Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பஸ் தொழிலாளர் 'ஸ்டிரைக்'கை தவிர்க்குமா அரசு?

Posted:

அடுத்த மாதம், 3ம் தேதி முதல், மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளதால், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம் மீண்டும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு துவங்காததை அடுத்து, கடந்த டிசம்பர் 28ம் தேதி துவங்கி நான்கு நாட்கள், தமிழகம் முழுவதும், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பேருந்து சேவை முடங்கியது. சராசரியாக, 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கியதால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 58 ...

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை துவக்கம் : எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆளுங்கட்சி புதிய திட்டம்

Posted:

தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர், நாளை துவங்குகிறது. இந்த கூட்டத்தொடரில், எதிர்க் கட்சிகள் பிரச்னை செய்தால், ஸ்ரீரங்கம் வெற்றியை குறிப்பிட்டு சமாளிக்க, ஆளுங்கட்சி முடிவு செய்துள்ளது.தமிழக முதல்வராக, இரண்டாவது முறையாக, கடந்த செப்டம்பரில், பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதன்பின், டிசம்பரில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதன் முறையாக, முதல்வராக அவர் பங்கேற்றார்.

கவர்னர் உரை:
இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் இரண்டா வது கூட்டத்தொடர், நாளை துவங்குகிறது. காலை, ...

கிரிக்கெட்டில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்

Posted:

மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தில், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக, சூதாட்டப் பணம் புழங்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டத்தின் தலைநகரமாக மும்பையில் உள்ள சதர் பஜார் கருதப்படுகிறது. கடந்த போட்டிகளின் போது, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களை போலீசார் வேட்டையாடி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மும்பையில் கிரிக்கெட் சூதாட்டத்தை அறவே ஒழிக்க உறுதி பூண்டு, காவல் துறையை முடுக்கி விட்டுள்ளார். ஏற்கனவே, ...

சி.வி.சி.,யில் குவியுது ஊழல் புகார்கள்

Posted:

புதுடில்லி : மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமான, சி.வி.சி.,க்கு, கடந்த 2014ம் ஆண்டில், 63 ஆயிரம் புகார்கள் வந்தன. இது, முந்தைய ஆண்டான, 2013ஐ விட, 79 சதவீதம் அதிகம்.தண்டிக்கும் அல்லது தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லாத, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய அரசு மற்றும் அதிகாரிகளின் ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்கிறது.சி.வி.சி.,க்கு ஒரு தலைமை கமிஷனரும், இரு கமிஷனர்களும் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், இதன் தலைவராக இருந்த பிரதீப் குமார், பணி ஓய்வு பெற்றதை அடுத்து, நிரந்தரமாக தலைமை ...

கெஜ்ரிவால் ஆட்சியை பிடித்துள்ளதை அடுத்து, அரசியலில் சேர ஐ.ஐ.டி., மாணவர்கள் ஆர்வம்

Posted:

கோல்கட்டா : டில்லி சட்டசபைத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளதை அடுத்து, ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள் பலர், அரசியலில் சேருவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், 1985ல், ஐ.ஐ.டி., - காரக்பூரில், மெக்கானிக்கல் இன்ஜி., படித்தவர். பொதுவாக, ஐ.ஐ.டி.,யில் படிப்பவர்களுக்கு அரசியலில் ஆர்வம் இருக்காது. தாங்கள் படித்த துறைகளில் நல்ல வேலையாக பார்த்து, செட்டிலாகி விடுவார்கள். ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால், சமூக சேவை, அரசியல் என, அவதாரம் எடுத்து, தற்போது, டில்லி மாநிலத்தின் முதல்வர் ...

பல மாநிலங்களிலும் ஆம் ஆத்மி விரிவடையுமாம்: கெஜ்ரிவாலுக்கு யோகேந்திர யாதவ் வைத்தார் 'ஆப்பு'

Posted:

புதுடில்லி:'டில்லியில் மட்டுமே கவனம் செலுத்தி, லஞ்சம், ஊழலற்ற மாநிலமாக டில்லி யை மாற்றிக் காட்டுவோம்' என, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரி வால், நேற்று முன்தினம் கூறியிருந்தார்.இந்நிலையில், அந்த கட்சி யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், ''இன்னும் ஐந்தாண்டுகளில், பல மாநிலங்களில், ஆம் ஆத்மி கால் வைக்கும்,'' எனக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.டில்லி முதல்வராக, நேற்று முன்தினம் பொறுப்பேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், 'முந்தைய 2013 தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற ஆணவத்தால், 2014 லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் ...

ஆம் ஆத்மிக்கு வாக்குறுதியை நிறைவேற்றிய வேண்டிய கட்டாயம்: பிரதமர் மோடி தாக்கு

Posted:

புதுடில்லி: டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, சமீபகாலமாக, பல்வேறு அரசியல் கட்சிகள், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம் அளிப்போம்; மின் கட்டணத்தை குறைப்போம்' என, தேர்தல்களில் வாக்குறுதிகள் அளிக்கின்றன. டில்லி சட்டசபைத் தேர்தலில் கூட, ஆம் ஆத்மி கட்சி இதுபோன்ற வாக்குறுதியை அளித்துள்ளது. தற்போது, அந்த கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், மின் கட்டணத்தை குறைக்கப் போவதாக கூறும் அரசியல் கட்சிகள் உள்ள மாநிலங்கள் ...

ஐந்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி 2,66,000 மெகாவாட்: மின்சாரம் தயாரிக்க 293 நிறுவனங்கள் இலக்கு

Posted:

புதுடில்லி: ''புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, குறைந்த விலையில், போதுமான அளவில், அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கச் செய்ய வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதை ஏற்றுக் கொண்ட, 293 நிறுவனங்கள், இன்னும் ஐந்தாண்டுகளில், 2,66,000 மெகாவாட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய உறுதி அளித்துள்ளன.டில்லியில் நேற்று, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாடு நடைபெற்றது. வழக்கமான, அனல், புனல் (நீர்) மற்றும் அணு மின் உற்பத்திக்கு மாற்றாக, சூரிய மின் சக்தி, காற்றாலை மின் சக்தி, இயற்கை எரிவாயு மின் சக்தி போன்றவற்றிற்கு ...

இந்த முறையும் பாகிஸ்தான் பட்டாசு 'புஸ்': அபாரமான பந்து வீச்சால் இந்தியா வெற்றி

Posted:

அடிலெய்டு: 'இது 1992... வாசிம் அக்ரம் இருக்க, கவலை ஏன்... எடு பட்டாசை! ஆங்... போச்சு...! அடுத்து, 96... பணால்...! இதோ, 99ம் ஆண்டு... அச்சச்சோ... நமத்துப் போச்சே! அதனாலென்ன... 2003... ம்ஹும்... கோவமா வருது... 2011... இந்த முறை நமக்கு தான் கோப்பை... ம்ஹும்... கவுத்துட்டாங்கய்யா நம்மாளுங்க... 'எப்ப தான், இந்த பட்டாசை வெடிக்... ஹா... 2015... அதே வாசிம் அக்ரம்... 'கமென்ட்டேட்டரா' நிக்கிறாரே... நமக்கு பெரிய பலம்... ஜெயிச்சிருவோம்...' என, கனவில் மிதந்த, 'டிவி' விளம்பர பாகிஸ்தான் கதாபாத்திரங்களை, ஆறாவது முறையாக வாயடைக்க வைத்து, 'இந்தியா தேறாது' என, வீரர்கள் தேர்வின் போதே, படுமோசமாக, 'கமென்ட்' அடித்த, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ...

கறுப்பு பணத்தை மீட்கும் விசாரணையில் பொருளாதார புலனாய்வு பிரிவும் இணைந்தது

Posted:

புதுடில்லி : வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பான விசாரணையில், மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பான, சி.இ.ஐ.பி.,யும் இணைந்து உள்ளது.சுவிட்சர்லாந்து உட்பட, பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளில், ஏராளமான இந்தியர்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.மத்தியில் அமைந்துள்ள பா.ஜ., அரசு, இந்த கறுப்பு பணத்தை மீட்பதாக, லோக்சபா தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, விசாரணை அமைப்புகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற ...

ரயில்வேயில் நவீன தொழில்நுட்ப வசதிகளை புகுத்த அதிரடி திட்டம்

Posted:

புதுடில்லி : பா.ஜ.,வைச் சேர்ந்த சுரேஷ் பிரபு, ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றதும், ரயில்வே துறையில் அதி தொழில்நுட்ப வசதிகளை புகுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுகுறித்து, ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள், 'வை - பை' வசதியை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அடுத்தகட்டமாக, ரேடியோ அலைவரிசை அடையாள குறியீட்டு கருவியை பயன்படுத்தும் திட்டம் உள்ளது. சரக்கு ரயில் பெட்டிகள், பயணிகள் ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜின்ஆகியவற்றில் இந்த கருவி பொருத்தப்படும்.இதன் மூலம், ரயில் பெட்டிகளின் ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Posted:

புதுடில்லி : எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திஉள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 82 காசுகளும், டீசலுக்கு, 61 காசுகளும் உயர்த்தப்பட்டு உள்ளன. டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 56.49ல் இருந்து, 57.31 ரூபாயாகவும், டீசல் 46.01ல் இருந்து, 46.62 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், 10 முறை குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை, முதன் முறையாக தற்போது உயர்த்தப்பட்டுஉள்ளது. டீசல் மீதான விலை கட்டுப்பாடு, கடந்த ஆண்டு அக்டோபரில் நீக்கப்பட்டது. அது முதல், ஆறு முறை குறைக்கப்பட்ட டீசல் விலை, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™