Tamil News | Online Tamil News |
- எச்.எஸ்.பி.சி., அலுவலகங்களில் சுவிஸ் போலீஸ் அதிரடி சோதனை
- இலங்கையின் போர் குற்ற விசாரணை: பான் கி மூன் கண்காணிக்க திட்டம்
- 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்: ஆறு மாதங்களுக்குள் வழங்க அரசு நடவடிக்கை
- யாருடன் கூட்டணி: கையை பிசையும் தி.மு.க.,: 5ம் தேதி செயற்குழுவில் முக்கிய விவாதம்
- 'பெங்களூரு டாக்டரிடம் காட்டுங்கள்': கெஜ்ரிவாலுக்கு மோடி அறிவுரை
- மோடியின் சர்ச்சைக்குரிய 'கோட்'டை 1.21 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்ட தொழில் அதிபர்
- மின் தேவையை நிறைவேற்றுவதற்காக சுரங்கம் கேட்கிறது ஆம் ஆத்மி
- 'பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயணித்த படகைத் தகர்க்க உத்தரவிடவில்லை' : கடலோர காவல் படை அதிகாரி 'அந்தர் பல்டி'
- அன்புமணி முதல்வர் வேட்பாளர்: பா.ம.க.,வை கழட்டி விட பா.ஜ., முடிவு
- பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை: முதல்வர்
- சபையில் பயன்படுத்த கூடாத வார்த்தை அல்ல 'கோமாளி' : தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் பதில்
- பொதுமக்கள் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில்: சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது
- தே.ஜ., கூட்டணிக்கு முழுக்கு? தெலுங்கு தேசம் கட்சி அதிரடி
| எச்.எஸ்.பி.சி., அலுவலகங்களில் சுவிஸ் போலீஸ் அதிரடி சோதனை Posted: ஜெனீவா: சுவிட்சர்லாந்து போலீசார், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, ஜெனீவாவில் உள்ள, எச்.எஸ்.பி.சி., வங்கி அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். எனினும், இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஜெனீவா கிளையில், இந்திய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின், 1,195 ரகசிய கணக்குகள் உட்பட, 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் கணக்கு விவரங்கள் கடந்த மாதம் வெளியாயின. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, சுவிஸ் கோர்ட்டில், இவ்வங்கி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்டவிரோத பணப் ... |
| இலங்கையின் போர் குற்ற விசாரணை: பான் கி மூன் கண்காணிக்க திட்டம் Posted: நியூயார்க்: இலங்கை அரசு மேற்கொள்ள உள்ள போர் குற்ற விசாரணையை, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் உன்னிப்பாக கண்காணிக்க திட்டமிட்டு உள்ளார் என, அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில், அதிபர் சிறிசேன தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு, விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்விசாரணை யின் முன்னேற்றம் குறித்து, பான் கி மூன் உன்னிப்பாக கவனிக்க திட்டமிட்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்னைக்கு சமரச தீர்வு காண்பதுடன், ... |
| 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்: ஆறு மாதங்களுக்குள் வழங்க அரசு நடவடிக்கை Posted: சென்னை: தமிழகத்தில், 'ஸ்மார்ட் கார்டு' வடிவத்தில் இன்னும் ஆறு மாதங்களில் புது ரேஷன் கார்டுகளை வழங்கும் பணி தீவிரமடைந்து உள்ளது. ஆதார் அடையாள அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்கள்அடிப்படையில், இந்த ஸ்மார்ட் கார்டுகள் தயாராகின்றன.'ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, அடுத்த சில மாதங்களில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும்' என, சட்டசபையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நேற்று உறுதிஅளித்தார்.இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்:பார்த்திபன் - தே.மு.தி.க.,: புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு, ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை. அமைச்சர் ... |
| யாருடன் கூட்டணி: கையை பிசையும் தி.மு.க.,: 5ம் தேதி செயற்குழுவில் முக்கிய விவாதம் Posted: சட்டசபை தேர்தலை சந்திக்க, வலுவான கூட்டணி அவசியம் என்ற நிலையில் இருக்கும் தி.மு.க., தலைமை, அதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக, கட்சியின் மாநில செயற்குழுவை, சென்னையில் அடுத்த மாதம் 5ம் தேதி கூட்டி உள்ளது. |
| 'பெங்களூரு டாக்டரிடம் காட்டுங்கள்': கெஜ்ரிவாலுக்கு மோடி அறிவுரை Posted: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலம் குறித்து, மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாது, அவருக்கு உள்ள இருமல் பிரச்னைக்கும், மருத்துவ அறிவுரைகளையும், பிரதமர் நரேந்திர மோடி வழங்கியது, தெரிய வந்துள்ளது.விமர்சனம்: டில்லியில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.,வுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அரவிந்த் கெஜ்ரிவாலை, தன் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி உட்பட, பா.ஜ., தலைவர்கள் பலரும், கடுமையான வார்த்தைகளால், விமர்சனம் செய்தது, பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. ... |
| மோடியின் சர்ச்சைக்குரிய 'கோட்'டை 1.21 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்ட தொழில் அதிபர் Posted: சூரத்: அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரிய கோட், குஜராத்தில் ஏலத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபல தொழில் அதிபர் ஒருவர், இந்த கோட்டை, 1.21 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசினர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த நீல நிற கோட்டில், சிறிய எழுத்துகளில், அவரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த கோட், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்றும், ... |
| மின் தேவையை நிறைவேற்றுவதற்காக சுரங்கம் கேட்கிறது ஆம் ஆத்மி Posted: புதுடில்லி: டில்லி மக்களின் மின் தேவையை நிறைவேற்றுவதற்காக, தங்களுக்கு நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்யும்படி, ஆம் ஆத்மி அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியில் ஏற்கனவே, கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி, டில்லி சட்டசபைத் தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மின் கட்டணத்தை, 50 சதவீதம் குறைப்போம்' என, தெரிவித்திருந்தது. இந்நிலையில், டில்லியில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை போக்குவதற்கு, ஆம் ஆத்மி, ஒரு புதிய முயற்சியை ... |
| Posted: புதுடில்லி: 'பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயணித்த படகைத் தகர்க்க உத்தரவிடவில்லை' என, கடலோர காவல் படை அதிகாரி, 'அந்தர் பல்டி' அடித்தார்.கடந்த ஆண்டு டிசம்பர், 31ம் தேதி நள்ளிரவில், பாகிஸ்தானின் கராச்சி நகர துறைமுகத்திலிருந்து, நான்கு பயங்கரவாதிகளுடன், குஜராத் நோக்கி பயணித்த படகு, நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது. 'கடலோர காவல் படையினரின் எச்சரிக்கையை மீறி, வேகமாகச் சென்றதால், அந்தப் படகை, வீரர்கள் சுற்றி வளைத்ததும், அதிலிருந்த பயங்கரவாதிகள் தங்களைத் தாங்களே வெடி வைத்து தகர்த்து இறந்தனர்' என, மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், கடலோர காவல் படையின் ... |
| அன்புமணி முதல்வர் வேட்பாளர்: பா.ம.க.,வை கழட்டி விட பா.ஜ., முடிவு Posted: தமிழகத்தில், 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு, பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி அமையும்; அந்த கூட்டணியின் சார்பில் அன்புமணி, முதல்வர் வேட்பாளராக இருப்பார் என, பா.ம.க., அறிவித்துள்ளது. இதற்கு, கூட்டணி கட்சிகள் சார்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இதனால், கூட்டணியில் இருந்து பா.ம.க.,வை கழற்றி விடும் முடிவுக்கு, பா.ஜ., தலைமை வந்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பா.ம.க., போட்டியிட்டது. அதில், தர்மபுரியில் மட்டும், பா.ம.க., சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ... |
| பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை: முதல்வர் Posted: சென்னை: 'பஸ் கட்டணம் குறைக்கப்பட வாய்ப்பில்லை' என, சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.அவர் பேசியதாவது:சபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, 'டீசல் விலை குறைந்துள்ளதால், பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்' என்றனர். கடந்த, 2011ல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டபோது, டீசல் விலை லிட்டருக்கு, 43.10 ரூபாயாக இருந்தது. தற்போது, லிட்டர், 48.32 ரூபாயாக உள்ளது. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டபோது இருந்த விலையை விட, 5.22 ரூபாய் கூடுதலாக உள்ளது.பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பின், பல முறை டீசல் விலை உயர்த்தப்பட்டது. அப்போது, பிற மாநிலங்கள், பஸ் கட்டணங்களை ... |
| சபையில் பயன்படுத்த கூடாத வார்த்தை அல்ல 'கோமாளி' : தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் பதில் Posted: சென்னை: ''கோமாளி என்ற வார்த்தை, சட்டசபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தை அல்ல,'' என, சபாநாயகர் தனபால் கூறினார்.சபாநாயகரின் கருத்தை ஏற்காமல், 'கோமாளி' வார்த்தையை, சபை குறிப்பிலிருந்து நீக்கக் கோரி, அமளியில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் வெளியேற்றப்பட்டனர். |
| பொதுமக்கள் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில்: சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது Posted: புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை, பொதுமக்களின் கேள்விகளுக்கு, சமூகவலைதளங்கள் வாயிலாக பதிலளிக்கும் புதுமையான முயற்சி துவங்கப்பட்டுள்ளது. 'மன் கி பாத்' என்ற பெயரில், பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் ரேடியோவில் பேசி வருகிறார். அந்த உரையில், அரசின் திட்டங்கள், தன் கொள்கைகள், எதிர்கால செயல்திட்டங்களுடன், பொதுமக்களுக்கு அறிவுரையும் வழங்குகிறார். |
| தே.ஜ., கூட்டணிக்கு முழுக்கு? தெலுங்கு தேசம் கட்சி அதிரடி Posted: ஐதராபாத்: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை, தே.ஜ., கூட்டணியில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அந்த கூட்டணியிலிருந்து வெளியேற, தெலுங்கு தேசம் திட்டமிட்டு உள்ளது.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த, அசோக் கஜபதி ராஜு, விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், ஆந்திராவிலிருந்து பிரிந்து, தனி மாநிலமாக உதயமாகியுள்ள தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 19,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |