Tamil News | Online Tamil News |
- தலிபான்களால் கடத்தப்பட்ட பாதிரியார் எட்டு மாதங்களுக்கு பின் விடுவிப்பு
- விமான நிலையங்களில் வாத்ராவுக்கு முக்கியத்துவம் 'கட்'
- மக்களை ஏமாற்றிய தமிழக அரசு: கருணாநிதி குற்றச்சாட்டு
- தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி:அரசாணை காணாமல் 30 ஆண்டுகளாக தேடும் அவலம்: ஆபத்தில் அரசு ஆவணங்கள்
- நிதி நெருக்கடியால் பட்ஜெட்டில் 100 க்கும் குறைவான ரயில்கள்
- ஸ்பெக்ட்ரம் ஏல வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்
- ரூ.2,000 கோடி முறைகேட்டில் சிக்கியதா நாளந்தா பல்கலை? வேந்தர் பதவியை துறப்பதாக அமர்தியா சென் நாடகம்
- 12 துறைமுகங்கள் அருகே ரூ.50,000 கோடி முதலீட்டில் 'ஸ்மார்ட் சிட்டி'கள்: சென்னை, எண்ணுார், தூத்துக்குடிக்கும் அடித்தது அதிர்ஷ்டம்
- பார்லிமென்ட் சுமுகமாக நடைபெற காங்கிரசுடன் பா.ஜ., சமரசம்? சோனியாவை சந்தித்தார் மத்திய அமைச்சர் வெங்கையா
- ஆர்.டி.ஐ., விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து பதிலளிக்க அரசு உத்தரவு
| தலிபான்களால் கடத்தப்பட்ட பாதிரியார் எட்டு மாதங்களுக்கு பின் விடுவிப்பு Posted: புதுடில்லி:தமிழகத்தின், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர், அலெக்சிஸ் பிரேம் குமார், 47. அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில், கல்விப் பணிக்காக, ஆப்கான் சென்ற இவரை, கடந்த ஜூனில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். |
| விமான நிலையங்களில் வாத்ராவுக்கு முக்கியத்துவம் 'கட்' Posted: பனாஜி:நாட்டின் விமான நிலையங்களில், மிக முக்கிய நபர்களின் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டிருக்கும். அதில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்டோர் மற்றும் எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு பெறும் நபர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். |
| மக்களை ஏமாற்றிய தமிழக அரசு: கருணாநிதி குற்றச்சாட்டு Posted: சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:சட்டசபையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 112 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி நிலையங்கள், தனியார் மூலம் நிறுவப்பட்டு, அந்த மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது' என, கூறிஉள்ளார். ஆனால், சூரிய ஒளி மின்சாரம் பற்றி இந்த ஆட்சியினர் என்ன கூறினர் தெரியுமா?சூரிய சக்தியை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வதிலும், தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மூன்றாண்டுகளில், 3,000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப் போவதாக ஜெயலலிதா ... |
| Posted: டில்லியில், பெட்ரோலிய அமைச்சகத்தில், ரகசிய ஆவணங்கள் காணாமல் போன நிலையில், தமிழகத்திலும், ஏற்கனவே ஆவணங்கள் காணாமல் போய், 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. |
| நிதி நெருக்கடியால் பட்ஜெட்டில் 100 க்கும் குறைவான ரயில்கள் Posted: புதுடில்லி:விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பில் ஏமாற்றம் இருக்கும் என, தகவல்கள் வெளியாகின. இந்தாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சுரேஷ் பிரபு, வரும் 26ல், பார்லிமென்டில் தாக்கல் செய்யவுள்ளார். வழக்கமான ரயில்வே பட்ஜெட்டுகளை விட, இதில், பல அதிரடியான மாற்றங்களும், கட்டுப்பாடுகளும் இருக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டண உயர்வு பெரிய அளவில் இருக்க வாய்ப்பு இல்லை. சரக்கு ரயில் ... |
| ஸ்பெக்ட்ரம் ஏல வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் Posted: புதுடில்லி:நிலக்கரியைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான ஏலத்திலும், ௧ லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களுக்கு, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த, 21ம் தேதி நிலவரப்படி, 18 நிறுவனங்களுக்கு சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ௧ லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில், வரும் மார்ச் 4ம் தேதி, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான ஏலம் துவங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முகேஷ் அம்பானியின் ... |
| ரூ.2,000 கோடி முறைகேட்டில் சிக்கியதா நாளந்தா பல்கலை? வேந்தர் பதவியை துறப்பதாக அமர்தியா சென் நாடகம் Posted: சர்வதேச நாளந்தா பல்கலைக் கழகத்தின் வேந்தர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக, பிரபல பொருளாதார அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென் அறிவித்திருப்பது, கல்வி வட்டாரத்தைக் கடந்து, அனைத்து தரப்பிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.பீகாரில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன், குப்தர்களால் அமைக்கப்பட்ட பழம் பெரும் பல்கலைக் கழகம் நாளந்தா. வெளி நாடுகளில் இருந்தும் பலர், அங்கு வந்து கல்வி பயின்று சென்ற வரலாறு உண்டு.கடந்த ஐ.மு., கூட்டணி ஆட்சி யின் போது, இந்தப் பல்கலைக் கழகத்தை புதுப்பித்து, அதன் கல்வி எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என, முயற்சி ... |
| Posted: புதுடில்லி:நாட்டில் உள்ள, 12 முக்கிய துறைமுகங்களில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 'ஸ்மார்ட் சிட்டி'களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில், சென்னை, எண்ணுார், துாத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படவுள்ளன.பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும் முக்கிய இடம் உண்டு. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போதே, இதை அவர் வலியுறுத்தி இருந்தார். பிரதமராக பதவியேற்றதும், 'நாடு முழுவதும், அனைத்து வசதிகளுடன் கூடிய, உலகத் தரம் வாய்ந்த, 100 ஸ்மார்ட் சிட்டிகள் ... |
| Posted: புதுடில்லி:பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, எதிர்க்கட்சியான காங்கிரசுடன் சமரசத்தில் ஈடுபடும் முயற்சியை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பார்லி., விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, காங்., தலைவர் சோனியாவை நேற்று சந்தித்து, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கோரியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கி, மே, 8ம் தேதி வரை நடக்க உள்ளது. நிலம் கையகப்படுத்துதல், காப்பீட்டு துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தல் உட்பட, ஆறு அவசர சட்டங்களை ... |
| ஆர்.டி.ஐ., விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து பதிலளிக்க அரசு உத்தரவு Posted: புதுடில்லி: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, உரிய காலத்திற்குள் தகவல்களை வழங்கவும், நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கவும், மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாட்டின் பல்வேறு துறைகளில் நடைபெறும் செயல்பாடுகள், அரசு நடவடிக்கைகள், விதிமுறைகள்உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி எந்த ஒரு நபரும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெற விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், ஆர்.டி.ஐ.,மூலம் தகவல் கோரும் விண்ணப்பங்களுக்கு, தகவல் ஆணையத்தின் சார்பில் சரியான பதில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 23,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |