Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தில் 84.68 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு: இளம் தலைமுறைக்கு அரசு பணி மீது ஆர்வம் குறையுது

Posted:

வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து, தமிழகத்தில், 43.14 லட்சம் பெண்கள் உட்பட, 84.68 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். பதிவை புதுப்பிக்காததால், ஆறு மாதங்களில், பதிவு செய்தோர் எண்ணிக்கை, 10 லட்சம் வரை குறைந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் சிவப்பு கம்பளம் விரிப்பதால், இளைய தலைமுறைக்கு அரசுப்பணி மீதான ஆர்வம் குறைந்ததே காரணம் என, கூறப்படுகிறது.தமிழகத்தில், வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து, 2015 டிச., 31 வரை, வேலைக்கு காத்திருப்போர் பற்றிய விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. மொத்தம், 84.68 லட்சம் பேர் பட்டியலில் உள்ளனர்.10 லட்சம் பேர் ...

ஜம்மு - காஷ்மீரில் பகைவர்கள் நண்பர்களானது எப்படி? பா.ஜ., - பி.டி.பி., 'டீல்' குறித்து பரபரப்பு தகவல்

Posted:

புதுடில்லி: பரம எதிரிகளாக இருந்த மக்கள் ஜனநாயக கட்சியான, பி.டி.பி.,யும் - பா.ஜ.,வும், ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைப்பது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.'ஜம்மு - காஷ்மீரில் அழுத்தமாக கால் ஊன்ற பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பா.ஜ.,வின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த, எங்களால் மட்டுமே முடியும்' என, கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, பி.டி.பி., தலைவர் முப்தி முகமது சயீத் பேசினார். மறுவடிவம்: ஜம்மு - காஷ்மீரின் தேர்தல் பிரசாரத்துக்கு, ...

பன்றிக் காய்ச்சல் பரிசோதனை கூடம் பற்றாக்குறை: மத்திய அரசு ஒப்புதல்

Posted:

புதுடில்லி: பன்றிக் காய்ச்சலை உறுதி செய்வதற்கான பரிசோதனை கூடங்கள் பற்றாக்குறையாகத் தான் உள்ளது என, மத்திய அரசு, முதன் முறையாக ஒத்துக் கொண்டு உள்ளது.இதுகுறித்த கேள்விக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, லோக்சபாவில் பேசியதாவது:போதுமானதல்ல: பன்றிக் காய்ச்சலை (எச்1என்1 வைரஸ்) கண்டறியும் வகையில் தற்போது, 21 பரிசோதனை கூடங்கள் தான் உள்ளன; இது போதுமானது அல்ல. நாடு தழுவிய அளவில், ஒவ்வொரு மாநிலத்திலும் பரிசோதனைக் கூடத்தை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரையில் பன்றிக் ...

ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு இணையாக எம்.எல்.ஏ., ஊதியம்?

Posted:

பெங்களூரு: கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் வாங்கும் ஊதியத்தை உயர்த்தும் மசோதா, வரும் சட்டசபை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும், ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு இணையாக, மாதம், 1.23 லட்சம் ரூபாய் ஊதியம் பெற வாய்ப்புள்ளது. தற்போது, எம்.எல்.ஏ.,க்கள், மாதத்திற்கு, மற்ற படிகள் உட்பட, 65 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். மாநிலத்துக்குள் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடருக்கு, தினமும், 1,000 ரூபாயும், மாநிலத்துக்கு வெளியே கூட்டம் எனில், 1,500 ரூபாய் வழங்கப்படும்.அலவன்ஸ்: தற்போது புதிய மசோதாவின் படி, நாள்தோறும் வழங்கப்படும் அலவன்ஸ் ...

லோக்சபா புதுமுக எம்.பி.,க்களே சிறப்பான செயல்பாடு

Posted:

புதுடில்லி: நடப்பு, 16வது லோக்சபாவின், முதல் ஒன்பது மாதங்களில், சபைக்கு தவறாமல் வருகை தந்தது, விவாதங்களில் பங்கேற்றது போன்ற அம்சங்களில், முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்ட்ட எம்.பி.,க்கள் தான், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.அவர்கள், பி.பி.சவுத்ரி, துஷ்யந்த் சவுதாலா மற்றும் ராஜிவ் சதாவ். பி.பி.சவுத்ரி, 61, பா.ஜ.,வைச் சேர்ந்தவர்; ராஜஸ்தானின், பாலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்; சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியான இவர், ஒருநாள் கூட சபைக்கு மட்டம் அடிக்காமல், 100 சதவீத வருகையை உறுதி செய்துள்ளார்.

விவாதங்கள்:
சபையில் நடைபெற்ற ...

'நாங்க தயார் ஆகலீங்கோ... பிறகு பேசுறோம்': முன்னுரிமையை தாரைவார்த்த அ.தி.மு.க.,

Posted:

போதுமான எம்.பி.,க் கள் பலம் இருந்தும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில், பங்கெடுத்து பேச முன்வராமல், பின்வாங்கியதன் மூலம், தனக்குரிய முக்கியத்துவத்தை அ.தி.மு.க., தாரைவார்த்துள்ளது. பேச வரும்படி, திரும்ப திரும்ப அதிகாரி கள் தரப்பில் அழைப்பு விடுத்தும் கூட, நாளை வரை, 'வாய்தா' கேட்டது தெரியவந்து உள்ளது.பார்லிமென்ட்டின் மைய மண்டபத்தில், ஜனாதிபதி உரை நடத்திய பின், அந்த உரை மீதான விவாதம், லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளிலும் நடக்கும்.விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் எம்.பி.,க்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான முக்கிய பிரச்னைகள், மக்கள் நல திட்டங்கள் என, கலந்து ...

மீண்டும் முதல்வராகும் ஆசை இல்லை: கருணாநிதி

Posted:

சென்னை: ''ஆறாவது முறையாக, தமிழக முதல்வர் ஆகும் ஆசை இல்லை; என் ஆசை எல்லாம், தி.மு.க.,வை எதிரிக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது,'' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 63வது பிறந்த நாள் விழா, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இளைஞர் எழுச்சி நாளாக, கொண்டாடப்பட்டது.இவ்விழாவில், கருணாநிதி பேசியதாவது:தமிழகத்தின் முதல்வராக, ஆறாவது முறையாக கருணாநிதி வரவேண்டும் என, பலர் சொல்கின்றனர். ஆனால், முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை. அப்பதவி என்னை உந்தித் தள்ளவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, தி.மு.க.,வின் கடைசி தொண்டன் உள்ளவரை, கட்சியை எதிரிகளுக்கு ...

இந்தியாவின் மிரட்டலுக்கு இலங்கை அரசு பணிந்தது: சீன நீர்மூழ்கிகளுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு

Posted:

பீஜிங்: இலங்கை துறைமுகத்தில், சீன நீர்மூழ்கி கப்பல் அடிக்கடி வந்து செல்ல, முந்தைய இலங்கை அரசு அனுமதித்ததற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 'சீன நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கையில் இனிமேல் அனுமதிக்க மாட்டோம்' என, சீனாவிலேயே, இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, நேற்று அறிவித்தார்.இலங்கையில், கடந்த மாதம், 8ல் நடைபெற்ற தேர்தலில், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு அகற்றப்பட்டு, மைத்ரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

வெளிநாட்டு பயணம்:
அதிபராக பொறுப்பேற்ற ...

மத்திய பட்ஜெட்: ஏழைகளுக்கானது- பிரதமர்; ஏமாற்றம் அளிக்கிறது-ஜெ.,

Posted:

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பட்ஜெட் குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்து:

ஏழைகளுக்கு ஆதரவானது!
பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,மத்திய அரசின் பட்ஜெட், ஏழைகளை மனதில் வைத்தும், நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலீட்டைஅதிகரிக்கவும், பொருளாதாரத்தை பலப்படுத்தவும் பட்ஜெட்டில் ஏராளமான விஷயங்கள் உள்ளன என்றார்.
கட்டாயம் நிறைவேற்றுவோம்!
மத்திய நிதி ...

மத்திய அரசின் மானிய செலவு 10 சதவீதம் குறைகிறது

Posted:

'பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்பட்ட மானியம், கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளதால், வரும் நிதியாண்டில், மத்திய அரசின் மானிய செலவு, 10 சதவீதம் குறையும்' என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட் உரையில், இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: வரும் நிதியாண்டில், உணவு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் உரங்களுக்கான மானியம், இரண்டு லட்சத்து, 27 ஆயிரத்து, 387 கோடி ரூபாயாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் (2014-15), இந்த வகையில், மானியச் செலவு, இரண்டு லட்சத்து, 53 ஆயிரத்து, 913 கோடி ரூபாய். பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம், கணிசமாக குறைக்கப் பட்டுள்ளதாலும், ...

ராணுவத்திற்கான ஒதுக்கீடு 10 சதவீதம் அதிகரிப்பு

Posted:

புதுடில்லி: ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் வகையில் பட்ஜெட்டில் ராணுவத்தினருக்கு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுக்கு, வெளிநாடுகளையும், இறக்குமதியையும் சார்ந்திருப்பதை தவிர்க்கவும், உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்யும் வகையில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்கப்படுத்தவும், மத்திய பட்ஜெட்டில், ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு, 2.22 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 2.46 லட்சம் கோடி ரூபாயாக, 9.87 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ராணுவத்திற்கு தேவையானவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி ...

தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்க பட்ஜெட்டில் அதிரடி திட்டம்

Posted:

கறுப்பு பணம், பினாமி சொத்து ஒழிப்புக்கு வருகிறது புது சட்டம்:மத்திய செல்வ வரி ரத்து: இலவச 'டாக்' டைம் குறையும்; எல்.சி.டி., 'டிவி' விலை குறையும்புதுடில்லி: தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு என்ற அம்சங்களை மட்டும் மையப்படுத்தி, நேற்று, மத்திய அரசின் பட்ஜெட், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில், தொழில் துறையினர் எதிர்பார்த்த அதிரடி சட்ட சீரமைப்புகள், தனிநபர்கள் எதிர்பார்த்த வருமான வரி விலக்குகள் போன்ற கவர்ச்சி அம்சங்கள் தென்படாததால், பங்கு சந்தைகள் பெரிய அளவில் வரவேற்கவில்லை.இருப்பினும், இந்த பட்ஜெட், தொழில் ...

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்தது

Posted:

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.18 ரூபாயும்; டீசல் விலை, 3.09 ரூபாயும் நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்தது. உள்ளூர் வரிகள் சேர்த்து, சென்னையில், இந்த விலை உயர்வு, 3.46 மற்றும், 3.34 ரூபாயாக உள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல், டீசல் விலைகள் அவ்வப் போது மாற்றி அமைக்கப்படுகின்றன. இதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின், பெட்ரோல் விலை, 10 முறையும், அக்டோபர் மாதத்திற்குப் பின், டீசல் விலை, 6 முறையும் குறைந்தது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தற்போது உயர்ந்து வருவதால், கடந்த மாதம் மத்தியில், பெட்ரோல், டீசல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™