Tamil News | Online Tamil News |
- பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி கவிழ்கிறது? பா.ஜ.,வுடன் அணி சேர தயாராகிறார் முதல்வர் மஞ்ஜி
- பயங்கரவாதிகள் அடுத்த தாக்குதலை நடத்தினால் பாக்.,கை இந்தியா தாக்கும்: அமெரிக்க 'மாஜி' தூதர் அதிரடி
- இலங்கை தமிழர் பிரச்னை: சிறப்பு குழு அமைக்க முடிவு
- வரி தொடர்பான பிரச்னைகளில், முதலீட்டாளர்களுக்கு தேவையற்ற தொல்லை தரக் கூடாது: அருண் ஜெட்லி அறிவிப்பு
- டில்லியில் இமாம் ஆதரவை நிராகரித்த ஆம் ஆத்மி
- 'சாக்கு போக்கு சொல்ல கூடாது:' செயலர்களிடம் மோடி கண்டிப்பு
- தமிழக ரயில் திட்டங்களுக்கு போதுமான நிதிவேண்டும்: சுரேஷ் பிரபுவுக்கு ஓ.பி.எஸ்., கடிதம்
- தமிழகத்தில், 'ரிமோட் கன்ட்ரோல்' ஆட்சி 'முகமூடி முதல்வர்': கருணாநிதி
- படகுகளை விடுவிக்க கடிதம் கேட்கும் இலங்கை தூதர் பதிலுக்கு தமிழக அரசு காத்திருப்பு
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சீர்திருத்தங்களுக்காக புதிய மசோதா: பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்கிறது மத்திய அரசு
- காங்கிரசுக்கு தொடர் தோல்வி ஏன்? ராகுல் முக்கிய ஆலோசனை
| Posted: பாட்னா: பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் ஜிதன்ராம் மஞ்ஜியின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.,வுடன் அணி சேரத் தயாராகியுள்ள முதல்வர் மஞ்ஜியை, பதவியிலிருந்து நீக்க, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது. அதில், மஞ்ஜியை நீக்கி, தீர்மானம் நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பீகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார், கடந்த ஆண்டு தன் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, கட்சியின் மூத்த தலைவரும், தலித் ... |
| பயங்கரவாதிகள் அடுத்த தாக்குதலை நடத்தினால் பாக்.,கை இந்தியா தாக்கும்: அமெரிக்க 'மாஜி' தூதர் அதிரடி Posted: வாஷிங்டன்: ''இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடுத்த தாக்குதலை நடத்தினால், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்க தயங்காது. முந்தைய காலத்தில் பின்பற்றப்பட்ட அமைதியான வழிமுறையை இனிமேல் இந்திய தலைமையிடம் எதிர்பார்க்க முடியாது,'' என, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய, ராபர்ட் பிளாக்வெல் கூறினார்.அமெரிக்க வெளியுறவுத் துறை இலாகாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ராபர்ட் பிளாக்வெல் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறும்போது, ''மும்பையில் நடந்தது போன்ற தாக்குதலை, பாகிஸ்தான் அரசு அல்லது அந்நாட்டு உளவு ... |
| இலங்கை தமிழர் பிரச்னை: சிறப்பு குழு அமைக்க முடிவு Posted: கொழும்பு: இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பான சுமுக செயல்பாடுகளுக்கு, சமரச தீர்வுக்கான அதிபரின் சிறப்பு குழு (பி.டி.எப்.ஆர்.,) என்ற அமைப்பை உருவாக்க, இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்ன மேலும் கூறியதாவது: இலங்கையில், சிறுபான்மை தமிழர்களின் பிரச்னை தொடர்பாக, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சமரச தீர்வுகளை, பி.டி.எப்.ஆர்., அடையாளம் காணும். |
| வரி தொடர்பான பிரச்னைகளில், முதலீட்டாளர்களுக்கு தேவையற்ற தொல்லை தரக் கூடாது: அருண் ஜெட்லி அறிவிப்பு Posted: மும்பை: ''நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தி, செலவினங்களை சீர்படுத்தும் நோக்கில், வரும் 2015-16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், ஏராளமான சீர்திருத்த கொள்கைகள் இருக்கும். வரி தொடர்பான பிரச்னைகளில், முதலீட்டாளர்களுக்கு தேவையற்ற தொல்லை தரக் கூடாது'' என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்து உள்ளார். மும்பையில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, சைரஸ் மிஸ்த்ரி உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், அருண் ஜெட்லி மேலும் பேசியதாவது: இந்தியா, கடன் வாங்கியே காலம் தள்ளி ... |
| டில்லியில் இமாம் ஆதரவை நிராகரித்த ஆம் ஆத்மி Posted: புதுடில்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலை மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, டில்லி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. வரும், 10ம் தேதி, ஓட்டுகள் எண்ணப்படுவதால், ஆட்சியை பிடிக்கப் போவது யார் என, அன்று தெரிந்து விடும். இந்நிலையில்.இன்று நடக்கவுள்ள டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மிக்கு ஆதரவாக ஓட்டளிக்கும்படி, டில்லி இமாம் செய்யது அகமது புகாரி, நேற்று காலை கூறியிருந்தார். ஆனால், இந்த ஆதரவை, ஆம் ஆத்மி கட்சி நிராகரித்து விட்டது.ஒரு மாதத்துக்கு மேலாக, தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வந்த டில்லி ... |
| 'சாக்கு போக்கு சொல்ல கூடாது:' செயலர்களிடம் மோடி கண்டிப்பு Posted: புதுடில்லி: ''சாக்கு போக்கு சொல்லாமல், அனைத்து அடிப்படை கட்டமைப்பு திட்டங்களும் தாமதமின்றி நடைபெறுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்,'' என, அத்துறை சார்ந்த அமைச்சக செயலர்களிடம், பிரதமர் மோடி கண்டிப்புடன் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அமைச்சக செயலர் ஒருவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில், அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த அமைச்சக செயலர்கள் கூட்டம், வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், அரசு மற்றும் தனியார் கூட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, மோடி ஆய்வு செய்வார். கடந்த ... |
| தமிழக ரயில் திட்டங்களுக்கு போதுமான நிதிவேண்டும்: சுரேஷ் பிரபுவுக்கு ஓ.பி.எஸ்., கடிதம் Posted: சென்னை: 'தமிழகத்திற்கு என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 22 ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கி, அவற்றை நிறைவேற்ற வேண்டும்' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: விரைவில், 2015-16ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ளது. அபரிதமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம். இதை கருத்தில் கொண்டு, 2023ம் ஆண்டிற்கான தொலைநோக்கு திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், ரயில்வே உட்பட முக்கியத் ... |
| தமிழகத்தில், 'ரிமோட் கன்ட்ரோல்' ஆட்சி 'முகமூடி முதல்வர்': கருணாநிதி Posted: சென்னை: 'தமிழகத்தில், 'ரிமோட் கன்ட்ரோல்' ஆட்சி, 'முகமூடி முதல்வர்' தலைமையில் நடைபெறுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்று, 105 நாட்களுக்கு மேலான பின், இப்போது தான் கன்னி முயற்சியாக, அவர் தலைமையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.இந்தக் கூட்டம் நடத்த, ஜெயலலிதாவை சந்தித்து ஒப்புதல் பெற்றுள்ளார். அ.தி.மு.க., ஆட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு, இது ஒன்றே உதாரணம்.அதுவும் கூட விரைவில் சட்டசபை கூட்டம் தொடங்க வேண்டிய நிலையில், அமைச்சரவையை கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் ... |
| படகுகளை விடுவிக்க கடிதம் கேட்கும் இலங்கை தூதர் பதிலுக்கு தமிழக அரசு காத்திருப்பு Posted: சென்னை : 'இலங்கையில் உள்ள, தமிழக மீனவர்களின் படகுகளை, உடனடியாக விடுவிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிய, இந்திய துாதரின் கடிதத்திற்காக, தமிழக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான, 81 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசு நீண்ட காலமாக, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக பிரதமருக்கு, முதல்வர் பலமுறை கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது.புதிய அரசு, படகுகளை விடுவிக்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக, ... |
| Posted: புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கூடுதல் தொழிலாளர்களை கொண்டு வரும் வகையிலும், தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கூடுதல் பண பலன்கள் அளிக்க வகை செய்யவும், வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான மசோதா, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், பார்லிமென்டில் அறிமுகப்படுத்தி, நிறைவேற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தனியார் துறைகளில் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தங்கள் சம்பளத்தில், 12 சதவீதத்தை, தங்களின் வருங்கால வைப்பு நிதியத்திற்காக வழங்குகின்றனர். அது போல, அந்த தொழிலாளர்கள் ... |
| காங்கிரசுக்கு தொடர் தோல்வி ஏன்? ராகுல் முக்கிய ஆலோசனை Posted: புதுடில்லி: லோக்சபா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்பட்ட தொடர் தோல்வி மற்றும் உட்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன், ராகுல் நேற்று தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.முக்கியத்துவம்: டில்லி சட்டசபை தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில், ராகுலின் நேற்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி இம்மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, உட்கட்சி தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்வாண்டு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 07,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |