Tamil News | Online Tamil News |
- நெல் கொள்முதல் கடும் சரிவால் ரேஷன் அரிசி வழங்க திணறல்: அமோக விளைச்சல் இருந்தும் அரசிடம் கையிருப்பு குறைவு
- விஜயகாந்தை கேலி செய்கின்றனர்: அ.தி.மு.க., மீது போலீசில் புகார்
- தேர்தல் அறிவிப்புகளை எல்லாம் அமல்படுத்துவது கெஜ்ரிவாலுக்கு சாத்தியமா? இடியாப்ப சிக்கல்களை நீக்கி டில்லிக்கு மாநில அந்தஸ்து பெறுவாரா?
- 150 மீனவர்கள் அடங்கிய மீட்பு குழு: படகுகளை மீட்க அரசு நடவடிக்கை
- தமிழர்களை மறுகுடியமர்த்த நிலம்: இலங்கை அரசு அறிவிப்பு
- அமெரிக்க போலீஸ் அராஜகம்: பக்கவாதத்தால் இந்தியர் பாதிப்பு
- 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்: 5 கோடி பேருக்கு வேலை
- கெஜ்ரிவால் வெற்றிக்கு யார் காரணம்: கனிமொழி ஆருடம்
- கடற்கரை பகுதிகளிலும் '108' ஆம்புலன்ஸ் சேவை: முதற்கட்டமாக சென்னை மெரினாவில் துவக்கம்
- ஒபாமா வருகை சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள்
| Posted: தமிழகத்தில் நெல் விளைச்சல் அமோகமாக இருந்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இதுவரை ஆறு லட்சம் டன் நெல் மட்டும் கொள்முதல்செய்துள்ளது. இதனால் ரேஷன் அரிசி வினியோகத்தில், தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில் பொது வினியோக திட்டம் கீழ் ரேஷன் கடைகளில் 1.86 கோடி குடும்பங்களுக்கு, அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 'பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல்' திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. இந்த நெல் வாணிபக் கழகம், 23; தனியார், 450 என மொத்தம் 473 ... |
| விஜயகாந்தை கேலி செய்கின்றனர்: அ.தி.மு.க., மீது போலீசில் புகார் Posted: சென்னை: 'சமூக வலைதளங்களில், தே.மு.தி.க., தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் குறித்து, தரக்குறைவாக விமர்சனங்களை வெளியிடும், அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.தே.மு.தி.க., வழக்கறிஞர்கள் அணி செயலர் பன்னீர்செல்வம், துணை செயலர் பாலாஜி ஆகியோர், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயகுமாரிடம், நேற்று அளித்த புகார் மனு: விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்தும், அவரது மனம் புண்படும் வகையில், உண்மைக்கு புறம்பாகவும், கேலி சித்திரங்கள் துணுக்குகள், ... |
| Posted: ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில், 'டில்லியை, மாநிலம் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்; பெண்கள் பாதுகாப்புக்காக, 1.50 லட்சம் கேமராக்கள் பொருத்தப்படும்; மின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும்' என்பது உட்பட, பல கவர்ச்சி அறிவிப்புகளை, அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ளார். ஆனால், இந்த அறிவிப்புகளை அமல்படுத்துவது, கெஜ்ரிவாலுக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இவற்றை அமல்படுத்த முற்படும்போது, சட்ட ரீதியான மற்றும் நிதி ரீதியான பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக, அவர்கள் ... |
| 150 மீனவர்கள் அடங்கிய மீட்பு குழு: படகுகளை மீட்க அரசு நடவடிக்கை Posted: சென்னை: 'இலங்கை நீதிமன்றங்கள் விடுவிக்கும் படகுகளை, தமிழகம் கொண்டு வர, 150 மீனவர்கள் கொண்ட, மீட்புக் குழு இலங்கைக்கு அனுப்பப்படும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.கடிதம்: அவரது அறிக்கை: இலங்கை அரசு, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க, படகு உரிமையாளர்கள், இலங்கை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கும்படி கூறியதாக, இந்திய திவளியுறவுத் துறை அமைச்சக இணை செயலர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அதற்கு தமிழக மீன்வளத்துறை செயலர் விஜயகுமார், பதில் கடிதம் அனுப்பினார். அதில், நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட, மீன்பிடிப் படகுகளின் ... |
| தமிழர்களை மறுகுடியமர்த்த நிலம்: இலங்கை அரசு அறிவிப்பு Posted: கொழும்பு: இடம்பெயர்ந்த தமிழர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு, 220 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என, இலங்கை அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து இலங்கை அமைச்சர் மற்றும் அமைச்சரவை செய்தி தொடர்பாளர் (பொறுப்பு) லஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது: இலங்கை வடக்கு மாகாணம், பலாலியில் விமான படையின் கட்டுப்பாட்டில், 1,000 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற முறையில், அதிபர் சிறிசேன, 220 ஏக்கர் நிலத்தை, இலங்கை தமிழர்கள் மறுகுடியேற்றத்திற்கு வழங்க உள்ளார். இங்கு, உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த 1,022 தமிழ் குடும்பங்கள், குடியமர்த்தப்படுவார்கள். ... |
| அமெரிக்க போலீஸ் அராஜகம்: பக்கவாதத்தால் இந்தியர் பாதிப்பு Posted: வாஷிங்டன்: அமெரிக்காவில், அப்பாவி இந்தியர் ஒருவர், போலீஸ் தாக்குதலில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர், சுரேஷ்பாய் படேல், 57. இவர், இருவாரங்களுக்கு முன், அலபாமா மாகாணம், ஹன்ஸ்வில்லி நகரில் வசிக்கும் தன் மகன் சிராக் படேல் வீட்டிற்கு சென்றுள்ளார். ஒரு நாள், வீட்டருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவரை போலீசார் மடக்கி விசாரித்துள்ளனர். ஆங்கிலம் தெரியாத படேல், திக்கித் திணறி, இந்தி கலந்த ஆங்கிலத்தில் பேசியுள்ளார். ஆனால், போலீசார், குற்றவாளியை பிடிப்பது போல், திடீரென்று படேல் மேல் பாய்ந்து, ... |
| 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்: 5 கோடி பேருக்கு வேலை Posted: புதுடில்லி: ''டிஜிட்டல் இந்தியா திட்டம் முலம் நாட்டில் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.அவர், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மேலும் கூறியதாவது: தகவல் தொழில்நுட்பத் துறை 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. அறிவுசார் பொருளாதார நாடாக மாற்றும் நோக்கில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. மக்கள் மிகச் சுலபமாக தொழில்நுட்ப ... |
| கெஜ்ரிவால் வெற்றிக்கு யார் காரணம்: கனிமொழி ஆருடம் Posted: கோவை: டில்லி சட்டசபை தேர்தலில், கெஜ்ரிவால் வெற்றிக்கு, பா.ஜ.,வின், மதவாத கொள்கையே, முக்கிய காரணமென்று, தி.மு.க., மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.கோவை வந்த, தி.மு.க., மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி, நிருபர்களிடம் கூறுகையில், '' மார்ச் 8ம் தேதி, உலக மகளிர் தினத்தன்று, தி.மு.க., சார்பில் மகளிர் தின விழா, கொண்டாடப்படும். இந்நிகழ்ச்சியை கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான, இடத்தை தேர்வு செய்ய, கோவை வந்துள்ளேன். மகளிர் தின விழா நிகழ்ச்சிகள் முடிவானதும், அறிவிப்பு வெளியிடப்படும்'' என்றார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை ... |
| கடற்கரை பகுதிகளிலும் '108' ஆம்புலன்ஸ் சேவை: முதற்கட்டமாக சென்னை மெரினாவில் துவக்கம் Posted: சென்னை: அவசர கால, '108' ஆம்புலன்ஸ் சேவை, கடற்கரை பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, சென்னை மெரினாவில், இந்த சேவை நேற்று துவங்கியது.தமிழகத்தில், '108' ஆம்புலன்ஸ் சேவை செயல்பாட்டில் உள்ளது. விபத்துகளில் சிக்குவோர், கர்ப்பிணிகளுக்கு, இந்த சேவை பெரும் உதவி செய்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு, மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய மலை கிராமங்களில், 30 பிரத்யேக ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது, கடற்கரை பகுதிகளுக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவை விரிவு படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக, சென்னை மெரினாவில், இந்த சேவை நேற்று ... |
| ஒபாமா வருகை சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் Posted: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை ஒட்டி, தினமலர் இணையதளம் சார்பில் வாசகர்களுக்கான சிறப்பு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 203 கட்டுரைகளும், இதர மாநிலங்களிலிருந்து 14 கட்டுரைகளும், வெளிநாடுகளிலிருந்து 11 கட்டுரைகளுமாக மொத்தம் 228 கட்டுரைகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் இணையதளத்தில் பதியப்பட்டன. இதில் விதிமுறைகளுக்கு ஏற்ப பரிசீலனைக்குரியதாக 188 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் குழுவால் பரிசீலிக்கப்பட்டது.ஆசிரியர் குழு பரிந்துரைத்தவாறு முதல் நான்கு பரிசுகளைப் பெற்றோர் மற்றும் வாசகர் ஓட்டு அடிப்படையில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 13,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |