிறுவனங்களிடம் இழப்பீடு கோர முடியாது Posted: புதுடில்லி: அணு உலைகளை சப்ளை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களிடம், விபத்தால் பாதிக்கப்பட்டோர், இழப்பீடு கோரி வழக்கு தொடுக்க முடியாது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.தெளிவான விளக்கம்: அணு உலை விபத்துக்கு பொறுப்பேற்பது, இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, கேள்வி - பதில் வடிவில் மிகத் தெளிவான விளக்கத்தை, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: இந்தியா - அமெரிக்கா இடையே, அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், திட்டங்களை செயல்படுத்துவதில், சில முக்கிய அம்சங்கள் தடையாக இருந்தன. அவற்றுக்கு தீர்வு காணும் விதமாக, இந்திய - ... |
| அதிவேக ரயில் பெட்டிகள்: சென்னையில் தயாரிக்க திட்டம் Posted: புதுடில்லி: மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக ரயில்களில் பொருத்தும் வகையிலான நவீன ரயில் பெட்டிகளை, சென்னை பெரம்பூரில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது, மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய ரயில்களில் பொருத்துவதற்கான பெட்டிகள் மட்டுமே நம் நாட்டில் உள்ளன. மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய அதிகவேக ரயில்களை இயக்குவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், அதற்கு தகுந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நவீன ரயில் ... |
| தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி Posted: கோவை: தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 09,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |