Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரசூர் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

Posted: 11 Feb 2015 01:47 PM PST

அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் கணிப்பொறி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இலக்கிய மன்றப் போட்டி மாணவிகளுக்குப் பரிசு

Posted: 11 Feb 2015 01:47 PM PST

திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் கஸ்தூரிபாய் காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில் பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Feb 2015 01:47 PM PST

விழுப்புரத்தில் 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பைக் மோதல்:ஒருவர் காயம்

Posted: 11 Feb 2015 01:46 PM PST

அம்மையகரம் அருகே சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் பைக் மோதிக் கொண்டதில் ஒருவர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தார்.

கூட்டணிக் கட்சிகளை தமிழக பாஜக அரவணைக்கவில்லை

Posted: 11 Feb 2015 01:46 PM PST

கூட்டணிக் கட்சிகளை தமிழக பாஜக தலைவர்கள் அரவணைத்துச் செல்லவில்லை என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா புகைப்படம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

Posted: 11 Feb 2015 01:46 PM PST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தை அரசு அலுவலகங்களிலிருந்து நீக்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருப்பத்தை அளித்த தில்லி மக்கள்

Posted: 11 Feb 2015 01:46 PM PST

மத்திய அரசுக்கு பாடம் புகட்டி, புதிய திருப்பத்தை அளித்த புதுதில்லி மக்கள் பாராட்டுக்குரியவர்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.

"அரசு திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும்

Posted: 11 Feb 2015 01:46 PM PST

அரசின் நலத் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களைச் சென்றடைய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் அறிவுறுத்தினார்.

பாமக ஆர்ப்பாட்டம்

Posted: 11 Feb 2015 01:45 PM PST

திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலக முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்'

Posted: 11 Feb 2015 01:45 PM PST

மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது அவசியம் என்று மாவட்ட நூலக அலுவலர் கே.என்.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Feb 2015 01:45 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்கோவிலூரில் எல்ராம்பட்டு கிளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம் வயது திருமணத்தை தவிர்க்க வேண்டும்

Posted: 11 Feb 2015 01:44 PM PST

பெண்கள் இளம் வயதில் திருமணம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று புதுவை சுகாதாரத் துறை துணை இயக்குநர் கல்லூரி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

சிங்காரவேலர் நினைவு நாள் அனுசரிப்பு

Posted: 11 Feb 2015 01:44 PM PST

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு நாள் புதுச்சேரியில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு வெங்கட்டசுப்பா ரெட்டியார் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு அமைச்சர்கள் பெ.ராஜவேலு, என்.ஜி.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருநள்ளாறு கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

Posted: 11 Feb 2015 01:44 PM PST

சனிப்பெயர்ச்சி விழாவுக்குப் பிறகு திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை தொடங்கியது.

மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்

Posted: 11 Feb 2015 01:43 PM PST

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரிக்க வேண்டும் என, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பாகூரில் ரூ.80 லட்சம் செலவில் பாதாள மின் கேபிள் புதைக்கும் திட்டம்

Posted: 11 Feb 2015 01:43 PM PST

பாகூர் நகரில் ரூ.80 லட்சம் செலவில் பாதாள மின் கேபிள் புதைக்கும் திட்டத்தை மின் துறை அமைச்சர் தி.தியாகராஜன் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

மின்துறை அலுவலகத்தில் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 11 Feb 2015 01:43 PM PST

புதுவை மின் துறை அலுவலகத்தில் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கணவர் கைது

Posted: 11 Feb 2015 01:43 PM PST

புதுவையில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் கணவரை போலீஸார் கைது செய்தனர்.

வெளியாள்கள் வெளியேற தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு

Posted: 11 Feb 2015 01:43 PM PST

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தொகுதியைச் சாராதவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார். மேலும், பொதுக் கூட்டங்களையோ, பேரணிகளையோ நடத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நூல்கள் அறிமுக விழா

Posted: 11 Feb 2015 01:42 PM PST

புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மலேசிய பெண் எழுத்தாளர் மார்கரெட் செல்லதுரை எழுதிய 2 நூல்கள் அறிமுக விழா தமிழ்ச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து 17-ல் கருத்துக்கேட்புக் கூட்டம்

Posted: 11 Feb 2015 01:42 PM PST

புதுச்சேரியில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது குறித்து வரும் 17-ம் தேதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.

மண்ணாடிப்பட்டில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Posted: 11 Feb 2015 01:42 PM PST

புதுச்சேரி கட்டேரிகுப்பம் அம்மன் நகர் பகுதியில் ரூ.10.5 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை பேரவைத் துணைத்தலைவர் டி.ஆர்.பி.செல்வரம் தொடங்கி வைத்தார்.

ரூ.10 கோடியில் குடிநீர்த் திட்டப் பணிகள்

Posted: 11 Feb 2015 01:42 PM PST

புதுச்சேரி உழவர்கரை நகராட்சிப் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பில் குடிநீர்த் திட்டப் பணிகளை முதல்வர் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

காதலர் தின கொண்டாட்டம்: தேசிய மாணவர் இயக்கம் எச்சரிக்கை

Posted: 11 Feb 2015 01:41 PM PST

காதலர் தினத்தன்று புதுவையிலுள்ள பொது இடங்களில் அநாகரீகமாக நடப்பவர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைப்போம் என்று தேசிய மாணவர் இயக்கம் எச்சரித்துள்ளது.

தொகுதிக்கான திட்டங்கள் என்னவாயிற்று? மு.க. ஸ்டாலின் கேள்வி

Posted: 11 Feb 2015 01:41 PM PST

ஸ்ரீரங்கம் தொகுதிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் என்னவாயிற்று என, புதன்கிழமமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தேசிய அறிவியல் தின விழா போட்டிகள்

Posted: 11 Feb 2015 01:41 PM PST

புதுவை அறிவியல் இயக்கம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை சார்பில் தேசிய அறிவியல் தின விழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சட்டப்பேரவைக்கு களப்பயணமாக வந்த பள்ளி மாணவர்கள்

Posted: 11 Feb 2015 01:41 PM PST

புதுவை ரெட்டியார்பாளையம் விருக்ஷô மாண்டிசோரி பள்ளி மாணவர்கள் சட்டப்பேரவை அலுவலகத்துக்கு களப்பயணம் சென்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வாக்காளர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்

Posted: 11 Feb 2015 01:40 PM PST

திமுகவுக்கு வாக்களிக்குமாறு ஸ்ரீரங்கம் வாக்காளர்களை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

அரசுப் பள்ளியில் கணித வார விழா

Posted: 11 Feb 2015 01:40 PM PST

புதுவை முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராயநாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் கடந்த வாரம் தேசிய கணித வார விழா கடைபிடித்தனர்.

மாணவர் தனித்திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நிறைவு

Posted: 11 Feb 2015 01:40 PM PST

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான மாணவர்களுக்கான தனித்திறன் மேம்பாட்டுக் கருத்தரங்க நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: "ஒன்றேகால் லட்சம் லட்சியம், ஒரு லட்சம் நிச்சயம்!'

Posted: 11 Feb 2015 01:40 PM PST

ஒன்றேகால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது லட்சியம் என்றாலும், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் மாநில மின்சார துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன். ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் புதன்கிழமை மாலை முடிவடைந்த அதிமுக தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்கள் பேசியதாவது:

ஆவணக்காப்பகம் தொடங்க எழுத்தாளர்கள் ஆலோசனை

Posted: 11 Feb 2015 01:40 PM PST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு என தனியாக ஆவணக்காப்பகம் தொடங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பெயிண்டர் கொலை வழக்கு:4 பேர் கைது

Posted: 11 Feb 2015 01:39 PM PST

புதுவையில் முன் விரோதத்தில் பெயிண்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள என்.ஆர். காங்கிரஸ் தயார்

Posted: 11 Feb 2015 01:39 PM PST

வரும் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள என்.ஆர். காங்கிரஸ் தயாராக உள்ளது என அதன் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி கூறியுள்ளார்.

பிப்ரவரி 14-இல் ஆர்ப்பாட்டம்: 16-இல் வேலைநிறுத்த நோட்டீஸ்

Posted: 11 Feb 2015 01:39 PM PST

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி, வருகிற 14-ஆம் தேதி அனைத்துப் பணிமனைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது, 16-ஆம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்குவது என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

அரியாங்குப்பத்தில் சுய உதவிக்குழு விற்பனை மையம் திறப்பு

Posted: 11 Feb 2015 01:39 PM PST

புதுவை அருகே அரியாங்குப்பம் உழவர் சந்தையில் சுய உதவிக்குழு விற்பனை மையத்தை சபாநாயகர் சபாபதி புதன்கிழமை திறந்து வைத்தார்.

என்.ஆர். காங்கிரஸ் அமைப்புத் தேர்தல் அட்டவணை அறிவிப்பு

Posted: 11 Feb 2015 01:39 PM PST

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி அமைப்புத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் நிர்வாக செயற்குழுக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.30 கோடியில் 12 நவீன அறுவை சிகிச்சை கூடங்கள்

Posted: 11 Feb 2015 01:38 PM PST

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.30 கோடி செலவில் புதிதாக 12 நவீன அறுவைச் சிகிச்சை கூடங்கள் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 54 படுக்கை வசதி கொண்ட சிறப்பு மருத்துவப் பிரிவை முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதில் ரூ.150, ரூ.300 மற்றும் ரூ.600 கட்டணம் செலுத்தி

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 11 Feb 2015 01:38 PM PST

புதுச்சேரியை அடுத்த பாகூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலையில் விக்னேஷ்வர பூஜை, ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி

பெண் குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு திட்டம் தொடக்கம்

Posted: 11 Feb 2015 01:38 PM PST

புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் பெண் குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு திட்டத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

அழகுக்கலை இலவச பயிற்சிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 11 Feb 2015 01:37 PM PST

அழகுக்கலை குறித்த இலவசப் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ராஜூ வெளியிட்ட செய்திக்குறிப்பு:மத்திய

குத்துச்சண்டை போட்டியில் காமராஜர் பள்ளி மாணவர் சிறப்பிடம்

Posted: 11 Feb 2015 01:37 PM PST

நாமக்கல் காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவர் எ.ஆதித்யன், தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 62 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தொழிற்சாலைகளில் பயிற்சி பெற மாணவர் சேர்க்கை

Posted: 11 Feb 2015 01:36 PM PST

தொழிற்சாலைகளில் பயிற்சி பெறுவதற்கான மாணவர் சேர்க்கை வரும் 14 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில் மின்சாதனங்கள் விற்பனை கடையில் தீ

Posted: 11 Feb 2015 01:36 PM PST

குமாரபாளையத்தில் மின்சாதனப் பொருள்கள் விற்பனை கடையில் தீ பிடித்து கிளம்பிய புகைமூட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருச்செங்கோட்டில் உதவி வேளாண் அலுவலர் சங்க கூட்டம்

Posted: 11 Feb 2015 01:36 PM PST

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் திருச்செங்கோடு கோட்ட அளவிலான ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்களின் குறைகேட்பு கூட்டம் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில், திருச்செங்கோடு உழவர் சந்தை வளாக அலுவலகத்தில் அண்மையில் நடந்தது.

பள்ளிபாளையம் காகித ஆலை காலனியில் ரூ.18 கோடி மதிப்பில் புதிய பாலம்

Posted: 11 Feb 2015 01:35 PM PST

பள்ளிபாளையம் காகித ஆலை காலனியில் ரூ.18 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காகித ஆலை காலனி ரயில் பாலத்தின் உயரம் குறைவானது. இதனால் இப்பாலத்தின் வழியாக பாரமேற்றிய லாரிகள், உயரம் அதிகமுள்ள ஏசி பேருந்துகள் போன்றவை

தமிழக மீனவர்களின் 87 படகுகளை விடுவிக்க உத்தரவு

Posted: 11 Feb 2015 01:24 PM PST

இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 87 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள்: 433 தாற்காலிக அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தேர்வு

Posted: 11 Feb 2015 01:23 PM PST

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு 433 தாற்காலிக உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அமரர் ஊர்தி சேவை வாகன ஓட்டுநர் பணி: 14-ல் நேர்காணல்

Posted: 11 Feb 2015 01:22 PM PST

இலவச அமரர் ஊர்தி சேவை திட்டத்தில், வாகன ஓட்டுநர் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் 14ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்

Posted: 11 Feb 2015 01:22 PM PST

கிருஷ்ணகிரியில் பும்புகார் விற்பனை நிலையத்தின் சார்பில் கைவினை பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

கொலை மிரட்டல்:விவசாயி கைது

Posted: 11 Feb 2015 01:22 PM PST

பர்கூர் அருகே நிலத் தகராறில் பெண்ணை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பெண்கள் மேம்பாடு என்ற தலைப்பில் அஞ்சல் தலை ஓவியப் போட்டி

Posted: 11 Feb 2015 01:21 PM PST

அஞ்சல் துறையின் சார்பில் பெண்கள் மேம்பாடு என்ற தலைப்பில் தேசிய அளவிலான அஞ்சல் தலை ஓவியப் போட்டி நடைபெற உள்ளதாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

பெங்களூரு

Posted: 11 Feb 2015 01:20 PM PST

மதுரை

Posted: 11 Feb 2015 01:20 PM PST

பாளையங்கோட்டை

Posted: 11 Feb 2015 01:20 PM PST

ஈரோடு

Posted: 11 Feb 2015 01:20 PM PST

கோவை

Posted: 11 Feb 2015 01:19 PM PST

தஞ்சாவூர்

Posted: 11 Feb 2015 01:19 PM PST

சேதமடைந்த நிலையில் சிவாலயங்களுக்குச் செல்லும் சாலைகள்

Posted: 11 Feb 2015 01:16 PM PST

குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 சிவாலயங்களுக்குச் செல்லும் சாலைகள் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளதால் சிவாலய ஓட்ட பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சிறுவர்கள் மூலம் மணல் திருட்டு: தொழிலாளி கைது

Posted: 11 Feb 2015 01:15 PM PST

ஆழ்வார்திருநகரி அருகே சிறுவர்கள் மூலம் தாமிரவருணி ஆற்றில் மணலைத் திருடி விற்றதாக கட்டடத் தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

நாகர்கோவில்

Posted: 11 Feb 2015 01:15 PM PST

ஆவண எழுத்தர்களுக்கான நலநிதியத்தை அரசு விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

Posted: 11 Feb 2015 01:15 PM PST

அனைத்து ஆவண எழுத்தர்களுக்கான நலநிதியத்தை அரசு விரைந்து அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் விழா

Posted: 11 Feb 2015 01:15 PM PST

குமரித் தமிழ்வானம் அமைப்பின் சார்பில் ஞா.தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அமைப்பின் தலைவர் நா. முத்திலவேனார் தலைமை வகித்தார். டார்வின் ரமேஷ், சார்லஸ்

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம்

Posted: 11 Feb 2015 01:14 PM PST

குமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் என விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் கேட்டுக் கொண்டுள்ளா

நாகர்கோவிலில் தாணுலிங்க நாடாருக்கு சிலை: இந்து முன்னணி வலியுறுத்தல்

Posted: 11 Feb 2015 01:14 PM PST

நாகர்கோவிலில் தாணுலிங்க நாடாருக்கு சிலை அமைக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பூதப்பாண்டியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

Posted: 11 Feb 2015 01:14 PM PST

பூதப்பாண்டியில் போலீஸாரைக் கண்டித்து வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.

நாகர்கோவிலில் சிங்காரவேலர் நினைவு நாள்

Posted: 11 Feb 2015 01:14 PM PST

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சிங்காரவேலர் நினைவு நாள் புதன்கிழமை நாகர்கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டது.

கண் லென்ஸ் பொருத்தும் முகாம்:குமரி மாவட்டத்தில் நாளை தொடக்கம்

Posted: 11 Feb 2015 01:13 PM PST

குமரி மாவட்டத்தில் ஊராட்சிவாரியாக கண் லென்ஸ் பொருத்தும் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பி.இ. கலந்தாய்வு: 2.4 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கத் திட்டம்

Posted: 11 Feb 2015 12:31 PM PST

வருகிற 2015-16 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கு 2.4 லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

ஊரக வேலைத் திட்டத்துக்கான நிதியை முழுமையாக வழங்காவிடில் போராட்டம்: இளங்கோவன் எச்சரிக்கை

Posted: 11 Feb 2015 12:30 PM PST

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 2,431 கோடியை வழங்காவிட்டால் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்தார்.

மகுடமல்ல, முள் கிரீடம்!

Posted: 11 Feb 2015 12:26 PM PST

தில்லி இந்தியாவின் தலைநகராக இல்லாதிருப்பின், ஆம் ஆத்மியின் இந்த வெற்றியை, ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்தாகவோ, பா.ஜ.க.வுக்கு இந்தியா கொடுத்த பதிலடியாகவோ யாரும் வர்ணிக்க முற்பட்டிருக்க மாட்டார்கள்.

வளர்ச்சியால் வரும் ஆபத்து

Posted: 11 Feb 2015 12:24 PM PST

சமீபத்தில் வெளியான வங்கிகளின் டிசம்பர் 2014 வரையிலான காலாண்டு முடிவுகள், பொருளாதார வட்டாரங்களில், அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் மட்டுமே தீர்வு!

Posted: 11 Feb 2015 12:23 PM PST

இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியும் சிறப்பும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் உயர்ந்து நிற்கும் அதே வேளையில், பிகாரில் இந்திய அரசியலின் பலவீனம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம்

Posted: 11 Feb 2015 12:12 PM PST

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை ஒரே சமயத்தில் நிரப்பக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தினர் புதன்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

சுனந்தா கொலை வழக்கு: சசி தரூரிடம் இன்று மீண்டும் விசாரணை

Posted: 11 Feb 2015 12:09 PM PST

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில், அவரது கணவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரிடம் தில்லி காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வியாழக்கிழமை (பிப்.12) மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.

"இசட் பிளஸ்' பாதுகாப்பை ஏற்க கேஜரிவால் மறுப்பு

Posted: 11 Feb 2015 12:08 PM PST

தில்லி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவால், "இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பை ஏற்க புதன்கிழமை மறுத்து விட்டார்.

ஸ்ரீரங்கம்: அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள்: ஜெயலலிதா வேண்டுகோள்

Posted: 11 Feb 2015 12:07 PM PST

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆம் ஆத்மி, காங்கிரஸூக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

Posted: 11 Feb 2015 12:06 PM PST

முகவரி இல்லாத நிறுவனங்களிடம் இருந்து கட்சிக்கு ரூ. 2 கோடி நன்கொடை பெற்ற விவகாரம் குறித்து விளக்கமளிக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசமைப்புக் கோட்பாடுகளிலிருந்து விலகுவது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்: பிரணாப் எச்சரிக்கை

Posted: 11 Feb 2015 12:02 PM PST

அரசமைப்புக் கோட்பாடுகளில் இருந்து விலகுவது, நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரித்தார்.

மத்திய அரசு அதிகாரிகளுக்கு  திறன் மேம்பாட்டு  பயிற்சி அளிக்க உத்தரவு

Posted: 11 Feb 2015 11:51 AM PST

மத்திய அரசு அதிகாரிகளுக்கு வாரந்தோறும் திறன் மேம்பாட்டு பயிற்சியை துறை வாரியாக அனைத்து செயலர்களும் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

உள்கட்சி ஜனநாயகத்தை அழித்துவிட்டார் கேஜரிவால்:  சாந்தி பூஷண்

Posted: 11 Feb 2015 11:50 AM PST

ஆம் ஆத்மியின் உள்கட்சி ஜனநாயகத்தை அரவிந்த் கேஜரிவால் அழித்துவிட்டார் என்றும், தேர்தலில் போட்டியிட பணம் படைத்த நபர்களுக்கே அவர் வாய்ப்பு வழங்கியதாகவும், அக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சாந்தி பூஷண் குற்றம்சாட்டினார்.

கையெறி குண்டு வெடித்து 2 வீரர்கள் பலி

Posted: 11 Feb 2015 11:38 AM PST

அஸ்ஸாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் கையெறி குண்டு வெடித்ததில் ஊர்க்காவல் படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 20 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

பிரம்மபுத்ரா நதி நீர் வாரிய பெயர் மாற்றப்படும்: உமா பாரதி

Posted: 11 Feb 2015 11:37 AM PST

பிரம்மபுத்ரா நதி நீர் வாரியம் மாற்றியமைக்கப்படுவதோடு, அதன் பெயரும் மாற்றப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.

சாரதா நிதி நிறுவன மோசடி: மதன் மித்ரா ஜாமீன் மனு தள்ளுபடி

Posted: 11 Feb 2015 11:36 AM PST

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

காஷ்மீரில் பனிப்பாறை சரிவு: இளைஞர் பலி

Posted: 11 Feb 2015 11:35 AM PST

ஜம்மு}காஷ்மீர் மாநிலம், குல்மார்க் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட பனிப்பாறை சரிவில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.

பிப்.24 இல் மார்க்சிஸ்ட் தர்னா

Posted: 11 Feb 2015 11:34 AM PST

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவங்களைத் தடுக்கத் தவறியதாக காவல் துறையைக் கண்டித்து நாகர்கோவிலில் இம்மாதம் 24 ஆம் தேதி தர்னா நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் என். முருகேசன் தெரிவித்துள்ளார்.

"அஸ்ஸாமில் மாற்று சக்தியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும்'

Posted: 11 Feb 2015 11:34 AM PST

அஸ்ஸாம் அரசியலில் மிகப் பெரிய மாற்று சக்தியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும் என அக்கட்சியின் அஸ்ஸாம் மாநிலத் தலைவர் மனோரம் கோகோய் கூறினார்.

"ஞானா ராபின்சனின் பிறந்த நாள் சமூக விழாவாக கொண்டாடப்படும்'

Posted: 11 Feb 2015 11:34 AM PST

பவ்டா, பாசா மற்றும் அமைதி அறக்கட்டளையின் தலைவர் ஞானா ராபின்சனின் 80 ஆவது பிறந்த நாளை குமரி தமிழ் இலக்கிய சமூக விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நான்குனேரியில் செல்லிடப்பேசி கோபுரத்தில் குழந்தையுடன் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

Posted: 11 Feb 2015 11:33 AM PST

நான்குனேரியில் செல்லிடப்பேசி கோபுரத்தில், புதன்கிழமை குழந்தையுடன் ஏறிய இளைஞர், தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்ஆதார் அட்டை மையம் திறப்பு

Posted: 11 Feb 2015 11:33 AM PST

குமரி மாவட்ட அளவில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கான பயோ மெட்ரிக் விவரங்கள் எடுக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது.

செந்தமிழ் அருள்நெறி பேரவைக் கூட்டம்

Posted: 11 Feb 2015 11:33 AM PST

செந்தமிழ் அருள்நெறிப் பேரவைக் கூட்டம் சுசீந்திரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பேரவை நிறுவனர் தலைவர் வே. ராமசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ப. நாகப்பன் நாயர், ரத்தினசுவாமி, ஜோதி அரவிந்தன், புரவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கே. நாராயணன் வரவேற்றார்.

கருங்கல் - திக்கணங்கோடு சாலையைச் சீரமைக்க கோரிக்கை

Posted: 11 Feb 2015 11:33 AM PST

கருங்கல் - திக்கணங்கோடு சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டப்பிடாரம் அருகே பேருந்து மோதி 16 ஆடுகள் சாவு

Posted: 11 Feb 2015 11:31 AM PST

ஓட்டப்பிடாரம் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 16 ஆடுகள் இறந்தன. ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமருதூரைச் சேர்ந்தவர் பண்டாரம் (43). இவர், புதன்கிழமை தனக்கு

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Posted: 11 Feb 2015 11:31 AM PST

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தூத்துக்குடியில் பிரீபெய்டு ஆட்டோ கட்டணம்

Posted: 11 Feb 2015 11:31 AM PST

தூத்துக்குடியில் பிரீபெய்டு ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்துவதில் ஒத்துழைப்புத் தருமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவில்பட்டியில்ஆசிரியரை இடம் மாற்றக் கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்

Posted: 11 Feb 2015 11:31 AM PST

கோவில்பட்டி ஒன்றியம், சமத்துவபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யக்கோரி பள்ளி மாணவர், மாணவிகள், பெற்றோர் புதன்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் வட்டத்தில் 496 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 11 Feb 2015 11:30 AM PST

திருச்செந்தூர் வட்டத்தில் 496 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது

சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி தமாகா ஆர்ப்பாட்டம்

Posted: 11 Feb 2015 11:29 AM PST

சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில், சடையனேரி கால்வாயில் ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகாவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம்

வெயிலுகந்தம்மன் கோயிலில் இன்று மாசித் திருவிழா கொடியேற்றம்

Posted: 11 Feb 2015 11:29 AM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன்கோயிலில் மாசித் திருவிழா வியாழக்கிழமை (பிப். 12) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விளாத்திகுளத்தில் போலி மருத்துவர் இருவர் கைது

Posted: 11 Feb 2015 11:29 AM PST

விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் அலோபதி மருத்துவம் மேற்கொண்ட போலி மருத்துவர் இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™