Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மனித உரிமை ஆணைய அறிக்கை: தள்ளி வைத்தது ஐ.நா., சபை

Posted:

ஜெனிவா: இலங்கையில் அரசு படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே 2009ல் நடைபெற்ற இறுதிப் போரின் போது இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா., மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்வதை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம் புதிதாக பொறுப்பேற்ற அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட வேண்டிய அறிக்கையை செப்டம்பருக்கு தள்ளிவைத்து ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் ஹை கமிஷனர் ஜெய்த் ராத் அல் ஹுசேன் நேற்று உத்தரவிட்டார். 'போர்க் குற்றங்கள் ...

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர் போட்டியிட கூடாது என்பது சரியல்ல

Posted:

புதுடில்லி: 'ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதுமே, அவருக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும்படி கூறுவது, ஜனநாயக அரசியல் நடைமுறைகளுக்கு எதிரானது' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.பொது நல மையம் என்ற அமைப்பின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'கொடிய குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது, கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதுமே, அவர், தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் சிக்ரி, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, ...

சமூக அமைதியை கலைப்பவர்களுக்கு பிரதமர் மோடி கண்டிப்பு: மத சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும் என உறுதி

Posted:

புதுடில்லி:''மதத்தின் பெயரால் வன்முறை நிகழ்வதை, நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; சமூக அமைதியை கலைக்கும் அத்தகைய வன்முறைகளை துாண்டுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; மத சுதந்திரத்தை, மத்திய அரசு பாதுகாக்கும்,''என, பிரதமர் நரேந்திர மோடி, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.கேரளாவைச் சேர்ந்த, பாதிரியார் குரியாகோஸ் எலியாஸ் சாவாரா மற்றும் மதர் யுபாரசியா ஆகிய இருவருக்கு, கத்தோலிக்க மதத்தின், மிக உயர்ந்த புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை கொண்டாடும் நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது.அதில் பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது:எங்கள் அரசு, அனைத்து ...

கிரானைட் விசாரணை: தகவல் வழங்க உரிமையாளர்கள் மறுப்பு

Posted:

மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து மதுரையில் விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் குழுவினரிடம் தேவையான தகவல்களை வழங்க குவாரி உரிமையாளர்கள் மறுத்தனர்.மதுரை மேலூர் பகுதியில் விதிமீறி செயல்பட்ட குவாரிகளால் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அப்போதைய கலெக்டர் சகாயம் அறிக்கை அளித்தார். அவருக்கு பின் வந்த கலெக்டர்கள் அன்சுல் மிஸ்ரா, சுப்பிரமணியன் விசாரித்து முறைகேடு குறித்து நடவடிக்கை எடுத்தனர். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயமும் மதுரையில் விசாரிக்கிறார். குவாரி முறைகேடுகள் குறித்து நேற்று வரை 488 மனுக்கள் ...

இலவச 'வை - பை' வசதியை பெற ஆம் ஆத்மி அரசு திடீர் நிபந்தனை

Posted:

புதுடில்லி: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டில்லி முழுவதும், இலவச 'வை - பை' வசதியை ஏற்படுத்தி தருவோம்' என கூறிய ஆம் ஆத்மி கட்சியினர், இப்போது, 'நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் இந்த வசதியை பெற முடியும்' என, பல்டி அடித்துள்ளனர்.பின்வாங்கியுள்ளனர்: டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டில்லி முழுவதும் இலவச 'வை - பை' வசதியை பெறும் திட்டத்தை நிறைவேற்று வோம்' என, தெரிவித்திருந்தனர். தற்போது, ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சற்று ...

மாநிலங்களுக்கு அடிக்குது அதிர்ஷ்டம்!

Posted:

புதுடில்லி: நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்படுவதால் கிடைக்கும் தொகை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே வரும் என்பதால், ஜார்க்கண்ட், ஒடிசா போன்ற வளர்ச்சி குறைந்த மாநிலங்களுக்கு, கணிசமான வருவாய் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.முறைகேடு: முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது. இதுகுறித்து, விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், 204 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதற்கு முன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் மத்திய ...

அன்னா ஹசாரே போராட்டத்தால் மோடி அரசுக்கு சிக்கல்: நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு

Posted:

புதுடில்லி: மத்திய அரசின் அவசர சட்டங்களுக்கு எதிரான, எதிர்க்கட்சிகளின் போராட்டம், வெத்து வேட்டாக இருக்கும் என, மோடி அரசு நினைத்தது. ஆனால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து திங்கள் கிழமை முதல், மூன்று நாட்கள், அன்னா ஹசாரே நடத்தவுள்ள போராட்டம், மோடி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டில் உற்பத்தியை பெருக்குவதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு, 'மேக் இன் இந்தியா' என்ற கோஷத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.பெரிய விவகாரம்: உற்பத்தியை அதிகரிக்க, தொழிற்சாலைகளை துவங்க, நிலம் கையகப்படுத்துதல் ...

ஜெ., இருக்கை ஓரம் அமர்ந்த முதல்வர்

Posted:

சென்னை: சட்டசபையில், ஜெயலலிதா அமர்ந்த இருக்கையின், வலது புறம் ஓரமாக, முதல்வர் பன்னீர் செல்வம் அமர்ந்தார்.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், ஜெயலலிதா முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். புதிய முதல்வராக, கடந்த செப்டம்பர் மாதம், பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.முதல் கூட்டத் தொடர்: ஆனால், அவர் முதல்வர் அறைக்கு செல்லவில்லை. நிதி அமைச்சராக இருந்தபோது, இருந்த அறையிலே, அலுவலகப் பணிகளை கவனிக்கிறார். கடந்த டிசம்பர் மாதம், சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது, ஜெயலலிதா இருந்த இருக்கையில், முதல்வர் பன்னீர்செல்வம் ...

மாற்றம் இல்லாத கவர்னர் உரை

Posted:

கடந்த ஆண்டு, கவர்னர் உரையில் இடம் பெற்றிருந்தவை, இந்த ஆண்டு உரையில், அப்படியே இடம் பெற்றுள்ளன.கடந்த ஆண்டு, கவர்னர் சட்டசபையில் பேசும்போது,''சென்னை குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு, 150 மில்லியன் லிட்டர், தென் சென்னையில், 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த, திட்ட வடிவமைப்பு பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என, தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு அறிக்கையில், ''நெம்மேலி மற்றும் பேரூரில், முறையே நாள் ஒன்றுக்கு, 150 மற்றும் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட, இரண்டு அலகுகளை அமைக்க, இந்த அரசு ...

சட்டசபையில் இருக்கை வசதி கேட்கமாட்டேன்: கருணாநிதி உறுதி

Posted:

''சட்டசபையில் சிறப்பு இருக்கை வசதி மீண்டும் கேட்கப் போவதில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் முடிந்த பின், கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:சரியான காரணத்துக்காகவே, சட்டசபையில் இருந்து, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வௌிநடப்பு செய்துள்ளனர். சட்டசபையில் எனக்கு சிறப்பு இருக்கை வசதி செய்து தர ஆளுங்கட்சியினர் விரும்பவில்லை.சிறப்பு இருக்கை வசதி செய்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™