Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 15 Feb 2015 03:45 PM PST

உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன்

அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி?

Posted: 15 Feb 2015 03:41 PM PST

"ஜோதிடரத்னம்" திரு. எஸ்.சந்திரசேகரன் அவர்களின் "நீங்களும் ஜோதிடர் ஆகலாம்" படித்தேன். மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நன்றிகள். அதைச் சார்ந்த பஞ்சாங்கம் பார்ப்பது குறித்த ஒரு கேள்வி. தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்குங்களேன். உதாரணமாக, வாசன் சுத்த திருக்கணித பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்வோம். இன்று மாசி 3 ஆம் தேதி. இன்று அமிர்தாதி யோகம் பார்த்தால் சித்-60 எனப் போட்டிருக்கிறது. இதன் பொருள் இன்று 60 நாழிகையும் சித்தயோகம். புரிகிறது. அதையே நாளை பார்த்தால், மாசி 4. ம2-17அ என்று உள்ளது. இதே போல ...

ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் எம்.டெக்., படிக்க விருப்பமா?

Posted: 15 Feb 2015 03:39 PM PST

- காந்திநகரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 2015ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வழங்கப்படும் படிப்புகள்: எம்.டெக்., (சிவில், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டிரியல் சயின்ஸ்) தகுதி: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.டெக்/பி.இ ஆகிய படிப்பில் ஏதாவதொன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் ...

குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்

Posted: 15 Feb 2015 03:38 PM PST

- முஸ்லிம் மதத்தை சேர்ந்த குஷ்பு ருத்ராட்சம் அணிந்தது வரவேற்கதக்கது என்று மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடிகை குஷ்பு தாலியில் ருத்ராட்சம் அணிந்தது தவறில்லை. அவர் மதம் மாறிவிட்டாரா? என்பது குறித்து எதுவும் தெரியாது. இருப்பினும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த குஷ்பு ருத்ராட்சம் அணிந்தது வரவேற்கதக்கது. பொது சிவில் சட்டம், கட்டாய மதமாற்ற தடைசட்டம் ஆகியவற்றை நன்கு பரிசீலித்து அமல்படுத்த வேண்டும். யாரையும் கட்டாய ...

சினிமா துளிகள் - தொடர் பதிவு

Posted: 15 Feb 2015 03:33 PM PST


-

-

--
* சதுரங்க வேட்டை படத்தில் நடித்த இஷாரா,
தற்போது, இரண்டு மலையாள படங்களில்
ஒப்பந்தமாகி உள்ளார்.

காதலை யதார்த்தமாக சொல்லும் படம் ‘வெத்து வேட்டு’

Posted: 15 Feb 2015 03:26 PM PST

- வெத்து வேட்டு - படம் பற்றி இயக்குனர் மணிபாரதியிடம் கேட்டோம்.... - ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக 'விழா' பட நாயகி மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக் பாண்டி, கோபால், மணி, மாக்கான், கிரேன் மனோகர், போண்டா மணி, வெங்கல் ராவ், சின்ன சில்க், உமா, நந்தகுமார், கம்பம் மீனா, நாஞ்சில் சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். - கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.மணிபாரதி. தாஜ்நூர் ...

போதை ஏறினால்... பாதை மாறினால்...

Posted: 15 Feb 2015 03:18 PM PST

30,000... இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம், சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான காரணம்... மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம் என்றால் மதுவால் நேரும் விபத்துகள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்). மது 'உள்ளே' சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது? அப்போலோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர். பி. பொன்முருகன் விளக்குகிறார். ''நாம் ...

சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்!

Posted: 15 Feb 2015 03:17 PM PST

சென்னை: சீர்வரிசை பொருட்கள் மற்றும் புரோகிதர் மந்திரத்தோடு  இந்து முன்னணியினர் ஆட்டுக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி சென்னையில் நடந்துள்ளது. உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் பல்வேறு தரப்பிலும் அரசியல் மற்றும் மத இயக்கங்கள் சார்பில் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. இந்த நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இந்து அமைப்பினர் நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை ஆர்.கே.நகரில் ...

இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி - தொடர் பதிவு

Posted: 15 Feb 2015 06:48 AM PST


-
கிரிக்கெட் உலகிற்கே விருந்து படைக்க காத்திருக்கும்
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று
நடைபெறுகிறது.
-
இதற்கு முன்பு இரு அணிகளும் உலகக் கோப்பை
தொடரில் 5 முறை மோதியுள்ளன. இதில் 5 முறையும்
இந்திய அணியே வெற்றியை கைப்பற்றியுள்ளது.
-
இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்வது
இந்திய அணி
-

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க கார்டு தேவையில்லை!

Posted: 15 Feb 2015 01:42 AM PST

மும்பை: கார்டு இல்லாமல் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கும் புதிய வசதி நாடு முழுவதும் 1 லட்சம் ஏ.டி.எம். மையங்களில் நடைமுறைப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் வங்கிக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் பணம் எடுக்க முடியும். 'கார்டுலெஸ் வித்டிராவல்' (Cardless cash withdrawal) என்ற புதிய வசதியை ஆரம்பக்கட்டமாக, நாடு முழுவதும் 1 லட்சம் ஏ.டி.எம்.கள் மற்றும் பி்.ஓ.எஸ்.களில் கொண்டுவர இந்தியாவில் உள்ள வங்கிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்த ...

திருக்குறளில் நாம் அறியாத சில அரிய உண்மைகள்

Posted: 15 Feb 2015 12:31 AM PST

திருக்குறளில் நாம் அறியாத சில அரிய உண்மைகள் திருக்குறள் முதன் முதல்  அச்சிட்ட   ஆண்டு....1812.  முதல்இட்ட பெயர்.=..முப்பால். ... திருக்குறளி ல் உள்ள  சொற்கள்  14,000.   எழுத்துக்கள்=...42,194.   இதில் இடம் பெற்றுள்ள இரு மலர்கள்.1.அனிச்சம். 2.குவளை.                                                         பழம்=நெருஞ்சிப்பழம்.                                                         விதை=குன்றிமணி.   இருமுறை வரும்அதிகாரம் =குறிப்பறிதல்.     இடம் பெற்றுள்ள>  மரங்கள்=1.பனை.2.மூங்கில். ...

அதிவேக பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 15 Feb 2015 12:23 AM PST

இந்தியாவின் புதிய ஆயுதம் தாங்கிக் கப்பலான "ஐஎன்எஸ் கொல்கத்தா' ரக போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சனிக்கிழமை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஒலியை விட அதிவேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் வாய்ந்தது. கோவா கடற்கரை அருகில் இருந்து இந்த ஏவுகணை எந்தவித குறைபாடும் இன்றி இலக்கை நோக்கிச் செலுத்தப்பட்டது. இந்திய கடற்படையின் சேவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி "ஐஎன்எஸ் கொல்கத்தா' போர்க் கப்பல் இணைந்தது. அதிக ...

கிராம நிர்வாக அலுவர்கள் அறிந்திருக்க வேண்டியவை.

Posted: 14 Feb 2015 11:35 PM PST

கிராம நிர்வாக அலுவர்கள் அறிந்திருக்க வேண்டியவை. - நாமும் தெரிந்து கொள்வோம் - ----------------------------------------------------- - 1. வருமான சான்று விண்ணபிக்க ரூபாய் எவ்வளவுக்கான முத்திரை கட்டண வில்லை ஒட்டப்பட வேண்டும்? - Answer: ரூபாய் 10 - 2. மனுநீதி நாள் நடத்த கிராம நிர்வாக அலுவலர் யாருடன் ஒத்துழைக்கிறார்? Answer: வட்டாட்சியர் - 3. ஒரு பசலி ஆண்டு என்பது - Answer: ஜீலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜீன் முடியும் - 4. பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு சட்டம் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(343)

Posted: 14 Feb 2015 11:12 PM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

உலகச் செய்திகள்!

Posted: 14 Feb 2015 07:30 PM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

களவாடப்பட்ட பொழுதுகள்!

Posted: 14 Feb 2015 06:54 PM PST

- முன்பு… அலுவலகம் சென்று வேலை பார்ப்பது என்றால் அனைவருக்குமே அலாதி இன்பம் தான்! அலுவலகத்தில் நுழையும் போதே… ஆங்காங்கே புன்னகை தென்றலும் நட்பு மலர்களும் பூத்து நல்லிணக்க வாசம் வீசும்! சிறகடித்து பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளாய் இங்குமெங்கும் சுறுசுறுப்பாய் இயங்கும் காட்சி காண்போர் விழிகளை வியக்க வைக்கும்! விதவிதமான அனுபவங்கள் வியக்க வைக்கும் படிப்பினைகள் என பயிற்றுவிக்கும் பட்டறையாய் அலுவலகம் திகழ்வதால் பணிபுரிவோருக்கு அது ஓர் பல்கலைக்கழகம்! வாழ்க்கை வளமாக எண்ணற்ற ...

அரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து

Posted: 14 Feb 2015 04:53 PM PST

- சென்னை-பொள்ளாச்சி பழனி எக்ஸ்பிரஸில் வியாழக்கிழமை இரவு பயணிகளிடையே ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து அரக்கோணம் ரயில்நிலையத்தில் ரயில் நின்றபோது அதை விசாரிக்க சென்ற பயணச்சீட்டு பரிசோதகர் கத்தியால் குத்தப்பட்டார்.படுகாயமடைந்த பரிசோதகர் அரக்கோணம் ரயில்நிலையத்தில் அனுமதிக்கப்ப்டடார். சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து பழனி\பொள்ளாச்சி செல்லும் பழனி எக்ஸ்பிரஸில் வியாழக்கிழமை இரவு சாதாரண பெட்டியில் இருந்த பயணிகளிடையே ரயில் ஓடும்போது இருக்கை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™