Tamil News | Online Tamil News |
- தமிழகத்தில் அமைய உள்ள புதிய மெகா மின் திட்டங்கள் தாமதம்: தமிழக அரசு மெத்தனத்தால் மீண்டும் மின்வெட்டு அபாயம்
- டில்லியில் யாருக்கு வெற்றி? பா.ஜ.,விடம் தென்படுகிறது பதற்றம்
- சமையல் காஸ் நேரடி மானிய திட்டத்தில் இணைந்தனர் 10 கோடி பேர்: உலக நாடுகளை மிஞ்சி முதலிடம் பிடித்தது இந்தியா
- தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மனு தள்ளுபடி: ஜெ., மேல்முறையீட்டு வழக்கில் கோர்ட் அதிரடி
- செயல்பாட்டுக்கு வராத பழைய 110 விதி திட்டங்கள்: புதிய திட்டங்களை அறிவிக்க அரசு ஆலோசனை
- முதல்வர் திசை திருப்புகிறார்: கருணாநிதி
- பாகிஸ்தானின் 'கழுத்து நரம்பு' காஷ்மீர்: நவாஸ் ஷெரீப் கொக்கரிப்பு
- ஆடம்பரங்களை விரும்புவதில்லை: விஜயகாந்த்
- இந்தியாவில் வறுமை நிலையில் 30 கோடி பேர்: ஐ.நா., அறிக்கையில் தகவல்
- இந்தியாவில் சமய சகிப்புத்தன்மை: கருத்தை மாற்றி பேசினாரா ஒபாமா
| Posted: தமிழக அரசின், மெத்தன போக்கால், செய்யூர், உடன்குடி உள்ளிட்ட புதிய மெகா மின் திட்டங்கள் துவங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு, தனியார் பங்களிப்புடன், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில், 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 4,000 மெகாவாட் திறன் கொண்ட, 'அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட்' என்ற பெயரில், அனல் மின் நிலையம் அமைக்க, 1998ல் மத்திய அரசு முடிவு செய்தது. கிடப்பில் பணிகள்: இத்திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு, 1,600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டும், ... |
| டில்லியில் யாருக்கு வெற்றி? பா.ஜ.,விடம் தென்படுகிறது பதற்றம் Posted: புதுடில்லி: 'டில்லி சட்டசபைத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும்' என, கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், ''டில்லி தேர்தல் முடிவு, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கான அங்கீகாரம் இல்லை,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். 'இவ்வாறு கூறுவதால் அவருக்கும், பா.ஜ., மூத்த தலைவர்களுக்கும், டில்லி தேர்தல் முடிவு, எதிர்மறையாக அமையலாம் என்ற சந்தேகம் உள்ளது என்பது தெரிகிறது' என, எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், டில்லி சட்டசபைத் தேர்தல் முதல்வர் வேட்பாளராக, ... |
| Posted: புதுடில்லி: மத்திய அரசின், சமையல் எரிவாயுவுக்கான நேரடி மானியத் திட்டத்தில், இதுவரை, 10 கோடி பேர் இணைந்து உள்ளனர். இதன் மூலம் உலகிலேயே பெரிய நேரடி மானியத் திட்டமாக, இது உருவாகி உள்ளது.நாடு முழுவதும், 15.3 கோடி பேர், சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளனர். இவர்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் வினியோகம் செய்து வருகின்றன. இதுதவிர, ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு, வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர்களும் விற்கப்படுகின்றன. வீடுகளுக்கு ... |
| தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மனு தள்ளுபடி: ஜெ., மேல்முறையீட்டு வழக்கில் கோர்ட் அதிரடி Posted: பெங்களூரு: "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், மூன்றாவது பார்ட்டியாக சேர்க்க கோரிய, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மனு, தள்ளுபடியானது. விசாரணையில், அரசு வக்கீல் பவானி சிங்குக்கு, சுப்பிரமணியன் சாமி உதவி செய்யலாம் என்ற நீதிபதி குமாரசாமி, எழுத்து பூர்வமான வாதங்களையும் அவர் சமர்ப்பிக்கலாம்," என்று அனுமதியளித்தார்.முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனுவில் தன்னையும், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்து ... |
| செயல்பாட்டுக்கு வராத பழைய 110 விதி திட்டங்கள்: புதிய திட்டங்களை அறிவிக்க அரசு ஆலோசனை Posted: சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், முக்கிய திட்டங்கள் பெரும்பாலானவை, செயல்பாட்டிற்கு வரவில்லை. இருப்பினும், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து, அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டசபையில், 110வது விதியின் கீழ், ஏராளமான திட்டங்களை அறிவித்தார். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, பயன்பாட்டிற்கு வரவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்கு கடந்த மாதம் நடந்த, சட்டசபைக் கூட்டத்தில், முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்தார்.அப்போது, அவர் கூறியதாவது: கடந்த 2011 - 12ல், 51 திட்டங்கள் ... |
| முதல்வர் திசை திருப்புகிறார்: கருணாநிதி Posted: சென்னை: 'இலங்கை அகதிகள் பிரச்னையில், முதல்வர் பன்னீர்செல்வம் திரித்து திசை திருப்புகிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.அவரது அறிக்கை: இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றி விவாதிக்கும் கூட்டத்தை, தள்ளிவைக்க வேண்டும் என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். நான் விடுத்த அறிக்கையில், அக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ் அகதிகளை நல்ல முறையில் வாழவைக்க வேண்டும்; அதற்கான உறுதியைத் தர வேண்டும் என்ற செய்தியை, அங்கே தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை அல்லவா என, கேட்டிருந்தேன். இதற்குத் தான் நான்கு ... |
| பாகிஸ்தானின் 'கழுத்து நரம்பு' காஷ்மீர்: நவாஸ் ஷெரீப் கொக்கரிப்பு Posted: இஸ்லாமாபாத்: ''பாகிஸ்தானின் பிரதான 'கழுத்து நரம்பு' போன்றது காஷ்மீர்,'' என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.பாக்., மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஆண்டுதோறும், பிப்., 5ம் தேதி, 'காஷ்மீர் ஒற்றுமை தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முசாபராபாத்தில் உள்ள பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில், நவாஸ் ஷெரீப் உரையாற்றினார்.பாக்., வானொலி ஒலிபரப்பிய அந்த பேச்சின் விவரம்: சிறுவயது முதலே எனக்கு காஷ்மீருடன் உணர்வுபூர்வ பந்தம் உள்ளது. அது, காஷ்மீர் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் தொடரும். காஷ்மீர் பிரச்னைக்கு ... |
| ஆடம்பரங்களை விரும்புவதில்லை: விஜயகாந்த் Posted: சென்னை: நான், என் தொண்டர்களை எப்படி நடத்துவேன் என்பது, என் தொண்டர்களைக் கேட்டால் தான் தெரியும். நான், ஒரு நாளும், எதையும் எனக்காக மட்டும் யோசித்து செயல்பட்டதில்லை. நான், தே.மு.தி.க.,வை ஆரம்பித்த பின், ஒவ்வொரு விஷயத்திலும் கட்சி, தொண்டர்களையும் சேர்த்துத்தான் யோசிக்கிறேன். நான் எப்போது எங்கு சென்றாலும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் போல, வெற்று ஆடம்பரங்களை விரும்புவதில்லை. காரணம், ஆடம்பரம் அனைத்தும், தொண்டர்கள் பணத்தை செலவழித்து வருபவை. என் தொண்டர்கள், ஊரை அடித்து உலையில் போடுகிறவர்கள் அல்ல; அரசாங்கத்தை வைத்து, மக்கள் நலனுக்கு எதிராக கொள்ளை கொள்ளையாக ... |
| இந்தியாவில் வறுமை நிலையில் 30 கோடி பேர்: ஐ.நா., அறிக்கையில் தகவல் Posted: புதுடில்லி: 'இந்தியாவில், 30 கோடி பேர் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளனர்' என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது.இந்தியாவின் மக்கள் தொகை, 125 கோடிக்கு மேல் உள்ளது. அதனால், வறுமை, பசி, எழுத்தறிவின்மை மற்றும் மோசமான சுகாதார சூழ்நிலை போன்ற பிரச்னைகளில் இருந்து, லட்சக்கணக்கான மக்களை விடுவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின், 'ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு' என்ற திட்டத்தை, 2000ம் ஆண்டில், இந்திய அரசு கடைபிடிக்கத் துவங்கியது. இந்தத் திட்டத்தின் கால அளவானது, வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனாலும், 'இந்தியாவில், 30 கோடி பேர், இன்னும் மோசமான வறுமை நிலையில் ... |
| இந்தியாவில் சமய சகிப்புத்தன்மை: கருத்தை மாற்றி பேசினாரா ஒபாமா Posted: வாஷிங்டன்: இந்தியாவில் தற்போதைய சமய சகிப்புதன்மையை பார்க்கும் போது மகாத்மா காந்தி மிகவும் அதிர்ச்சியடைந்து போவார் என அமெரிக்க அதிபர் ஒபாமா , இந்தியாவில் சமயம் குறித்து தனது கருத்தை மாற்றி பேசியுள்ளார்.மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார் அமெரிக்கா அதிபர் ஒபாமா, குடியரச தினவிழாவில் பங்கேற்றார்.பின்னர் 27-ம் தேதி டில்லியில் மாணவர்கள் மத்தியில் பேசினார்,அப்போது , இந்தியா,நம்பத்தகுந்த , அழகான நாடு, இந்திய அரசியல் சட்டத்தின், 25வது பிரிவானது, அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடரவும், அவற்றை விருத்தி செய்யவும் சுதந்திரம் அளிக்கிறது. இந்தியா ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 06,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |