Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணச்சீட்டு--நுகர்வோர் மன்றம் உத்தரவு

Posted: 11 Feb 2015 03:13 PM PST

முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணச்சீட்டு: பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் மன்றம் உத்தரவு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் சாதாரண பயணச் சீட்டு பெற்றவர்களை பயணம் செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை ஈக்காட்டு தாங்கல் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவர் சென்னை (வடக்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ...

பெண்களின் நடையழகு

Posted: 11 Feb 2015 02:58 PM PST

பெண்களின் அழகுமிக்க நடைக்கு அன்னத்தின் நடையைப் போல இருக்கும் என்று உவமை கூறுவர் தமிழ்க் கவிஞர். பஞ்சவடியில் இராமனும் சீதையும் தனித்து இருந்த சமயத்தில் சீதையின் நடைக்குத் தோற்ற ஓர் அன்னம் ஒதுங்கிச் சென்றது. அதை இராமன் பார்த்தான்; சீதையின் நடையையும் ஒப்பிட்டுப் பார்த்தான். பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்தில் புன்னகை செய்தான். ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையளாகும் சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான் இவ்வாறு கம்பர் கவித் தமிழில் சித்திரப்படுத்திக் காட்டுவார். திருக்குற்றாலக் ...

பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..

Posted: 11 Feb 2015 02:50 PM PST

- - என்னது, பொண்ணுங்ககிட்டேயிருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா, நம்ம கட்சியில சேர அவங்களுக்கு ஆர்வமா..? – நீங்க வேற…அவங்க நம்பருக்கு டாப்-அப் பண்ண சொல்லி டார்ச்சர் பண்றாங்க, தலைவரே..! – -நந்தகிஷோர் – ——————————————- – மாப்பிள்ளை பொங்கலுக்கு வந்தாரா..? – பழைய சோத்துக்க்கே வருவார்,..பொங்கலுகு வர மாட்டாரா..! – -கி.ரவிக்குமார் – ————————————— – குற்றப் பத்திரிகையைப் படித்த தலைவர் என்ன சொன்னார்..? – குற்றங்களை செஞ்சப்ப கூட இல்லை, இப்ப அதைப் படிக்கிற போது செம த்ரில்லிங்கா ...

கில்மார்டன் மாளிகையின் மர்மங்கள் - அகதா கிறிஸ்டி

Posted: 11 Feb 2015 11:48 AM PST



http://www.mediafire.com/download/rxuefnnafexycxo/Killmarton+Maalikayin+Marmangal.pdf

என்றும் அன்புடன்
செல்லா

Indira Soundarajan Novels-Marma Desam in Tamil

Posted: 11 Feb 2015 11:39 AM PST

Dear friends, Do you have marma desam in Tamil to read

கடல் அரிப்பை தடுத்து நிறுத்த

Posted: 11 Feb 2015 10:52 AM PST

கடல் அரிப்பை தடுத்து நிறுத்த




நன்றி முகநூல் /மின்னஞ்சல்

ரமணியன்

வரலாற்றில் இன்று - பிப்ரவரி

Posted: 11 Feb 2015 10:49 AM PST

வரலாற்றில் இன்று - பிப்ரவரி 1 1662 - ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் சீனாவின் இராணுவத் தளபதி கொக்சிங்கா தாய்வான் தீவைக் கைப்பற்றினார். 1788 - ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர். 1793 - ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது. 1814 - பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது. 1864 ...

சார்லஸ் ராபர்ட் டார்வின் பிப்ரவரி 12 பிறந்தார் !

Posted: 11 Feb 2015 10:05 AM PST

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், ...

ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !

Posted: 11 Feb 2015 09:59 AM PST

1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி கெண்டக்கி (Kentucky) - ல் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln). (1809-1865) இவரைப்போல வாழ்க்கையில் சோதனைகளையும் தோல்விகளையும் சந்தித்தவர் எவரும் இருக்கமுடியாது. ஆனால் அவர் கலங்கி நிற்காமல் சோதனைகளைக் கடந்து வந்து வெற்றி கண்டார். சாதாரண வெற்றி அல்ல, உலகமே திரும்பிப் பார்த்த வெற்றி. அமெரிக்க ஜனாதிபதி ஆனார் இந்த சாதாரண மனிதர். ஆப்ரஹாம் லிங்கன். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி. 1809-ம்வருடம் பிப்ரவரி 12-ல் மிக மிகச் ...

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்

Posted: 11 Feb 2015 09:11 AM PST

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1 ஆப்ரஹாம் லிங்கன் ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற  அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள். தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள். அப்படித் ...

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Posted: 11 Feb 2015 09:10 AM PST

ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வக்கீல் எஸ்.வளர்மதி போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்ள 50 பேர் கொண்ட குழுவையும் அவர் அறிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.வளர்மதி, ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். வக்கீல் வளர்மதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. ...

தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் - மகேசன் தீர்ப்பு!

Posted: 11 Feb 2015 08:36 AM PST

சுதந்திர இந்தியாவின் சரித்திரம் எழுதப்படும்போது, நேற்று முடிவுகள் வெளியாகி இருக்கும் 6-ஆவது தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சாதனைத் தேர்தலாக நிச்சயம் பதிவு செய்யப்படும். 49 நாள்கள் முதல்வராக இருந்து கடந்த பிப்ரவரி 14-ஆம் நாள் பதவி விலகிய அரவிந்த் கேஜரிவால், அதே நாளில் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார். கடந்த முறை சிறுபான்மை அரசின் முதல்வராகப் பதவி வகித்த அரவிந்த் கேஜரிவால், இப்போது அசுரப் பெரும்பான்மை பலத்துடன் மறுபடியும் ஆட்சி அமைக்க ...

ஒபாமாவை குடும்பத்துடன் கொல்வோம்: ஐ.எஸ்., மிரட்டல்!

Posted: 11 Feb 2015 08:28 AM PST

வாஷிங்டன் : அடுத்தடுத்து மனித உயிர்களை சூறையாடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அடுத்ததாக குறிவைத்திருப்பது அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் குடும்பத்தை தானாம். சமீபத்தில் பிரபல ஆங்கில பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஊடுருவிய ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அதில் ஒபாமாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஊடுருவிய ஐ.எஸ்., பயங்கரவாதிகள், பிரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது போன்று ஒபாமா குடும்பத்தினர் மீதும் தாக்குதல் ...

லேடீஸ் ஹாஸ்டல் : அவசிய டிப்ஸ்!

Posted: 11 Feb 2015 07:44 AM PST

-பானுமதி அருணாசலம் - கல்லூரிகள் திறக்கும் நேரம் இது. புதிய கல்லூரியில் காலடி வைக்கும் பெண்கள் தங்கள் கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி படிப்பார்கள். - சிலர் தனியார் பெண்கள் விடுதியில் தங்குவார்கள். படிக்கும் பெண்கள் மட்டுமல்ல, பணிக்கு செல்லும் பெண்களும் சென்னைக்கு வந்தால் தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. - நாம் பணத்தை கொடுத்தும் சரியான உணவு கிடைக்காதது, மற்றும் பல அசவுகரியங்களை உண்டாக்கும் விடுதிகளும் இருக்கிறது. சென்னைக்கு புதிதாக வரும் இளம் ...

பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி

Posted: 11 Feb 2015 07:39 AM PST

பன்றிக் காய்ச்சல் பாதிக்காமல் தப்புவதற்கு, பொது இடங்களுக்கு அதிகம் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதுதான் எளிதான வழி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவம் அல்லாத வழிகள் மூலம் பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்புவது குறித்த ஆய்வில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் புழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பது, கைகளை சுத்தமாகக் கழுவுவது, நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது ஆகியவை இந்நோய் பரவுவதைக் குறைக்கும். குறிப்பாக, தடுப்பு ...

உலக சினிமா - 36 Quai des Orfèvres

Posted: 11 Feb 2015 07:38 AM PST

எந்த சிஸ்டமும் (அல்லது நிறுவனமும்) தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, தங்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத மனிதர்களைதான் விரும்பும். அவர்களை மட்டுமே தங்களுக்குள் ஏற்றுக் கொள்ளும். திறமை, உழைப்பு எல்லாம் சிஸ்டத்துக்கு பொருட்டேயில்லை. தங்களைப் பதட்டப்படுத்தும் மனிதன் திறமைசாலியாக, நேர்மையுள்ளவனாக இருந்தாலும் சிஸ்டம் அவனை எதிரியாகவே பாவிக்கும். தனக்கு பாதிப்பில்லாததாக கருதும் மனிதன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும் அவனை பாதுகாக்கும், அவனுக்காக யாரை பலி தரவும் சிஸ்டம் தயங்காது. வேலையே செய்யாத ஜால்ராக்களுக்குதான் ...

ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின் நேர்மை பிடித்திருக்கிறது..! -

Posted: 11 Feb 2015 07:25 AM PST

- கடன் வாங்கியதைக் கொண்டாடும் விழா... புதுமனைப் புகு விழா - sundartsp - ----------------------------- - அம்பாஸிடர் காருக்கும் ஆடி காருக்கும் ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின் நேர்மை பிடித்திருக்கிறது..! - priyanesan - ------------------------------ - என் கண்ணாடியை கடவுள் கொஞ்சம் அழகாகப் படைத்திருக்கலாம்..! - Amuthaa - -------------------------------- - ஒன்லி ப்ரூட்ஸ்-னு பெருமை பேசிட்டு நடுராத்திரி பசியில் முழிச்சிக்கிட்டு இருக்கிறதுக்குப் பேருதான் சத்திய சோதனை..! - inpgeetha - ------------------------------------ - உலகத்தில் ...

பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை

Posted: 11 Feb 2015 07:18 AM PST

வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை சென்னை: சென்னையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து, பெண் மீது மயக்க 'ஸ்பிரே' அடித்து 14 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 27-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (45). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில், கீழ் வீடு காலியாக இருந்துள்ளது. எனவே, அங்கு வாடகைக்கு விடப்படும் என பலகை மாட்டப் பட்டிருந்தது. ...

நினைவில் வந்தது

Posted: 11 Feb 2015 05:37 AM PST

நினைவில் வந்தது "என் கண்ணாடியை கடவுள் கொஞ்சம் அழகாகப் படைத்திருக்கலாம்..!  Amuthaa " நகைச்சுவையில் ( உபயம் --ayyasami ram )இதைப் படித்தவுடன் என் நினைவுக்கு வந்த சிறு வயது கதை . சீன தேசம் . உழவர் குடும்பம் . உழவர் குடும்பம் என்றாலே ஏழைகள் தானே . தினமும் வயலுக்கு சென்று , உழுது , உழைத்து விட்டு வரும் , உழவன் . ஒரு நாள் வயலில் உழுது விட்டு , ஓய்வு வேண்டி , மரத்தடியில் உட்கார்ந்த போது , அதன் நிலச்சுவான்தார் மறதியாக விட்டுச் சென்ற பாதரசம் போன சிறிய கண்ணாடி   அங்கே கிடந்தது . இதுவரை ...

ஜெயிக்க வைக்குது பயிற்சி

Posted: 11 Feb 2015 05:34 AM PST

முக்தா கார்கில் மனம் மகிழ்ந்தாள். முக்தா – சேகர் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பெண் குழந்தை. குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலட்டும்போது அவள் மனதில் வண்ண வண்ணக் கனவுகள் மலர்ந்தன. தந்தை சேகரும் குழந்தையை நேசித்தார். குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் தெரிந்தது – மன வளர்ச்சி சிறிதளவு குறைந்த குழந்தை என்று Down's Syndrome என்ற குறை… தாயார் முக்தா குழந்தையைப் பாசத்தோடுதான் பார்த்துக் கொண்டாள். ஆனால் தந்தை சேகர் உள்ளூர் வெறுத்தார்… குழந்தைக்கு கௌரி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். நான்கு ...

--உலகின் மிகச்சிறந்த காதல் தோல்விக் கதை..!

