Tamil News | Online Tamil News |
- தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் 3 பேருக்கு போலீஸ் வலை: சட்டசபை சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு
- அரசியல் அரங்கில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் மாயம்: சில வாரங்கள் விடுப்பில் இருப்பதாக தலைவர்கள் தகவல்
- 2022க்குள் ஏழைகள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு
- மத்திய அரசுக்கு எதிராக ஹசாரே போராட்டம்: விவசாயிகளை நசுக்க நினைப்பதாக கொந்தளிப்பு
- வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு: மாதம் இரு சனிக்கிழமை விடுமுறை
- நாளந்தா பல்கலை முறைகேடுகளை விசாரிக்கணும்: அமர்த்தியா சென்னுக்கு குறிவைக்கும் சாமி
- மீத்தேன் திட்டம் பற்றி அச்சம் வேண்டாம்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
- சட்டசபையில் சர்வாதிகார ஆட்சி:ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு
- ஓய்வு பெற்றவர்களுக்கு பதவி: கட்சிகள் எதிர்ப்பு
| தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் 3 பேருக்கு போலீஸ் வலை: சட்டசபை சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு Posted: சட்டசபையில், போலீஸ் உதவி ஆய்வாளரை தாக்கியதாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேர் மீது, மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ், முதல் தகவல் அறிக்கை - எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்களை கைது செய்ய, போலீசார் தேடி வருகின்றனர். தமிழக சட்டசபை, கடந்த, 17ம் தேதி கூடியது. கவர்னர் உரைக்கு பிறகு, அதன் மீதான விவாதம், ஐந்து நாட்கள் நடைபெற்றது. கடந்த, 19ம் தேதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜு பேசும் போது, 'சிட்டிசன்' என்ற வார்த்தையைக் கூறி, அதற்கு, 'குடிமகன்' என, விளக்கம் அளித்தார். அவரைத் தொடர்ந்து, பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ், அ.தி.மு.க., ... |
| Posted: புதுடில்லி:'பார்லிமென்டின் முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொள்ள மாட்டார். ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள, காங்கிரஸ் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் அவர் தீவிரம் காட்டுவார். அதற்காக, சில வாரங்கள் விடுப்பில் இருப்பார்' என, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், அடுத்ததாக, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலிலும், தோல்வியையே தழுவியது. |
| 2022க்குள் ஏழைகள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு Posted: ''கவுரவமான வாழ்க்கைக்கு வீடு என்பது அடிப்படை தேவை. அதனால், அனைத்து குடும்பத்தினரின் விருப்பங்களையும், குறிப்பாக, ஏழைகளில் ஏழைகளாக இருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், 2022ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படும்,'' என, ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, மைய மண்டபத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரையின், முக்கிய அம்சங்கள்:* 'ஒருங்கிணைவோம்; அனைவரும் வளர்ச்சி காண்போம்' என்பதே அரசின் தாரக மந்திரம். கடந்த ஏழு மாதங்களில், நாட்டின், ... |
| மத்திய அரசுக்கு எதிராக ஹசாரே போராட்டம்: விவசாயிகளை நசுக்க நினைப்பதாக கொந்தளிப்பு Posted: புதுடில்லி:மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்திற்கு எதிராக, சமூக ஆர்வலர் அன்னா ஹசரோ, 77, டில்லி, ஜந்தர் மந்தரில் நேற்று நுாற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். |
| வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு: மாதம் இரு சனிக்கிழமை விடுமுறை Posted: புதுடில்லி:ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது. |
| நாளந்தா பல்கலை முறைகேடுகளை விசாரிக்கணும்: அமர்த்தியா சென்னுக்கு குறிவைக்கும் சாமி Posted: ''தன்னை அகில உலக பொருளாதார மேதையாகக் காட்டிக் கொள்ளும் அமர்த்தியா சென், நாளந்தா பல்கலையின் வேந்தர் பதவியில் இருந்து விலகுவதை வரவேற்கிறோம். அவர் பதவியில் இருந்த காலத்தில், நிர்வாக நடைமுறையில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து, பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: |
| மீத்தேன் திட்டம் பற்றி அச்சம் வேண்டாம்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு Posted: சென்னை:''மீத்தேன் திட்டம் குறித்து, யாரும் எந்தவித அச்சமும் அடையத் தேவை இல்லை. இத்திட்டத்தை நிறுத்தி, ஜெயலலிதா உத்தரவிட்டது; பெட்ரோலிய ஆய்வு உரிமம், காலாவதியாகிவிட்டதாலும், அதைப் பற்றி கவலை அடைவது, செத்த பாம்பை அடிப்பது போலத்தான்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.இதுகுறித்து, சட்டசபையில், அவர் கூறியதாவது: |
| சட்டசபையில் சர்வாதிகார ஆட்சி:ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு Posted: சென்னை:''சட்டசபையில், ஆளுங்கட்சி ஜனநாயக போக்கை கடைபிடிக்காமல், சர்வாதிகாரத்துடன் நடப்பது, வேதனை அளிக்கிறது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபைக்கு வெளியே, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சட்டசபையில், எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பட்ஜெட் கூட்டத்தொடர் வரை கலந்து கொள்ளக் கூடாது என, சபாநாயகர் தீர்ப்பளித்து உள்ளார். நாங்கள் கேள்வி நேரம் முடிந்ததும் எழுந்து, சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க முற்பட்டோம்.சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை; அதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.முதல்வர், 'டம்மி' முதல்வராக உள்ளார்; ... |
| ஓய்வு பெற்றவர்களுக்கு பதவி: கட்சிகள் எதிர்ப்பு Posted: சென்னை: அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வு பெற்றவர்களை நியமிக்கும் வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான, 'ஆம்புட்ஸ் மேன்' பதவிக்கும், ஓய்வு பெற்றவரை நியமிக்க, சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., வெளிநடப்பு செய்தது; மார்க்.கம்யூ.,வும் எதிர்ப்பு தெரிவித்தது.விசாரணை :உள்ளாட்சி அமைப்புகளில் எழும் புகார் தொடர்பாக விசாரணை நடத்த, 'ஆம்புட்ஸ் மேன்' என்ற, நடுவர் பதவி உருவாக்கப்பட்டு உள்ளது. இப்பதவிக்கு, முதன்மை செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமிக்க, தமிழக அரசு, கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வந்தது.இச்சட்டத்தைத் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 24,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |