ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?
- பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்!
- “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே”
- " தமிழ் எண்களில் இனிக் கடிகாரம் "!
- ஈகரையின் புதிய வசதிகள்!
- கர்நாடகாவில் கலக்கும் தமிழ் ஸ்பைடர் மேன்!
- சிவனுக்கு சாமரம் வீசும் காவிரி நங்கையின் அரிய சிற்பம் கண்டுபிடிப்பு
- " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- கொத்துக்கடலை மசாலா !
- வை - பைக்கு குட்பை.......... லி-பை!
- உலகின் முதல்தர சிறந்த சர்வதேச விமான நிலையம் என்ற சிறப்பை பெற்றது, துபாய் !
- 2ம்-4ம் சனிக்கிழமைகளில் இனி வங்கிக்கு முழுநாள் விடுமுறை!
- பாகிஸ்தான் போகும் ரயில்
- தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும்
- பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி?
- திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி
- தன்னம்பிக்கை சூப் 8 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- கொழுப்பைக் கரைக்கும் கொட்டார சம்பா
- சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன்
- ஒளிராத ‘தமிழ் வாழ்க’ பலகைகள்
- பிரெஞ்சு பெண்ணின் தமிழிசைக் காதல்!
- பாடிய முதல் பாட்டு
- படங்களை எவ்வாறு பதிவிடுவது?
- அனுபவங்கள் தந்த பாடம்
- இரு துருவம் ---ஒரு அனுபவம்
- ஆஸ்கர் விருது !
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
| தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா? Posted: 23 Feb 2015 03:23 PM PST உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரபூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழிக்கான இடம் எது? பல மொழிகளோடு பிறந்து வளர்ந்து, தன் தோழமை மொழிகள் எல்லாம் சிதைந்த போதிலும் இன்றளவும் ... |
| பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்! Posted: 23 Feb 2015 03:20 PM PST பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி.சக்தி இன்று உடல் நலக்குறைவு காரணமாக இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 75. பரமக்குடியை அடுத்த புழுதிக்குளத்தில் பிறந்த ஆர்.சி. சக்தி, சிறுவயதிலேயே படிப்பை விட்டு விட்டு நடிப்புத் துறையில் ஆர்வம் செலுத்தினார். நண்பர்களுடன் இணைந்து நாடகக்குழுவை ஆரம்பித்தார். இவர் நடித்த நாடகத்தினை கிராம மக்கள் அனைவரும் பாராட்டியதோடு, சினிமாவில் அடியெடுத்து வைக்கவும் உதவினர். ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவில் திரைக்கதையாசிரியராக பணியாற்றிய ஆர்.சி. சக்தி, நடிகர் கமல் நடிப்பில் ... |
| “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Posted: 23 Feb 2015 03:17 PM PST சினிமா என்றதும் நடிகர்கள், வசூல், வெற்றி ஆகியவற்றைவிட, சுவாரசியமான விஷயம் சாப்பாடு. மென்பொருள் நிறுவனங்களில் நவீன கேண்டீன்களில் அது கிடைக்கும் என்றாலும், அதற்குரிய பணத்தை அவர்களின் சம்பளத்தில் பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள். உலகிலேயே சாப்பாடும் போட்டு, சம்பளமும் கொடுக்கிற ஒரே இடம் சினிமாவாக மட்டுமே இருக்கும். பத்திரிகைகளில் ஆகட்டும், ஊடகமாகட்டும், எம்.ஜி.ஆர். தன்னுடன் நடிக்கும், வேலை பார்க்கும் அனைவருக்கும் தனக்குக் கிடைக்கும் சாப்பாடே கிடைக்க வேண்டும் என்று சொல்வாராம். அஜித் படப்பிடிப்பின்போது ... |
| " தமிழ் எண்களில் இனிக் கடிகாரம் "! Posted: 23 Feb 2015 03:05 PM PST உலகிற் சிறந்தது தமிழ் மொழி என நாம் அனைவரும் அறிந்ததே, ஆனாலும் அவற்றின் சில கூறுகளை நாம் பயன்படுத்தாமலேயே வாழ்ந்து வருகிறோம். நாட்காட்டிகளிலும், கணித செயல்பாடுகளிலும் நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்திய அரேபிய எண்கள் ஆகும். தமிழ் தனக்கென எண் உருக்களை கொண்டுள்ளது அவ்வாறான எண்களை தமிழ் எண்கள் என்கிறோம். பல ஆண்டுகள் வாய்பாட்டு தாள்களில் மட்டுமே பெயரளவில் இடம் பெற்றிருந்த இந்த தமிழ் எண்கள் இன்று குழந்தைகள் பாடப் புத்தகங்களில் அச்சாகி படித்து வருகின்றனர். தமிழறிஞர்கள் ... |
| Posted: 23 Feb 2015 02:59 PM PST ஈகரையில் சிவா அண்ணா தினமும் உறவுகளின் வசதிக்காக புதிய புதிய வசதிகளை செயல்படுத்தி வருகிறார் .. அந்த வரிசையில் ஒருவரை எளிதாக நண்பராக இணைக்க கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் போதும் . மேலும் பதிவு வரிசை எண்கள் அவதார் மேலே கொடுக்கப்பட்டுள்ளது..... சிவா அண்ணா சிவா அண்ணா |
| கர்நாடகாவில் கலக்கும் தமிழ் ஸ்பைடர் மேன்! Posted: 23 Feb 2015 11:12 AM PST பெங்களூருவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சித்ரதுர்க்கா மாவட்டம். அதன் தலைநகரும் சித்ரதுர்க்காதான். அங்கே 1,200 ஆண்டுகால வரலாற்றைப் பேசியபடி நிற்கிறது சித்ரதுர்க்கா கோட்டை. மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான சித்ரதுர்க்காவுக்கு மேலும் புகழைச் சேர்த்துவிட்டார் ஜோதிராஜ் என்ற தமிழ் இளைஞர். முப்பது வயதே நிறைந்த இவரது சாகஸங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து விடுகிறார்கள். சித்ரதுர்க்கா கோட்டையின் செங்குத்தான சுவர்களில் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல், விறுவிறுவென ஏறியும், தலைகீழாக ... |
| சிவனுக்கு சாமரம் வீசும் காவிரி நங்கையின் அரிய சிற்பம் கண்டுபிடிப்பு Posted: 23 Feb 2015 10:51 AM PST கும்பகோணம் அருகேயுள்ள மானம்பாடி கைலாசநாதர் கோயிலில் சிவனுக்கு சாமரம் வீசும் காவிரி நங்கையின் அரிய சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து எட்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது மானம்பாடி. இங்குள்ள கைலாசநாதர் கோயில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இங்கே காவிரி நங்கையின் அரிய சிற்பம் இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் வரலாற்று மற்றும் கலையியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் 'தி இந்து'விடம் ... |
| " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- கொத்துக்கடலை மசாலா ! Posted: 23 Feb 2015 09:01 AM PST இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம். |
| வை - பைக்கு குட்பை.......... லி-பை! Posted: 23 Feb 2015 08:54 AM PST வை - பைக்கு குட்பை... வந்துவிட்டது லி-பை! ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் லி-பை என்ற தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கின்றனர். வை-பை தொழில்நுட்பம் ரேடியோ அலைவரிசையை பயன்படுத்துகிறது. ஆனால் லி-பை உபயோகிப்பது நம் கண்ணுக்குத் தெரியும் எல்.இ.டி., போன்ற விளக்கு வெளிச்சம், அகச் சிவப்புக் கதிர் போன்றவற்றை பயன்படுத்துகிறது. ஒளியைப் பயன்படுத்துவதால் தகவல் பரிமாற்றம் மிகவும் வேகமாக நடக்கும். இணையத்தில் லி-பை மூலம் ஒரு நொடியில் 30 முழு படங்களையே டவுண்லோடு செய்யலாம். அதாவது, ஒரு வினாடிக்கு ... |
| உலகின் முதல்தர சிறந்த சர்வதேச விமான நிலையம் என்ற சிறப்பை பெற்றது, துபாய் ! Posted: 23 Feb 2015 07:18 AM PST லண்டனை பின்னுக்கு தள்ளி உலகின் முதல்தர சிறந்த சர்வதேச விமான நிலையம் என்ற சிறப்பை பெற்றது, துபாய் ! துபாய், பிப்.25- எண்ணெய் வளத்திலும், செல்வச் செழுமையிலும் உலகின் கவனத்தை ஈர்த்து வரும் துபாய், சத்தமில்லாமல் இன்னொரு மகத்தான சாதனையையும் தற்போது நிகழ்த்தியுள்ளது. அதிநவீன கட்டிடக் கலைவண்ணம், பசுமையான சுற்றுப்புறம், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வளாகம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் கடந்த (2014) ஆண்டில் சுமார் 7 கோடியே 4 லட்சம் பயணிகள் வந்து சென்றதன் ... |
| 2ம்-4ம் சனிக்கிழமைகளில் இனி வங்கிக்கு முழுநாள் விடுமுறை! Posted: 23 Feb 2015 07:11 AM PST இரண்டாம்-நான்காம் சனிக்கிழமைகளில் இனி வங்கிக்கு முழுநாள் விடுமுறை: விரைவில் நடைமுறைக்கு வருகின்றது1 மும்பை, பிப்.23- ஊதிய உயர்வு, வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள் (பிப்ரவரி 25) முதல் நான்கு நாள்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து, இன்று மும்பையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட வங்கிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் 15 சதவீத சம்பள உயர்வுக்கும் ... |
| Posted: 23 Feb 2015 04:37 AM PST பாகிஸ்தான் போகும் ரயில் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகம் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன் |
| தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும் Posted: 23 Feb 2015 04:28 AM PST சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நீதிபதிகளும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழறிஞர் தமிழண்ணல் வேண்டுகோள் விடுத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்கிற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இப்போராட்டத்தை ... |
| பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? Posted: 23 Feb 2015 04:13 AM PST அரசும் மக்களும் கைகோத்தால் மட்டுமே தொற்றுநோய்களை அடியோடு ஒழிக்க முடியும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் மத்திய மாநிலங்களில் மக்களை அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சல், இப்போது மீண்டும் வந்து மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, தமிழகத்துக்குள்ளும் வந்துவிட்டது. இதுவரை 700-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள். 12,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இத்தனைக்கும் இது ஓர் ... |
| திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Posted: 23 Feb 2015 03:38 AM PST கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எழுத வருவதே அரிதாக இருந்தது. ஆனால் மருங்காபுரி ஜமீன்தாரிணியான கி.சு.வி.லட்சுமி அம்மணி, 1929-ம் ஆண்டு திருக்குறள் தீபாலங்காரம் என்னும் பெயரில் ஒரு அற்புதமான உரை நூலை எழுதித் தமிழுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளார். அதுவரை திருக்குறளுக்கு உரை எழுதிய தருமர், மணக்குடையார், தாமத்தர், நச்சர் அல்லது நத்தர், பரிமேலழகர், பருதி, திருவனையர் அல்லது திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் இவர்களது வரிசையில், 85 ஆண்டுகளுக்கு முன்பு, எளிய வசன நடையில் அதன் உட்பொருள் ... |
| தன்னம்பிக்கை சூப் 8 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Posted: 23 Feb 2015 03:22 AM PST இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள். சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது ... |
| கொழுப்பைக் கரைக்கும் கொட்டார சம்பா Posted: 23 Feb 2015 03:19 AM PST கொட்டார சம்பா நெல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உரிய நெல் ரகம். இதற்கு மொழிக் கருப்பு சம்பா என்ற பெயரும் உண்டு. இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகம். கொட்டாரம் என்றால் அரண்மனை என்று அர்த்தம். அரசர்களின் குடும்பத்துக்காகவே கொட்டார சம்பா நெல்லை நாஞ்சில் நாட்டு மக்கள் உற்பத்தி செய்து வழங்கிவந்துள்ளனர். முதன்மை உணவு இந்த ரகம் நூற்று ஐம்பது நாள் வயதுடையது. ஐந்தடி வரை வளரும். மோட்டா ரகம், மத்திய காலப் பயிர், மஞ்சள் நெல், சிவப்பு அரிசி, பாரம்பரிய நெல் ரகங்களில் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) ... |
| சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Posted: 23 Feb 2015 02:24 AM PST உலகின் மிகப் பழைமையான சிந்துவெளி நாகரிகத்தின் இடம் தற்போது பாகிஸ்தான், குஜராத் மாநிலம், இராஜஸ்தான் மாநிலங்களின் பகுதியில் இருப்பினும், முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் தமிழராக வாழ்ந்து வந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்டுவரும் பல பழைமையான சின்னங்கள், முத்திரைகள் சான்று பகன்று வருகின்றன. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்திரையானது, புறநானூற்றில் வரும் ஒரு வரலாற்றுச் செய்தியோடு ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது. அப்புறப் பாடல் வருமாறு: நீயே, வடபான்முனிவன்றட வினுட்டோன்றிச் செம்புபுனைந் ... |
| Posted: 23 Feb 2015 02:02 AM PST அரசு, உள்ளாட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்ட 'தமிழ் வாழ்க' என்ற நியான் விளக்கு ஒளிரும் பலகைகள் தற்போது கவனிக்கப்படாத தலைவர்கள் சிலைகள் போன்று விடப்பட்டிருக்கின்றன. இன்று சர்வதேச தாய்மொழிகள் தினத்தை கொண்டாடும் நிலையில் தமிழுக்கு நேர்ந்துள்ள இச்சோதனை குறித்து தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த திமுக ஆட்சியின் போது அரசுத்துறை, உள்ளாட்சி அலுவலகங்களில் 'தமிழ் வாழ்க' என்ற வாசகம் அடங்கிய பலகைகள் இரவில் ஒளிரும் வகையில் நியான் விளக்குகளால் வடிவமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. ... |
| பிரெஞ்சு பெண்ணின் தமிழிசைக் காதல்! Posted: 23 Feb 2015 01:44 AM PST இசைக்கு மொழி கிடையாது என்பார்கள். பிரான்ஸைச் சேர்ந்த இமானுவல் மார்ட்டினைப் பொறுத்தவரை அது நூறு சதவீதம் உண்மை. பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணாவிடம் இவர் கர்னாடக இசையைக் கற்றுக்கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல தன் கச்சேரியில் தமிழ்ப் பாடல்களைப் பாடி ரசிகர்களை அசத்திவருகிறார். இவரது குரல் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலைப் போல முறுக்கேறிய மென்மையான குரல். இதில் சுவாரசியம் என்னவென்றால் கர்னாடக இசை மீது ஆரம்பத்தில் பெரியளவில் ஈடுபாடில்லாத மார்ட்டின், ஒரு கட்டத்தில் அந்த இசையைப் பயில்வதற்காகவே இந்தியாவுக்கு ... |
| Posted: 22 Feb 2015 11:23 PM PST - - பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா. - டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. - பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்: "ஜாதகம்' - ... |
| Posted: 22 Feb 2015 11:14 PM PST எமது ஆக்கங்களுக்கு படங்களை எவ்வாறு இலகுவாகப் பதிவிடலாம்? நண்பர்களே உங்கள் உதவி தேவை! |
| Posted: 22 Feb 2015 11:09 PM PST இன்பத்தினும் துன்பமே நலமளிக்கும் – அந்த உண்மையினை வாழ்க்கையே உனக்குரைக்கும் நன்மைகள் சேர்ந்திடவே உளங்களிக்கும் – வெற்றிக் களிப்பினிலே மூழ்கியே தனைமறக்கும்! கண்ணிலே படாமலேயே பகைவளரும் – தக்க தருணத்தினிலே கதிகலங்கச் செய்துவிடும் புண்ணிலே வேல்பாய்ச்சல் போலிருக்கும் – அது படிப்பினையை உனக்கெளித்து விடைபகரும் எண்ணிலா அனுபவங்கள் தந்தபாடம் – எண்ணி வாழ்ந்திட்டால் சூழ்ந்திடாது துன்பமேகம்! |
| Posted: 22 Feb 2015 10:38 PM PST இரு துருவம் ---ஒரு அனுபவம் இரெண்டு நாட்களாய் இணைய முடியவில்லை , உறவுகளே முதல் நாள் -- வாழ்வில் இரு இதயங்கள் இணையும் திருநாள் -- ஆனந்த கண்ணீரும் பாட்டும் கூத்தும் ஒரே கும்மாளம் கூச்சலுடன் பேசிய பேச்சுகளும் காதில் விழவில்லை . அடுத்தநாள் : ஈருடல் ஓருயிர் என்றிருந்தவர் வாழ்வில் ஓருடல் ஓருயிர் என்று ஆன நாள் , வற்றிய கண்ணீர் , அமைதி அமைதி மxxன அமைதி மெல்லிய குரல் விசாரிப்பும் காதில் விழாமல் இல்லை வாழ்வில் நடப்பவைதான் எனினும் , அடுத்தடுத்த நாட்கள் - தத்தாரியையும் தத்துவ ... |
| Posted: 22 Feb 2015 09:53 PM PST லாஸ்ஏஞ்சல்ஸ்: உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட் திரையுலகில், மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக, பல்வேறு நாடுகளிலிருந்து திரைநட்சத்திரங்கள் அங்கு குழுமியிருந்தனர். தி கிராண்ட் புத்தா பெஸ்ட் ஓட்டல் என்ற திரைப்படம், காஸ்ட்யூம் டிசைன் , மேக்அப் மற்றும் ஹேர்ஸ்டைலிங் உள்ளிட்ட துறைகளில் 4 விருதுகளை பெற்றுள்ளது. ... |
| Posted: 22 Feb 2015 09:41 PM PST என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் Posted: 22 Feb 2015 09:21 PM PST கற்பையே இழந்திருக்கலாம்! அவன் விரலும் பார்வையும்கூட என்மேல் தவறாகப் பட்டிருக்காது! காதலில் தோற்ற கட்டியவன் சந்தேகப் படுகின்றான் என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று. இதற்கு நான் அவனிடம் கற்பையே இழந்திருக்கலாம்! |
| Posted: 22 Feb 2015 09:03 PM PST µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| Posted: 22 Feb 2015 08:53 PM PST ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |