Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தசாவதாரம் பற்றிய புத்தகம் வேண்டும்..

Posted: 18 Feb 2015 01:27 PM PST

Dear frnds,Plz upload lord Vishnu dasavatharam

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Posted: 18 Feb 2015 09:56 AM PST

வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் இனிப்புகள் வாங்க வசதியாக வந்துள்ளது ஸ்வீட்கானா.காம். ஸ்வீட்கானா.காம் டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது. நெல்லையில் தலைமை அலுவலகமும் பிற இடங்களில் கிளைகளும் உள்ளன. இந்த இணையதளம் துவங்கிய ஒரு மாதத்திற்குள் 1,000க்கும் அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளன. முதலில் அல்வாவில் துவங்கி தற்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பிற இனிப்புகளும் விற்கப்படுகிறது. சர்வதேச ஷிப்பிங் முறை அடுத்த மாதம் துவங்கப்படும். இந்த இணையதளத்திற்கு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கார்பரேட் ...

இந்தியர்கள்

Posted: 18 Feb 2015 08:54 AM PST

அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்... ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்)... சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)... ... ...

9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆதிரா

Posted: 18 Feb 2015 08:31 AM PST

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 9 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் அரங்கத்தலைவராக அடியேன். எதிர் பாராத இந்த வாய்ப்பு இன்ப அதிர்ச்சியாக. மாநாட்டைப் பற்றி இவ்வளவுதான் கூற முடியும். ஆனால்......

நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?

Posted: 18 Feb 2015 08:21 AM PST

- எங்க அம்மாவை நீ எதுக்கு தூக்கத்துல எட்டி உதைச்சே..? – நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? – ————————— – அந்த டான்ஸ் மாஸ்டர் எப்படி..? – அவரு பொண்டாட்டி பேச்சைக் கேட்டுனு ஆடுவாரு..! – —————————- – என்னங்க என்னோட புது பட்டுப் புடவை இன்னிக்கு காணாமப் போய்டுத்து… – நேத்து நீ கட்டினு இருந்தியே அப்ப காணாமப் போயிருக்கக் கூடாது…! – —————————– -வி.சாரதி டேச்சு – குமுதம்

சித்த வைத்திய குறிப்புகள்

Posted: 18 Feb 2015 06:39 AM PST

1.மேனி நிறம் பொன்நிறமாக;- மஞ்சள்கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம் . 2.தேகம் பொன்னிறமாக;- ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிடலாம் . 3.முகம் பளபளக்க;- நாட்டு வாழைப்பழம் நன்றாக பழத்தது ஆலிவ் ஆயில் சேர்ந்து பிசைந்து முகத்தில் தடவி 1மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம் . 4.முகச்சுருக்கம் மறைய;- முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம் . 5. உடல் மினுமினுப்பாக;- இரவில் படுக்கப் போகும் முன் தேன் ,குங்குமப்பூ ,மஞ்சள் சேர்ந்து அரைத்து சாப்பிட்டு வரலாம் ...

நாட்டு மருந்துக் கடை!!!

Posted: 18 Feb 2015 06:08 AM PST

திப்பிலி! திரிகடுகு எனும் மூலிகை மும்மூர்த்திகளில் மூன்றாமவர். சுக்கையும் மிளகையும் அறிந்த அளவுக்கு, இந்தத் தலைமுறை திப்பிலியை அறிந்திருக்கவில்லை. மிளகைப் போன்றே மிக முக்கிய மருத்துவக் குணம் உடையது இது. "கட்டி எதிர்நின்ற கடும் நோயெல்லாம் பணியும்" என தேரன் சித்தர் சிலாகித்துப் பாடிய இந்த திப்பிலி, சாதாரண சளி, இருமல் முதல் இளைப்புநோய் வரை குணப்படுத்தும். இளைப்புநோய் என்பது குழந்தைகளை எடை குன்றச்செய்து, காயச்சலும் சளியுமாய் இருக்கச்செய்யும் இளங்காசம் எனும் பிரைமரி காம்ப்ளக்ஸ் தான். ''மாமனுக்கு ...

பூமி சூரியனை சுற்றவில்லை என சர்ச்சையை கிளப்பும் அரேபிய மதகுரு

Posted: 18 Feb 2015 05:43 AM PST

பூமி சுற்றுகிறது, அது சூரியனை வட்ட வடிவில் சுற்றி வருகிறது என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையல்ல என சவுதி அரேபியா மதகுரு ஒருவர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அந்த மதகுருவின் பெயர் ஷேக் பந்தர் அல்–ஹைபாரி. இவரிடம் பூமியை பற்றி மாணவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் இதுபோன்ற முரண்பாடான பதிலை கூறினார். மாணவர்களிடம் பூமி சுற்றவில்லை. ஆடாமல் அசையாமல் ஓரிடத்தில் அப்படியே நிற்கிறது என்று எடுத்துக்காட்டுடன் தெரிவித்தார். தண்ணீர் ...

பதிவு ஒப்பன் செய்தால் டவுன்லோட் ஆகுது .சிவா தம்பி எங்கிருந்தாலும் வரவும்.

Posted: 18 Feb 2015 05:01 AM PST

எனக்கு பதிவை ஒப்பன் செய்தால் பக்கம் டவுன்லோட் ஆகுது. அதனால என்னால வர முடியல யாராச்சும் தீர்வு சொல்லுங்களேன் .

தமிழ் டைப் செய்தா டைப் ஆகாம டவுன்லோட் ஆகுது.

சில நேரம் தமிழ் வொர்க் ஆகுது . மோஸ்ட்லி தமிழ் டைப் செய்தா டவுன்லோட் தான் ஆகுது .

அன்புடன் பானு

அரசியலில் குதித்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்

Posted: 18 Feb 2015 04:58 AM PST

சென்னை: தமிழ் மாநில கட்சியில் இணைந்து நடிகர் பவர்ஸ்டார் அரசியலில் குதித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் தொடங்கிய, தமிழ் மாநில கட்சியின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டையில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திடீரென மேடை ஏறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் தமிழ் மாநில கட்சியில் இணைவதாக அறிவித்தார். உடனே அவருக்கு கட்சி நிறுவனர் ...

தொழில் முனைவோர்களுக்கு இருக்க வேண்டிய பத்து மைண்ட்செட்!

Posted: 18 Feb 2015 04:51 AM PST

சோதனை முயற்சிக்கு பயப்படக் கூடாது! தொழிலில் சில நேரங்களில் சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். அதுபோன்ற நேரங்களில் சோதனை முயற்சிகளை செய்யத் தயங்க கூடாது. இதனைச் செய்தால் நஷ்டம் ஏற்படுமா, ஏற்படாதா என்கிற கேள்விகளுக்கு இடம் தராமல் சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டும். தயங்காமல் சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது தொழில்முனைவோருக்கு முடிவெடுக்கும் திறனையும், தொழில் மீது அவருக்குத் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். தொடங்குவதில் தாமதம் வேண்டாம்! ஒரு தொழிலை தொடங்க நினைத்தாலோ அல்லது ...

இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

Posted: 18 Feb 2015 04:34 AM PST

சென்ற வெள்ளிக்கிழமை வெளியான தனுஷின் 'அனேகன்' பலதரப்பட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. கே.வீ.ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் அமைரா டாஸ்டர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு சாதாரணமான முன்ஜென்ம கதையில், ரசிகர்களை கவரும் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தார் தனுஷ். முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம், இரண்டாம் நாளில் மேலும் 11 கோடி வசூல் செய்து மொத்தம் 20 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இதற்காக தனுஷ், தனக்கு இந்த வெற்றியை தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி, மேலும் இயக்குநர் கே.வீ.ஆனந்த், ...

இருட்டில் மரத்து மேல் உட்கார்ந்து

Posted: 18 Feb 2015 03:32 AM PST

இருட்டில் மரத்து மேல் உட்கார்ந்து------------ தன் மகனை, முதன் முறையாக அரசியல் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார் தந்தை. கூட்டம் அதிகமாக இருந்ததால், மேடையை விட்டு வெகு தொலைவில் இருந்தனர். ஆனாலும், மரத்தில் கட்டியிருந்த ஒலிபெருக்கியில், அரசியல்வாதியின் குரலைக் கேட்டு, திருப்தி அடைந்தார் தந்தை. வீட்டிற்கு வந்த பின், மகனிடம் அம்மா, 'அந்தத் தலைவரைப் பார்த்தாயா?' என்று கேட்டாள். 'இருட்டில் மரத்து மேல் உட்கார்ந்து கொண்டு, சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்; முகத்தைப் பார்க்க முடியவில்லை...' ...

ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே ஊழல் தலைவிரிக்கத் தொடங்கிவிட்டது - ராமதாஸ்

Posted: 18 Feb 2015 03:19 AM PST

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆளுநரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் தலைமையிலான குழு, கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், 2011ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 'தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, மாநில அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. ...

தைரியமா உள்ளே வாடி…நாய் கடிக்காது…!

Posted: 18 Feb 2015 03:18 AM PST

தைரியமா உள்ளே வாடி…நாய் கடிக்காது…! – நாயும் உன் கட்டுப்பாட்டுலதான் இருக்காடி..? – -பி.பாலாஜி கணேஷ் – ——————————- – இலவசமா போலியோ சொட்டு மருந்து தர்றாங்க என்பதற்காக, இன்னொரு குழந்தை பெத்துக்கலாமான்னு நீ கேக்குறது டூ மச்…!! – -எஸ்.மோகன் – ——————————- என் புருஷன் போகிற போக்கே சரியில்லைடி… – ஏன் என்ன பண்ணினார்..? – சர்வன்டுக்கு ஏன் பட்டுப் புடவை வாஙிக் கொடுத்தீங்கன்னு கேட்டதுக்கு…அவ சர்வன்ட் இல்லை…அதுக்கும் மேலே-ன்னு சொல்றார்..! – -வெ.பாலாஜி – ——————————————- – மகாராணியார் ...

வலையில் வந்த வினை!

Posted: 18 Feb 2015 03:17 AM PST

கவலையின் பிடியில் வலிநீக்கிய அறிமுகம் வலைவழி முகிழ்த்த மதிமயக்கிய புதுமுகம் நிலையில் நில்லாது தடுமாறிய தென்மனம் விலைகொடுத்து வாங்கிய துன்பத்தின் ஆரம்பம்! கரம்பிடிக்க ஆளில்லை ஆறுதலாக வந்தவளைப் புறந்தள்ள துணியாது இளமைவேகம் கொண்டாடக் குறும்புப் பேச்சோடு தொடங்கிட்ட சிலிர்ப்புகளை விரும்பி ஏற்றதனால் வந்ததொல்லை ஏராளம்! ஆசை வார்த்தையோடு அவசர உதவியென்று காசுபணம் கேட்டபோது மறுத்துப்பேச மனமில்லை கொஞ்சுமொழி சிணுங்கலில் வாயடைத்து விட்டபோது நாசவேலை இதுவென்று நல்லறிவு சொல்லவில்லை! சிறிதளவில் ...

காலையில் பழங்கள் சாப்பிட்டால் சுறுசுறுப்புடன் செயல்படலாம்!

Posted: 18 Feb 2015 03:16 AM PST

காலை உணவை எடுத்துக்கொண்டால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக்கொள்வதுடன், கூடவே பழங்களையும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. குடலியக்க பிரச்சனையோ அல்லது மலச்சிக்கல் பிரச்சனையோ இருப்பவர்கள், காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நச்சுக்களானது சீரான முறையில் தள்ளப்பட்டு, செரிமான மண்டலமானது முறையாக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனையானது நீங்கும். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடலின் ஊட்டச்சத்து நாள் முழுவதும் இருக்கும். தர்பூசணியை ...

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்

Posted: 18 Feb 2015 03:08 AM PST

இனிய நண்பர்களுக்கு

ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா தெளிவாக பிரிண்ட் செய்வதுபோல் மின்னூல் கிடைக்குமா?

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 18 Feb 2015 02:09 AM PST

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார்

Posted: 18 Feb 2015 12:42 AM PST

பெங்களூரு: முழுநேர அரசியலுக்கு பிரியங்கா வந்தால் வரவேற்பேன் என லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, முழுநேர அரசியலில் ஈடுபட்டால் அது காங்கிரசுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும் என்றார். 2 நாள் பயணமாக பெங்களூரு வந்திருந்த மீராகுமார், நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வர், மீராகுமாரை வரவேற்றார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து மீரா குமார் பேசுகையில்,அனைத்து ஜாதியினரின் ...

ஆராரோ பாடிடுவோம்

Posted: 17 Feb 2015 10:45 PM PST

ஆராரோ பாடிடுவோம் அலையோசை கேட்ட போது. உன் குரலோசை கேட்டது. உன் மடி மீது தவழத்தான் தனியாத தாகமாய் எண்ணங்கள் புயலாக எழுகிறது. கண்ணாடி முன்னாடி நிற்கையில் உன் திரு மேனி முன்னாடி நிற்குதடி. தள்ளாடித் திரிகிறேன். உன் நினைவில். தோப்போரம்  மானாட மயிலாட தோகை யெல்லாம் விரித்தாட உன் கரு மேக தோப்போரம். மல்லிகைப்பூ வாசனையில் மதுவுண்டு கழிக்குது. வண்டுகள். மதுவுண்டு கழிக்கும் வண்டு போல. நானும் உன் தலை முடியை கொய்யும் காலம் எப்போது. சிலகாலம் காதலித்து. சிந்தை குளிர ...

எரியும் தீப்பிழம்பு

Posted: 17 Feb 2015 10:08 PM PST

பள்ளியறை-முதல் கட்சியறை-வரை ஈழத் தமிழரின் மரணக் –கோலத்தின் உதிரம் துவைந்த   பதாதைகள் ஏந்தியபடி   தமிழக பாதைகள் அதிர்ந்த வண்ணம் உலக அரங்குக்கு பறைசாற்றும் உரிமைக்குரல் தமிழகம் எங்கும் -ஒலிக்கிறது,   எம் தொப்புள் கொடி உறவாம் எம் ஈழச் சொந்தங்கள் இரக்கமற்ற மரணத் தாண்டவத்தின் விளிம்பில் சாய்ந்தவர்கள். கோர முகத்தை கிழிக்கும் கோடித் தமிழர்களின்-உணர்ச்சிக்குரல் தமிழகத்தில் அங்கும் இங்கும்-வெடிக்கிறது, மண் மானம் தன் மானம் -காக்க உணர்ச்சிகளின் உத்வேகத்தில் உணர்வுகள் ...

இறைவன் இளிச்சவாயன்.!!!-Mano Red

Posted: 17 Feb 2015 09:55 PM PST

அன்று மட்டும் என்ன அவ்வளவு கூட்டம்,,,?? அத்தனை நாளும் பார்த்த அதே இறைவன் தான், அன்று கொஞ்சம் நன்றாக குளிப்பாட்ட பட்டிருப்பார்…!! கோவில் வரும் வழி நெடுக பேச்சுக்கு கூட துளி இரக்கமின்றி அத்தனை மனிதாபிமானங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு, சிறப்பு தரிசனம் பெற்றால் நீ யோக்கிய மனிதனா..?? எல்லாவற்றிற்கும் தலையாட்ட இறைவன் என்ன முட்டாளா…?? இல்லை இளிச்சவாயனா…?? வரிசையில் நிற்கும் போது பெண்களை உரசிவிட்டு கண்ணை மூடி மன்னிப்பு கேட்டால் நீ புனிதமானவனா..?? ஆன்மீக விஞ்ஞானம் எல்லாம் அடியோடு ...

ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்....

Posted: 17 Feb 2015 09:05 PM PST

சென்னை: எந்த ஊரில் எது சிறப்பு அதில் யார் கை தேர்ந்தவர்கள் என்பதை ஊர் சுற்றி ஆராய்ந்து, ஒரு சிறு வட்டத்தினுள் சிக்கி இருந்த நம்ம ஊர் பாரம்பரிய தின்பண்டங்களையும், பொருட்களையும் வெகு ஜன சந்தைக்கு சீரும் சிறப்புமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம். தாய்லாந்து, மெக்சிகோ, இத்தாலி போன்ற நாடுகளின் பண்டங்களுக்கு எந்த வகையிலும் குறையாத, அதைவிட சிறந்த பண்டங்கள் நம்மிடையே ஏராளம் இருந்த போதும் அவற்றை சந்தை படுத்த தவறியதால் இன்று அவர்களின் பண்டங்கள் உலக பிரசித்தி பெற்றுள்ளது. அதே ...

அன்பே உனக்காக ஒரு மடல்

Posted: 17 Feb 2015 08:17 PM PST

ஆயிரம் நாட்கள் அர்ச்சனை செய்து ஆயிரம் நாட்கள் ஆலயம் வணங்கி. ஆயிரமாவது.நாளில்ஆசை மனதில் ஆணி வேர் போல அங்குஷம் செய்தாய் காலங்கள் நகர.நம் காதலும் நகர்ந்தது. உன் மெல்லிய கூந்தலை  தடவிட என் மெய்யோடு நீ சாய்ந்தாய் மேகமது குடை பிடிக்க உன் மெல்லிய மூச்சுக் காற்று எனக்கு சுவாசம் தந்தது. என்னை விட்டுப்பிரிந்த போது வாழ்க்கை நிர்க்கதியாகியது இலையுதிர் காலம் போல. வாழ்க்கை உதிர்கிறது. நேற்றைய காற்றை. உனக்கு தூது விடுகிறேன் இதை அறிந்தாவது.மடல் எழுதுவாய் இளவேனிக்காலம் போல் என் வாழ்க்கையில் ...

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Posted: 17 Feb 2015 08:07 PM PST

*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*

அத்தை வீட்டு சின்னக் கிளி

Posted: 17 Feb 2015 07:59 PM PST

என் அத்தை வீட்டு சின்னக் கிளி நீயே மாமரத்து இளம் குயிலே மாமன் வரு வான் வென்று. மல்லிகைப்பூ தலையில் சூடி மந்தாரப் பொழுதினிலே. ஒய்யாரம் செய்கிறாய் ஒற்றை வழி போகிறேன் என்று ஓரக்கண்ணாலே ஒதுங்கி நின்று பார்க்கிறாய் காதல் வசந்தம் கற்பனா சக்தியாய் உன் உச்சந்தலையில் ஏற ஏற என் ஞாபகமே உன் மனக் கடலில் ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்... தாலாட்ட நிம்மதியாய் நீவிடும் பெருமூச்சில் திக்கு தடுமாறும் என் இதயம் நிம்மதியாய் உறங்குகிறதே. அத்த வீட்டு சின்ன கிளியாலே. கடல் அன்னையின் மடியில் இருந்து துள்ளிக் ...

அதிரடிக்கு தயாராகும் 'சார்லிஸ் ஏஞ்சல்ஸ்' : ரோமியோக்களுக்கு இனி உதை நிச்சயம்

Posted: 17 Feb 2015 05:14 PM PST

புதுடில்லி: - - தலைநகர் டில்லியில், பெண்களிடம்வாலாட்டும் ரோமியோக்களுக்கு, இனி சிக்கல் தான். பெண் போலீசார் அடங்கிய படை, கடினமான கராத்தே பயிற்சியை முடித்து, களத்தில் இறங்க தயாராக உள்ளது. டில்லியில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2013 டிசம்பரில் இளம்பெண் ஒருவர், ஓடும் பஸ்சில், ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், அவர் இறந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒட்டு மொத்த டில்லி மக்களும் போராட்டத்தில் இறங்கினர். கடந்தாண்டும், ...

ஹைதி நாட்டில் கலாச்சார திருவிழாவில் சோகம்: மின்சாரம் தாக்கி 20 பேர் பலி

Posted: 17 Feb 2015 05:08 PM PST

போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதி நாட்டில் கலாச்சார திருவிழாவையொட்டி நடந்த பேரணியில், மின்சாரம் தாக்கியதில் இசைக் கலைஞர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஹைதி நாட்டில் ஆண்டு தோறும் நடக்கும் கலாச்சார திருவிழாவையொட்டி, பல்வேறு நடன கலைஞர்கள் பேரணியாக செல்வது வழக்கம். இந்தாண்டும் துவங்கியது. தலைநகர் போர்ட் ஆப்பிரின்ஸ் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி வந்து கொண்டிருந்தது. டவுன்டவுன் தெரு அருகே வந்த போது தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின்சாரத்தினை ஒருவர் தவறுதலாக தொட்டுவிடவே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™