Posted: 11 Feb 2015 04:51 AM PST

= அவன்: ஹலோ... அவள்: சொல்லுங்ணா --உலகின் மிகச்சிறந்த காதல் தோல்விக் கதை..! - ----------------------------------------- - என்னை எதிர்த்துப் பேச, என் மனைவி பயப்படமாட்டார்..! -ஒபாமா --எங்கூர்ல ஏறி மிதிக்கவே பயப்பட மாட்டாங்க..!! - ---------------------------------------- - குடும்பத்தினர் மீது உள்ள பாசத்தைக் காட்ட பைக் ஹெட்லைட் மீது பெயர் எழுத வேண்டாம், ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டினால் போதும்...! - -paalvaadi - --------------------------------------- - மீசை வெச்சா சந்திரன் மீசை ...

பரோட்டா பிரியர்களே... உஷார்!

Posted: 11 Feb 2015 02:28 AM PST

'செஃப்' தாமுவின் ஸ்பெஷல் பரோட்டா! - ''பரோட்டா ரெசிபி சொல்லுங்களேன்...'' என்றபடி, பிரபல செஃப் தாமு முன்பாக போய் நின்றோம். - ''பரோட்டாவை முழுசா செஞ்சு முடிக்க... கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆகும்!'' என்பதை அழுத்தமாகச் சொல்லவிட்டு ஆரம்பித்தவர், - ''அரை கிலோ மைதா மாவுடன், 250 மில்லி தண்ணீர், 50 மில்லி பால், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சம அளவுகளில் அந்த மாவை உருண்டைகள் பிடித்து, அதை நன்கு அடித்துப் பிசைந்து, ...

சிவவாக்கியர் பாடல்கள் MP3

Posted: 11 Feb 2015 02:28 AM PST

சிவவாக்கியர் பாடல்கள் -பகுதி 1 தரவிறக்கம் செய்ய அல்லது தரவிறக்கம் செய்ய சிவவாக்கியர் பாடல்கள் -பகுதி 2 தரவிறக்கம் செய்ய அல்லது தரவிறக்கம் செய்ய சிவவாக்கியர் பாடல்கள் -பகுதி 3 தரவிறக்கம் செய்ய அல்லது தரவிறக்கம் செய்ய சிவவாக்கியர் பாடல்கள் -பகுதி 4 தரவிறக்கம் செய்ய அல்லது தரவிறக்கம் செய்ய

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25 பகுதி 1- 4 அம்பிகா சிவம்

Posted: 11 Feb 2015 12:35 AM PST

இனிய நண்பர்களுக்கு, இது சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் தொடரின் 25வது பதிவு. சற்றே நீண்ட பதிவு. இதுபோலவே 50, 75, 100வது பதிவுகளும் சற்றே விரிவாகவே இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவில் இடம் பெறும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில்தான் என் தாய்வழிப் பாட்டி திருமதி தையல்நாயகி நடராஜன் பிறந்தார் என்பதும் அவர் வ.உ.சி.யின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவகையில் என் தாத்தாவான வ.உ.சி.யைப் பற்றி எழுதுவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இதுவரை ...

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.

Posted: 11 Feb 2015 12:20 AM PST

பதற்றம்…!!
*
பார்வை எதிலோ லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது மனம்
சுடர்விடும் சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு பதற்றம்
சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும் எவரொருவராலும்
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.
ந.க. துறைவன்
*

நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுப்பு!

Posted: 11 Feb 2015 12:18 AM PST

நூற்றாண்டை கடந்த 172 தமிழ் புத்தகங்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம் கண்டெடுப்பு! காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள, சமய சன்மார்க்க சங்கத்தின் நூலகத்தில் இருந்து, நூற்றாண்டை கடந்த, 172 தமிழ் புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஓலைச்சுவடிகள்: சென்னையில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தற்போது, 34 லட்சம் ரூபாய் செலவில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில், அழிந்து வரும் பழம்பெரும் தமிழ் புத்தகங்களை ...

போகர் 300 புத்தகம் கிடைக்குமா?

Posted: 10 Feb 2015 09:21 PM PST

போகர் 300 புத்தகம் கிடைக்குமா?
நண்பர்கள் உதவி தேவை??

நன்றி

செந்தில்குமார்

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Posted: 10 Feb 2015 08:56 PM PST

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 10 Feb 2015 07:50 PM PST

உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன்

பாமரர் தேவாரம்

Posted: 10 Feb 2015 07:42 PM PST

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™