Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


செய்யும் தொழிலே தெய்வம்

Posted: 06 Feb 2015 03:34 PM PST

ஒரு வயதான வீடு கட்டும் மேஸ்திரி இருந்தார்.அவர் பல காலமாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்துகிட்டு இருந்தார்.ஒரு நாள் காண்ட்ராக்டர் கிட்ட போய் எனக்கு வயசாயிடுச்சு அதுனால இப்ப கட்டுறது தான் கடைசி வீடு , என்னால இனிமே வேலைக்கு வர முடியாதுன்னு சொன்னார்... ஏம்பா நீ பல வருஷமா என் கிட்ட வேலை செய்யிர அதுனால இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் எனக்காக கட்டி கொடுப்பா என்று காண்ட்ராக்டர் கேட்டார்.மேஸ்திரியும் வேண்டா வெறுப்பா ஒத்துக்கிட்டு வீடு கட்ட ஆரம்பித்தார். கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு ...

ஐ.என்.டி. (IND) நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம்!

Posted: 06 Feb 2015 11:34 AM PST

சென்னை: வாகனங்களில் ஐ.என்.டி. (IND) நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு பதிவு எண் (ஐ.என்.டி.) நம்பர் பிளேட்டுகளை பொருத்த மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்ட உத்தரவிட்டது. இந்த நம்பர் பிளேட்டில், எழுத்து, எண் வடிவங்கள் ஒரே சீராகவும், வாகன இன்ஜின் எண், வாகன உரிமையாளர்கள் விவரங்கள் அடங்கிய, 'ஹாலோகிராம்' முத்திரை இடப்பட்டிருக்கும். மத்திய அரசின் உத்தரவையடுத்து பல்வேறு மாநிலங்களில் இந்த நடைமுறை ...

புற்று நோய்க்கு ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை முறை.

Posted: 06 Feb 2015 11:32 AM PST

புற்று நோய்க்கு ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை முறை. "உயிர் கொடுத்து எழுப்புங்கள் எனது செல்ல மகனை" என்ற தாய்க்கு "இறப்பில்லா வீட்டில் ஒரு படி அரிசி வாங்கி வா " என்றார் புத்தர். எங்கு தேடியும் கிடைக்காத அந்த ஒரு படி அரிசி . இப்போது புற்று நோய் இல்லாத குடும்பமே இல்லை என்ற அளவுக்கு புற்று நோய்க்கான காரணிகளோடும் ,புற்று நோயை உண்டாக்கும் உணவுகளோடும் ,சூழ்நிலைகளோடும் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆரம்ப நிலை புற்று நோய்கள் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றாலும் கிட்டத்தட்ட எல்லா புற்று ...

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம்

Posted: 06 Feb 2015 11:18 AM PST

சாதாரணமாக எந்தக் கோயிலிலும் நாய்களை உள்ளே வர விடுவதில்லை. கோயில் வாசல்வரைதான் அதற்கு அனுமதி. ஆனால் கேரளாவில் மடப்புறா எனும் கோயிலில் நாய்களை உள்ளே அனுமதிக்கின்றனர். அனுமதிப்பது மட்டுமல்லாமல் அவைகளை மரியாதையுடன் கௌரவிக்கின்றனர். அங்கு செல்லும் பக்தர்கள். நாய்களும் இதுவரை யாரையும் கடிப்பதோ, தொந்தரவு செய்வதோ இல்லை. பூஜை நடக்கும் போது கோயிலின் முக்கிய நாய்வாலை ஆட்டியபடி சன்னதி முன்பு போகிறது. பின் அமைதியாக உடலைச் சுருட்டியபடி அமர்கிறது. கர்ப்பகிரஹத்தினுள் இருக்கும் இறைவனையே உற்று நோக்குகிறது. ...

கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Posted: 06 Feb 2015 10:55 AM PST

சட்டத்தையும்நீதியையும் பணக்காரர்களால் சுலபமாக வளைக்க முடியும். அவர்களுக்குஅரசாங்கமும் துணை நிற்கும். அதே நேரத்தில், வலிமையானவர்களால்பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்கு யார் உதவுவது? அவர்களின் மனக்குமுறலைக் கேட்டு நியாயம் சொல்பவர் யார் என்று கேட்டால்- ""கொல்லங்குடியில்நானிருக்கிறேன். கஷ்டப்படுகிறவர்களும் நஷ்டப்பட்டவர்களும் பிணியால்வாடுபவர்களும் தூய உள்ளத்தோடு என்னை நாடிவந்து வணங்கினால் உடனடிப்பரிகாரம் கொடுப்பேன்'' என்று உலகத்துக்கே சொல்லிக் கொண்டிருக்கிறாள்வெட்டுடையாள் காளி. தென்மாவட்ட ...

ஆன்மிகக் கதைகள்

Posted: 06 Feb 2015 10:43 AM PST

1 . சதாசிவ பிரமேந்திரர் சதாசிவ பிரமேந்திரர் என்ற ஞானி கோயில் நகராம் மதுரையில் 18ம் நூற்றாண்டில் அவதரித்தவர். பெற்றோர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன். இளமை முதலே வீடு, வாசல், சொந்தம், பந்தம் என்ற பற்றில்லாமல் இருந்தார். படிப்பில் திறமைசாலியான இவர், மொழியியல், கலைகள் மற்றும் தத்துவஞான வித்தகராகத் திகழ்ந்தார். அக்காலத்தில், குழந்தை திருமணம் செய்து வைப்பது வழக்கம். பிரம்மேந்திரருக்கும் அவ்வாறே செய்து வைக்கப்பட்டது. திருமணமான குழந்தைகள் பருவமடையும் வரை பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். பிரம்மேந்திரரின் ...

அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி

Posted: 06 Feb 2015 10:28 AM PST

பக்தன் பிரகலாதனுக்காக தூணிலிருந்து தோன்றிய நரசிம்மர், கொடுங்கோலன் இரண்யனை வயிற்றைக் கிழித்து, குடலை உருவி வதம் செய்தார். இரண்யனை கொன்ற பிறகும் பிரகலாதனுக்கு அவன் செய்த கொடுமைகளை நினைத்து உக்கிரம் தணியாமல் இருந்தார். பிரகலாதனும் மகாலட்சுமியும் ஒருபக்கம் அவருடைய கோபத்தைத் தணிக்க, சிவ அம்சமான சரபேஸ்வரர் அவருடைய கோபத்தை அப்படியே தான் உறிஞ்சிக் கொண்டதாக புராணம் கூறுகிறது. அந்த சரபேஸ்வரரின் ஓர் இறக்கை அம்சம்தான் பிரத்யங்கிரா தேவி. பயங்கரமான உக்கிரம் கொண்ட அம்மன். தன் பக்தர்களைத் துன்புறுத்தும் வக்கிரங்களையும், ...

மூன்று வித பஞ்சாட்சரம்

Posted: 06 Feb 2015 09:41 AM PST

ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய நமசிவய" என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து "ஓம் நமசிவய" என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் ...

5000 பதிவுகளைக் கடந்துள்ள அன்புத் தங்கை மதுமிதாவிற்கு வாழ்த்துகள்!

Posted: 06 Feb 2015 09:28 AM PST



5000 பதிவுகளைக் கடந்துள்ள அன்புத் தங்கை மதுமிதாவிற்கு வாழ்த்துகள்!

மேலும் தங்களின் பதிவுகள் பல்லாயிரங்களாக வாழ்த்துகள்!

14-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

Posted: 06 Feb 2015 09:26 AM PST

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே 30 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் வருகை தர உள்ளனர். 'உலகத் தமிழ் தகவல்தொழில்நுட்ப மன்றம்' என்ற அமைப்பு உலகின் பல நாடுகளில் அரசுடனும் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து இந்த தமிழ் இணைய மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தியா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க் கணினி வல்லுநர்கள் ...

புறா சொன்ன அறிவுரை!

Posted: 06 Feb 2015 09:21 AM PST

ஒரு ஊரில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவன் பெயர் மணிகண்டன்; மற்றவன் பெயர் சிவக்குமார். மணிகண்டனும், சிவக்குமாரும் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால், அவர்களைப் பத்தாம் வகுப்புடன் நிறுத்தி விட்டார் தந்தையார். மணிகண்டன் விவசாய வேலைகளில் தனது தகப்பனாருக்கு உதவிகரமாக இருந்து வந்தான். ஒரு சமயம் அவனது தந்தை சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டார். பத்துப் பதினைந்து நாட்களாகியும் திரும்பி வரவில்லை. அதுவரை வீட்டையும், வயலையும் பொறுப்பாகப் பார்த்துக் ...

எச்சம்

Posted: 06 Feb 2015 09:06 AM PST


-
ஓங்கி வளர்ந்த
கிளைகளும் கூடவே
இலைகளும் நினைத்தன...
-
இந்தப் பறவைகளுக்கு
நாம் இல்லாவிட்டால்
வீடு ஏது..?

-
மண்ணில் புதைந்துள்ள
வேர்கள் மட்டும்
நினைத்தன
பறவைகளின் எச்சம்
இல்லாவிட்டால்
நாம் ஏது..?

--

வெ.ஸ்ரீதரன்
நன்றி- ஆனந்த விகடன்

மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர்

Posted: 06 Feb 2015 08:45 AM PST

அமெரிக்காவின் முன்னாள் உயர்மட்ட தூதர் ரோபர்ட்  பிளாக்வில் கூறும்போது 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. அதன்பிறகு எப்போதெல்லாம் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தாலும், பாகிஸ்தான் மீது ராணுவ பலத்தை பிரயோகிக்க இந்திய பிரதமர்கள் யோசித்தது உண்டு. ஆனால் செயல்படுத்தாமல் பின்வாங்கிவிடுவார்கள். ஆனால், இப்போது இந்தியாவின் நிலைப்பாடு வேகமாக மாறியுள்ளது. இப்போதைய பிரதமர் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் பின்வாங்க மாட்டார் என்று நினைக்கிறேன். இந்தியாவில் ஏதாவது ...

சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Posted: 06 Feb 2015 08:21 AM PST



இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)

மரங்குடைய கோடாலி கொண்டு போவதில்லை மரங்கொத்தி!..

Posted: 06 Feb 2015 02:02 AM PST

1. நீ அடுத்தவர் மீதுகொண்ட நம்பிக்கை என்பது காசோலை. நீ உன்மீதே கொண்ட நம்பிக்கை என்பது ஏ.டி.எம் அட்டை! *************************** 2. கைக்குட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது கண்ணீர் துடைக்க அல்ல வேர்வை துடைக்க. *************************** 3. புறாவின் மனம்கொள் கட்டுவது கூடாயினும் உயரத்திலேயே கட்டும். *************************** 4. மரங்குடைய கோடாலி கொண்டு போவதில்லை மரங்கொத்தி! அவனவன் கையில் ஆயிரம் ஆயுதம். *************************** 5. புதுப்பித்துக் கொள் பழைய ...

கல் நெஞ்சம்

Posted: 06 Feb 2015 02:00 AM PST

-[b] என்னை ஏன் அவஸ்தைப்படுத்துகிறாய்? நான் துன்பப் படுவதில் உனக்கென்ன ஆனந்தம்? ஏன் நான் சிரித்தால் உனக்கென்ன துன்பமா? புலம்பித் தீர்த்தான் சாமி முன் பக்தன் - என் தலை வழியாக தேனையும் தயிரையும் சந்தனத்தையும் விபூதியையும் அனுதினமும் கொட்டிக் கொட்டி எனதவஸ்தையை நீ கண்டு மகிழவில்லையா? - மூச்சுத் திணற சாம்பிராணிப் புகையை காற்று வசதியில்லாத கற்பக் கிரகத்தில் அனுதினமும் பரவ விட்டு ஆனந்திக்க வில்லையா? - இருட்டைறையில் வைத்தென்னை நன்றாகப் பூட்டிவிட்டு நீ மட்டும் ஃபேனடியில் நிம்மதியாய்த் ...

நம்பிக்கை உண்டானால் வெற்றியுண்டு,..!

Posted: 06 Feb 2015 01:58 AM PST

* எந்தச் செயலிலும் ஊக்கத்துடன் ஈடுபட்டால், அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவை இறைவன் காண்பிப்பார். - * இறைவனை நம்பு, உண்மை பேசு, நியாயத்தை செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய். - * இறைவனுக்கு உள்ளத்தை அர்ப்பணிப்பது யாகம். யாகத்தை நடத்துபவருக்கு தெய்வ வலிமை, செல்வம், ஆயுள், புகழ் அனைத்து நன்மையையும் இறைவன் அளிப்பார். - * அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும் வெல்ல வேண்டும். தர்மத்தாலும் கருணையாலும் கிடைக்கும் வெற்றியே நிலையானது. - * நம்பிக்கையை நெஞ்சில் நிறுத்திக் ...

மேலூர் தென்றலின் கவிதைகள் - 13 இதற்காகத்தான்...

Posted: 06 Feb 2015 01:56 AM PST

இதற்காகத்தான்... அவர் கொஞ்சம் கறுப்பு அதனாலென்ன? பல் கொஞ்சம் தூக்கல் பரவாயில்லை. முன்கோபம் அதிகமாம் சமாளித்துக் கொள்கிறேன். சிகரெட்டும், தண்ணியும் பழக்கமுண்டாம் சகித்துக் கொள்கிறேன் அவர் தாலிகட்ட வசதியாய் தலைகுனிந்தேன். என் பெற்றோர் முகத்தில் சிரிப்பு நிலைத்திருந்தது. இதற்காகத்தான்...

மேலூர் தென்றலின் கவிதைகள் - 12 அழுகை

Posted: 06 Feb 2015 01:54 AM PST

அழுகை

நேற்று..
அவன் இறந்தபோதும்
இப்படித்தான் அழுதார்கள்.

இன்று..
அவனை மறந்துவிட்டார்கள்.

இன்று..
இவன் இறந்துவிட்டான்.
அப்படியேதான் அழுகின்றனர்.

நாளை..
இவனையும் மறந்துவிடுவார்கள்.

மற்றொருநாள்
வேறொருவன் இறந்தாலும்
அப்படியேதான் அழுவார்கள்.

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 17 அம்பிகா சிவம்

Posted: 06 Feb 2015 01:50 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 17 லெஷ்மி மிட்டல் நீங்கள் இன்று எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை, சாதனை படைப்போம் என்ற நம்பிக்கை மட்டும் உங்கள் மனதில் வேரூன்றி விட்டால் அதை முழு மனதாக நம்பி நீங்கள் செயல்பட்டால் போதும். உங்களாலும் வெற்றிபெற முடியும். சாதனை படைக்க முடியும். ஆம் சாதாரண மனிதர்களாலும் சாதனை படைத்துப் புகழ்பெற முடியும் என்று காட்டுவதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர்தான் இரும்புலகின் மாமனிதர் லெஷ்மி மிட்டல். பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது மிட்டலின் குடும்பம் ஓரிடத்திலிருந்து ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 16 அம்பிகா சிவம்

Posted: 06 Feb 2015 01:50 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 16 பாரக் ஒபாமா ஒரு காலத்தில் கறுப்பினத்தவர்களை மனிதர்களாகவே மதிக்காத ஒரு தேசமாக இருந்த அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றுத் தன் இனத்திற்கே பெருமை சேர்த்தார். தன்னுடைய நாற்பது வயதுவரை அவர் அரசியலில் ஈடுபட்டதில்லை என்பது வியப்புக்குரிய செய்திதான். எந்த வயதிலும் உழைக்க முடியும், அதன் பயனாக வெற்றியையும் பெறமுடியும் என்று அவரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. 2008ம் ஆண்டு அவர் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றபோது அவரின் ...

மாதொரு பாகன் - எழுத்தாளர் பெருமாள் முருகனின் சர்ச்சை நாவல் .

Posted: 05 Feb 2015 11:50 PM PST

எழுத்தாளர் பெருமாள் முருகனின், 'மாதொரு பாகன்' என்ற நாவல், 'திருச்செங்கோட்டில் உள்ள மக்களையும், இந்து பெண்களையும் இழிவுபடுத்துகிறது எனக் கூறி, அந்த நாவலுக்கு தடை விதிக்க வேண்டும்' என, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. நூல் ஆசிரியர் பெருமாள் முருகன் கூறியதாவது: கடந்த, 1940 களில் நடந்த, ஒரு சம்பவம் தொடர்பான நாவல், 'மாதொரு பாகன்!' குழந்தை இல்லாத தம்பதிகள் படும் துயரமும், சமூகம், அவர்களை எப்படி பார்க்கிறது என்பது குறித்தும் விவாதிப்பது ...

ராஜா எலி - சிறுவர் கதை

Posted: 05 Feb 2015 11:34 PM PST

எலிகளுக்கெல்லாம் அந்த நெட்டை வால் எலிதான் ராஜா. அந்த ராஜா எலிக்கு தன் அழகின் மீது அதிக கர்வம். தன் அழகைப் பற்றியே பெருமையாகப் பேசிக் கொள்ளும். அதற்கு நீண்ட வால் உண்டு. யாரையாவது கூப்பிட்டு அதிகாரம் பண்ணும்போதும், தன் வாலை ஆட்டியே போகச் சொல்லும். மீறி யாராவது பேசினால், தன் வாலாலேயே மற்ற எலிகள் முகத்தில் அடிக்கும். அதனால், மற்ற எலிகள் பயந்து போய், அது சொன்னபடி கேட்கும். ஒருமுறை எலிகள் எல்லாம் விருப்பம் போல விளையாடிக்கொண்டு இருந்தபோது, ராஜா எலி வந்து, ""நீங்கள் இஷ்டம்போல் கண்ட இடத்திற்கெல்லாம் ...

