Tamil News | Online Tamil News |
- இந்தியாவை ஆதரிக்க வேண்டாம் பாக்., கெஞ்சல்: இந்தியா கண்டிப்பு
- நான் ஏழை தான்; ஆனால் தன்மானம் உள்ளவன்-: நிதிஷ் குமாருக்கு மஞ்ஜி பதிலடி
- தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம்
- முதலீட்டாளர் மாநாடு முன்னோட்ட கூட்டம் ஏன்?பின்னணி பற்றி பரபரப்பு தகவல்
- நான் கேரளாவுக்கு போகலாமா? போலீசிடம் அனுமதி கேட்ட தரூர்
- ஓசூர் அருகே ரயில் தடம் புரண்டு கோர விபத்து: 10 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
- கவுரவத்துக்கு முதல்வர், அமைச்சர்கள் இல்லம் புதுப்பிக்க ரூ.3.22 கோடி செலவு
- பாக்., பிரதமர் நவாசுடன் பிரதமர் மோடி பேச்சு: கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து
- ஜன் லோக்பால் சட்டத்தை கெஜ்ரிவால் அமல்படுத்த முடியுமா?
- ஸ்ரீரங்கம் தொகுதியில் பதிவான ஓட்டு 81.8 சதவீதம்: இடைத்தேர்தல் சுறுசுறுப்பு மீண்டும் நிரூபணம்
- டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பொறுப்பேற்கிறார்: துணை முதல்வர், ஐந்து அமைச்சர்கள் பதவியேற்பு
| இந்தியாவை ஆதரிக்க வேண்டாம் பாக்., கெஞ்சல்: இந்தியா கண்டிப்பு Posted: இஸ்லாமாபாத்: ஐ.நா., பாதுகாப்புக் குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, ஆதரவு தர வேண்டாம் என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நேற்று முன்தினம், நவாஸ் ஷெரீப் உடன் தொலைபேசியில் உரையாடினார்.இதுகுறித்து, பாக்., பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ள செய்தி:காஷ்மீர் பிரச்னை தொடர்பான, ஐ.நா., தீர்மானங்களை இந்தியா அமல்படுத்தவில்லை. காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கவில்லை. அதனால், ஐ.நா., பாதுகாப்புக் குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினராக முடியாது; அதற்கு, அமெரிக்கா ... |
| நான் ஏழை தான்; ஆனால் தன்மானம் உள்ளவன்-: நிதிஷ் குமாருக்கு மஞ்ஜி பதிலடி Posted: பாட்னா : ''நான் ஏழையாக இருந்தாலும், தன்மானம் உள்ளவன்; எனக்கு முதல்வர் பதவி அளித்து, தன் கைப்பாவையாக செயல்பட வைக்க நினைத்தது, நிதிஷ் குமார் செய்த மிகப்பெரிய தவறு,'' என, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான ஜிதன்ராம் மஞ்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். |
| தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம் Posted: சென்னை: 'தாங்கள், இலங்கை அதிபரோடு மேற்கொள்ளவிருக்கும் விவாதங்களின் மூலம், தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை ஏற்படுத்தினால், நான், தங்களுக்கு பெரிதும் நன்றியுடையவன் ஆவேன்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி உள்ளார்.அவரது கடிதம்:இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து, இன்னமும் சிங்கள ராணுவம் திரும்பப் பெறப்படவில்லை. தமிழர்களுக்கு சொந்தமான வீடுகளும், நிலங்களும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ... |
| முதலீட்டாளர் மாநாடு முன்னோட்ட கூட்டம் ஏன்?பின்னணி பற்றி பரபரப்பு தகவல் Posted: சட்டசபையில், எதிர்க்கட்சிகளை சமாளிப்பதற்காக, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின், முன்னோட்ட கூட்டம், இன்று நடத்தப்படுகிறது.தமிழக அரசு சார்பில், 2012ல், 12 நிறுவனங்களுடன், 20,925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்க, ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம்: அதன்பின் கடந்த ஆண்டு, 5,081 கோடி ரூபாய்க்கு, 16 நிறுவனங்களுடன், ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழில் நிறுவனங்கள், இன்னமும் உற்பத்தி பணியை துவக்கவில்லை.ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, கொளத்தூர் கிராமத்தில், ஜே.கே.டயர் தொழிற்சாலை விரிவாக்கப் பணி, 1,400 கோடி ரூபாயில் மேற்கொள்ள ... |
| நான் கேரளாவுக்கு போகலாமா? போலீசிடம் அனுமதி கேட்ட தரூர் Posted: புதுடில்லி: சுனந்தா கொலை வழக்கில், தன்னிடம் போலீசார் நடத்திய விசாரணை முடிவடைந்த நிலையில், கேரளா செல்வதற்கு, டில்லி போலீசாரிடம், காங்., - எம்.பி., சசி தரூர், நேற்று அனுமதி கேட்டார்.காங்., - எம்.பி., சசி தரூரிடம், அவர் மனைவி சுனந்தா புஷ்கர் கொல்லப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒருமுறை, டில்லி போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினமும், அவரிடம் விசாரணை நடந்தது. சுனந்தா கொலை, ஐ.பி.எல்., போட்டிகளில் உள்ள தொடர்பு ஆகியவை குறித்து, காலையில், நான்கு மணி நேரமும், மாலையில், ஒரு மணி நேரமும், போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நேற்று காலையில், மீண்டும், டில்லி போலீஸ் தலைமை ... |
| ஓசூர் அருகே ரயில் தடம் புரண்டு கோர விபத்து: 10 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் Posted: ஓசூர்: ஓசூர் அருகே, நேற்று அதிகாலை பெங்களூரு -- எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குஉள்ளானதில், 10 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து கோரமாக நடந்திருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.கர்நாடக மாநிலம், பெங்களூரு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, கேரள மாநிலம், எர்ணாகுளம் நோக்கி, நேற்று காலை, 6:25 மணிக்கு, '12677' எண் கொண்ட பெங்களூரு - -எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. |
| கவுரவத்துக்கு முதல்வர், அமைச்சர்கள் இல்லம் புதுப்பிக்க ரூ.3.22 கோடி செலவு Posted: பெங்களூரு: கர்நாடகா முதல்வரின் இல்லம், அலுவலகத்தில் நடந்த, புனரமைப்பு பணிகளுக்காக, கடந்த இரண்டு ஆண்டுகளில், 3.22 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.சமூக ஆர்வலர் குருநாத் வட்டே, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், பெற்ற ஆவணங்களின் மூலம், பெங்களூரிலுள்ள முதல்வரின் இல்லம், அலுவலகத்தை புதுப்பிக்க, கடந்த இரண்டு ஆண்டுகளில், 3.22 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. |
| பாக்., பிரதமர் நவாசுடன் பிரதமர் மோடி பேச்சு: கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து Posted: புதுடில்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உட்பட, 'சார்க்' நாடுகளின் தலைவர்களுக்கு, நேற்று போன் செய்த பிரதமர் மோடி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அந்த நாடுகளின் அணிகள் பங்கேற்பதற்கு வாழ்த்து தெரிவித்தார்.உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, இன்று துவங்குகிறது. இந்த போட்டியை, நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்துகின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இந்த நாடுகளின் தலைவர்களுக்கு நேற்று போன் செய்த பிரதமர் மோடி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்த ... |
| ஜன் லோக்பால் சட்டத்தை கெஜ்ரிவால் அமல்படுத்த முடியுமா? Posted: புதுடில்லி:'ஜன் லோக்பால்' சட்டத்தை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி சட்ட சபையில் நிறைவேற்றினாலும், அவரால் அந்த சட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை நிலவுகிறது.பிரதமர் உட்பட, நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களின் ஊழல் முறைகேடுகளை விசாரிக்க வகை செய்கிறது, 'லோக்பால்' சட்டம். அது போல, மாநிலங்களில், 'லோக் ஆயுக்தா' நீதிமன்றங்கள் அமைக்க, லோக்பால் சட்டம் வழி காண்கிறது.இந்த இரு சட்டங்களில் இருந்தும் மாறுபட்டு, ஜன் லோக்பால் என்ற புதிய சட்டத்தை இயற்ற துடிக்கும் கெஜ்ரிவால், கடந்த 2013ல், டில்லி முதல்வராக, 49 நாட்கள் இருந்த போது, அந்த மசோதாவுக்கு ஆதரவு ... |
| ஸ்ரீரங்கம் தொகுதியில் பதிவான ஓட்டு 81.8 சதவீதம்: இடைத்தேர்தல் சுறுசுறுப்பு மீண்டும் நிரூபணம் Posted: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில், பலத்த, 'கவனிப்பு' காரணமாக, கடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை விட கூடுதல் ஓட்டுகள், நேற்று நடந்த இடைத்தேர்தலில், 81.8 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இடைத்தேர்தல் என்றாலே, ஓட்டுப்பதிவு எகிறும் என்பது, மீண்டும் நிரூபணமாகி உள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ஜெயலலிதா, முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்.இதனால் காலியான, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, ஜனவரி, 5ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பா.ம.க., - ம.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகள், 'தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை; போட்டியும் ... |
| Posted: புதுடில்லி : டில்லி முதல்வராக, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், 46, இன்று பொறுப்பேற்கிறார். அவருக்கு, கவர்னர் நஜிப் ஜங், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என, கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் ஆதரவாளராக இருந்து, மூன்றாண்டுகளுக்கு முன் அவரை பிரிந்து, ஆம் ஆத்மி என்ற அரசியல் கட்சியைத் துவக்கி, அடுத்த சில மாதங்களிலேயே, கடந்த, 2013 டிசம்பரில், டில்லியின், ஏழாவது முதல்வராக பொறுப்பேற்ற கெஜ்ரி வால், 49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.மண் கவ்வ ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 14,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |