Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- கொத்துக்கடலை மசாலா !

Posted: 04 Feb 2015 11:39 AM PST

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

ஆதிராவின் மலேசிய பயண புகைப்படங்கள்!

Posted: 04 Feb 2015 10:27 AM PST

ஆதிராவின் மலேசிய பயண புகைப்படங்களை இங்கு காணலாம்!

https://www.facebook.com/dr.bhanumathi


பட்டாம்பூச்சிகளின் இரவு கவிதைத் தொகுப்பிலிருந்து!

Posted: 04 Feb 2015 09:45 AM PST

மம்மி

அரிச்சுவடியில்
அழகாய்
சிரிக்கும்
அம்மா
நேரில்
அடிக்க வருகிறாள்...

அம்மா
என்றதால்!

உலகச் செய்திகள்!

Posted: 04 Feb 2015 09:30 AM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 13 அம்பிகா சிவம்

Posted: 04 Feb 2015 09:09 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 13 ராமன் விளைவு தந்த சர். சி.வி. ராமன் இந்தியாவிற்கே பெருமை சேர்த்த பல மனிதர்கள் உண்டு, அவர்களில் சர். சி.வி. ராமனும் ஒருவர். 1930ம் ஆண்டு ராமன் விளைவுக்காக அவர் நோபல் பரிசு பெற்று இந¢தியாவைப் பெருமைப்படுத்தினார். 1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி வேங்கடராமன் சந்திரசேகர், பார்வதி தம்பதியருக்கு மகனாக தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பாபநாசத்திற்கு அருகேயுள்ள மாங்குடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறு வயதாக இருக்கும்போதே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் ...

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப சரியான நேரம் எது?

Posted: 04 Feb 2015 09:00 AM PST

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப சரியான நேரம் எது? வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு. பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. எனவே, குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல் நிரப்பும்போதுதான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும். பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும் என்பதால், அதன் அடர்த்தி குறையும். இதனால், நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பும்போது அது சரியான அளவு இருக்கும் என்பது சந்தேகம்தான். மதியம், மாலையில் பெட்ரோல் நிரப்பினால், அளவு ...

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது

Posted: 04 Feb 2015 08:51 AM PST

தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு ...

புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க

Posted: 04 Feb 2015 08:48 AM PST

அன்பு உறவுகளே ,

ஈகரை தமிழ்க்களஞ்சியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களாக "விமந்தனி" , "மதுமிதா" ஆகிய இருவரையும் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.


தங்களது தனித்தன்மை வாய்ந்த பதிவுகளால் ஈகரையை சிறப்பித்துக்கொண்டிருக்கும் இருவரையும் வாழ்த்தி மேலும் இது போல பல சிறப்புகளை அடையவும் தொடர்ந்து ஈகரைக்கும் தங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்

நன்றி

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 12 அம்பிகா சிவம்

Posted: 04 Feb 2015 08:03 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 12 டேவிட் காப்பர் ஃபீல்டு மனிதர்களை மகிழ்விப்பதன் மூலமும் வியப்படையச் செய்வதன்மூலமும் அவர்கள் கவனத்தைத் தன் பக்கம் கவரமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் காப்பர் ஃபீல்டு. அவர் ஒரு யூதராகப் பிறந்தார், ரஷ்யாவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடியேறி, பின்னர் மீண்டும் அமெரிக்காவிற்குச் சென்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை துணிக்கடை வைத்திருந்தார், தாய் இன்ஷுரன்ஸ் ஏஜெண்டாகப் பணியாற்றினார். நடுத்தரமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு சாதனைகள் படைத்து ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 11 அம்பிகா சிவம்

Posted: 04 Feb 2015 08:02 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 11 ஆல்பிரட் நோபல் உலகில் எல்லோரும்தான் சம்பாதிக்கிறார்கள், பல பேர் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் தாங்கள் செய்த தவறுக்காக வருந்தி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் அரிதாகத்தான் காணப்படுகிறார்கள். ஆல்பிரட் நோபல் செய்ததைத் தவறு என்றும் கூறிவிட முடியாது. ஆனால் அவரின் கண்டுபிடிப்பு பெரும் அழிவுக்குக் காரணமாகிப் போனதை எண்ணியெண்ணி மனம் வருந்திய அவர் அதற்கு இணையாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்று நினைத்ததால் உருவானதுதான் நோபல் ...

மேலூர் தென்றலின் கவிதைகள் - 10 வாழ்க்கை

Posted: 04 Feb 2015 07:57 AM PST

வாழ்க்கை

வேகவைத்த முட்டை
ஆம்லெட்
ஆஃப் பாயில்
முட்டைப் பொரியல்

இன்னபிற
சுவையான அயிட்டங்கள்
மெனுகார்டில்

கண்முன்னே ஆடியது
குஞ்சின் சிறகுகள்

மேலூர் தென்றலின் கவிதைகள் - 9 மனிதம்

Posted: 04 Feb 2015 07:55 AM PST

மனிதம்

கத்தின
கட்டப்பட்ட ஆடுகள்
துள்ளின
அடைபட்ட கோழிகள்

அய்யனார் கோவில்
திருவிழா

வீடுகளில்
ஆட்டுக்கறி, கோழிக்குழம்பு
தெருவே மணந்தது

மனிதர்களின் முகங்களில்
மகிழ்ச்சி

அய்யனார்
முறுக்கிவிடப்பட்ட மீசையுடன்
பார்த்துக் கொண்டிருந்தார்

எவ்வித சலனமுமின்றி...

மேலூர் தென்றலின் கவிதைகள் - 8 சுயம்

Posted: 04 Feb 2015 07:53 AM PST

சுயம்

கிராமத்து ஓட்டு வீடும்
புளியமரத்து பள்ளிக்கூட
கண்ணாடி வாத்தியாரும்
சின்னக் கண்மாயின்
கரையோர ஆலமரமும்
கருப்பாயி பாட்டியும்

உருத்தெரியாமல்
அழிந்துவிட்டபோதும்,

நானும்
எனது அரசாங்க வேலையும் மட்டும்
நகரத்தில் உயிரோடு...

பாட்டி வைத்தியம்

Posted: 04 Feb 2015 03:58 AM PST

- ஓயாத இருமலுக்கு துளசி மிளகு சேர்த்துக்கோ! மஞ்சள் காமாலை வந்ததுன்னா கீழாநெல்லி எடுத்துக்கோ! தீராத பல்வலிக்கு கண்டங் கத்தரி சேர்த்துக்கோ! நெஞ்சு சளி பிடிச்சுதுன்னா தூதுவளை எடுத்துக்கோ! சர்க்கரைநோய் குறையணுமா பாகற் காய் சேர்த்துக்கோ! குப்பை மேனி இலையரைச்சி சிரங்குமேல பூசிக்கோ! மணத்தக்காளிகீரை சாப்பிட்டு வாய்ப் புண்ணை ஆத்திக்கோ! மலச் சிக்கலுக்கு வெந்தயத்தை ஊறவச்சி சாப்பிட்டுக்கோ! - By தொண்டி முத்தூஸ் -சிறுவர் மணி

துவையல்கள் - 'வெங்காயம் தக்காளி துவையல் '

Posted: 04 Feb 2015 03:53 AM PST

நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Posted: 04 Feb 2015 03:36 AM PST

எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக 'ரோலர்கோஸ்டர்' போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்: "வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை 'கல்கண்டு' என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன். 'கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?'- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த ...

"அம்மா" உணவகம் மாதிரி கர்நாடகாவில் "அண்ணா" உணவகம் !

Posted: 04 Feb 2015 03:13 AM PST

பெங்களூரு : தமிழகத்தில் "அம்மா" உணவகங்கள் வெற்றிகரமாக இயங்கி வருவது கண்டு ஆச்சர்யப்பட்டு, அதன் காரணமாக கர்நாடகாவிலும் "அண்ணா" உணவங்களை துவக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அம்மா உணவகங்களைப் போன்றே மலிவு விலையில் உணவுகளும் விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தின் அம்மா உணவகங்களைப் போன்று கர்நாடகாவிலும் அண்ணா உணவகங்ளை துவங்க, கர்நாடக திட்டக்கழக துணை தலைவர் சி.எம்.இப்ராஹிம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையை அரசு ஏற்றதை தொடர்ந்து, இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட ...

கற்பூரம்

Posted: 04 Feb 2015 03:01 AM PST

கற்பூரம், வெள்ளை நிறமற்ற மெழுகுத்தன்மை கொண்ட அதிக நாற்றமுள்ள கட்டி, சினமோனம் காம்ஃபோரா (cinnamonum camphora) என்ற மரத்திலிருந்து வருகிறது. இது ஆசியா நாடுகளில் வளரக்கூடிய மரம். இதன் வேதிய விதிமுறை(Formula) C10H16O . கற்பூர மரங்கள் உஷ்ன நாடுகளான இந்தியா, ஈஜிப்ட் மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் அதிகமாக வளர்கின்றன. இம்மரத்தின் வேர், தண்டு மற்றும் காம்புகளில் இருந்து கற்பூரம் எடுக்கப்படுகிறது. நவீன உலகத்தில் கற்பூரம் பூச்சுக்கொல்லி தயாரிக்க பயன்படுகிறது. சில பட்டாசுக்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. ...

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Posted: 04 Feb 2015 02:40 AM PST

தும்பிகள்…!!
*
தும்பைப் பூவின் மீது
அமைந்து எதையோ?
ஆராய்கிறது தும்பிகள்.
*
வரலாற்று சின்னமாய்
பாஷோவின்
தவளை குதித்த குளம்.
*
துவங்கிய இடத்திலேயே
முடிந்தது
ஓட்டப் பந்தயம்.
*

அமிர்தப்பொடி

Posted: 04 Feb 2015 02:31 AM PST

(இந்தப் பொடியைப் பயன்படுத்தி பத்திய ரசம் வைக்கலாம்) தேவையானவை: தனியா - ஒரு சிறிய கிண்ணம், ஓமம், துவரம் பருப்பு - அரை கிண்ணம், மிளகு, உடைத்த சுக்கு - தலா கால் கிண்ணம், சீரகம், கண்டதிப்பிலி - தலா ஒரு கிண்ணம், நொறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - அரை கிண்ணம், பெருங்காயம் - ஒரு கட்டி. செய்முறை: கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, சலித்துவைத்துக்கொள்ளவும். வெயிலில் காயவைத்த புளியுடன், உப்பு சேர்த்துப் பொடித்துவைத்துக்கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் புளி உப்பு ...

தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு

Posted: 04 Feb 2015 02:12 AM PST

தைவானில் 53 பேருடன் சென்ற பயணிகள் விமானம் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மீட்புப் பணி துரிதமாக நடத்தப்பட்டு வருகிறது. தைவானில் தலைநகர் தைபே விமான நிலையத்திலிருந்து இன்று காலை 53 பேருடன் புறப்பட்ட டிரான்ஸ் ஏசியா ATR 72-600 பயணிகள் விமானம், கின்மென் தீவைத் தாண்டி செல்லும்போது பாலம் மீது மோதி விபத்துக்குள்ளாகி கீலுங் என்ற ஆற்றில் விழுந்தது. இதற்கான படங்களை தைவான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சரியாக 10.55 மணிக்கு விமானத்துடன் தகவல் ...

கு.காமராஜ்

Posted: 04 Feb 2015 02:07 AM PST

பெயர்:கு.காமராஜ்
சொந்த ஊர்:அகஸ்தீஸ்வரம், குமரிமாவட்டம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளில் தகவல்கள் தேடும்போது
பொழுதுபோக்கு: கவிதை, கட்டுரை,மேடைப்பேச்சு
தொழில்:அரசுப்பணி
மேலும் என்னைப் பற்றி:இரண்டு முதுகலைப்பட்டங்களும், தமிழில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளேன் தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில்  முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துவருகிறேன்.

வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Posted: 04 Feb 2015 01:59 AM PST

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 1 1662 - ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் சீனாவின் இராணுவத் தளபதி கொக்சிங்கா தாய்வான் தீவைக் கைப்பற்றினார். 1788 - ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர். 1793 - ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது. 1814 - பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது. 1864 ...

செம்பருத்தி டீ

Posted: 04 Feb 2015 01:50 AM PST

குடிச்சா பி.பி. ஏறாது, கொழுப்பு கரையும்.! மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட ...

இலங்கை விடுதலை அடைந்த நாள் (பிப்.4, 1948)

Posted: 04 Feb 2015 01:27 AM PST

இலங்கை சிறிய தீவாக இருந்தாலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையின் வரலாறு கி.மு. 6-ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்தி விடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் 700 பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் தொடங்குகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆட்சி புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழ் மன்னர்கள் இலங்கையின் தெற்கில் பல்வேறு பகுதிகளிலும் ஆட்சி புரிந்துள்ளனர். ...

குழந்தைகள் சிரிப்பினிலே...!!

Posted: 04 Feb 2015 01:25 AM PST

வாடியது பூ…!! * பூச் செடிகளை வளர்த்து வீட்டின் முன்புற வெளியை அழகுப் படுத்திப் பார்க்கிறவன் அடுத்த வீட்டுக் குழந்தைப் பூ ஒன்றைப் பறித்ததற்காக சுடுச் சொல்லால் காயப் படுத்தினான்இ பூ வாடியது குழந்தை உள்ளே ஓடியது….!! * சந்தோஷ அருவிகள். * செடிகளின் மீது வந்து அமர்ந்தக் குருவிகளை விரட்டிட மனமில்லாமல் வேடிக்கைப் பார்த்து நின்றான் குட்டிப் பையன். குருவிகள் அவனைப் பார்த்து குதித்துத் தாவி பறக்கிறது. அவன் கைத் தட்டிச் சிரிக்கிறான். மீண்டும் அவனருகே வந்து விளையாடுகிறது. அம்மாவை ...

மேலூர் தென்றலின் கவிதைகள் - 7 பிராயசித்தம்

Posted: 04 Feb 2015 12:12 AM PST

பிராயசித்தம் சாலைகளில் திரியும் அனாதைகளைப் பார்க்கும்போது கண்ணீர் தளும்பி வழிகிறது. மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓலைக்குடிசைகளை மூழ்கடித்தபோது மனம் கலங்குகிறது. என் மனைவிக்கும் இப்போது வயதாகி விட்டது. இப்போதெல்லாம் உதவும் கரங்கள் அமைப்பிற்கு பணம் அனுப்பத் தவறுவதில்லை ஒவ்வொரு மாதமும். ஒருவேளை அப்பா அங்கிருந்தாலும் இருக்கக்கூடும்.

மேலூர் தென்றலின் கவிதைகள் - 6 படிப்பு 2

Posted: 04 Feb 2015 12:09 AM PST

படிப்பு 2

எம்.ஏ., எம்.எட்.,
படித்து முடித்தும்
வேலையின்றி பலர்,

எட்டாம் வகுப்புடன்
ஊரைவிட்டு ஓடியவர்கள்
லட்சாதிபதிகளாய்,

வாழ்க்கையென்பது
அரிச்சுவடி படிப்பதல்ல
சம்பாத்யம் படிப்பது...

மேலூர் தென்றலின் கவிதைகள் - 5 அகம்

Posted: 04 Feb 2015 12:07 AM PST

அகம்

என் புருஷன்
அழகில்லையென
அவளும்,

என் மனைவி
அசிங்கமானவளென
அவனும்,

அலுத்துக் கொண்டனர்

உள்ளம் பிரதிபலிக்க
வரவில்லையின்னும்
ஒரு கண்ணாடி.

மேலூர் தென்றலின் கவிதைகள் - 4 அக்னிக்குஞ்சு

Posted: 04 Feb 2015 12:05 AM PST

அக்னிக்குஞ்சு கவிதையெழுதும் ஆசை ஊற்றுநீராய் பெருகிவரும் வேளை சம்மட்டி அடியொன்று அதன் தலையில் வலுவாய் விழுந்தது. கவிதை எதற்கு உனக்கு? கணக்கெழுது காசாவது கிடைக்கும் தாய், தந்தை அண்ணன், தங்கையின் அபாரமான அறிவுரைகள். குறிப்பேடுகளிலும், பேரேடுகளிலும் மூழ்கிப்போனது மூளை கவிதை போனது ஓர் மூலை. என்றாவது ஒருநாள் அடங்கிப்போன கவிதை ஊற்று ஆக்ரோஷமாய், அக்னிக்குழம்பாய் பீறிட்டுக் கிளம்பும் முழு வீரியத்துடன்.... அப்போது, கவிதையில் மறையும் குறிப்பேடும், பேரேடும்....

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 04 Feb 2015 12:03 AM PST

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

மேலூர் தென்றலின் கவிதைகள் - 1 அன்புள்ள அப்பா!

Posted: 03 Feb 2015 11:54 PM PST

அன்புள்ள அப்பா! நேசமிகு தந்தையே! என்னைத் தவமிருந்து பெற்றாய். உன்னிரு தோளில் சுகமாகத் தாலாட்டினாய். என்னையொரு எறும்பு கடித்தாலும் நீ துடிதுடித்தாய். உனக்கு சட்டைவாங்க வைத்திருந்த காசில் எனக்கு பொம்மைரயில் வாங்கித் தந்தாய். நான் அழுத ஒரே காரணத்திற்காய்.. எட்டுவயதில் நடு இரவில் வயிற்றுவலியால் நான் துடித்தபோது ஓடிச்சென்று டாக்டரை அழைத்து வந்தாய் பக்கமிருந்து ஆறுதல் கூறினாய். பி.காம் பரிட்சையெழுத நான் சென்றபோது துணைக்கு வந்து வராண்டாவில் காத்திருந்தாய். எனக்கு கல்யாண ...

எருமை மாடுகளிடமிருந்து உயிர்பிழைக்க தலைதெறிக்க ஓடிய சிங்கங்கள்!

Posted: 03 Feb 2015 11:54 PM PST

கென்யாவில் எருமை மாடுகள் கூட்டத்திடம் இருந்து உயிர்பிழைக்க சிங்கம் ஒன்று பயந்து தலைதெறிக்க ஓடியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. காட்டுக்கே ராஜா சிங்கம்தான் இருந்தும் காடே அதிரும் தோற்றம் கொண்ட சிங்கத்தை பின்னாங்கால் பிடறியில் அடிக்கும் வரையில் எருமை மாடுகள் கூட்டம் விரட்டியுள்ளது. கென்யாவின் மாசாய் மாராவில், சபாரி சென்றவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முற்றிலும் பயந்ததுபோன சிங்கம் ஒடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த எருமைகளை வேட்டியாடி உணவாக்க ...

மேலூர் தென்றலின் கவிதைகள் - 2 எழுத்து

Posted: 03 Feb 2015 11:50 PM PST

எழுத்து பையனின் அப்பா கேட்டார் "பொண்ணு என்ன படிச்சிருக்கு?" பையனின் அம்மா கேட்டார் "எவ்வளவு போடுவீங்க?" பையனின் மாமா கேட்டார் "பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா?" பையனின் அத்தை கேட்டார் "பொண்ணு பாடுமா?" ஆளுக்கொன்றாய் கேள்விகள் சொஜ்ஜியப்ப வாயுடன், சூடான பில்டர் காபியுடன் பேச்சு வார்த்தைகள். மாப்பிள்ளையை பொண்ணுக்குப் பிடிச்சிருக்கா? கேட்பார்களென்று ஏமாந்தேன். மாப்பிள்ளை பெண்ணின உயர்வுக்காக கவிதையெல்லாம் எழுதுவாராம்.

மேலூர் தென்றலின் கவிதைகள் - 3 வாழ்க்கை

Posted: 03 Feb 2015 11:45 PM PST

வாழ்க்கை பத்தாம் வகுப்பில் பத்மா அழகானவள் அவளைக் கவர்வதற்காக எத்தனையெத்தனை முயற்சிகள். பிளஸ் - டூ படிக்கும்போது பிரேமா அழகானவள் பிரேமா பேசிய ஒவ்வொரு வார்த்தையுமே கவிதை கவிதை. கல்லூரியில் காயத்ரி அழகானவள் சிரிப்பு கண் பாஷை கவிதை. இரவும், பகலும் மாறி மாறி நாட்காட்டிகளை மெலிய வைத்தன. நிரந்தர வேலையின்றி மனம் நொந்து திரிந்த சந்தர்ப்பங்களில்... பத்மாவை பரமக்குடியிலும், பிரேமாவை மதுரையிலும், காயத்ரியை கணக்கன்பட்டியிலும், பார்த்தேன். தலைநிறைய மல்லிகைப்பூ தளும்பிய ...

அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!

Posted: 03 Feb 2015 11:29 PM PST

காவியா இன்று இதற்கொரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்தாள். கல்யாணம் ஆன ஒரு மாதத்திற்குள்ளாகவே இப்படி ஒரு பிரச்னை வரும் என அவள் நினைக்கவில்லை. அதுவும் கேவலம் ஒரு ஒண்ணரை ரூபாய் முட்டையால். கல்யாணம் ஆன போதே மாமியார் சொல்லியிருந்தாள். "அவனுக்கு சாப்பாட்ல டெய்லி ஒரு முட்டை சேத்துக்கணும். அதுவும் ஆம்லெட் இல்லாட்டி அவிச்ச முட்டையாத்தான் இருக்கணும்...." ஆனால், இவள் கணவனோ முட்டையிலேயே ஆயிரம் குறை கண்டுபிடிப்பவனாய் இருந்தான். முட்டையை அவித்து வைத்தால் ஆம்லெட் போட்டிருக்கலாம் ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 9 அம்பிகா சிவம்

Posted: 03 Feb 2015 11:20 PM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 9 ஜே.கே.ரவுலிங் சராசரியாகவே வாழ்ந்து பலர் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்வில் எதையாவது சாதிப்பதன்மூலம் தங்கள் பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி சிலர்தான் வாழ்கிறார்கள். அந்த வரிசையில் சிறு வயதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டு இடையில் சில காலம் சாதாரணமான வேலையைப் பார்த்து, பின்னர் முழு வீச்சில் எழுதத் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்தான் ஜே.கே.ரவுலிங். ஒரு ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 10 அம்பிகா சிவம்

Posted: 03 Feb 2015 11:17 PM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 10 மாவீரன் அலெக்ஸாண்டர் விளையும் பயிர் முளையிலே தெரியும் என்றொரு பழமொழி உண்டு. சிறு வயதாக இருக்கும்போதே அறிவாற்றல் நிரம்பியவர்களாக விளங்குபவர்கள் பிற்காலத்தில் அறிஞர்களாகத் திகழ்வார்கள் என்பதற்காகச் சொன்ன பழமொழி அது. அதேபோல் சிறு வயதிலேயே வீரம் நிறைந்தவராக விளங்கிய அலெக்ஸாண்டர் பிற்காலத்தில் உலகம் போற்றும் மாவீரனாக மாறிப்போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. சிறு வயதிலேயே தன் தந்தையான கிரேக்க மன்னர் பிலிப்பின் முன்பாக, யாராலும் அடக்க முடியாத குதிரையைத் ...

மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள்

Posted: 03 Feb 2015 11:11 PM PST

பெயர்: இரா.சுப்ரமணியன் (இயற்பெயர்) புனைப்பெயர்கள் ஏராளம் அம்பிகா சிவம், மேலூர் இரா.சுப்ரமணியசிவம், தேவாம்பிகா, தேவாம்பிகா சுப்ரமணியன், அம்பி மணி, மேலூர் தென்றல், ஆர்.எஸ்.எம். சொந்த ஊர்: மதுரை மாவட்டம் மேலூர், தற்போது கோவையில் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: நெட்டில் உலவியபோது தற்செயலாக அறிந்துகொண்டேன். முன்னர் பதிவுகளைப் பார்வையிட்டு வந்தேன். தற்போதுதான் தொடர்ந்து எழுதலாம் என்று முடிவெடுத்தேன் பொழுதுபோக்கு: புத்தகங்கள் படிப்பது தொழில்: முன்பு கிழக்கு பதிப்பகத்தில் கோவை மண்டல மேலாளர், ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 8 அம்பிகா சிவம்

Posted: 03 Feb 2015 11:11 PM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 8 மகாகவி பாரதி சிறிய தடைகளைக் கண்டாலே அஞ்சி, மனம் பதைத்து தம் வேலைகளைத் தவறவிடும் இளைஞர்கள் பலர் உள்ளனர். ஆனால் தடைகள் எத்தனை வந்தபோதும் அவற்றைக் கண்டு அஞ்சாமல், தன்னிலை இழக்காமல், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தவர் கவிஞர் பாரதியார். தன் லட்சியத்தை விட்டு அவர் எதற்காகவும், எப்போதும் வளைந்து கொடுத்ததே இல்லை. சிறு வயதிலேயே அரசவையில் கவிதை பாடி வலம் வந்தவர் அவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™