ஆண்ட்ராயிடு அலைபேசி மென்பொருட்கள் - தொடர் பதிவு (தினமும்)

Posted: 05 Feb 2015 11:02 PM PST



235 ஆண்ட்ராயிடு மென்பொருட்கள்



தரவிறக்க

[code]


[/code]

Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Posted: 05 Feb 2015 10:52 PM PST

silk road anonymous marketplace சில்க் ரோட்டில் பயணம் செய்வதற்கு முன், சில அடிப்படைத் தகவல்கள். பயனீட்டாளர்களாக நமக்கெல்லாம் தெரிந்த வலைத்தளங்களையும், அலை மென்பொருட்களையும், இணைக்கப்பட்ட சாதனங்களையும்கொண்ட இணையத்தைத் தாண்டி 'இருண்ட இணையம்' ஒன்று இருக்கிறது. இந்த இணையத்தில் இருக்கும் தளங்களை கூகுள், யாஹூ, பிங்... போன்ற தேடல் பொறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க இயலாது. 'ஆழ் இணையம்' (Deep Web) என்ற பெயரில் இது அழைக்கப்பட காரணம் இருக்கிறது. கடலின் மேற்பரப்பில் வலை ஒன்றை இழுத்துக்கொண்டே சென்றால், ...

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Posted: 05 Feb 2015 10:52 PM PST

அனுசரிப்பு….!!. * திருமணமானப் பெண்கள், கணவனுடன் எப்பொழுதேனும் சந்தோஷமாக மனம் விட்டுப் பேசும்போது, அடிக்கடி அம்மா வீட்டின் வசதி வாய்ப்புகள், அங்கு எப்படியெல்லாம் நடப்பார்கள். பேசிப் பழகுவார்கள் என்று பெருமையோடுப் பேசித் தீர்ப்பாள். அவ்வாறு பேசுவதை எல்லா கணவன்மார்களும் கேட்டுக் கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. சில பேருக்குப் பிடிக்கும். சில பேருக்குப் பிடிக்காது. சில பேர்களிடையே சண்டைச் சச்சரவும் ஏற்பட்டு விடுவதுண்டு. இத் தற்பெருமையினால் விவாகரத்துமானதுண்டு. தற்கொலை வரைப் போய் வாழ்வே முடித்துக் ...

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள்

Posted: 05 Feb 2015 10:49 PM PST

USB Pendrive & Memory Card folders turned as Shortcut சில நேரங்களில் நம்முடைய USB பென் டிரைவ் அல்லது மெமரி கார்டை நண்பர்களின் கணினியில் பயன்படுத்தி விட்டு பிறகு நம்முடைய கணினிக்கு கொண்டு வந்து இணைத்தோமானால் அதில் இருந்த files & folders அனைத்தும் மறைந்து அதற்கு பதில் அவற்றின் பெயரிலேயே shortcuts உருவாகியிருக்கும். இது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சினை. Win32 atraps pz என்னும் டிரோஜன் வகை வைரஸ் தான்  இதற்கு காரணம். இந்த shortcut டினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் ...

வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ? அவற்றை கண்டு பிடித்து மீண்டும் Activate பண்ணுவோமா ?

Posted: 05 Feb 2015 10:46 PM PST

சில வைரஸ்களானது Folder களை மறைத்து விடும். வைரஸால் மறைந்த Folder, File கள் மங்கலாக தான் பார்க்க முடியும். சாதாரணமாக பார்க்க முடியாது. சிலருடைய Flash களில் இவ்வாறான Folder கள் இருக்கும். சிலருடைய Memory Card ல் படங்கள் மறைந்து போய் இருக்கும். அவை வருடக்கணக்காக நிதந்தர கறைபடிந்த File / Folder போல இருக்கும். இந்த Folder, File களை பார்த்தவூடனேயே தெரியும் அவை வைரஸால் பாதிக்கப்பட்டவை யென்று. அனேகமாக Antivirus கள் வைரஸ்களை அழிக்கின்றனவே தவிர வைரஸால் ஏற்பட்ட கறைகளை (பிரச்சினைகளை) போக்குவதில்லை. 1. ...

இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர்

Posted: 05 Feb 2015 10:37 PM PST

பீஜிங்: ஜியாங்சூ மாகாணம், நான்டங் நகரைச் சேர்ந்த மாணவர் ஜியா வாங், 19. இவர், 24 மணி நேரமும் இணையத்தில் பொழுதை கழிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அதில் இருந்து மீள வழி தெரியாமல், ஒரு விபரீத முடிவை எடுத்தார்.'சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்' என்பது போல், கை இருந்தால் தானே, விசைப் பலகையை தட்டி, இணையத்தில் விளையாட முடியும் என்று நினைத்த அவர், தனிமையான ஓரிடத்திற்கு சென்றார். அங்கிருந்த ஒரு கருங்கல் மீது தன் இடதுகை மணிக்கட்டை வைத்து, கத்தியால் ஓங்கி வெட்டி, அதை துண்டித்து விட்டார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™