Tamil News | Online Tamil News |
- சோனியா - ராகுல் கருத்து வேறுபாடு: காங்., மூத்த தலைவர் அஸ்வினிகுமார் ஒப்புதல்
- முக்கிய சீர்திருத்த திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு பிரகாசம்: மத்திய பட்ஜெட்டை இன்று சமர்ப்பிக்கிறார் ஜெட்லி
- 'ரயில்வே துறை தனியார்மயமாகாது': சுரேஷ் பிரபு
- அரசியல்வாதிகளுக்கு எஸ்ஸார் லஞ்சம்: சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு
- 'ராஜினாமா' நெருக்கடிக்கு முதல்வர் பணிந்தார்: சதீஷ் சாரகிஹோலிக்கு புதிய துறை
- இணையம் மூலம் எதிர்காலத்தில் ஓட்டளிக்க வசதி: தலைமை தேர்தல் கமிஷனர் பிரம்மா அறிவிப்பு
- உல்லாச படகு வீட்டில் தங்கினார்: கட்காரி மீது பரபரப்பு குற்றச்சாட்டு
- பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்தை எட்டும்: மத்திய அரசு மதிப்பீடு
- மத மோதல்களை அனுமதிக்க மாட்டேன்: பிரதமர் மோடி உறுதி
- மீண்டும் அறிவிக்கப்படாத மின் தடை: மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட்
- ஓட்டு போடாதவர்களுக்கும் நன்றி: சொல்கிறார் ஸ்டாலின்
- தமிழக நில அபகரிப்பு வழக்குகள்: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு சுப்ரீம் கோர்ட் எட்டு வாரம் தடை
- 'சிறுமியரை சீரழிப்போர் கையை உடைக்க வேண்டும்': எம்.பி., ராம்தாஸ் அத்வாலே
- கேரளாவின் பல்வேறு பகுதிகளி்ல் வானில் தீ பந்துகள்: மக்கள் அச்சம்
| சோனியா - ராகுல் கருத்து வேறுபாடு: காங்., மூத்த தலைவர் அஸ்வினிகுமார் ஒப்புதல் Posted: புதுடில்லி: ''காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், அவர் மகனும், கட்சியின் துணைத் தலைவருமான ராகுலுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கத் தான் செய்கிறது. அதற்காக, கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து சோனியாவை விலகச் சொல்லக் கூடாது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் கூறினார்.எதிராக குரல்: கடந்த இரு ஆண்டு களுக்கும் மேலாக, பல தேர்தல்களில் படுதோல்வி அடைந்து வரும் காங்கிரசில், கட்சி மேலிடத்திற்கு எதிராக குரல் வலுத்து வருகிறது. 'கட்சிப் பொறுப்பிலிருந்து ராகுல் நீக்கப்பட வேண்டும்' என, ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு சாரார், 'கட்சித் தலைமை ... |
| Posted: புதுடில்லி:வரும், 2015-16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி, இன்று லோக்சபாவில் சமர்ப்பிக்க உள்ளார். அதில், மோடி அரசின் முக்கிய சீர்திருத்த திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. அதுபோல, பொதுமக்களை கவரும் விதத்தில், கவர்ச்சி அறிவிப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட் எதிர்பார்ப்பு:* வரி விலக்கிற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்படலாம். அந்த வகையில், தனிநபர் வரி செலுத்துபவர்களுக்கு சாதகமான சில அம்சங்களுடன், முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறும்.* தனிநபர் வருமான வரி உச்சவரம்பு, 2.5 ... |
| 'ரயில்வே துறை தனியார்மயமாகாது': சுரேஷ் பிரபு Posted: புதுடில்லி: ''ரயில்வே துறை எக்காரணத்தை கொண்டும் தனியார்மயமாக்கப்பட மாட்டாது; ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படாது. தனியார் முதலீடு இத்துறையில் அதிகரிக்கப்பட்டாலும், அதன் ஊழியர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட அனுமதிக்க மாட்டோம்,'' என, ராஜ்யசபாவில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.இதுகுறித்து, கேள்வி நேரத்தின் போது, ராஜ்யசபாவில், அவர் கூறியதாவது: ரயில் இணைப்பு இல்லாத, மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் ரயில் சேவை வழங்கவே, ரயில்வே துறை - தனியார் இணைந்து திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். முதற்கட்டமாக, வடமாநிலங்களில் உள்ள, ஐந்து ரயில் நிலையங்கள், ... |
| அரசியல்வாதிகளுக்கு எஸ்ஸார் லஞ்சம்: சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு Posted: புதுடில்லி:எஸ்ஸார் நிறுவனத்திடம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பெற்ற ஆதாயம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.நிதின் கட்காரி, திக்விஜய் சிங், வருண்காந்தி உள்ளிட்ட அரசியல்வாதிகள் எஸ்ஸார் நிறுவனத்திடம் சலுகைகள் பெற்றது தொடர்பான ரகசிய மின்னஞ்சல் கடிதங்கள் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக பொது நல வழக்கு மையம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:எஸ்ஸார் ... |
| 'ராஜினாமா' நெருக்கடிக்கு முதல்வர் பணிந்தார்: சதீஷ் சாரகிஹோலிக்கு புதிய துறை Posted: பெங்களூரு: அமைச்சர் சதீஷ் சாரகிஹோலியின், 'ராஜினாமா' நெருக்கடிக்கு பணிந்த, முதல்வர் சித்தராமையா, அவருக்கு, தன்னிடம் இருந்த சிறுதொழில் துறையை வழங்கியுள்ளார்.அமைச்சர் சதீஷ் சாரகிஹோலி, தனக்கு வழங்கப்பட்ட கலால் துறையை, விருப்பமில்லாமல் நிர்வகித்து வந்தார். சமூகநலத் துறையோ அல்லது வேறு ஏதாவது துறையை, தனக்கு மாற்றித்தரும்படி, முதல்வரிடம் பிடிவாதம் பிடித்து வந்தார்; இதற்காக நெருக்கடியும் கொடுத்தார். ஆனால், முதல்வர் சித்தராமையாவுக்கு மிக வும் நெருக்கமானவரான ஆஞ்சநேயாவிடம், சமூகநலத் துறை உள்ளது.புறக்கணிப்பு: எனவே, அந்த துறையை திரும்ப ... |
| இணையம் மூலம் எதிர்காலத்தில் ஓட்டளிக்க வசதி: தலைமை தேர்தல் கமிஷனர் பிரம்மா அறிவிப்பு Posted: புதுடில்லி: ''தங்களுக்கு பிடித்தமான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறை, வருங்காலத்தில் புதுமையாக மாற வாய்ப்பு உள்ளது. ஓட்டுச் சீட்டுக்குப் பதில், இணையம் மூலம் ஓட்டளிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் பிரம்மா கூறினார்.மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, நேற்று முன்தினம், லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது, 'இன்டர்நெட் ஓட்டுப்பதி வுக்கு வாய்ப்பில்லை' என, தெரிவித்துள்ள நிலை யில், தேர்தல் கமிஷனர் பிரம்மாவின் பேச்சு, மாறுபாடாக உள்ளது.டில்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த, பிரம்மா ... |
| உல்லாச படகு வீட்டில் தங்கினார்: கட்காரி மீது பரபரப்பு குற்றச்சாட்டு Posted: புதுடில்லி: மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்காரி, 'எஸ்ஸார்' குழும நிறுவனத்துக்கு சொந்தமான உல்லாச படகு விடுதி யில் தங்கி, சலுகை அனுபவித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை, கட்காரி மறுத்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்காரிக்கு எதிராக, பொதுநலன் வழக்கு மையம் என்ற அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இரும்பு மற்றும் எரிசக்தி துறையில் பிரபலமான எஸ்ஸார் குழும நிறுவனத்துக்கு சொந்தமாக, ... |
| பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்தை எட்டும்: மத்திய அரசு மதிப்பீடு Posted: புதுடில்லி: ''நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வரும் நிதியாண்டில், 8.1 - 8.5 சதவீதமாக உயரும்,'' என, மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.நேற்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்டில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். பிரமாண்டமான சீர்திருத்த திட்டங்கள், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்குதல், வரிச் சுமையை குறைத்தல், சேமிப்பை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம், பிரமிக்கத்தக்க வகையில் வளர்ச்சி காணும் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:* புதிய கணக்கீட்டின்படி, நடப்பு, ... |
| மத மோதல்களை அனுமதிக்க மாட்டேன்: பிரதமர் மோடி உறுதி Posted: புதுடில்லி: ''நாட்டில் மத மோதல்களை அனுமதிக்க மாட்டேன். என்னைப் பொருத்தவரை, 'இந்தியா முதல்' என்பது தான் என் அரசின் மதம். என் அரசின் புனித நூல், அரசியல் அமைப்புச் சட்டம் தான். சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள யாருக்கும் அனுமதியில்லை,'' என, பிரதமர் மோடி தெளிவாக கூறினார்.லோக்சபாவில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: |
| மீண்டும் அறிவிக்கப்படாத மின் தடை: மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட் Posted: மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்த நிலையில் அதை பூர்த்தி செய்யும் அளவிற்கு மின் உற்பத்தி ஆகாததால் மின் தடை அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் மின் தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகம் உள்ளது. இதனால் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க மின் தடை செய்யப்படுகிறது. தற்போது வெயில் தாக்கம் கடுமையாக உள்ளதால் மின் தேவை அதிகரித்து வருகிறது. வல்லூர் அனல் மின் நிலைய மூன்றாவது அலகில் வணிக மின் உற்பத்தி துவங்கியதை அடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக 320 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. நேற்று மொத்த மின் உற்பத்தி, 12,170 மெகாவாட் என்றளவில் இருந்தது. ஆனால் மின் தேவை ... |
| ஓட்டு போடாதவர்களுக்கும் நன்றி: சொல்கிறார் ஸ்டாலின் Posted: சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டவர்கள், ஏன் போடாதவர்களுக்கு கூட, நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து ஸ்டாலின் மேலும் கூறியதாவது:போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையை தீர்க்க, 17 பேர் கொண்ட குழுவை அமைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பேச்சுவார்த்தையை துவக்காததால், அனைத்து தொழிற்சங்கங்கள் கூடி முடிவெடுத்து, மார்ச், 3ம் தேதி ஸ்டிரைக் அறிவித்தனர்.ஆனால், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தூண்டுதலின் படி, தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக, அமைச்சர் சொல்கிறார். அ.தி.மு.க., ... |
| தமிழக நில அபகரிப்பு வழக்குகள்: உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு சுப்ரீம் கோர்ட் எட்டு வாரம் தடை Posted: புதுடில்லி: 'நில அபகரிப்பு வழக்குகளை விசாரித்து வரும் தனி நீதிமன்றங்கள் செல்லாது' என, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு, சுப்ரீம் கோர்ட் எட்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளது.முந்தைய தி.மு.க., ஆட்சியில், பெருமளவு நில அபகரிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாக கூறி, அது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழக அரசின் சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்காக, அதிக அதிகாரத்துடன் காவல் துறையில் சிறப்பு பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ... |
| 'சிறுமியரை சீரழிப்போர் கையை உடைக்க வேண்டும்': எம்.பி., ராம்தாஸ் அத்வாலே Posted: புதுடில்லி: ''பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுங்கோலர்களின் கை, கால்களை உடைக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்,'' என, ராஜ்ய சபா எம்.பி., ராம்தாஸ் அத்வாலே பேசியது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.ராஜ்யசபாவில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்.பி.ஐ.ஏ., கட்சி எம்.பி., ராம்தாஸ் அத்வாலே பேசியதாவது: சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. சிறுமியரை கூட, கொடுங்கோலர்கள் விட்டு வைக்காமல் சீரழிக்கின்றனர். சமீபத்தில், மகாராஷ்டிரா வில், பெற்றோருடன் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்ற 7 வயது சிறுமியை, யாரோ சிலர் கடத்திச் சென்று, கொலை செய்து ... |
| கேரளாவின் பல்வேறு பகுதிகளி்ல் வானில் தீ பந்துகள்: மக்கள் அச்சம் Posted: திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தின் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் உட்பட கேரளாவின் பல பகுதிகளில், நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் பல்வேறு தீ பந்துகள் ஏற்பட்டு மண்ணில் விழுந்து மறைந்தது.சிறிய நிலநடுக்கம் போன்ற உணர்வும் ஏற்பட்டதாக மக்கள் பீதியடைந்தனர்.இது குறித்து மாநில அமைச்சர் அடூர் பிரகாஷ்,விசாரணைக்கு உத்தரவிட்டார். சமீபத்திய அறிக்கைகள் விண்கற்கள் வானில் இருந்து விழுந்திருக்கலாம் என சமீபத்திய அறிக்கைகள் காட்டியிருக்கின்றன.சமீபத்தில், இதுபோன்ற சம்பவங்களில் அமெரிக்க, ரஷ்யா மற்றும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 28,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |