Tamil News | Online Tamil News |
- பஸ் கட்டணம் குறைப்பு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம்: டீசல் விலை வீழ்ச்சிக்கு பின்பும் நஷ்டம் என புலம்பல்
- நேரு, ராஜிவ், இந்திரா பெயரிலான திட்டங்கள் மாற்றம்: வல்லபாய் படேல், வாஜ்பாய் பெயர்களை சூட்ட முடிவு
- ஏழைகளுக்காக பரிந்து பேசியது குற்றமா? ராகுல் பதிலடி
- கெஜ்ரிவாலுக்கு நிதி வழங்கவில்லை: தொழிலதிபர் அதிரடி!
- விதியோ, சதியோ அல்ல; தன்னிச்சையாக தேடி கொண்டது
- சீன அதிபரின் சொந்த ஊரில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு
- கிரானைட் முறைகேடு குறித்து சரியான தகவல்கள் தர அதிகாரிகளுக்கு சகாயம் கெடு
- இதய மாற்று சிகிச்சை வசதி இல்லாத அரசு மருத்துவமனைகள்: தானம் பெறும் உறுப்புகளில் தனியாருக்கே முன்னுரிமை
- காய்கறி கடையை மூடி எங்கள் குடியை காப்பாற்றுங்கள்' : அரசுக்கு எதிராக திரளும் ஊழியர்கள்
| Posted: டீசல் விலை அதிரடியாக குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பஸ் கட்டண உயர்வின் போது, டீசல் விலை உயர்வை காரணம் காட்டிய தமிழக அரசு, தற்போது டீசல் விலை வீழ்ச்சியின் போது, கட்டணத்தை குறைக்காமல் மவுனம் காட்டி வருகிறது.மத்தியில் புதிய ஆட்சி பதவி ஏற்ற போது, கடந்த ஆண்டு ஜூன், 1ம் தேதி, ஒரு லிட்டர் டீசல் விலை, 61.12 ரூபாய்; பெட்ரோல் விலை, 74.60 ரூபாய் என இருந்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை அடுத்து, டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. இதன் தாக்கமாக, கடந்த ஆண்டு அக்டோபரில், ஒரு ... |
| நேரு, ராஜிவ், இந்திரா பெயரிலான திட்டங்கள் மாற்றம்: வல்லபாய் படேல், வாஜ்பாய் பெயர்களை சூட்ட முடிவு Posted: புதுடில்லி: முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோரின் பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களை, பா.ஜ., தலைவர்களின் பெயர்களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தே.ஜ., கூட்டணி அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதன்படி, ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம், அடல் நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் என்ற பெயரில் மாற்றப்படவுள்ளது.முந்தைய, காங்., ஆட்சி காலத்தில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு, காங்., மூத்த தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோரின் பெயர்கள் பெரும்பாலான ... |
| ஏழைகளுக்காக பரிந்து பேசியது குற்றமா? ராகுல் பதிலடி Posted: 'ஏழைகள், பழங்குடியினர் நலனுக்காக, சுற்றுச்சூழல் தொடர்பான சில விஷயங்களில் தலையிட்டேன்; இது குற்றமா?,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து உள்ளார். ஜெயந்தியின் இந்த குற்றச்சாட்டு குறித்து, அமைதி காத்து வந்த ராகுல், ஐந்து நாட்களுக்கு பின், நேற்று முதல் முறையாக மவுனம் கலைத்தார். டில்லி, ஜனக்புரி சட்டசபைத் தொகுதியில், நேற்று காங்., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போது, அவர் பேசியதாவது:சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கும் விஷயத்தில், சில நிறுவனங்களுக்கு ஆதரவாக, நான் ... |
| கெஜ்ரிவாலுக்கு நிதி வழங்கவில்லை: தொழிலதிபர் அதிரடி! Posted: புதுடில்லி: ஆம் ஆத்மிக்கு நிதியுதவி வழங்கியதாக, அந்த கட்சி தெரிவித்த, நான்கு நிறுவனங்களும் போலியானவை என்பது உறுதியாகி உள்ளது. எந்த நிறுவனங்கள் பெயரை, ஆம் ஆத்மி கட்சி தெரிவித்ததோ, அதன் உரிமையாளர், தனக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என, அதிரடியாக தெரிவித்து உள்ளார்.கடந்த ஆண்டு ஏப்ரலில், உ.பி.,யின் வாரணாசி லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட, மோடிவேட்புமனு தாக்கல் செய்ய இருந்த போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, நான்கு நிறுவனங்கள், தலா, 50 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்பட்டது.அதுகுறித்து ... |
| விதியோ, சதியோ அல்ல; தன்னிச்சையாக தேடி கொண்டது Posted: சென்னை: 'அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை விதியோ, சதியோ அல்ல. அவரே தன்னிச்சையாக தேடிக் கொண்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.அவரது அறிக்கை:ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், 'என் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தல் இது. சதியும், விதியும் இணைந்து செய்த சதிராட்டத்தால், விளைந்திட்ட இடைத்தேர்தல்' என ஜெயலலிதா கூறியிருக்கிறார். நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை தான், ஜெயலலிதா, இவ்வாறு சதியென்று விமர்சித்திருக்கிறார் ... |
| சீன அதிபரின் சொந்த ஊரில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு Posted: பீஜிங்: வரும் மே மாதம், சீனா செல்ல உள்ள பிரதமர் மோடிக்கு, சீன அதிபர் ஜி ஜின்பிங், தன் சொந்த நகரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க உள்ளார்.பிரதமராக, கடந்த ஆண்டு மே 26ல் பொறுப்பேற்றார், பிரதமர் மோடி. அடுத்த சில நாட்களில், இந்தியா வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், மூன்று நாட்கள் தங்கியிருந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.அவரின் முதல் நாள் பயணம், குஜராத்தின் ஆமதாபாத்தில் துவங்கியது. ஆமதாபாத்தில், ஜி ஜின்பிங்கை வரவேற்ற மோடி, காந்தி ஆசிரமம் உட்பட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, சுற்றிக் காண்பித்தார்.அது போல, மே மாதம் சீனா செல்ல உள்ள பிரதமர் மோடியை, சீன அதிபர் ஜி ... |
| கிரானைட் முறைகேடு குறித்து சரியான தகவல்கள் தர அதிகாரிகளுக்கு சகாயம் கெடு Posted: மதுரை: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து சரியான தகவல்களை பிப்., 9ம் தேதிக்குள் வழங்க ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு விசாரணை அதிகாரி சகாயம் கெடு விதித்தார்.கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் நேற்று உதவி இயக்குனர்(ஊராட்சி) ரங்கசாமி மற்றும் கொட்டாம்பட்டி, மேலூர், மதுரை கிழக்கு, செல்லம்பட்டி, டி.கல்லுப் பட்டி, திருமங்கலம் யூனியன் பி.டி.ஒ.,க்கள், பொறியாளர்களை விசாரித்தார். குவாரிகளால் குளங்கள், கால்வாய்கள் அழிக்கப்பட்டது குறித்து பொதுப்பணித்துறை நீர் ஆதார வள பொறியாளர்களிடம் சகாயம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தார். ... |
| Posted: உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் முதல் இடத்தில் இருந்தாலும், உடல் உறுப்புகளை வழங்குவதில், தனியார் மருத்துவமனைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இதயம், நுரையீரல், கணையம் மாற்று அறுவைச் சிகிச்சை வசதி இல்லாததால், ஏழைகள் உயர் சிகிச்சை பெற முடிவதில்லை. |
| காய்கறி கடையை மூடி எங்கள் குடியை காப்பாற்றுங்கள்' : அரசுக்கு எதிராக திரளும் ஊழியர்கள் Posted: மலிவு விலை காய்கறி கடைகளை மூட கோரி, கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், காய்கறி விலை உயர்ந்ததை அடுத்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம், குறைந்த விலையில், காய்கறி விற்பனை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு, 2013, ஜூனில் துவக்கியது. தற்போது, சென்னை, 42; கோவை, 10 என, மொத்தம், 52 மலிவு விலை காய்கறி கடைகள் உள்ளன.விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக காய்கறிகள் வாங்கி, மலிவு விலை கடைகளில் விற்பனை செய்யப்பட்டது.இதனால், வெளி சந்தையுடன் ஒப்பிடும் போது, மலிவு விலை கடைகளில், காய்கறி தரமாகவும், விலை குறைவாகவும் இருந்ததால், மக்களிடம், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 05,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |