Tamil News | Online Tamil News |
- நாடு திரும்ப 70 சதவீத இலங்கை அகதிகள் தயார்: மத்திய, மாநில அரசுகளுக்கு நிபந்தனை விதிப்பு
- ஆம் ஆத்மியை முறியடித்து ஓட்டுகளை அள்ள பா.ஜ அதிரடி: 1.2 கோடி வாக்காளர்களுக்கு கடிதம்
- தற்காலிக கட்சி தலைவரிடம் நாட்டைஒப்படைக்கலாமா? மோடி கடும் சாடல்
- ஆம் ஆத்மி ரூ.2 கோடி பெற்றது குறித்து விசாரணை
- வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க... வங்கி தொழிலுக்கு அம்பானிகள், மிட்டல்கள்!
- 'நினைத்தால் அரசை கவிழ்ப்பேன்' : சர்ச்சை பா.ஜ., - எம்.பி., சாக் ஷி மகராஜ்
- விதி - சதி: ஜெயலலிதா கடிதம்
- ஸ்ரீரங்கத்தில் ஓட்டு வித்தியாசம் அதிகரிக்குமா? அரசியல் கட்சியினர் எதிர்பார்ப்பு
- உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு!
- பலூன்கள், செயற்கைக்கோள்கள் மூலம் கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை
- ஜெயந்திக்கு 'அழுத்தம்': திட்டங்களை ஆய்வு செய்வோம்
- நியூட்ரினோ ஆய்வு மையம் அமையும் பகுதி கேரள வனத்துறையினர் ஆய்வு: முட்டுக்கட்டைக்கு கேரள அரசு மும்முரம்
| நாடு திரும்ப 70 சதவீத இலங்கை அகதிகள் தயார்: மத்திய, மாநில அரசுகளுக்கு நிபந்தனை விதிப்பு Posted: தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில், 70 சதவீதம் பேர், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஏழு நிலைகள் கொண்ட தயாரிப்பு திட்டம் என்ற பெயரில், மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.இலங்கையில் நடந்த மூன்றுகட்ட போர்களினால், 8 லட்சம் தமிழர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறினர். இவர்களில், 3.20 லட்சம் பேர், தமிழகம் வந்தனர். 2.12 லட்சம் பேர், இலங்கை திரும்பி விட்டனர். 1.02 லட்சம் பேர், தமிழகத்தில் உள்ளனர் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. மூன்றாம்கட்ட இறுதிப் போர் முடிந்த பின்னும், நாட்டுக்கு திரும்பாமல் உள்ளவர்களின் ... |
| ஆம் ஆத்மியை முறியடித்து ஓட்டுகளை அள்ள பா.ஜ அதிரடி: 1.2 கோடி வாக்காளர்களுக்கு கடிதம் Posted: புதுடில்லி: டில்லியில் உள்ள, 1.2 கோடி வாக்காளர்களுக்கும், பா.ஜ., கடிதம் அனுப்பி வருகிறது. பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கும்படி வேண்டுகோள் விடுக்கும் அந்த கடிதங்கள், நாளைக்குள் வாக்காளர்களுக்கு கிடைக்கும் வகையில், தபாலில் அனுப்பி வைக்கப்படுகின்றன.டில்லி சட்டசபைக்கு, வரும் 7ல் தேர்தல் நடைபெறுகிறது; தேர்தல் பிரசாரம், 5ம் தேதி மாலை, 6:00 மணியுடன் நிறைவடைகிறது. பதிவான ஓட்டுகள், 10ல் எண்ணப்படுகின்றன. |
| தற்காலிக கட்சி தலைவரிடம் நாட்டைஒப்படைக்கலாமா? மோடி கடும் சாடல் Posted: புதுடில்லி: டில்லி சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி, பிரதமர் மோடி, நேற்று பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில், காங்., மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை கடுமையாக சாடினார். 15 ஆண்டுகளாக...: பெயர் குறிப்பிடாமல், பிரதமர் மோடி பேசியதாவது:அந்த தாயும், மகனும் சொல்வதை யாரும் கேட்பதில்லை. (சோனியாவும், ராகுலும்) பெரிய, பழமையான காங்,, இந்த நகரத்தை, 15 ஆண்டுகளாக சீரழித்து விட்டது. தற்காலிக கட்சி : (ஆம் ஆத்மி) புதிதாக இருக்கிறது; சிறிய கட்சியான அது, ஓராண்டில் டில்லியை கெடுத்து விட்டது. கறுப்புப் பணத்தை பற்றி பேசும் ... |
| ஆம் ஆத்மி ரூ.2 கோடி பெற்றது குறித்து விசாரணை Posted: புதுடில்லி: ''போலியாக உருவாக்கப்பட்ட கம்பெனிகளிடம் இருந்து, ஆம் ஆத்மி கட்சி, 2 கோடி ரூபாய் பெற்றுள்ளதன் மூலம், கறுப்புப் பணம் தந்திரமான வழியில் கைமாறி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். போலி கம்பெனிகள்: டில்லியில், வரும் 7ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு சரியான போட்டியாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிய சிலர், 'போலி பெயர் கொண்ட, நான்கு ... |
| வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க... வங்கி தொழிலுக்கு அம்பானிகள், மிட்டல்கள்! Posted: கடந்த, 15 ஆண்டுகளாக இந்தியாவின் வங்கித் துறையில் பெரிய சலசலப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று முதல், மீண்டும் புதிய பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இந்திய கார்ப்பரேட் பெருந்தலைகளான ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட், ஆதித்ய பிர்லா குழுமம், ஏர்டெல், வோடபோன் உட்பட, குறைந்தது, 113 நிறுவனங்கள் பரிவர்த்தனை வங்கி மற்றும் சிறு நிதி வங்கி ஒன்றை துவங்க, இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளனர்.ஆலோசனை தரும்:இந்த விண்ணப்பத்தைப் பெற, கடந்த ஜனவரி 2 தான் கடைசி தேதி. இனி சிறப்புக் குழு ஒன்று, விண்ணப்பம் செய்த நிறுவனங்களின் தகுதிகளை அலசி, ... |
| 'நினைத்தால் அரசை கவிழ்ப்பேன்' : சர்ச்சை பா.ஜ., - எம்.பி., சாக் ஷி மகராஜ் Posted: ரிஷிகேஷ் : ''நான் நினைத்தால், அரசுகளை ஏற்படுத்துவேன்; அரசுகளை கவிழ்ப்பேன். இந்துக்களின் உணர்வுகளைபிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை என்றால், படகு ஓட்டத்தான் செல்ல வேண்டும்,'' என, உ.பி., யின் சர்ச்சைக்குரிய, பா.ஜ., - எம்.பி., சாக் ஷி மகராஜ் கூறினார்.'இந்துக்கள், ஐந்து குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்; காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலைகள் அமைக்க வேண்டும்' என்பன உட்பட, ஆட்சேபகரமான பல கருத்துக் களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர், சாக் ஷிமகராஜ். உத்தர பிரதேசத்தின், உன்னாவோ லோக்சபா தொகுதி எம்.பி.,யான அவர், அண்டை மாநிலமான, உத்தரகண்ட் ... |
| Posted: அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு, ஜெயலலிதா எழுதிய உருக்கமான கடிதத்தை, ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க.,வினர் வீடு, வீடாக வினியோகம் செய்து வருகின்றனர்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: கடந்த சட்டசபைத் தேர்தலில், என்னை வெற்றி பெற வைத்து, மூன்றாவது முறை முதல்வராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கியதற்கு, முதலில் நன்றி.கடந்த தி.மு.க., ஆட்சியில், அனைத்து துறைகளும், பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. நில அபகரிப்பு, நாள்தோறும் கொலை, கொள்ளை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்பதுடன், மின்வெட்டால் தமிழகமே இருள் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டது. அவல ஆட்சியை தந்த தி.மு.க.,வை, ... |
| ஸ்ரீரங்கத்தில் ஓட்டு வித்தியாசம் அதிகரிக்குமா? அரசியல் கட்சியினர் எதிர்பார்ப்பு Posted: அ.தி.மு.க., பொறுப்பேற்ற பின் நடந்த, இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை விட, அதிக ஓட்டு வித்தியாசத்தில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன், அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்று, ஆட்சியை பிடித்தது.அந்த ஆண்டு, திருச்சி மேற்கு தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் 14,684 ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார்.அடுத்து 2012ல், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் 68,757 ஓட்டுகள் வித்தியாசத்திலும், புதுக்கோட்டை ... |
| உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி கலப்பு! Posted: புதுடில்லி : நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பூச்சிக் கொல்லி கலப்பு இருப்பதாக, மத்திய அரசின் அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.'இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்' விளைப்பொருட்களில் கலந்துள்ள பூச்சி கொல்லிகளின் அளவு குறித்து, ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது. அதற்கான அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், 2013 - 14ம் ஆண்டில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பல ... |
| பலூன்கள், செயற்கைக்கோள்கள் மூலம் கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை Posted: புதுடில்லி: ''நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் அதிவேக இணைய சேவை கிடைக்க, செயற்கைக்கோள்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் சிறப்பு பலூன்களை பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,'' என, தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.டில்லியில், 'டிஜிட்டல் இண்டியா' என்ற மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: நாட்டில், 2.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும், 2016ம் ஆண்டிற்குள், 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், அதிவேக இணைய சேவை கிடைப்பதற்காக, 2011ம் ஆண்டில், 'நேஷனல் ஆப்டிகல் பைபர் ... |
| ஜெயந்திக்கு 'அழுத்தம்': திட்டங்களை ஆய்வு செய்வோம் Posted: புதுடில்லி: ''மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருந்தபோது, காங்கிரஸ் மேலிடத்திலிருந்து, 'அதிக அழுத்தம்' அளிக்கப்பட்ட திட்டங்களை கண்டறிந்து, அவை ஆய்வு செய்யப்படும்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், நேற்று கூறினார்.முந்தைய, மன்மோகன் சிங் அரசில், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த, தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன், சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைமை மீது, திடுக்கிடும் பல குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். அப்போது இந்த ... |
| நியூட்ரினோ ஆய்வு மையம் அமையும் பகுதி கேரள வனத்துறையினர் ஆய்வு: முட்டுக்கட்டைக்கு கேரள அரசு மும்முரம் Posted: தேவாரம்: "நியூட்ரினோ' ஆய்வக உணர்கருவிகள் பொருத்த கேரள அரசின் அனுமதி பெறவில்லை என கூறி சுரங்கம் தோண்டும் பணிக்கு கேரள அரசு முட்டுக்கட்டை போட திட்டமிட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க இன்று கேரள முதல்வர் உம்மன்சாண்டியை எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் சந்திக்கிறார். இதன் முன்னோட்டமாக நேற்று கேரள வனத்துறையினர் அம்பரப்பர் மலைப்பகுதியை பார்வையிட்டு சென்றனர்.தேனி மாவட்டம் தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில் ரூ.ஆயிரத்து 580 கோடி திட்ட மதிப்பில், "நியூட்ரினோ' நோக்கு கூடம் அமையவுள்ளது. முதற்கட்டமாக ரூ.80 கோடி மதிப்பில் அடிப்படை கட்டுமான பணிகள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 04,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |