Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் காஸ் மானியம் கட்

Posted:

புதுடில்லி: ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்த அதிரடி அறிவிப்பு, இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியாகிறது. மத்திய அரசானது, சமையல் எரிவாயு வினியோகம் உட்பட, பல திட்டங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை படிப்படியாகக் குறைத்து, அதற்காக ஒதுக்கப்படும் நிதியை, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என, விரும்புகிறது; அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக துவக்கி உள்ளது. மானியம் ஒழிப்பு: ...

அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு 'டுவிட்டர்' தொண்டர்கள் கைகொடுப்பரா? : விடுப்பு எடுத்து பணியாற்றும் தன்னார்வலர்கள்

Posted:

புதுடில்லி:டில்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் வீதி வீதியான பிரசாரங்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்கள் மூலமான பிரசாரமும் தீவிரம் அடைந்துள்ளது. ஆம் ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்., கட்சிகள், இந்த விஷயத்தில், ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்ற ரீதியில் செயல்படுவதால், எந்தக் கட்சிக்கு, 'டுவிட்டர் மற்றும் பேஸ்புக்' விரும்பிகள் கைகொடுப்பர் என்ற பரபரப்பு உருவாகி உள்ளது.

மும்முனைப்போட்டி:
டில்லி சட்டசபைக்கு, வரும், 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அரவிந்த் ...

'வாஸ்து'வால் வீணாகும் வரிப்பணம் : ராவ், நாயுடு அடிக்கும் பெருங்கூத்து

Posted:

ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களின், 'வாஸ்து' மோகத்தால், கோடிக்கணக்கில், மக்களின் வரிப் பணம் பாழாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையில், 'ஆந்திரா தலைநகரை சிங்கப்பூர் போல் மாற்றுவேன்' என முழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், 'ஐதராபாத்தின் சுற்றுப் பகுதிகளை, தகவல் தொழில்நுட்ப முதலீடுகள் குவியும் கோட்டையாக ஆக்குவேன்' என சூளுரைத்த சந்திரசேகர ராவும், வாஸ்து வலையில் விழுந்து, போட்டி போட்டு, அரசு கஜானாவை காலி செய்து வருகின்றனர்.சந்திரசேகர ராவ், வெளிப்படையாகவே, 'தற்போதுள்ள தெலுங்கானா தலைமைச் செயலகத்தில் வாஸ்து சரியில்லை' என்று ...

போலி நிறுவனத்திடமிருந்து ஆம் ஆத்மிக்கு நன்கொடை வந்ததா? பகீர் குற்றச்சாட்டால் பரபரப்பு

Posted:

புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சிக்கு போலியான நிறுவனத்திடமிருந்து நன்கொடை வந்துள்ளதாகவும், வரி செலுத்துவதை தவிர்க்கும் வகையில் இந்த முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்த கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள், 'ஆம் ஆத்மி தன்னார்வ அமைப்பு' என்ற பெயரில் இயங்கி வருகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த கோபால் கோயல் உள்ளிட்டவர்கள், டில்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக சில ...

அவசர சட்டங்களை அமல்படுத்துவது சரியல்ல: மத்திய அரசை விமர்சிக்கிறார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

Posted:

லக்னோ: ''அவசர சட்டங்களை, மத்திய அரசு குறைவான அளவில் அமல்படுத்தினால் நன்றாக இருக்கும்,'' என, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின், ஒன்பது அவசர சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அதனால், மோடி அரசு அதிக அளவில் அவசர சட்டங்களை அமல்படுத்துவதாக, சர்ச்சை எழுந்துள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூட, இது பற்றி விமர்சித்தார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியதாவது: அவசர சட்டங்களை குறைவான அளவில் ...

அரசியலில் சிக்கிய அம்பேத்கர் இல்லம்

Posted:

மும்பை : மும்பையில், அம்பேத்கர் கட்டிய வீட்டை விட்டு விட்டு, அவர், லண்டனில் வாடகைக்கு இருந்த பங்களாவை, நினைவு இல்லம் ஆக்க முயற்சிப்பதில், அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அம்பேத்கர், 1920 - 22 வரை லண்டன் பொருளாதார கல்லூரி யில் படித்தபோது, அங்குள்ள பங்களா ஒன்றில் வாடகைக்கு குடியிருந்தார். இந்த பங்களா, நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என, மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மும்பையில், தாதர் அருகே அம்பேத்கர், 1934ல் சொந்தமாக கட்டிய வீட்டின் தரைதளம், பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் நிலையில், அதை நினைவு இல்லம் ஆக்க முயல்வதின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. ...

பல்வேறு திட்டங்களில் இந்தியாவில் சீனா ரூ.1.20 லட்சம் கோடி முதலீடு: சுஷ்மா

Posted:

பீஜிங்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன், இரு நாடுகளின் பரஸ்பர நல்லுறவு திட்டங்கள் குறித்து பேசினார்.இதுகுறித்து, சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: கடந்த ஆண்டு இந்தியா வந்து, பிரதமர் மோடியை சந்தித்த பின், இந்தியா - சீனா இடையேயான உறவு, புதிய நிலையை எட்டியுள்ளது என, ஜி ஜிங்பிங் தெரிவித்தார். பரஸ்பர வளர்ச்சி: இதன் காரணமாக, இந்தாண்டு, இந்தியா - சீனா நாடுகளின் பரஸ்பர வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, அவர் நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளும் மேற்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்கள், செயல்வடிவம் பெற்று ...

ரயில் பயணிகளுக்கு அடித்தது யோகம் : பணம் இல்லாமலே 'டிக்கெட் புக்' செய்யலாம்!

Posted:

புதுடில்லி: ரயில் பயணிகள், ஆன் - லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இனி, முன் கூட்டியே பணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. முதலில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, டிக்கெட்டை கையில் பெறும் போது, பணம் செலுத்தும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் போக்குவரத்து தேவையை ரயில்வே துறை பூர்த்தி செய்து வருகிறது. ரயில்வே துறையின் சார்பில் இயங்கும் டிக்கெட் கவுன்டர்கள் தவிர, ஆன் - லைன் முறையிலும் பயணிகள் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் ...

ஓட்டுக்கு ஏற்ப சீட்டு: கருணாநிதி யோசனை

Posted:

சென்னை : 'வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு, சிறை தண்டனை கிடைக்கும் என, மத்திய அரசு கொண்டுவரவுள்ள சட்டத்திருத்தத்தை வரவேற்கிறேன்; அதேசமயம், அனைத்து கட்சிகளின் தலைவர்களிடம் ஆலோசித்து நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:வாக்காளர்களுக்கு, பணம் அல்லது பொருள் லஞ்சமாக கொடுப்பது குறித்து புகார் செய்தால், வழக்கு பதிவு செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது. லஞ்சம் கொடுப்பவர்களை வாரன்ட் இல்லாமல் கைது செய்யும் அதிகாரத்தை, போலீசாருக்கு கொடுக்கும் ...

வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரியும் அவலம் வேலூர் மாவட்டத்தில் அதிரடி ஆய்வு நடக்குமா?

Posted:

வேலூர் : வேலூர் மாவட்டத்தில், போதிய பாதுகாப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளில், வடமாநில தொழிலாளர்கள் பலர், கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.க

கழிவுநீர் தொட்டி உடைந்தது:
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், கடந்த 31ம் தேதி அதிகாலை, தோல் கழிவுநீர் தொட்டி உடைந்ததில், 10 பேர் பரிதாபமாக இறந்தனர்; அவர்களில், ஒன்பது தொழிலாளர்கள், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து, விசாரித்த போது கிடைத்த தகவல்கள் ...

துணை ராணுவ படைகளுக்கு 62 ஆயிரம் பேர் தேர்வு: அறிவிப்பை வெளியிட்டுள்ளது உள்துறை

Posted:

புதுடில்லி: துணை ராணுவப் படைகளுக்கு, பெண்கள் மற்றும் ஆண்கள் என, 62 ஆயிரத்து, 390 போலீசாரை தேர்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.வயது வரம்பில் சலுகை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,), எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.,), மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,), தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.,), இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை (ஐ.டி.பி.பி.,), சாஸ்திர சீமா பல் (எஸ்.எஸ்.பி.,), அசாம் ரைபிள், செயலக பாதுகாப்பு படை (எஸ்.எஸ்.எப்.,) போன்ற மத்திய துணை ராணுவப் படைகளுக்கு, ஆண்கள் மற்றும் பெண்கள் என, 62 ஆயிரத்து, 390 போலீசாரை ...

அமெரிக்க - இந்திய உறவு சீனாவுக்கு அச்சுறுத்தல் அல்ல : அதிபர் ஒபாமா உறுதி

Posted:

வாஷிங்டன்:''இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்ல உறவு, சீனாவுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலாக இருக்காது. அதேநேரத்தில், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாடுகளை, சீனா அச்சுறுத்தக் கூடாது,'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மாதம் இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதுபற்றி, கருத்து தெரிவித்த சீன அரசு, 'அமெரிக்காவின் வலையில், இந்தியா விழுந்து விடக்கூடாது' என, கூறியது.சீனாவின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், அதிபர் ஒபாமா கூறியுள்ளதாவது:இந்தியா - அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளது. இந்த உறவு குறித்து, சீனா ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™