Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


டில்லியில் மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கினார் கெஜ்ரிவால்

Posted:

புதுடில்லி: டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மின் கட்டணத்தை குறைப்போம்' என, ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், நேற்று நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், மின் கட்டணத்தை, 50 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்கு, 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, இந்த கட்டண குறைப்பு பொருந்தும். இந்த சலுகை, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும், மாதத்துக்கு, தலா, 20 ஆயிரம் லிட்டர் ...

'நோக்கியா' பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணுங்க: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு

Posted:

புதுடில்லி: 'தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில், செயல்பாட்டை நிறுத்தியுள்ள, 'நோக்கியா' மொபைல் போன் தொழிற்சாலையை புனரமைத்து, மீண்டும் செயல்படுத்த ஏன் விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை' எனக் கேட்டு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கும், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறைக்கும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களை, இந்தியாவுக்கு வந்து தொழில் துவங்க, பிரதமர் அழைப்பு விடுத்து வருகையில், மிகப் பிரமாண்டமாக துவக்கப்பட்ட நோக்கியா மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது, ...

'அ.தி.மு.க., ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு'

Posted:

சென்னை: 'அ.தி.மு.க., ஆட்சியில் இருட்டும் உண்டு, திருட்டும் உண்டு, புரட்டும் உண்டு, புனை சுருட்டும் உண்டு' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: சட்டம், ஒழுங்கு பற்றியும் முதல்வர் ஏதோ பதில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதற்கு நான் பதில் கூற வேண்டியதில்லை. தினந்தோறும் தமிழகத்தில் நடைபெறும் கொலைகளும், கொள்ளைகளும், வழிப்பறிகளும், செயின் திருட்டுகளும், மோசடிகளும் பற்றிய விவரங்களை தமிழக மக்கள் முறையாக தெரிந்திருக்கின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் வசதியாக மறைத்து விட்டு, பன்னீர்செல்வம், 'கடந்த கால மைனாரிட்டி ஆட்சி போல, ...

இன்று ரயில்வே; நாளை மறுநாள் பொது பட்ஜெட் தாக்கல்: அதிரடி சீர்திருத்த திட்டங்கள் வெளியாக வாய்ப்பு

Posted:

புதுடில்லி: பார்லிமென்டில் இன்று, ரயில்வே பட்ஜெட்டும், நாளை மறுநாள், மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இரண்டாவது பட்ஜெட்டான இவற்றில், பல அதிரடி சீர்திருத்த திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெறும் என, அனைத்து தரப்பிலும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்கா, '2015 - 16ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படாது' என கூறிஉள்ளார். ஆனால், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, வாயைத் திறக்க மறுக்கிறார்.அவரின் மவுனம், கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்ற ...

நிலம் கையகப்படுத்தும் மசோதா: விவாதங்களும், குழப்பங்களும்

Posted:

தொழிற்சாலைகள் துவங்கவும், அரசின் புதிய திட்டங்களை துவக்கவும் நிலம் கையகப்படுத்த, இப்போதும், 1894ல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் தான், அடிப்படையாக உள்ளது. அந்தச் சட்டத்தின் படி, தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவது எளிதாக இல்லை என, முந்தைய காங்., கூட்டணி அரசு உணர்ந்தது. அதையடுத்து, 'நிலம் கையகப்படுத்துதலில், நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் வெளிப்படையான தன்மை, மறுகுடியமைப்பு, மறுகுடியேற்ற திருத்த சட்டம்' என்ற பெயரில், முந்தைய காங்., அரசு, 2013ல், ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.அந்த சட்டத்தின் அம்சங்கள் தங்களுக்கு போதாது ...

தைரியம் சொல்ல முன்வராத தலைவர்: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கடுப்பு

Posted:

சட்டசபை உரிமை மீறல் பிரச்னை, போலீஸ் வழக்கு ஆகியவற்றில் சிக்கிய, கட்சியின் ஆறு எம்.எல்.ஏ.,க்களை, இதுவரை விஜயகாந்த் அழைத்து பேசவில்லை. இது அவர்கள் மத்தியில், கடுப்பை கிளப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'சஸ்பெண்ட்': சட்டசபையில், கடந்த 19ம் தேதி நடந்த பிரச்னை தொடர்பாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரும், கூட்டத் தொடர் முழுவதும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ், கொறடா சந்திரகுமார், எம்.எல்.ஏ.,க்கள் பார்த்திபன், சேகர், தினகரன், வெங்கடேசன் ஆகிய ஆறு பேர் மீது, சபை உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டு உள்ளது. ...

ஒரே நேரத்தில் 700 சிவாலயங்களில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்

Posted:

ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, அவரது நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது அ.தி.மு.க.,வினரின் வழக்கம். அதில், ஆண்டுதோறும் ஏதாவது ஒரு விஷயத்தை புதியதாக சேர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் தேதியே போய் சேர்ந்துள்ளது. அதை சத்தமின்றி ஆளுங்கட்சியினர் ...

வட மாநில கொள்ளையர்களால் போலீசுக்கு தலைவலி: கண்காணிப்பை முறைப்படுத்தினால் குற்றங்கள் குறைய வாய்ப்பு

Posted:

தமிழகத்தில் தங்கி உள்ள, வட மாநில சமூக விரோதிகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவது, போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கண்காணிப்பு பணியை முறைப்படுத்தினால், குற்றங்கள் குறைய வாய்ப்பு அதிகம் இருப்பதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தில், விவசாயம் தவிர, கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில், பீகார், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் அசாம், நாகலாந்து உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த, தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில், சமூக விரோதிகள் ஊடுருவி, கொலை, ...

எய்ம்ஸ் மருத்துவமனையில் முறைகேடு

Posted:

புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய அரசுக்கு, டில்லி ஐகோர்ட் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், ஏராளமான முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன், எய்ம்ஸ் மருத்துவமனையின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த, சஞ்சீவ் சதுர்வேதி விசாரணைக்கு உத்தரவிட்டார்.பணிநீக்கம்: இதையடுத்து, அவர் அதிரடியாக பணிநீக்கம் ...

காங்., தலைவராக ராகுல் நியமனம்? ஏப்ரலில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Posted:

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் விடுப்பில் சென்றிருக்கும் காங்., துணைத் தலைவர் ராகுல், விரைவில் கட்சித் தலைவராக நியமிக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரத்தில், விடுப்பில் சென்றிருக்கும் காங்., துணைத் தலைவரும், அமேதி தொகுதி எம்.பி.,யுமான ராகுலின் செயல் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு, கட்சித் தலைவர்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.காங்., தலைவர் சோனியாவுக்கும், ராகுலுக்கும் ஏற்பட்ட கருத்து மோதலே ராகுலின் திடீர் முடிவுக்கு காரணம் என ...

கொதிப்படைந்த மீனவர்களை சமாதானப்படுத்த முயற்சி: சமரச பேச்சுவார்த்தை ஒத்திவைப்பின் பின்னணி?

Posted:

இலங்கை அரசு பல காரணங்களை கூறினாலும், தமிழக மீனவர்கள் தாக்குதலால் அதிருப்தி அடைந்துள்ள இலங்கை மீனவர்களை சமாதானப்படுத்தவே, பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.தமிழக - இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த ஆண்டு ஜன., 27ல், சென்னையில், முதற்கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. இதில், ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து, மே, 12ம் தேதி, இலங்கை தலைநகர், கொழும்பில் நடந்த இரண்டாம் கட்ட பேச்சு தோல்வியில் முடிந்தது.இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், மார்ச், 5ம் தேதி, சென்னையில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட இருந்தது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™