Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கபசுரக் குடிநீர் பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும்

Posted: 22 Feb 2015 01:54 PM PST

தமிழகம் உள்பட நாடு முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்த சித்த மருத்துவ முறையில் "கபசுரக் குடிநீர்' (தூள்) மிகவும் பலன் தரும் என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். நிலவேம்பு, சிறுதேக்கு உள்பட 11 முக்கிய மூலிகைகளை உள்ளடக்கிய "கபசுரக் குடிநீர்' (சித்த மருந்துத் தூள்) பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கவும் உதவும் என்றும் சித்த மருத்துவர்கள் கூறினர். மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு நிகழாண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 19-ஆம் ...

பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் வேண்டும்.

Posted: 22 Feb 2015 01:47 PM PST

பனை மரங்களைக் காக்க சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருபதாவது:- கதர் மற்றும் கிராமத்தொழில் வாரியம் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் சுமார் 5 கோடி பனை மரங்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது ஒட்டு மொத்த இந்தியாவிலும் காணப்படும் பனைகளில் பாதி அளவு ஆகும். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பனை மரங்களின் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. பனை மரத்தின் ...

மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Posted: 22 Feb 2015 01:42 PM PST

புது டெல்லி - மோடி டீ விற்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தகவல் அறியும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்றும், இளம் வயதில் ரெயில் மற்றும் ரயில் நிலையங்களில் டீ விற்று உழைத்தவன் என்றும் கூறினார். இதையடுத்து பா.ஜனதாவினர் டீக்கடை பிரச்சாரத்தை பெரிதுபடுத்தி பேசினார்கள். டீக்கடைகளில் மோடியின் உரை அவ்வப்போது ஒளிபரப்பு செய்தனர். மோடி டீ விற்றவர் என்ற தகவல் பா.ஜனதாவுக்கு தேர்தலில் கைகொடுத்தது. மோடி ...

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Posted: 22 Feb 2015 11:55 AM PST

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது. மெல்பர்னில் இன்று நடந்த பி-பிரிவு ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு இந்திய அணி 307 ஓட்டங்களை குவித்திருந்தது. தென்னாப்பிரிக்க அணி 40.2 ஓவர்கள் முடிவில் 177 ஓட்டங்கள் மட்டுமே குவித்திருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து ...

வீரசிவாஜி சிலைக்கு ரூ.1900 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

Posted: 22 Feb 2015 11:42 AM PST

மும்பை - மகாராஷ்டிரா அரசின் சார்பில் அரபி கடலில் அமைக்கப்பட உள்ள வீரசிவாஜியின் மிகப் பெரிய நினைவிடத்திற்கு ரூ.1900 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் படேலுக்கு உலகிலேயே மிகப் பெரிய இரும்பு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நவிஸ் தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றதும் மும்பையில் உள்ள அரபி கடலில் வீரசிவாஜிக்கு சிலையுடன் கூடிய மிகப்பெரிய நினைவிடம் ...

உலகச் செய்திகள்!

Posted: 22 Feb 2015 11:25 AM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

உலகக் கோப்பை யாருக்கு?

Posted: 22 Feb 2015 11:22 AM PST

கோடிக்கணக்கான ரசிகர்களின் கொண்டாட்டத் திருவிழா தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறும் 11வது உலகக் கோப்பை கிரிக்கெட் பற்றிய சில நினைவுக் குறிப்புகள் உங்களுக்காக... A, B என இரண்டு பிரிவுகள். தலா 7 அணிகள். இந்தியா B பிரிவில் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் மற்ற ஆறு அணிகளுடன் விளையாட வேண்டும். இதில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், கால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். இந்தியா: லீக் சுற்றில், இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் மோதுவதால், 'ஆரம்பமே ...

மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபா இறந்த தினம்: பிப்ரவரி 22- 1944

Posted: 22 Feb 2015 11:20 AM PST

கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, ...

ஆப்கானிஸ்தானில் தேவகோட்டை பாதிரியார் மீட்கப்பட்ட தகவலை அவரது தந்தையிடம் டெலிபோனில் தெரிவித்த மோடி

Posted: 22 Feb 2015 11:17 AM PST

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் (வயது 47). ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று, அங்கு ஏசு சபையின் அகதிகள் சேவை திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தார். போரினால் பாதிக்கப்பட்ட அகதிகள் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்து வந்தார். அவரை கடந்த ஆண்டு ஜுன் மாதம் 2-ம்தேதி தலிபான் தீவிரவாதிகள் ...

ஸ்ரீஹயக்ரீவர் !

Posted: 22 Feb 2015 11:09 AM PST

கடவுள் அறிவோம்! பரிமுகக் கடவுளே போற்றி! ஸ்ரீஹயக்ரீவர் எல்லாவிதமான வித்தை களுக்கும் ஆதாரமாக இருப்பவர் இவரே. ஆய கலைகள் அறுபத்துநான்கையும் நமக்கு அருளும் ஸ்ரீசரஸ்வதிக்கும் குருவாக இருப்பவர் ஸ்ரீஹயக்ரீவர். ஒருமுறை, மதுகைடபர் எனும் அசுரர்கள், குதிரை வடிவில் வந்து பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களையும் பறித்துச் சென்றனர். வேதங்களை இழந்ததால் உலகெல்லாம் இருள் சூழ்ந்தது. செய்வதறியாமல் திகைத்த, பிரம்மன், மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். அவருக்கு திருவருள் புரியத் தீர்மானித்த மகாவிஷ்ணு, ஸ்ரீஹயக்ரீவராக ...

நானெழுதிய கவிதை...............

Posted: 22 Feb 2015 11:01 AM PST

எனக்கும் இந்த கவிதைக்கும் எந்த பேதமுமில்லை .. என்னை போலவே இருக்கும் ,, பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் .. தன்னை எழுதி தொலைந்து போக வைத்த கவிஞனை தேடி அலையும் ஓர் கவிதையின் கதை..... ------------------------------------- **------------------------------------ மறதி வரம் தான் அவள் ஞாபகம் வராத  வரை ... ------------------------------------- **------------------------------------ நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , , கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய பாடலின் "முதல் ...

27,000 பதிவுகளை கடந்துள்ள ஈகரையின் இதயம்.

Posted: 22 Feb 2015 10:58 AM PST

பதிவுகள் 27,000 கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நம் தலைமை நடத்துனர் ராஜா அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லுவோம் வாருங்கள். மேலும், மேலும் பதிவுகள் உயர வாழ்த்துக்கள் ராஜா.

ஒரு கோப்பை அழுகை….!! -Mano Red

Posted: 22 Feb 2015 10:55 AM PST

குடிகாரன் அவனுக்கென்ன கவலை..? புத்திக்கு எட்டாத போதையில் மயங்கி அவன் கிடக்கையில், மளிகை சாமான்களும், மண்ணெண்ணை தீர்ந்ததும் என திட்டித் தீர்க்கும் என் புலம்பல்…!! அப்பன் அவனுக்கென்ன கவலை..? மதிய உணவாவது மகன் ஒழுங்காய் தின்னட்டுமென, கிழிந்த மேல்சட்டையுடன் புத்தகப்பை ஏதுமின்றி பள்ளிக்கு அனுப்பும் என்பாடு…?? திருடும் அவனுக்கென்ன கவலை..? பல்லைக் கடித்துக் கொண்டே பகலெல்லாம் சம்பாதித்த பத்து ரூபாய் பணத்தை, பசியுடுடன் வரும் மகனுக்காக பத்திரப்படுத்தும் என் தவிப்பு..!! மிருகம் ...

வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Posted: 22 Feb 2015 10:32 AM PST

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 1 1662 - ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் சீனாவின் இராணுவத் தளபதி கொக்சிங்கா தாய்வான் தீவைக் கைப்பற்றினார். 1788 - ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர். 1793 - ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது. 1814 - பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது. 1864 ...

தெரிஞ்சுக்கோங்க!............. யானைகளின் துக்கம்!

Posted: 22 Feb 2015 10:28 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்!

Posted: 22 Feb 2015 10:10 AM PST

கொஞ்ச நாளுக்கு முன்னால...ஷாப்பிங் போவதற்காக அந்த கடைக்கு முன்னால நிறுத்திட்டு உள்ளே போனேன். திரும்பி வந்து பார்த்தபோது வண்டியை காணோம்ங்க!" என காணாமல் போன வண்டியை தேடி அலைந்து கிடைக்காததால் காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு புலம்பி நிற்பவர்கள் ஏராளம். அப்படியான புலம்பல்கள் சமீபகாலமாக திருச்சியில் அதிகரித்துள்ளது. இவ்வாறு பைக்கை தொலைத்த 200க்கும் மேற்பட்டவர்கள், இன்று தங்களது தொலைந்த வாகனத்தை ஓரிடத்தில் ஒன்றாக தேடி அலைந்த சம்பவம் ஒன்று அரங்கேறியது. இடம் திருச்சி கன்டோன்மென்ட் காவல்நிலைய ...

தன்னம்பிக்கை சூப் 6 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Posted: 22 Feb 2015 07:56 AM PST

இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள். சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது ...

முதலாளி! - ஒரு நிமிடக் கதை !

Posted: 22 Feb 2015 03:34 AM PST

டீக் கடையில் டீ குடித்தவாறு, பக்கத்து சைக்கிள் கடை வேலைக்காரச் சிறுவனைக் கவனித்தேன். வெளியே சென்று திரும்பிய முதலாளியிடம், அவர் இல்லாத நேரத்தில் பஞ்சர் ஒட்டியது, சக்கரத்துக்குக் காத்தடித்தது என்று கணக்குச் சொல்லி, 28 ரூபாயைக் கொடுத்தான்! வேலை முடிந்து கிளம்பிய சிறுவனின் வாயைப் பிடுங்கினேன். ''அந்த 28 ரூபாயை நீயே கைச் செலவுக்கு வெச்சுக்கலாமே... முதலாளிக்குத் தெரியவா போவுது?'' ''தப்பு சார்! நாளைக்கு நானும் ஒரு கடைக்கு முதலாளி ஆவேன். அப்ப என் வேலைக்காரங்க எப்படி இருக்கணும்னு எதிர்பார்ப்பேனோ, ...

”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”

Posted: 22 Feb 2015 02:26 AM PST

'கொரில்லா'வில் தொடங்கி 'கண்டி வீரன்' வரையிலும் தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்துவக் குரல். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இயங்கி, பின்னர் அதில் இருந்து விலகி, புலிகளை இப்போதுவரை கடுமையாக விமர்சித்து வருபவர். சமகாலத்தின் சிறந்தகதைசொல்லிகளில் ஒருவரான ஷோபா சக்தி, இப்போது கதாநாயகன். 'தீபன்' என்ற பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். பாரீஸில் இருந்து ராமேஸ்வரத்தில் கடைசிக்கட்டப் படப்பிடிப்புக்காக வந்திருந்தவரிடம் பேசினோம்... ''பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர் ஜாக் ஓடியார் இப்போது இயக்கும் படம் ...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 22 Feb 2015 02:19 AM PST

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

3 ஸ்டார் ரெசிப்பி

Posted: 22 Feb 2015 01:10 AM PST

தமன்னா... ஒரு குட்டி பொக்கே போல ஃபிரஷ்ஷான தோற்றம். தன்னுடைய அழகான சருமத்துக்கும், இளமையான தோற்றத்திற்கும் தினமும் எடுத்துக்கொள்ளும் ஹெல்த்தி உணவுகளே காரணம் என்கிறார். தமன்னாவின் ஃபேவரிட் உணவுகளை செய்துகாட்டுகிறார் சென்னை கிரீன் பார்க் ஹோட்டல் சீனியர் செஃப் தங்கப்பன். டிஷ்களின் பலன்களை சொல்கிறார் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன். லீன் அன்ட் லைட் சாலட் தேவையானவை: கீரை - 150 கிராம், முளைகட்டிய சிறு பயறு - 50 கிராம், தக்காளி - 30 கிராம், வினிகர் - 5 மி.லி, ஆலிவ் எண்ணெய் - 15 மி.லி, மிளகுத் ...

பாலைவனத்தில் ஒரு துயவன்!

Posted: 22 Feb 2015 12:45 AM PST

நரியா, ஓர் அமைதியான கிராமம். பாலைவனத்தில் கால் கடுக்க நடந்துபோக வேண்டும். சிவப்பு மணல் நிலத்து ஒற்றையடிப் பாதைதான், கிராமத்தைச் சென்றடைய வழி.  சுற்றிலும் இருந்த சுண்ணாம்புப் பாறைக் குன்றுகள்தான், கிராமத்தைப் புழுதிப்புயல் தாக்காமல் காக்கின்றன. சுலைமான், கருணை மனம் கொண்டவர். பழகுவதற்கு எளிமையானவர். எல்லோருக்கும் உதவுவது, அவருக்குப் பிடித்த விஷயம். சுலைமானின் மனைவியும் அவரைப் போல சாதுவான பெண்மணி. சுலைமானுக்குச் சொந்தமாக ஈச்சந்தோட்டம் உள்ளது. கணவன், மனைவி சேர்ந்தே அதன் பராமரிப்பு வேலைகளைச் ...

திக்... திக்... திருப்பம்! - ஒரு நிமிடக் கதை!

Posted: 21 Feb 2015 09:34 PM PST

மூர்த்தி சார் மகள் புவனாவுக்கு நான் இன்று டியூஷனின் போது லவ் லெட்டர் கொடுக்கப் போவதாகச் சொன்னதும், பதறிவிட்டான் மகேஷ். ''வேணாண்டா சிவா, அவசரப்படாதே! புவனா, அதை அவங்க அப்பாகிட்ட கொடுத்துட்டா என்னாகும், யோசிச்சியா? மூர்த்தி சாரின் ஃபேவரைட் ஸ்டூடன்ட் நீ. அவர் உன் மேல வெச்சிருக்கிற அன்பு, மதிப்பு எல்லாம் ஒரே லெட்டர்ல காலி யாகிடும். நல்லாப் படிச்சு பப்ளிக்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்க ட்ரை பண்ணுடா!'' என்றான். ''போடா! வீணா என்னை பயமுறுத்தறே. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது!'' என்று புத்தகத்துக்குள் ...

ஒழுக்கம்! - ஒரு நிமிடக் கதை !

Posted: 21 Feb 2015 09:33 PM PST

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம நாதன் மிகவும் கண்டிப்பானவர். அவரது கழுகுக் கண்களிலிருந்து ஒரு பயல் தப்ப முடியாது! அன்றைக்கும் அப்படித்தான், ஏழாம் வகுப்புப் பையன் ரமேஷ் வைத்திருந்த ஆபாசப் படங்கள் அடங்கிய புத்தகம் அவர் கையில் வசமாகச் சிக்கிவிட்டது. அவ்வளவுதான்... பிரம்பை எடுத்து வெளு வெளுவென்று வெளுக்க ஆரம்பித்து விட்டார். பையன் கதறி அழுதான். ''சரி, விடுங்க சார்! சின்னப் பையன் ஏதோ தெரியாம...'' என்று பையனுக்காக சக ஆசிரியர் கோபு பரிந்து வர, ''நீங்க இதுல தலையிடாதீங்க! எனக்கு மாணவர்களின் ...

அன்றும்..! - ஒரு நிமிடக் கதை

Posted: 21 Feb 2015 09:32 PM PST

'அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள், சந்திரனைச் சுற்றி வரும் ஒரு துணைக் கோளில் நீர் தேடும் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளனர். இதனால், அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு உலகின் குடிநீர்ப் பஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது!' என சன் டி.வி. ஒளிபரப்பிய செய்தியைப் பார்த்துக்கொண்டே தன் எட்டு வயது மகனுக்கு உணவு பரிமாறினாள் அம்மா. ''வாட் மம்மி... எப்போ பார்த்தாலும் அதே நூடுல்ஸ், அதே பீட்ஸாதானா?'' என்று அவன் சிணுங்கியதைச் சற்றும் கவனிக்காதவளாக, ''இன்னிக்குத் தேதி என்ன?'' என்றாள் பரபரப்பாக. ராம்ஸ் அருகில் இருந்த ...

யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !

Posted: 21 Feb 2015 09:30 PM PST

செல் சிணுங்கியது. ''ஹலோ, யார் பேசறது?'' ''தீபா பேசறேன், ரமேஷ்தானே?'' ''ஆமாம், தெரியலையா?'' ''தெரியுது, தெரியுது! எங்கிருந்து பேசறே?'' ''வீட்டிலிருந்துதான்! நீ?'' ''நான் ஆபீஸில் இருக்கேன்!'' ''ஆபீஸ் முடிஞ்சதும் வரியா?உனக் காகக் காத்திருப்பேன்!'' ''எங்கே?'' ''வழக்கமான இடத்தில்தான்!'' ''சரி, வரேன்!'' யார் இந்த தீபா? ரமேஷ§க்கு ஒன்றுமே புரியவில்லை. தீபாவும் குழம்பிக்கொண்டிருக்கிறாள்... 'இவன் எந்த ரமேஷ்?!' -இளங்கோ

கே.எஸ்.ரவிக்குமார் வீட்டில் நட ந்த 90களில் அறிமுகம் ஆன திரையுலகினர் சந்திப்பு - ஆல்பம்!

Posted: 21 Feb 2015 09:30 PM PST

இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்!

Posted: 21 Feb 2015 09:29 PM PST

பண்பாடு, பழக்கவழக்கம், கல்வி, வேலைவாய்ப்பு என, எல்லாவற்றிலும் நாம், மேலைநாடுகளை பின்பற்றும் சூழலில், அதே விஷயங்களுக்காக மேலைநாட்டவர், இந்தியாவை பின்பற்றும் காட்சிகளும் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன. டென்மார்க்கைச் சேர்ந்த, 59 வயதான மைக்கேல், சைவ சித்தாந்தம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். சென்னை பல்கலை மாணவரான அவரிடம் பேசியதில் இருந்து... * சென்னை பல்கலையில் படிப்பதற்கான காரணம்? இதற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. என் வாழ்க்கைக்கும், இந்த படிப்புக்கும் தொடர்பு உள்ளது. நான் ...

தர்ம தரிசனம்! - ஒரு நிமிடக் கதை

Posted: 21 Feb 2015 09:29 PM PST

'கோயிலுக்குச் சாமி கும்பிட வந்தால் இப்படியா கால் கடுக்க நிற்பது? வந்தோமா, கும்பிட்டோமா, போனோமா என்றிருக்கவேண் டாமா..!' - வத்சலா உள்ளுக்குள் கொதித்த படியே தர்ம தரிசன வரிசையில் கணவனுடன் நின்றிருந்தாள். தன் வீட்டாருடன் எந்தக் கோயிலுக்குப் போனாலும், 'சிறப்பு வழி'யில் தான் போவாள். கல்யாணமாகி இங்கு வந்த திலிருந்துதான் இப்படி! 'சரியான கஞ்சன்' என்று கணவனை மனசுக்குள் திட்டினாள். சுமார் ஒரு மணிநேரம் கழித்து தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்ததும், கணவ னிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க, அவன் சிரித்தபடியே ...

ஓடிப் போயிட்டா..!- ஒரு நிமிடக் கதை

Posted: 21 Feb 2015 09:29 PM PST

''ஏங்க, எதிர்வீட்டு புவனா இல்ல...'' ''ஆமா, அவளுக்கென்ன?'' ''அவ லெட்டர் எழுதிவெச்சிட்டு, நேத்து ராத்திரி எவன் கூடவோ ஓடிப் போய்ட்டாளாம்!'' ''எவன் கூடவோன்னா...?'' ''அவ எவனையோ லவ் பண்ணியிருப்பா போல இருக்கு. வீட்ல வேற இடத்துலகல்யாணத் துக்கு ஏற்பாடு பண்ணவும், அது பிடிக்காம அவன் கூட ஓடிப் போய்ட்டாளாம்!'' ''எதுக்கு...?'' ''இதென்னங்க கேள்வி? எதுக்காக ஓடுவாங்களாம்? அவனைக் கட்டிக்கிட்டு அவனோட சேர்ந்து வாழத்தான்!'' ''அதுக்குத்தானே போயிருக்கா! இதிலே என்ன தப்பு இருக்கு? அவளுக்குப் பிடிச்ச ...

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!.

Posted: 21 Feb 2015 08:04 PM PST

நித்திய வாழ்க்கை…!! * நல்ல காலம் பிறந்து விட்டதென்று அவசர அவசரமாய் கல்யாணப் பொறுப்புகளைப் படபடவென்று பார்க்கத் தொடங்கினர். ஜாதகம் பார்ப்பதில் தொடங்கியது ஒன்பது பொருத்தம் பார்த்தனர். இலட்சங்களை வாரி இரைத்து இறுமாப்போடு ஊர்ப் போற்றும் சீர்வரிசையோடு திருமணம் செய்து முடித்தனர். எத்தனை நொடிகள்? நிமிடங்கள்? எத்தனை நாள்கள்? மாதங்கள்? எத்தனை வருடங்கள்? தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியோடு வாழ்ந்தாய். சின்னச் சின்னச் சிணுங்களின் சிக்கல்களில் விழுந்தாய். சிந்தைத் தடுமாறினாய் மனஇறுக்கமானாய் மனமுறிவு ...

'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்'

Posted: 21 Feb 2015 07:49 PM PST

தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், 'ரியல் எஸ்டேட்'காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன். எம்.இ., எலக்ட்ரானிக்ஸ் முடித்த இவர், 10 ஆண்டுகளாக இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, தற்போது, 'ஏரோபோனிக்ஸ்' விவசாய திட்டம் குறித்த ஆராய்ச்சியில் ...

‘சுக்கு நுாறானது’ பாக்., * வெ.இண்டீஸ் ‘சூப்பர்’ வெற்றி!

Posted: 21 Feb 2015 07:47 PM PST

கிறைஸ்ட்சர்ச்: இந்தியாவிடம் சந்தித்த தோல்வியில் இருந்து மீளாத பாகிஸ்தான் அணி, மீண்டும் சொதப்பியது. நேற்றைய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஆன்ட்ரூ ரசல் 'ஆல்–ரவுண்டராக' அசத்தினார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்­சர்ச்சில் நடந்த உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா 'பவுலிங்' தேர்வு செய்தார். கெய்ல் ஏமாற்றம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் (23), ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™