Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கிரீன்விச் நேரம்

Posted: 28 Feb 2015 12:14 PM PST

பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாக முடிவான பின்பு, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியை தொடக்கமாகக் கொள்ள முடிவு செய்தனர். மேலும் இடத்தை சுலபமாக அடையலாம் கண்டு கொள்ள கடக ரேகை, அட்ச ரேகை போன்ற கற்பனைக் கோடுகளை உருவாக்கினர். இதில் மையக்கோட்டை '0' டிகிரி என வைத்தனர். இதுதான் உலக நாடுகளின் நேரத்துக்கு ஆதாரமானது. இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கிரீன்விச்' என்ற நகரின் மீது செல்வதால் இந்த கோட்டிற்கு அதே பெயரை வைத்தார்கள். நேரத்திற்கு 'கிரீன்விச் மெரிடியன் டைம்' என்று பெயர் வைக்கப்பட்டது. இதை சுருக்கமாக ...

தண்ணீரும் ஆரோக்கியமும்

Posted: 28 Feb 2015 12:03 PM PST

அழகை தரக்கூடிய சிறப்பான ஒரு உணவு என்று சொன்னால், அது தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் நல்ல ஆரோக்கியமாக செயல்படும். இத்தகைய தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவான சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும். தண்ணீரில் ...

தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910

Posted: 28 Feb 2015 11:59 AM PST

எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934-ம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944-ல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் ...

உடல் பருமன் ஏற்படுவது ஏன்?

Posted: 28 Feb 2015 11:56 AM PST

இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலகச் சுகாதார நிறுவனம். 2007-ம் ஆண்டு எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் (Obesity) பிரச்சினை உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று அது ...

பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ3.18, டீசல் ரூ3.09 உயர்வு!

Posted: 28 Feb 2015 11:53 AM PST

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3.18க்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ3.09 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மாதத்துக்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ3.18, டீசல் ரூ3.09 அதிரடியாக உயர்வு! கடந்த 15-ந் தேதி பெட்ரோல் விலை 82 காசுகளும், டீசல் விலை 61 காசுகளும் உயர்த்தப்பட்டன. இந்நிலையில் இன்று ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 28 Feb 2015 11:53 AM PST

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)

Posted: 28 Feb 2015 11:50 AM PST

அன்று இரவு சிவராமனுக்கு உறக்கம் பிடிக்கவே இல்லை....பொழுது விடிந்தால் அவருடைய பேரன், அமெரிக்காவிலிருந்து 4 வருடங்கள் கழித்து வருகிறான்.அது மட்டும் அல்ல, அவன் இவர்களின் குல தெய்வமான, செந்தில் ஆண்டவனுக்கு 'தங்க வேல்' சார்த்தப்போகிறான்.............அது தான் இவருக்கு இப்போது அவன் வருகையை விட, ரொம்ப சந்தோஷமான விஷையமாக  இருந்தது. அவர் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின. அன்பான  மனைவியும்,  4 மகன்களும் 2 மகள்களும். குடும்பம் பெரியதானாலும்  அன்பான குடும்பம். கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொருவரையும் ஆளாக்கினார். பசங்களும் ...

மாணவர்களே... மறதியை விரட்டுங்கள் மதிப்பெண்களை அள்ளுங்கள்

Posted: 28 Feb 2015 11:44 AM PST

* பதற்றம், விருப்பமின்மை, பயம், பயிற்சியின்மை, புரிந்து கொள்ளாமை, குருட்டு மனப்பாடம், இயந்திரமாக படித்தல் இவைதான் மறதிக்கான முக்கிய காரணங்கள். விரும்பி, புரிந்து படியுங்கள். * குருட்டு மனப்பாடம் செய்தால் எதுவும் மனதில் நிற்காது. மறந்துபோய் விடும். நாம் படிப்பது தேர்வு எழுதுவதற்காக மட்டுமல்ல, நம் அறிவையும் வளர்த்துக் கொள்வதற்குத்தான். * ஞாபக சக்தி குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை பொதுவாக வைட்டமின் குறைவுகளாலேயே ஏற்படுகிறது. பச்சை காய்கறிகள், பால், கீரை வகைகள், பழங்கள் இவைகளை ...

ஒரு மருத்துவமனையும் துரோகமும், பணப்பெட்டிக்கு முன்பு மண்டியிட்டு வேடிக்கை பார்க்கும் நீதியமைப்புகள்!

Posted: 28 Feb 2015 11:36 AM PST

ஜூனியர் விகடனில் வந்த கட்டுரை இது.. படித்தபின்தான் தெரிந்தது இந்த மருத்தவமனை பழனியில் உள்ள கே.வி. மருத்துவமனை பற்றியது என்று. பிரச்னை பண்ணாதீங்க... பணம் தர்றோம்.. மன்னிப்புக் கேட்குறோம்!' நீதிமன்றம் வந்த மருத்துவமனை பஞ்சாயத்து. ..குழந்தை பிறக்கும் வீடு எவ்வளவு மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்! ஆனால், அதற்கு நேர்மாறாக இருக்கிறது கோவையைச் சேர்ந்த தேவேந்திரனின் வீடு. இவரது மனைவி சௌம்யாவுக்கு கடந்தமார்ச் 5-ம் தேதி ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. பிறந்த சில தினங்களில் குழந்தை பார்வையை இழந்துவிட்டதுதான் ...

வரலாறு படிப்பவனிடம் ஒரு தொழிலாளியின் கேள்விகள் - பெர்தோல் பிரெக்ட்

Posted: 28 Feb 2015 11:15 AM PST

ஜெர்மானிய கவிஞரும், நாடக ஆசிரியருமான பெர்தோல்ட் பிரெக்ட் [ 1898 பிப்ரவரி 10 - 1956 ஆகஸ்ட் 14] இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையில் மிகச்சிறந்த பங்காற்றி உள்ளார். பெர்தோல் பிரெக்டுக்கு 16 வயதிருக்கும்போது முதல் உலகப்போர் நடைபெற்றது. அது அவரது மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. போரின்போது இறந்த அவரது வகுப்பு தோழர்களை 'ராணுவம் விழுங்கிவிட்டதாக' கருதினார். கடைசிவரை உழைப்பாளர்களின் சார்பாக தனது படைப்புகளை உருவாக்கிய மகத்தான கலைஞனின் மிகச்சிறந்த கவிதையான 'வரலாறு படிப்பவனிடம் ஒரு தொழிலாளியின் ...

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Posted: 28 Feb 2015 11:12 AM PST

* அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. * சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. * அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும். * இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும். * அரசின் அனைத்து திட்டங்களும் வறுமை ஒழிப்பை மையமாகக் கொண்டிருக்குதம். * அனைவருக்கும் மின்சாரம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை 2022ல் அனைவருக்கும் வீடு * சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டான 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவிலுள்ள ...

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Posted: 28 Feb 2015 11:09 AM PST

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ...

சலவைக்கல் பாறை

Posted: 28 Feb 2015 11:06 AM PST

சலவைக்கல் என்பது ஒரு வகை கல்லாகும். இது பல வண்ணங்களில் கிடைக்கிறது. பழங்காலத்தில் இருந்தே வெண்மையான சலவைக்கற்கள் கட்டிடம் கட்ட பயன்பட்டு வருகின்றன. கிரேக்கர்களும், எகிப்தியர்களும் கோவில்கள் கட்ட இதனை பயன்படுத்தினர். நமது தாஜ்மகாலும் சலவைக் கல்லில் உருவானதுதான். சலவைக்கல் மற்ற கற்களைப்போல் சுற்றுச்சூழலில் வெகு எளிதில் பாதிக்கப்படாது. வெப்பமோ, குளிரோ, மழையோ இதனைப் பாதிக்காது. இதனாலே இதற்கு விலையும், மதிப்பும் கூடுதல். பார்வைக்கு அழகானது. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் நிறங்களில் சலவைக்கல் கிடைக்கிறது. ...

பொன்சுபா

Posted: 28 Feb 2015 11:05 AM PST

பெயர்:பொன்சுபா
சொந்த ஊர்:ஆறுமுகனேரி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:வலைதளங்கள்
பொழுதுபோக்கு:புத்தகம்,இசை,
தொழில்:சுயதொழில் வியாபாரம்
மேலும் என்னைப் பற்றி:சாதாரணமானவன்

சிலிக்கான்

Posted: 28 Feb 2015 11:03 AM PST

சிலிக்கான் அல்லது மண்ணியம் ஒரு தனிமம் ஆகும். புவி ஓட்டில் ஆக்சிஜனுக்கு அடுத்து அதிகம் கிடைப்பது சிலிக்கான் தான். வணிக ரீதியில் சிலிகானையும் கார்பனையும் மின்னுலையில், கார்பன் மின் வாய்களின் துணை கொண்டு சூடுபடுத்தி உற்பத்தி செய்கிறார்கள். லத்தீன் மொழிச் சொல்லான சிலிசியம் என்பதில் இருந்தே சிலிக்கான் என்ற பெயர் வந்தது. சிலிகான், சூரியன் மற்றும் பல விண்மீன்களில் காணப் படுகிறது. எரோலைட் போன்ற எரிகற்களில் ஒரு முக்கியச் சேர்மானப் பொருளாக உள்ளது. படிக உருவற்ற சிலிகான் பழுப்புநிறப் பொடியாக இருக்கிறது. இதை ...

புராணங்களில் மின்னல்

Posted: 28 Feb 2015 10:59 AM PST

மின்னல்களைப்பற்றிய நிறைய குறிப்புகள் இதிகாசத்தில் காணப்படுகின்றன. கி.மு.2,200 காலக்கட்டத்தில் அக்காடியன் என்பவரின் படைப்புகளிலும், கி.மு.900-ம் ஆண்டை சார்ந்த ட்டைட் படைப்புகளிலும், மின்னலை பற்றிய குறிப்புகள் உள்ளன. கிரேக்கர்கள் மின்னலை அவர்களின் கடவுள் அரசனான சீயசின் ஆயுதமாக கருதினார்கள். வைகிங் சமூகத்தினர் அவர்களின் அரசன் கார்மேகங்களின் ஊடே தேரில் செல்லும்போது ஏற்படும் ஒளிக்கீற்றுதான் மின்னல் என்று நம்பினார்கள். இந்து மதத்தில் தேவர்களின் தலைவனான இந்திரனின் ஆயுதம், மின்னல் என்று கூறப்படுகிறது. ...

கார்பன் விளைவு

Posted: 28 Feb 2015 10:58 AM PST

ஒவ்வொரு விளைவுக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு. இது நியூட்டனின் விசை பற்றிய தத்துவம். இதே கோட்பாடு தான் தற்போது கார்பன் வெளியேற்றத்துக்கும் பொருந்துகிறது. மனிதர்கள் தற்போது அடைந்து இருக்கும் மிகப்பெரிய வளர்ச்சிக்கு எனர்ஜி என்று சொல்லகூடிய சக்தி மூலங்களே காரணம். இந்த மூலங்கள் இல்லாவிட்டால் மனிதன் இன்னமும் மாட்டு வண்டியிலும், குதிரையிலும் தான் பயணப்பட்டு கொண்டிருப்பான். நமக்கு கார், ரெயில், விமானம், கம்ப்யூட்டர் என்று எதுவும் கிடைத்திருக்காது. இப்படி எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆதாரமாக ...

இமய மலை

Posted: 28 Feb 2015 10:58 AM PST

இந்தியாவின் வடக்கு எல்லையாக அமைந்திருக்கும் மலைத்தொடர் இமய மலையாகும். இமாலயம் என்ற வடமொழி சொல்லுக்கு 'பனியின் இருப்பிடம்' என்று அர்த்தம். உலகின் மிகப் பெரிய மலை இதுதான். இந்த மலைத்தொடர் 73 பாகை கிழக்கு அட்ச ரேகையிலிருந்து 95 பாகை கிழக்கு அட்ச ரேகை வரை பரவி கிடக்கிறது. 2,400 கிலோ மீட்டர் நீளமும், 160 கிலோ மீட்டர் முதல் 240 கிலோ மீட்டர் வரை அகலமும் கொண்டது. இவ்வளவு பெரிய மலை உலகில் வேறு எங்கும் இல்லை. இது திபெத்தையும், இந்தியாவையும் பிரிக்கும் பெரிய சுவர் போல அமைந்திருக்கிறது. இந்தியாவின் ...

ஒபாமா எந்த மதம்?

Posted: 28 Feb 2015 10:56 AM PST

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேள்வியை எழுப்பிய ஆய்வின் முடிவால் அமெரிக்க அரசியலில் பெரும் சலசலப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் விவரம்: அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் தியோடாரிடிஸ் தனது முனைவர் பட்டத்துக்காக, அமெரிக்க செனட்சபை தேர்தல் குறித்த ஆய்வை தொடங்கினார். அதில் ஒரு கட்டமாக அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்ற கேள்வியை பலதரப்பட்ட அமெரிக்கர்களிடம் ...

வரலாற்றில் இன்று - மார்ச்

Posted: 28 Feb 2015 10:55 AM PST

குதிரை சக்தி

Posted: 28 Feb 2015 10:55 AM PST

எந்தவொரு மின்சார மோட்டாரை எடுத்துக் கொண்டாலும் அதில் ஹெச்.பி. என்ற எழுத்தைக் காணலாம். இது ஹார்ஸ் பவர் என்பதைக் குறிக்கும். ஹார்ஸ் பவர் என்றால் குதிரை சக்தி என்று பொருள். இந்த மின்சார மோட்டார்களுக்கும் குதிரைக்கும் அப்படியென்ன சம்பந்தம்? கால ஓட்டத்தில் சற்று பின்னோக்கிச் சென்றால் இதற்கான விடை கிடைக்கும்? மனிதனின் ஆரம்பக் காலத்தில் மனிதனுக்கு மனிதனே எதிரியாக இருந்தான். இத்தகைய மனிதர்களிடமிருந்தும், கொடூரமான காட்டு விலங்குகளிடமிருந்தும் தப்பிப்பதற்கு அவனுக்கு வேகம் தேவையாக இருந்தது. என்னதான் ...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 28 Feb 2015 10:41 AM PST

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

அரசு அலுவலகங்களில் கூகுளின் ஜிமெயிலுக்கு தடை

Posted: 28 Feb 2015 10:39 AM PST

மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் பிரைவேட் ஈ-மெயில் வசதிகளான ஜிமெயில், யாஹூ-வை பயன்படுத்த அதிகாரபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயன்படுத்தினால் இண்டர்நெட் ஹிஸ்டரியை ரெக்கவர் செய்து ஈ-மெயில்களை டெலிட் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 18-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதாவது, இந்திய அரசுக்கான ஈ-மெயில் பாலிசியும், தகவல் தொழில்நுட்ப வசதியை இந்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. ...

ஜூஸ் - ஒரு பக்க கதை

Posted: 28 Feb 2015 10:36 AM PST

பங்களாதேஷில் நாத்திக கொள்கையுடைய வலைப்பூ எழுத்தாளர் வெட்டிக் கொலை

Posted: 28 Feb 2015 10:36 AM PST

தனது இறைமறுப்பு கருத்துகளுக்காக பரவலாக அறியப்பட்டிருந்த பங்களாதேஷை பூர்வீகம் கொண்ட அமெரிக்க வலைப்பூ எழுத்தாளர் ஒருவர் தாக்கா சென்றிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வாழ்ந்துவந்த அவிஜித் ராய் புத்தகக் கண்காட்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் பங்களாதேஷ் தலைநகர் சென்றிருந்தார். மத நிராகரிப்பு, அறிவியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கட்டுரைகளை எழுதியதற்காக இவருக்கு மிரட்டல்கள் வந்திருந்தன. இவரது கருத்துகள் இஸ்லாத்துக்கு எதிரானவை என விமர்சிக்கப்பட்டிருந்தன. இந்தக் ...

தர்பூசணி... உஷார்!

Posted: 28 Feb 2015 10:31 AM PST

வெயில் காலம் வந்ததும் வெப்பத்தைத் தணிப்பதற்காகப் பல்வேறு இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்களை வாங்கி அருந்துகின்றனர். இளநீர், நுங்கு, மோர், குளிர்பானம், பழச்சாறு, கரும்புச் சாறு, சர்பத், கம்பங்கூழ், தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை வாங்கிச் சாப்பிடுகின்றனர். இவற்றில் முதலிடம் வகிப்பது தர்பூசணி. இது விலை குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் சுலபமாகவும் கிடைக்கக்கூடியது. இருந்தாலும், இதையும் மனநிறைவுடன் சாப்பிட முடியாத அளவுக்கு, தர்பூசணிக்குள் ஊசி மூலம், சிவப்பாகவும் சுவையாகவும் இருக்க ...

இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி

Posted: 28 Feb 2015 10:16 AM PST

- இந்தியா - அரபு அமீரகம் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் டாஸ் வென்ற அரபு அமீரகம் பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து, களமிறங்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 31.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அரபு எமிரேட்ஸ் அணி 102 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா,உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 103 ரன்கள் எடுத்தால் வெற்றி ...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜா!

Posted: 28 Feb 2015 10:14 AM PST

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜா! இதயம் என அறிந்த நாம் , இதையும் அறிவோம் இயல்பாகவே  , பிறந்தது ஃ பிப்ரவரி 29 ஆனாலும் மறப்போமா இவரை வாழ்த்த , சிலர் ஒரு தினம் முன்பாக , மற்றவர் ஒரு தினம் பின்னாக . மொரார்ஜி போல் கறார்ஜி இல்லை இவர் கனிஜியும் இவரே கணினிஜியும்  இவரே ரமணியன்

ஐஎஸ் எதிர்ப்புப் படையில் இணைவது இந்தியாவின் தனித்த விருப்பம் – அமெரிக்கா!

Posted: 28 Feb 2015 10:11 AM PST

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையில் இணைவது இந்தியாவின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது:- "தீவிரவாதத்திற்கு எதிராக, குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்கொள்வதற்காக, அமெரிக்கா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுப் படையில் இந்தியா இணைவது குறித்து அந்நாடுதான் முடிவெடுக்க வேண்டும்". "பயங்கரவாத விவகாரத்தில் இந்தியா கூட்டுப் படையில் இணைந்து ...

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Posted: 28 Feb 2015 10:10 AM PST

சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து. பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ...

- வீட்டுல வாங்கும் பால் லிட்டருக்கு எவ்ளோன்னு தெரியுமா..?

Posted: 28 Feb 2015 09:55 AM PST

# இதனால் சீனா கலக்கமடைந்துள்ளது...!

Posted: 28 Feb 2015 09:54 AM PST

- நாம் எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் நம்மை தனிமைப்படுத்தி விடுகிறது...! - ramvoice - ---------------------------------- - செவ்வாய்க் கிரகத்துக்கு ஒரு வழிப்பயணமாம் அப்படின்னா உசுரு போனதுக்கு அப்புறம் போனா பரலோகம், உசுரு இருக்கும்போதே போனா செவ்வாய்க் கிரகம் - twiteimal - ------------------------------------------- - தமிழ் மாநிலக் கட்சியில் நடிகர் பவர் ஸ்டார் இணைந்தார் # இதனால் சீனா கலக்கமடைந்துள்ளது...! - EvannoOruean - -------------------------------------------- - மருந்து ...

கண்ணாடிகளுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுக்கும் கலை...!

Posted: 28 Feb 2015 09:44 AM PST


-

தமிழ் பயில தளம் வேண்டும்.

Posted: 28 Feb 2015 09:43 AM PST

எனது இரண்டு பேரன்களுக்கு ஆரம்பத் தமிழ் பயிற்றுவிக்க ஏதாவது நல்ல இணைய தளங்கள் உண்டா,தயவுடன் வேண்டுகிறேன். இருந்தால் இங்கே பதிவிடுங்கள்.

தன்னம்பிக்கையின் உச்சம்

Posted: 28 Feb 2015 09:14 AM PST

தன்னம்பிக்கையின் உச்சம் ஃ பிப்ருவரி 28 , 1928 , சர் சி வி ராமன், கண்டுபிடித்த " சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு" " இராமன் விளைவு (Raman Effect)" என்று பெயர் இட்டனர் . சர் சி வி ராமன் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவருக்கு , இந்த கண்டுபிடிப்பு , நிச்சயமாக , நோபல் பரிசு தனக்கு பெற்று தரும் என்ற நம்பிக்கையில் . தனக்கும் , தன் மனைவி லோக சுந்தரிக்கும் , நோபல் பரிசு அறிவிக்கும் தினத்திற்கு ஆறு மாதம் முன்பே , கப்பலில் லண்டன் போவதற்கு டிக்கட்டுகளை வாங்கிவிட்டார் . இதுவன்றோ ...

காக்கி சட்டை விமர்சனம்

Posted: 28 Feb 2015 08:51 AM PST

- - நடிப்பு: சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, இமான் அண்ணாச்சி, பிரபு, மனோபாலா, விஜய் ராஸா ஒளிப்பதிவு: சுகுமார் இசை: அனிருத் தயாரிப்பு: தனுஷ் இயக்கம்: துரை செந்தில்குமார் -- உறுப்புகள் திருட்டு கதைதான்... - ஏற்கெனவே பல படங்களில், இந்த உறுப்புகள் திருட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகிவிட்டது. அதனால் வேறு ஏதாவது வித்தியாசமான கதையை எடுத்து, இத்தனை மெனக்கெட்டிருந்தால், பெரிய வெற்றி கிடைத்திருக்கும். இந்தப் படம் ஓஹோ அல்ல, ஒரு முறை பார்க்கலாம் ரகம்தான்! -

இந்தியா விற்பனைக்கு ரெடி!

Posted: 28 Feb 2015 08:35 AM PST

மத்திய அரசின் மொத்த விற்பனை பஜார் 'புடவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே! உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரௌபதி!' என்று அஸ்தினாபுரத்து இளவரசன் துச்சாதனன், சான்றோர் நிறைந்த சபையில் கூறினான். அதேபோலத்தான் இருக்கிறது... 'நிலங்களைத்தானே எடுக்கிறோம். உங்கள் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இருக்காது விவசாயிகளே' என்று இப்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு சொல்வதும். 100 ஆண்டு காலத்துக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு, வெள்ளைக்கார காலத்து அடிமை சட்டத்துக்குப் பதிலாக, கடந்த கால காங்கிரஸ் கூட்டணி ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (96)

Posted: 28 Feb 2015 08:34 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

தன்னம்பிக்கை சூப் 17 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Posted: 28 Feb 2015 07:28 AM PST

இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள். சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது ...

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்:- பட்ஜெட் குறித்த கருத்துகள்

Posted: 28 Feb 2015 07:17 AM PST

சேவை வரி உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய பட்ஜெட்டில் சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மத்திய பட்ஜெட்டில் வணிகர்களுக்கென்று முத்ரா வங்கி என்ற பெயரில் தனி வங்கியை அமைக்க உள்ளதாக அறிவிப்பு செய்த பிரதமர் நரேந்திரமோடி, நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருககு நன்றியை தெரிவித்து ...

தேர்தல் கலையில் நாம் தேர்ச்சி பெற வேண்டும்

Posted: 28 Feb 2015 07:10 AM PST

தேர்தல் கலையில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் - தா.பாண்டியன் - # டெபாசிட் வாங்குறத சொல்றாரு போல..! - sundartsp - ------------------------------------------- - குழாய்ல தண்ணி பாத்தா அலுப்பு பாக்காம நிறுத்திட்டுப் போங்க... அடுத்த தலைமுறைக்கு நாம சேர்த்து வச்சிட்டுப் போற சேமிப்பு அது மட்டும்தான்...! - mrElani - --------------------------------------------- - மோசமான பெண்ணிடம் நல்ல ஆண் ஏமாறுவது காதலிலும், மோசமான ஆணிடம் நல்ல பெண் ஏமாறுவது கல்யாணத்திலும் சாத்தியம்..! - missloochu - ----------------------------------------- - தி.மு.க., ...

பீப்பீ நாதசுரம்..! -

Posted: 28 Feb 2015 06:51 AM PST

தெருப்புழுதியில் தெக்குப் பாத்த வாசல்படி... உத்தரம் வைக்காம பத்திரமா வீடு கட்டி கொன்னைமர உச்சியிலே கொட்டாங்கச்சி ரேடியோதான் பூவரச இலையால் பீப்பீ நாதசுரம்தான்... - தென்னங்குரும்பையில தேரு செஞ்சு பனை ஓலையிலே தாலி செஞ்சு தெருவெல்லாம் ஊர்வலம்தான்... - தென்ன ஓல சீதனந்தான் குழைச்ச மண்ணுல கொட்டாங்கச்சி இட்டிலியாம் செங்கமண்ணு சட்டினியாம்... - கள்ளி முள்ளொடிச்சு எருக்கம்பூ மாலை மாத்தி கல்யாணமாம் கல்யாணமாம் கள்ளிக்கும் கள்ளிக்கும் கல்யாணமாம் கல்யாணமாம்..! - ------------------------------- -இயக்குநர் ...

பூமியை விட பெரிய கருந்துளை!

Posted: 28 Feb 2015 04:34 AM PST

பூமியை விட சுமார் 1,200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் இருப்பதை சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு SDSS J0100+2802 என்று பெயரிடப்பட்டுள்ளது. கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந் துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள் ளும் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர் களை வெளியிடும் தன்மை கொண் டவையாக உள்ளன. இந்த ஒளிக் ...

பழங்கால தமிழ் நூல்களை இணையத்தில் படிக்கலாம்!

Posted: 28 Feb 2015 03:19 AM PST

தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த சேவையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி நேற்று தொடங்கிவைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தமிழ் சேவையை போற்றும் வகையில் 'தமிழ்த் தாய் 67' விழா, சென்னை தரமணியில் நடந்து வருகிறது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்களின் 2 லட்சம் பக்கங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி http://www.ulakaththamizh.org ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™