Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சூழ்ச்சியாளர்களின் சூதுமதியால் இடைத்தேர்தல்: ஜெ., அறிக்கை

Posted:

சென்னை:'நாளுக்கு நாள், மக்கள் ஆதரவு பெருகுவதை, பொறுத்துக் கொள்ள முடியாத, சூழ்ச்சியாளர்களின் சூதுமதியால், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில், எனக்கே ஓட்டு போடும் எண்ணத்துடன், உங்கள் ஓட்டுகளை, அ.தி.மு.க.,விற்கு அளியுங்கள்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:ஸ்ரீரங்கம் என் தாய் மண். என் சொந்த வீடு. தலைமுறை தலைமுறையாக, என் முன்னோர் வாழ்ந்து வந்த, புண்ணிய பூமி. எனவேதான், என் இதய துடிப்போடு கலந்து விட்ட உறவு, ஸ்ரீரங்கத்திற்கு உண்டு.கடந்த 2011 சட்டசபை தேர்தலில், ...

ஸ்ரீரங்கம் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும்: கருணாநிதி

Posted:

சென்னை:'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட தி.மு.க.,வுக்கு வாக்களியுங்கள்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஜெயலலிதா ஏற்கனவே ஒரு முறை, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, சட்டத்திற்கு புறம்பாக, நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு, வேட்பு மனு செல்லாமல் போய், பின் அவருடைய கட்சி பெரும்பான்மையாக, வெற்றி பெற்றபோது, சட்ட ரீதியாக தகுதியற்ற நிலையிலும், கவர்னரை கையிலே போட்டுக் கொண்டு, அவசர அவசரமாக பதவியேற்றார். அவ்வாறு பதவியேற்றது செல்லாது என, உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டவர் தான் ...

பவானிசிங் ஆஜராவதற்கு எதிரானஅன்பழகன் மனு தள்ளுபடி

Posted:

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராக தடை விதிக்கக் கோரிய தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஜெ., உள்ளிட்ட, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் நீடிக்கக் கூடாது எனக் கோரி, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு ...

ஆம் ஆத்மி கட்சிக்கு வருமான வரி துறை 'நோட்டீஸ்'

Posted:

புதுடில்லி : நிறுவனங்களிடமிருந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை பெற்றது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, ஆம் ஆத்மி கட்சிக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.இதை உறுதி செய்துள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி மார்லெனா கூறுகையில், ''வருமான வரித் துறையின் எந்த விசாரணைக்கும், திறந்த மனதுடன் ஒத்துழைக்க ஆம் ஆத்மி தயாராக உள்ளது. அதேசமயம், எங்களிடம் மட்டுமல்லாமல், நன்கொடை பெற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மீதும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.காங்கிரஸ் கட்சிக்கு, 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்த நிறுவனத்தின் முகவரி ...

ஐந்தாண்டுகளில் சில்லரை வர்த்தகம் 60 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்

Posted:

புதுடில்லி : 'நாட்டின் சில்லரை வர்த்தகத்தின் அளவு, இன்னும் ஐந்தாண்டுகளில், தற்போதுள்ள நிலையில் இருந்து, இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2020ம் ஆண்டிற்குள், 60 லட்சம் கோடி ரூபாயாக, இந்திய சில்லரை வர்த்தகத் துறையின் விற்றுமுதல் இருக்கும்' என, பிரபல நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது. 'பாஸ்டன் கன்சல்டிங் குரூப்' மற்றும் இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள, சில்லரை விற்பனை தொடர்பான புள்ளிவிவரம்:சில்லரை வர்த்தகம், நவீன வர்த்தகம், பாரம்பரிய வர்த்தகம் என, இரு ...

ஆம் ஆத்மியால் இலவச குடிநீர், பாதி விலையில் மின்சாரம் வழங்க முடியுமா?

Posted:

புதுடில்லி:டில்லியில், ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சியால், அதன் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான, வீட்டுக்கு வீடு தினமும், 700 லிட்டர் இலவச குடிநீர் சப்ளை, பாதி விலையில் மின் கட்டணம் ஆகியவற்றை, இப்போதைக்கு நிறைவேற்ற முடியாது என, கூறப்படுகிறது.

அறிவிப்புகள்:
பெரும்பாலான அரசியல் கட்சிகள், தேர்தல் நேரத்தில் வெளியிடும் அறிவிப்புகளை, ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றுவதில்லை. 'நாங்கள் அப்படியில்லை; ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவோம்' என, ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.டில்லியின் தற்போதைய நிலைமை, இலவச ...

இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம் என கெஜ்ரிவால் நிராகரிப்பு: பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க முடிவு

Posted:

புதுடில்லி:டில்லி முதல்வராக பதவியேற்கவுள்ள ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு அளிக்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை நிராகரித்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை நேரில் சென்று அழைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி பெற்ற அபார வெற்றி, நம் நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவு குறித்து, நாடு முழுவதும் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. 24 மணி நேரமும்...:டில்லியின் அடுத்த ...

பீகாரில் கவர்னர் உதவியுடன் குதிரை பேரம் நடத்துகின்றனர்: பா.ஜ., மீது நிதிஷ் குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி: பீகார் சட்டசபையில் தனக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்கும் வகையில், 130 எம்.எல்.ஏ.,க்களுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன், நேற்று அணிவகுப்பு நடத்தினார்.இதன் பின்னர் நிதிஷ்குமார், பீகாரில் கவர்னர் உதவியுடன் பா.ஜ.,வினர் குதிரை பேரம்நடத்துவதாக குற்றம்சாட்டினார். திருப்பங்கள்: பீகார் மாநில அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நேற்றும் அரங்கேறின. பீகார் கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, ஆட்சி அமைக்க அழைக்கும்படி நேற்று முன்தினமே ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ் குமார் கோரிக்கை ...

காலி இடங்களால் மின் வாரியத்தில் பணிகள் பாதிப்பு: 'பொறுத்தது போதும்' என பொங்கி எழுந்த ஊழியர்கள்

Posted:

மின் வாரியத்தில், காலி பணியிடங்களை உடனே நிரப்பக் கோரி, மின் துறை அமைச்சரை முற்றுகையிட, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்; தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்படுகிறது.1.36 லட்சம்: இவற்றில், நிர்வாகம், செயலகம், தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை என, ஐந்து பிரிவுகளில், உதவியாளர், பொறியாளர் என, அரசு அனுமதி அளித்துள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை, 1.36 லட்சம். இதில், தற்போது, 88 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்; 49 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™