Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஒட்டகத்துக்கும் உடை வாங்கலாம் வாங்க!

Posted: 03 Feb 2015 03:23 PM PST

ஐக்கிய அரபு நாடுகளில், விலங்குகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும், அல் - ஷிப்லால் நிறுவனம், இப்போது, புதுமையான வியாபார தந்திரத்தை பின்பற்றுகிறது. அரபு நாடுகளில் ஒட்டகங்கள் அதிக அளவில் உள்ளதால், அவற்றுக்கு உடை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஒட்டகங்களின் அளவுக்கேற்ப, வித விதமான உடைகளை தயாரிக்கிறது, அந்த நிறுவனம். ஒட்டகத்தின் கழுத்து மற்றும் தலை ஆகியவற்றை தவிர, மற்ற அனைத்து பாகங்களையும் மறைக்கும் வகையில், கச்சிதமான உடைகள் தயாரிக்கப்படுகின்றன. ...

விதி - சதி: ஜெயலலிதா கடிதம்

Posted: 03 Feb 2015 03:16 PM PST

- அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு, ஜெயலலிதா எழுதிய உருக்கமான கடிதத்தை, ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க.,வினர் வீடு, வீடாக வினியோகம் செய்து வருகின்றனர். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: கடந்த சட்டசபைத் தேர்தலில், என்னை வெற்றி பெற வைத்து, மூன்றாவது முறை முதல்வராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கியதற்கு, முதலில் நன்றி. கடந்த தி.மு.க., ஆட்சியில், அனைத்து துறைகளும், பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. நில அபகரிப்பு, நாள்தோறும் கொலை, கொள்ளை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்பதுடன், மின்வெட்டால் ...

கொள்ளையடித்த பணத்துடன் வங்கி மேலாளர் சரண்

Posted: 03 Feb 2015 03:11 PM PST

- போபால்: மத்திய பிரதேசத்தில், வங்கிப் பணம், 2.70 கோடி ரூபாயுடன் தலைமறைவான வங்கி மேலாளர், நேற்று, பணத்துடன் போலீசில் சரண் அடைந்தார். 12 நாள் தலைமறைவுக்குப் பின், தானாகவே போலீசில் சரணடைந்துள்ள வங்கி மேலாளரின் செயல், போலீஸ் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்திஉள்ளது. ம.பி., மாநிலம் ஹர்டாவில் உள்ள கூட்டுறவு வங்கி மேலாளர் சில தினங்களுக்கு முன், திடீரென தலைமறைவானார். இதையடுத்து, அதிகாரிகள் சோதனை நடத்தியதில், வங்கிக்கு சொந்தமான, 2.77 கோடி ரூபாய் பணமும் காணாமல் போனது தெரிந்தது. ...

சிவப்பு குடத்தை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்

Posted: 03 Feb 2015 03:08 PM PST

- தூத்துக்குடி: சரக்கு ரயில் வந்தபோது, ஆளில்லா, 'லெவல் கிராசிங்'கில் லாரி பழுதாகி நின்றது. லாரியில் இருந்த பெண்கள், சிவப்பு குடங்களை காட்டி ரயிலை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றி வர, சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு உப்பு ஏற்றிய லாரி, நேற்று பிற்பகல், 2:30 மணிக்கு, தூத்துக்குடி, பெரியசாமி நகர் பகுதியில் ஆளில்லா, 'லெவல் கிராசிங்'கில், 'மெயின் ஆக்சில் உடைந்து தண்டவாளத்தில் நின்றது. அப்போது, ...

மாதொருபாகன் புத்தகம் தேவை

Posted: 03 Feb 2015 11:46 AM PST

மாதொருபாகன் மின் நூல் கிடைக்குமா

ஈகரை கவிஞர் ஜிப்பா ஜிமிக்கி பட இயக்குனருமான ரா.ரா 3275 அவர்களின் பிறந்த நாள் இன்று....

Posted: 03 Feb 2015 10:03 AM PST

ஈகரை கவிஞர் ஜிப்பா ஜிமிக்கி பட இயக்குனருமான ரா.ரா 3275 அவர்களின் பிறந்த நாள்.... வாழ்த்துவோம் வாங்க....

இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்!

Posted: 03 Feb 2015 10:03 AM PST

மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்றுவிடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது மனிதனின் மரணத்துக்கு பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு கடந்த 4 அண்டுகளாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இருதய துடிப்பு ...

பேஸ்புக் கலாட்டா....!

Posted: 03 Feb 2015 09:59 AM PST

பெண்: அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்... அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி? பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ... WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ...... WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ... அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ... அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...ONLINEல ஜாலியா ...

வீட்டு வைத்தியம் ...!

Posted: 03 Feb 2015 09:31 AM PST

எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும். நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும். குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும். உடல் வலிமை பெற : அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும். அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, ...

உடலுக்கு வலுவூட்டும் கத்திரி

Posted: 03 Feb 2015 09:26 AM PST

உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் கத்தரிக்காய், இதயத்தையும் பாதுகாக்கிறது. பச்சை, வெள்ளை, அடர்நீலம் என பல நிறங்களிலும், முட்டைவடிவம், நீளவடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது. * கொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய். குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. * ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது. * ...

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்

Posted: 03 Feb 2015 09:24 AM PST

சிலர் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது எழுந்து நடப்பார்கள். பொதுவில் இது 4-8 வயது குழந்தைகளிடம் அதிகம் காணப்படும். என்றாலும், பெரியவர்களுக்கும் காணப்படுகின்றது. சிலர், நடப்பதோடு மட்டுமில்லாமல் கதவைத் திறந்துக் கொண்டு கூட சென்றுவிடுவர். இது பரம்பரை காரணமாக இருக்கலாம். இரட்டை குழந்தைகளிடம் காணப்படலாம். பொதுவில் இது ஆழ்நிலை தூக்கத்திலிருந்து சற்று விழிக்கும் நிலையில் ஏற்படுகின்றது. நடப்பவரின் கண் திறந்திருக்கும். நாம் பேசினால் ஏதோ பதில் சொல்லுவார், சொல்ல மாட்டார். திரும்ப அவரை படுக்கைக்கு ...

அவளின் ஆசை

Posted: 03 Feb 2015 09:23 AM PST

என் இடம் கேட்கிறாய் எப்படி உள்ளேன் என்று .
நான் என்வென்று குறுவது .

உன் அழகை கூறாவ .
இல்லை
இல்லை உன் பண்பை கூறாவ .
இல்லை
உன் அறிவை சொல்லவா

நி ஒரு பண்பாடு மிக்க தமிழ் பதுமை ஆவாய் .... :நல்வரவு:

ஈகரை உறவுகளின் WhatsApp

Posted: 03 Feb 2015 09:22 AM PST

நாம் அனைவரும்  வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஈகரை உறவுகள் விரும்பினால் அவர்களின்  வாட்ஸ் அப் எண்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! எனது வாட்ஸ் அப் தொடர்பு எண்: [noguest] 60186644132  [/noguest] ஈகரை உறுப்பினர்கள் அல்லாதோர் உங்கள் பதிவைப் பார்க்கக் கூடாது என்றால் கீழ்கண்டவாறு உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்! Code:[noguest] இதற்கு இடையில் உங்கள் தகவலை எழுதிப் பதிவிட்டால் ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் பதிவைப் பார்க்க முடியும்!  [/noguest] அல்லது Code:[code] ...

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா?

Posted: 03 Feb 2015 09:22 AM PST

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர். இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம். வயிற்றில் வித்தியாசம் உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை. குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் ...

ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்

Posted: 03 Feb 2015 09:19 AM PST

ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுகளுக்கு சமம்.....!!! அதிர்ச்சி தகவல்...!!!! மிக முக்கியம் சிறுவர்கள்....!!!! வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையை மூடிய அறைக்குள் இருந்து சுவாசிப்பது, 100 சிகரெட்டுகளைப் பிடிப்பதற்கு சமம் என்று மார்பக ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார் . இந்திய ஒவ்வாமை கல்லூரியில் நடைபெற்ற 48வது தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உட்புற மாசு மற்றும் அஸ்துமா குறித்து பேசிய சந்தீப் சால்வி, ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 5 அம்பிகா சிவம்

Posted: 03 Feb 2015 09:13 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 5 கல்பனா சாவ்லா ஒரு இலட்சியத்தை எடுத்துக் கொள், அதை நோக்கி தினம் தினம் முன்னேறு. இறுதியாக உன் இலக்கை அடையமுடியும் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுவதுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கல்பனா சாவ்லா. ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் நாம் மறைந்தாலும் நம் பெயர் இந்த பூமியில் நிலைத்திருக்க வேண்டுமென்ற கனவுடன் செயல்பட்டவர் அவர். கல்பனா என்றாலே கனவு என்பதுதான் அர்த்தம் என்பது வியக்கவைக்கும் விஷயம். அவரின¢ கனவு வீணாகவில்லை. அவர் எண்ணம் ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 4 அம்பிகா சிவம்

Posted: 03 Feb 2015 08:40 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 4 இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா ஒரு விஷயத்தில் ஆர்வமிருந்தால் போதும். எந்த விஷயத்தையும் சாதித்துவிடலாம். ஏதோ ஒரு வேலையைச் செய்துவிட்டு, கடனே என்று வாழ்வதைவிட நமக்குப் பிடித்தமான வேலையை ஆர்வமாகச் செ¢ய்தால் போதும், நம் வாழ்வின் லட்சியத்தை அடைந்துவிடலாம். 1985 மற்றும் 1986- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக விளங்கியவர் பி.டி.உஷா. அவரின் சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 3 அம்பிகா சிவம்

Posted: 03 Feb 2015 08:23 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 3 முகமது அலி ஒவ்வொரு மனிதனும் வெற்றிபெறவே விரும்புகிறான். அவ்வாறு வெற்றி பெறுபவனையே உலகம் ஞாபகம் வைத்துக்கொள்கிறது. இரண்டாவதாக வருபவனை உலகம் மறந்துவிடுகிறது, அதனால்தான் வெற்றி தேவதையுடன் உறவாடவே அனைவரும் விரும்புகிறார்கள். 1964- ஆம் ஆண்டு உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் 22 வயதே ஆன ஒரு இளைஞன் கலந்து கொண்டிருந்தான். அவன் எதிர்த்து நின்றதோ குத்துச்சண்டையில் புகழ்பெற்ற சாம்பியனாக இருந்த லிஸ்டன் என்பவரை. எதிரிகளைப் பதம் பார்ப்பதில் லிஸ்டன் ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 2 அம்பிகா சிவம்

Posted: 03 Feb 2015 08:16 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -2 ஹெலன் கெல்லர் ஒரு குட்டிக்கதை சொல்வார்கள். ஒரு தவளையைப் பிடித்துவந்து ஆராய்ச்சி செய்தார்களாம். முதலில் ஒரு காலை வெட்டிவிட்டு ஜம்ப் என்றபோது அந்தத் தவளை குதித்ததாம். மற்றொரு காலையும் வெட்டிவிட்டு மீண்டும் ஜம்ப் என்றார்களாம். அப்போதும் அந்தத் தவளை சிறிது கஷ்டப்பட்டு குதித்ததாம். மூன்றாவது காலையும் வெட்டிவிட்டு ஜம்ப் என்றபோதும் இருந்த ஒரு காலைப் பயன்படுத்தி அந்தத் தவளை குதித்தது. நான்காவது காலையும் வெட்டிவிட்டு ஜம்ப் என்றபோது அந்தத் தவளை பேசாமல் இருந்தது. ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 அம்பிகா சிவம்

Posted: 03 Feb 2015 08:06 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1 ஆப்ரஹாம் லிங்கன் ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற  அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள். தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள். அப்படித் ...

இன்று தைப்பூசம்... 31000 வது பதிவு- கிருஷ்ணாம்மா :)

Posted: 03 Feb 2015 08:05 AM PST

தைப்பூசம் - பிப்ரவரி   3. தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் ஸ்கந்தகு முருகப் பெருமானுக்கு கொண்டாடப் படும் விழாவாகும்.தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம், பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். இந்தநாளின் மற்ற சிறப்புகள் : *தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். *முருகன் தேவ சேனாதிபதி ...

மின்னூல்கள் தேவை

Posted: 03 Feb 2015 07:31 AM PST

இனிய நண்பர்களுக்கு

ரோகிணி ஈ.டி. அடுத்த கொலை இப்போது வேண்டாம் போன்ற தொடர்களை சாவி இதழில் எழுதிய ரமணீயன் எழுதிய நூல்கள் மின்னூலாகக் கிடைக்குமா?

கிருபானந்தவாரியார் சுதேசமித்திரன் இதழில் எழுதிய பாரதப் பெருங்காவியம் மின்னூல் கிடைக்குமா?

கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி நூல்கள் கிடைக்குமா?

ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் பழைய பைண்டிங் புத்தகம் பெரிய அளவில் விரிவாக எழுதப்பட்ட நூல் கிடைக்குமா?

ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...!

Posted: 03 Feb 2015 07:25 AM PST

ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில் சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார். 4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப் னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த ...

கியாரண்ட்டி/வாரண்ட்டி என்றால் என்ன..?

Posted: 03 Feb 2015 06:54 AM PST

கியாரண்ட்டி' என்றால் 'உத்திரவாதம்' என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 'வாரண்ட்டி' என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் 'கியாரண்டி' என்றால் 'பொருளை மாற்றிக் கொடுப்பது,' வாரண்டி என்றால் 'சர்வீஸை'க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள். சமீபத்தில் 'லாப்_டாப்' தொடர்பான ஒரு வழக்கு ...

ஆண்ட்ராயிட் மொபைலை Root செய்வது எப்படி

Posted: 03 Feb 2015 06:51 AM PST

ஆண்ட்ராயிட் மொபைலில் ROOT செய்வது என்று கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன என்ற கேள்வி பொதுவாக பலரிடமும் காணப்படுகிறது அதற்க்கான தெளிவான பதிப்புதான் இது. ஆண்ட்ராயிட் மொபைலை உபயோகிப்பவர்களின் எண்னிக்கை உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அதற்க்கான APPLICATIONகளின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது. ஆனால் பல முக்கியமான APPLICATIONகள் ROOT செய்யப்பட்ட மொபைல்களில் மட்டுமே இயங்கக்கூடிய தன்மையை பெற்றிக்கிறது உதாரணமக TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER ...

இறுதி யாத்திரை - எம்.எம்.செந்தில்

Posted: 03 Feb 2015 05:50 AM PST

கானல் நீராய் கனவுகள் சில நேரம் அவை நிறைவேறலாம் பல நேரம் நாம் ஏமாறலாம், அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் ஆசை! கிடைத்தால் மகிழும் மனம் இல்லாவிட்டால் முடங்கி போகிறது !! ஞாபகம் தெரிந்தது முதல் ஏதேனும் ஒன்றை தேடித் தேடியே நம் ஓட்டம் இருக்கிறது - இடையில் எதுவும் நினைக்க நேரமில்லை!! இருட்டறை பயணம் பத்து மாதம் அன்னையின் குருதியை உணவாய்க் கொண்டு உள்ளுக்குள் வளைந்து, நெளிந்து உறங்கிய உறக்கம் - அதுதான் வாழ்வில் நாம் நிம்மதியாய் உறங்கிய உறக்கமாய் இருக்கும்!! குழந்தையாய் ...

ரசித்தவை!

Posted: 03 Feb 2015 04:39 AM PST

ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார்

Posted: 03 Feb 2015 04:01 AM PST

கனடாவைச் சேர்ந்த யோயல் இபார்கன் என்பவர் ஏழு செக்கன்கள் தாமதமான காரணத்தில் 27 மில்லியன் கனேடிய டாலர்களை இழந்துள்ளார். கடந்த தை 23ம் திகதி இரவு கியூபெக்கில் உள்ள கடையொன்றில் 20.59 நிமிடத்திற்கு இரண்டு லாட்டரி சீட்டுக்களை வாங்கியுள்ளார். இவர் வாங்கிய சீட்டுக்களில் ஒன்று பரிசு பெறவில்லை இன்னொரு சீட்டுக்கு 27 மில்லியன் டாலர்கள் பரிசு விழுந்தது. ஆனால் இவருடைய விதி நேரத்துடன் விளையாடியது, காரணம் லாட்டரி விற்பனை முடிய வேண்டிய நேரம் இரவு 21.00 மணி இவருடைய பரிசு விழுந்த லொத்தரின் விற்பனை சேரம் 21.07 ...

குருவியார் -சினிமா கேள்வி - பதில்

Posted: 03 Feb 2015 03:59 AM PST

- ''ஊதா கலரு ரிப்பன்...'' பாடலுக்கு ஆடிய சிவகார்த்திகேயனும், ஸ்ரீதிவ்யாவும் மறுபடியும் ஒரு படத்தில் ஜோடி சேருவார்களா? (ப.குமரன், கரூர்) - - - சிவகார்த்திகேயன்– ஸ்ரீதிவ்யா இருவரும் வெற்றிகரமான ஜோடி என்பதால், தயாரிப்பாளர்கள் விடவில்லை. 'காக்கி சட்டை' படத்தில் இருவரையும் ஜோடி சேர்த்து இருக்கிறார்கள்.! *** ஆண் வேடம் போட்டால், கச்சிதமாக பொருந்துகிற நடிகை யார்? (ஆர்.ரமேஷ், குடியாத்தம்) - - காஜல் அகர்வாலுக்கு ஆண் வேடம் கச்சிதமாக பொருந்துமாம். ஒரு ஒப்பனையாளர் சொல்கிறார்! *** குருவியாரே, ...

கோவில் நகரம்!- மதுரை

Posted: 03 Feb 2015 03:57 AM PST

நான்கு திசைகளை குறிக்கும் கோபுரங்கள் - ஒர் இனிய மாலைப்பொழுதில்! கம்பீரமாக எழுந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்! மதுரை மீனாட்சியம்மன் கோயில் 1858 புனரமைப்பின் போது! மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இத்திருக்கோயில் ...

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Posted: 03 Feb 2015 03:57 AM PST

இன்று, நேற்று அல்ல தொன்று தொட்டே தங்கத்துக்கு நல்ல மதிப்பு இருந்து வருகிறது. தங்கம் என்றால் ஈர்ப்பு. தங்கம் என்றால் சேமிப்பு. தங்கம் என்றால் பெருமிதம். எப்படி ரூபாயை நாம் காகிதமாகப் பார்ப்பதில்லையோ அப்படியே தங்கத்தையும் நாம் ஓர் உலோகமாகக் கருதுவதில்லை. செல்வம், தூய்மை, அழகு, கவர்ச்சி என நாம் அடைய விரும்பும் அனைத்தின் சின்னமாகவே தங்கம் இன்று மாறிவிட்டது. சமீபத்தில் ஒரு நகைக்கடைக்குச் சென்றிருந்தபோது, தங்க சேமிப்புத் திட்டம் பற்றி ஒரு சிறு அறிமுகம் தந்தார் அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி ஒருவர். ...

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!

Posted: 03 Feb 2015 03:55 AM PST

ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு – பழமொழி விளக்கம் – ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு-என்பது ஒரு நல்ல பழமொழி. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். பொன் ஆசையால் விளைந்தது சிலப்பதிகாரம். பெண் ஆசையால் விளைந்தது ராமாயணம். மண் ஆசையால் விளைந்தது மகாபாரதம். - இப்படி புராணங்கள் வாயிலாகவும் இதிகாசங்கள் வாயிலாகவும் ஆசையை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். - ஆனால், ஆசை இல்லாத மனிதர்களே இல்லை. சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை என்று எண்ணற்ற ஆசை வலையில் சிக்கி தவிக்கிறோம். குழந்தை ...

மயில் பறவைகள் பற்றிய தகவல்கள்

Posted: 03 Feb 2015 03:54 AM PST

இந்தியாவின் தேசியப்பறவை மயில். மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்தைச் சேர்ந்தது. மயில், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர்பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாக சுமார் 200 கண் வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும்போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. இவற்றின் குரல் கரடு முரடாக, கேட்க இனிமையற்றதாக இருக்கும். பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்பும் கொண்ட நீலமும், ...

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

Posted: 03 Feb 2015 03:52 AM PST

அன்றுதான் அப்படியொரு அழுத்தம் மனதில் - என் வாழ்வே இருட்டாய், என்னை சுற்றி யாவரும் நலமாய் இருப்பது போலவும் நான் மட்டுமே துன்பத்தில் துவழ்வது போலவும் !! இனி இருந்து பயனில்லை வாழ்வே வேண்டாம் என மனம் வெறுத்து நடந்தேன், உடலில் வலுவிருந்தும் மனதில் வலி அதிகமானதால் வேப்பமர நிழலில் சற்றே அமர்ந்தேன் !! கீச், கீச் என்ற ஒலியில் குருவி ஒன்று சுற்றி சுற்றி வந்தது அந்த மரத்தை பல முறை, எங்கிருந்தோ கொண்டுவந்த சிறு, சிறு புற்களைக் கொண்டு தனக்காய் ஒரு வீடு கட்டியது !! பிரித்தால் ...

பாட்டியில்லாத வீடு - எம்.எம். செந்தில்

Posted: 03 Feb 2015 03:49 AM PST

இடுப்பில் தூக்கி வைத்து வயக்காட்டு வரை கொண்டு சென்று இதுதாண்டா ராசா நம்ம தோட்டம் என்று சொல்லவும்!! தெரு புழுதியில் விளையாடி காலில் அடிபட்டு வரும் பேரனை ஓடுற பாம்ப தாண்டற வயசு இதுக்குப் போய் அலட்டிக்கலாமா என்று பாசமாய் கால் அமுக்கவும்!! ஏலே, பெருமாயி இங்கன வாவே என் பேரனப் பாரு - அவங்க தாத்தாவைப் போல பல் வரிசை என்று சொல்லி மகிழவும்! சின்ன காய்ச்சல் என்றாலும் மாரியாயி பண்டிகைக்கு, என் பேரனப் போலவே   மண் பொம்மை செய்து வைக்கிறேன் என்று வேண்டுதல் வைக்கவும்! அப்பாவோ, ...

பேரறிஞர் அண்ணாவின் 46–வது ஆண்டு நினைவு நாள் ! Feb3rd

Posted: 03 Feb 2015 03:49 AM PST

அறிஞர் கா. ந. அண்ணாதுரை காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா ...

புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான்

Posted: 03 Feb 2015 03:49 AM PST

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது. முதல் கைதியின் ஆசை: நல்ல பெண், நல்ல மது, லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும். மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன. இரண்டாவது கைதியின் ஆசைகள் ; நல்ல பெண், நல்ல உணவு, ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான். அப்போது மாம்பழ சீசன் இல்லை. எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ...

செத்தாண்டா சேகரு.....!

Posted: 03 Feb 2015 03:47 AM PST

சந்தோஷுக்கு அன்று அளவுக்கதிக சந்தோசம். அலுவலகத்தில் அவனது பதவி உயர்வுக்கு பார்ட்டி கொடுத்ததில் அவனுக்கே கொஞ்சம் ஓவராய்ப் போய்விட்டது. மெல்லிய தள்ளாட்டத்துடன் காரை எடுத்தவன் காரை மெதுவாய் ஓட்ட ஆரம்பித்தான். அந்தப் பின்னிரவில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாதது கொஞ்சம் வசதியாய் இருந்தது. ஆனால், வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே போதை மெல்ல ஏறி மெல்லப் பறப்பது போலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. எல்லாம் கொஞ்ச நேரம்தான். வண்டி அலைபாய்வது தெரிந்து 'ஹைவே பேட்ரோல் போலிஸ்' காரில் விளக்குகள் எரிய ...

உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக்க...!!

Posted: 03 Feb 2015 03:40 AM PST

1. உங்கள் பால்கனியில் செடிகளை வளர்க்கவும்..! 2.நிறைய தண்ணீர் குடியுங்கள்..! 3.அடிக்கடி செல்போன் பயன்படுத்தாதீர்கள்..! 4.ஒரு அடி தள்ளியே உங்கள் செல்போனை வைத்திருங்கள்..! 5. ஸ்பீக்கர் போனை /ஹேண்ட ப்ரீ/ப்ளு டூத் பயன் படுத்துங்கள்..! 6. தலையணை அடியிலோ /கையிலோ/சட்டை பாக்கெட்டில ரொம்ப நேரம் வைத்திருக்காதீர்கள்..! 7. பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா பேக்கேஜ்களை நிறுத்தி வையுங்கள்..! -முகனூலில் இருந்து சுட்டது

"படித்ததில் பிடித்தது - விமந்தனி"

Posted: 03 Feb 2015 03:34 AM PST

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!! இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்... அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்துவிட்டிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே! நாடு முழுவதும் எப்போதோ bullet rail வந்திருக்கும், நாம் இப்போது தான் மீட்டர் கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்! ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம் இன்னும் தண்டவாளத்தில் ...

கிட்டிப்புல் ஆடிய ஆட்சியர்…பல்லாங்குழி ஆடிய மேயர்!

Posted: 03 Feb 2015 03:20 AM PST

- - - தஞ்சையில் தமிழரின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற இந்த கலைநிகழ்ச்சிகள், தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது. இதில் நமது பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம், ஆடுபுலி ஆட்டம், தாயம், கிட்டிப்புல், பம்பரம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, கிளிதாண்டா (உப்புகோடு), பாண்டி (நொண்டி), உரியடித்தல் நடைபெற்றது. விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி ...

அம்மா என்றழைக்காத உயிரில்லேயே...ட்யூனை மாத்து..!!

Posted: 03 Feb 2015 03:02 AM PST

நாட்டு நடப்பு - கார்ட்டூன்கள்

Posted: 03 Feb 2015 02:52 AM PST


-

-

-

உயிருக்கு போராடிய டிரைவர்… எண்ணெய் பிடித்து சென்ற பொதுமக்கள்!

Posted: 03 Feb 2015 02:46 AM PST

- பெரம்பலூர்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய எண்ணெய் லாரி டிரைவர், கிளீனரை காப்பாற்றாமல், லாரியில் இருந்து கொட்டிய எண்ணெய்யை பொதுமக்கள் பிடித்து சென்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சென்னையிலிருந்து தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து. நெடுஞ்சாலைத்துறை டிவைடரில் ஏறி, தலைகீழாக கவிழ்ந்து ...

இன்று அன்று | 2000 பிப்ரவரி 3: அல்லா ரக்கா கான் மறைந்த தினம்

Posted: 03 Feb 2015 02:39 AM PST

- அல்லா ரக்கா கான், ரவிஷங்கர் ----------------------------------------------------------- - உஸ்தாத் குரேஷி அல்லா ரக்கா கான். இசையுலகில் மரியாதையுடன் உச்சரிக்கப்படும் பெயர். பக்க வாத்திய இசைக் கருவி யான தபேலாவுக்குப் புகழ் சேர்த்த பெரும் கலைஞர் இவர். ஜம்மு காஷ் மீரின் பக்வால் கிராமத்தில் 1919 ஏப்ரல் 29-ல் பிறந்தவர் உஸ்தாத் அல்லா ரக்கா. இளம் வயதில் குர்தாஸ்பூரில் தனது உறவினருடன் தங்கியிருந்த அவர், இசையால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக, தபேலா மீது பெரும் ஆர்வம் காட்டினார். இசை மீதான காதல் ...

3000 ஆசனம்... முறியடிச்சுக் காட்டணும் !

Posted: 03 Feb 2015 02:26 AM PST

யோகாவில் 3,000 வகையான செய்முறைகளை உருவாக்கியதுதான் இதுவரைக்கும் கின்னஸ் சாதனையா இருக்கு. அந்தச் சாதனையை முறியடிக்கணும். அதோடு, 10,000 புதிய செய்முறைகளை உருவாக்கணும்." எனப் புன்னகைக்கிறார் தேவி. திருப்பூர், பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவி. 2013 தேசிய யோகா போட்டியில் முதல் பரிசு வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சுட்டி ராணி. மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை அள்ளியிருக்கிறார். ''என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே யோகா மாஸ்டர்ஸ். அப்பா, இன்டர்நேஷனல் யோகா  போட்டியில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™