Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தொலைநோக்கு பார்வை கொண்டது: நரேந்திர மோடி
- பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத் திறன் தேர்வு: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்
- தில்லியில் தமிழ்நாடு கைத்தறி விற்பனைக் கண்காட்சி
- கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைவு
- மனுக்கள் எழுத ஆள்கள் நியமிக்கப்படுவார்களா?
- கோபியில் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கு
- ஸ்ரீஸ்ரீ கல்கி பகவான் பிறந்த வீட்டில் ஏகதின லட்சார்ச்சனை
- திருமுருகநாத சுவாமி கோயில் தேர்த் திருவிழா துவக்கம்
- மாவட்ட மல்யுத்தப் போட்டி: எம்பிஎன்எம்ஜெ கல்லூரி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்
- முள்ளம் பன்றி தாக்கி சிறுத்தைக் குட்டி சாவு
- பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
- "தேசிய அளவில் கோ-ஆப்டெக்ஸ் முன்னிலை வகிக்கிறது
- ஜெயலலிதா பிறந்த நாள்: கோயில்களில் சிறப்புப் பூஜை
- தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ரயில்வே பட்ஜெட்
- தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்
- தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
- தலைசிறந்த கிராமத்தை உருவாக்கும் இளைஞர் அமைப்பு
- சுகாதார நடவடிக்கை: 50 பன்றிகள் பிடிபட்டன
- அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பணி நியமன உத்தரவு
- நிலம் கையகப்படுத்தும் சட்டம்: விவசாயிகள் கண்டனம்
- ரயில்வே பட்ஜெட்: தொழில் துறையினர் கருத்து
- அமராவதி பாலம் பராமரிப்புப் பணி:மடத்துக்குளம் எம்.எல்.ஏ. ஆய்வு
- கோவிந்தாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்
- அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் மக்கள் தர்ணா
- குவைத்தில் பணி: நேர்காணலில் பங்கேற்க அழைப்பு
- இணையதளம் மூலமாக லாட்டரி மோசடி: 37 பேர் கைது
- அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.84 லட்சம்
- ஜெயலலிதா பிறந்த நாள் விழா:குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
- பங்காரு அடிகளாரின் பவள விழா நிகழ்ச்சிகள்
- அம்மாபாளையத்தில் 670 பேருக்கு நல உதவி வழங்கல்
- "காங்கயம்-முத்தூர் பிரிவு சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும்'
- சோழீஸ்வரர் கோயில் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை
- நகர்மன்ற முன்னாள் தலைவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
- செங்கோட்டை அருகே விஷம் கொடுத்து இளைஞர் கொலை: பெற்றோர் கைது
- தூய யோவான் கல்லூரியில் கருத்தரங்கு
- "பாளை.யில் 3 நாள்கள் திருமறைக் கண்காட்சி'
- ராணி அண்ணா கல்லூரியில் விளையாட்டு விழா
- மார்ச் 3இல் எஸ்டிபிஐ மனிதச் சங்கிலி
- போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க சுற்றுவட்டச் சாலை
- அகில இந்திய கூடைப்பந்து:2 ஆம் நாள் ஆட்டத்தில் கேரள அணி சிறப்பிடம்
- ஆட்டோக்களுக்கு திருத்திய கட்டணம்: உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த நடவடிக்கை
- ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்னா
- சுந்தரனார் பல்கலை. கணித விநாடி-வினா: தூத்துக்குடி கல்லூரி சிறப்பிடம்
- 6 கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம்
- நெல்லை ஆட்டோ ஓட்டுநர் கொலையில் 3 பேர் கைது
- ரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டங்கள் புறக்கணிப்பு
- "நெல்லையில் ரூ.1.30 கோடியில் அறிவியல் புதுமை தொழிற்கூடம்
- ஓராண்டில் ரூ.15 கோடி கைவினைப் பொருள்கள் உற்பத்தி!
- நாளை இளம் தொழில் முனைவோர் கருத்தரங்கு
- இயற்கை வேளாண் முறையை அதிகரிக்க வேண்டும்
- 64 யானைகள் அட்டகாசம்: 3 ஏக்கர் மாந்தோப்பு சேதம்
- ஊராட்சித் தலைவியின் கணவரை கைது செய்யக்கோரி பணியாளர்கள் ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம்
- பாலிஷ் தொழிற்சாலையில் ஆளில்லா விமானம் ஆய்வு
- ராணுவ வீரர், குடும்பத்தினர் மீது வழக்கு
- முறைகேடு: ரேஷன் ஊழியர்கள் மூவர் இடைநீக்கம்
- வாயில் மறைத்து தங்கம் கடத்தல்: இலங்கை பயணி மீது வழக்கு
- ரயில்வே பட்ஜெட்: வரவேற்பும், எதிர்ப்பும்
- மதுரை கூர்நோக்கு இல்ல சிறார்கள் நெல்லை, திருச்சிக்கு மாற்றம்
- மாநகராட்சி வரி செலுத்தாதோர் கவனத்துக்கு
- இன்று முதல் பைபிள் கண்காட்சி
- மதுரை காமராஜர் பல்கலை. ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...
- மாநகராட்சிக் கூட்டம் ஒத்திவைப்பு
- மதுரை மாவட்டத்தில் 30 இடங்களில் தாய்-சேய் நல மருத்துவ முகாம்
- வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பாதிக்கக் கூடாது
- "பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் முகவரி ஆவணமாக தனியார் வங்கிக் கணக்கு புத்தகம் ஏற்கப்படும்
- அரசு ஒப்புதல் அளித்தால் துணை மேயர் மீது விசாரணை
- மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்க நடவடிக்கை
- ரயில்வே பட்ஜெட்: கர்நாடக பாஜக, காங்கிரஸ், மஜத தலைவர்கள் கருத்து
- "மாணவர்களுக்கு மத நல்லிணக்கத்தை போதிக்க வேண்டும்'
- "கோடையில் மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நடவடிக்கை'
- குடிநீர் வரியைச் செலுத்த தவறினால் "சீல்'
- ரயில் விபத்து தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
- கிளை அஞ்சல் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- அரூரில் வெடிபொருள் பறிமுதல்:பட்டாசுக் கடை உரிமையாளர் கைது
- கிருஷ்ணகிரி கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு தொடக்கம்
- ஊத்தங்கரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி
- தமிழக எல்லை வரை மணல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்
- பன்றிக் காய்ச்சலுக்கு ஹோமியோபதி தடுப்பு மருந்து
- ஒசூரில் அதிமுகவினர் பால்குட ஊர்வலம்
- மத்தூரில் இன்று நலவாரிய சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம்
- அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் போட்டிகள்
- அரூரில் பால்குடம் எடுத்த அதிமுகவினர்
- சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம் தொடக்கம்
- நல்லகண்ணுவுக்கு விருது
- தொழில்நுட்பக் கருத்தரங்கு
- ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி 10,000 பெண்கள் பால்குட ஊர்வலம்
- கொசு பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை: கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்
- "மாணவர்கள் இலக்குடன் முயன்றால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்'
- மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் போட்டிகள்
- கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- ஏமாற்றம் தரும் ரயில்வே நிதி நிலை அறிக்கை
- வழுக்குமரம் ஏறும் போட்டி
- காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமனம்
- மயானப் பாதையை மீட்கக் கோரிக்கை
- மத்திய அரசைக் கண்டித்து தொழில்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
- சேலத்தில் அனைத்துத் தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மனுநீதி நாளில் 273 பயனாளிகளுக்கு ரூ.7.69 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- ஜெயலலிதா பிறந்த நாள்:கேக் வெட்டிய வழக்குரைஞர்கள்
- ஜெயலலிதா பிறந்தநாள்:அதிமுகவினர் அன்னதானம்
| தொலைநோக்கு பார்வை கொண்டது: நரேந்திர மோடி Posted: 26 Feb 2015 04:17 PM PST நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட், தொலைநோக்குத் திட்டங்களையும், பயணிகள் நலனையும் கருத்தில் கொண்டு அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். |
| பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத் திறன் தேர்வு: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம் Posted: 26 Feb 2015 04:09 PM PST பள்ளி மாணவர்களுக்கான "ஆப்டிஸ்' ஆங்கிலத் திறன் தேர்வை பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. |
| தில்லியில் தமிழ்நாடு கைத்தறி விற்பனைக் கண்காட்சி Posted: 26 Feb 2015 04:08 PM PST தில்லியில் தமிழ்நாடு கைத்தறி விற்பனைக் கண்காட்சியை மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். |
| கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைவு Posted: 26 Feb 2015 04:07 PM PST சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் காலிஃபிளவர், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. |
| மனுக்கள் எழுத ஆள்கள் நியமிக்கப்படுவார்களா? Posted: 26 Feb 2015 04:04 PM PST அரசு அலுவலகங்களில் படிப்பறிவு குறைந்த கிராம மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதித் தருவதில், சிரமங்கள் உள்ளன. எனவே, ஒவ்வொரு அரசு அலுவலக வளாகத்திலும் மனுக்கள் எழுத, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கோபியில் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கு Posted: 26 Feb 2015 04:02 PM PST கோபி நகராட்சி மற்றும் எக்ஸ்னாரோ இண்டர்நேஷனல் ஆகியவை இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான "கழிவுகளும் செல்வமே' என்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கை வியாழக்கிழமை நடத்தின |
| ஸ்ரீஸ்ரீ கல்கி பகவான் பிறந்த வீட்டில் ஏகதின லட்சார்ச்சனை Posted: 26 Feb 2015 04:02 PM PST பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கல்கி பகவான் பிறந்த நாளை முன்னிட்டு,வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த நத்தம் கிராமத்தில் சுமார் ரூ. 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள அவர் பிறந்த வீட்டில் ஏகதின லட்சார்ச்சனைப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திருமுருகநாத சுவாமி கோயில் தேர்த் திருவிழா துவக்கம் Posted: 26 Feb 2015 04:01 PM PST திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தேர்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றுத்துடன் துவங்கியது. |
| மாவட்ட மல்யுத்தப் போட்டி: எம்பிஎன்எம்ஜெ கல்லூரி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம் Posted: 26 Feb 2015 04:01 PM PST மாவட்ட மல்யுத்தப் போட்டியில் எம்பிஎன்எம்ஜெ கல்லூரி மாணவர் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். ஈரோடு மாவட்ட அமெச்சூர் மல்யுத்த சங்கம் நடத்திய 4-ஆவது மாவட்ட அளவிலான மல்யுத்தப் போட்டிக |
| முள்ளம் பன்றி தாக்கி சிறுத்தைக் குட்டி சாவு Posted: 26 Feb 2015 04:01 PM PST குன்னூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் முள்ளம் பன்றி தாக்கியதில் 5 மாத சிறுத்தைக் குட்டி உயிரிழந்தது. குன்னூர் அருகே கோடமலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி உயிரிழந்து கிடப்ப |
| பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி Posted: 26 Feb 2015 04:00 PM PST கோத்தகிரி ஜேசிஐ அமைப்பு சார்பில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| "தேசிய அளவில் கோ-ஆப்டெக்ஸ் முன்னிலை வகிக்கிறது Posted: 26 Feb 2015 04:00 PM PST அரசு சார்ந்த நிறுவனங்களில் இந்திய அளவில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் விற்பனையில் முன்னிலை வகிப்பதாக அதன் தலைவர் கே.வி.மனோகரன் தெரிவித்தார். |
| ஜெயலலிதா பிறந்த நாள்: கோயில்களில் சிறப்புப் பூஜை Posted: 26 Feb 2015 04:00 PM PST அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, பந்தலூர் ஒன்றிய அதிமுக இளைஞரணி சார்பில் கோயில்களில், வியாழக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. |
| தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ரயில்வே பட்ஜெட் Posted: 26 Feb 2015 04:00 PM PST ரயில்வே துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். |
| தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் Posted: 26 Feb 2015 03:59 PM PST திருப்பூர் மாவட்டத்திலுள்ள 28 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. |
| தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை Posted: 26 Feb 2015 03:59 PM PST தாராபுரம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| தலைசிறந்த கிராமத்தை உருவாக்கும் இளைஞர் அமைப்பு Posted: 26 Feb 2015 03:59 PM PST திருவள்ளூர் மாவட்டம், ஆலத்தூர் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக உதவும் நண்பர்கள் என்ற அமைப்பு பொதுமக்களின் ஒத்துழைப்போடு பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வருகிறது. |
| சுகாதார நடவடிக்கை: 50 பன்றிகள் பிடிபட்டன Posted: 26 Feb 2015 03:59 PM PST திருப்பூரில் சுகாதார நடவடிக்கையின் ஒருபகுதியாக, வியாழக்கிழமை ஒரே நாளில் 50 பன்றிகள் பிடிக்கப்பட்டன. இப்பன்றிகளை சத்தியமங்கலம் வனப் பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. |
| அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பணி நியமன உத்தரவு Posted: 26 Feb 2015 03:58 PM PST அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 106 பேருக்கு பணி நியமனம், பணி உயர்வு உத்தரவு வழங்கப்பட்டது. |
| நிலம் கையகப்படுத்தும் சட்டம்: விவசாயிகள் கண்டனம் Posted: 26 Feb 2015 03:58 PM PST நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ள மத்திய அரசுக்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| ரயில்வே பட்ஜெட்: தொழில் துறையினர் கருத்து Posted: 26 Feb 2015 03:58 PM PST வரவேற்பும், ஏமாற்றமும் கலந்ததாக மத்திய ரயில்வே பட்ஜெட் உள்ளது என்று திருப்பூர் தொழில்துறையினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். |
| அமராவதி பாலம் பராமரிப்புப் பணி:மடத்துக்குளம் எம்.எல்.ஏ. ஆய்வு Posted: 26 Feb 2015 03:57 PM PST மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் உயர் மட்ட மேம்பாலத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை எம்எல்ஏ சி.சண்முகவேலு வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| கோவிந்தாபுரத்தில் இலவச மருத்துவ முகாம் Posted: 26 Feb 2015 03:57 PM PST தாராபுரம் அருகே கோவிந்தாபுரத்தில் இலவச பொதுமருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய |
| அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் மக்கள் தர்ணா Posted: 26 Feb 2015 03:56 PM PST திருப்பூர் பூங்கா நகருக்கு பேருந்து இயக்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| குவைத்தில் பணி: நேர்காணலில் பங்கேற்க அழைப்பு Posted: 26 Feb 2015 03:56 PM PST குவைத் நாட்டில் இந்திய தொலைத்தொடர்பு துறையின் திட்டப் பணிகளில் பணியாற்ற விரும்புவோர் சென்னையில் நடைபெற இருக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம். |
| இணையதளம் மூலமாக லாட்டரி மோசடி: 37 பேர் கைது Posted: 26 Feb 2015 03:56 PM PST இணையதளம் மூலமாக ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 9 பேர் உள்பட 37 பேரை திருப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். |
| அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.84 லட்சம் Posted: 26 Feb 2015 03:55 PM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தர்கள் ரூ.84 லட்சம் ரொக்கம், 240 கிராம் தங்கம், 620 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். |
| ஜெயலலிதா பிறந்த நாள் விழா:குழந்தைகளுக்கு தங்க மோதிரம் Posted: 26 Feb 2015 03:52 PM PST அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| பங்காரு அடிகளாரின் பவள விழா நிகழ்ச்சிகள் Posted: 26 Feb 2015 03:52 PM PST மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் பங்காரு அடிகளாரின் 75-ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பிப்ரவரி 28ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி, மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, ரூ.20 கோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்படுகின்றன. |
| அம்மாபாளையத்தில் 670 பேருக்கு நல உதவி வழங்கல் Posted: 26 Feb 2015 03:52 PM PST அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அம்மாபாளையத்தில் 670 பேருக்கு நல உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| "காங்கயம்-முத்தூர் பிரிவு சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும்' Posted: 26 Feb 2015 03:52 PM PST காங்கயம், கரூர் சாலையில் உள்ள முத்தூர் சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கவேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| சோழீஸ்வரர் கோயில் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை Posted: 26 Feb 2015 03:51 PM PST வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நகர்மன்ற முன்னாள் தலைவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது Posted: 26 Feb 2015 03:51 PM PST திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திருப்பூர் 15 வேலம்பாளையம் முன்னாள் |
| செங்கோட்டை அருகே விஷம் கொடுத்து இளைஞர் கொலை: பெற்றோர் கைது Posted: 26 Feb 2015 03:50 PM PST செங்கோட்டை அருகே பண்பொழியில் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய சில தினங்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரை, அவருடைய பெற்றோரே விஷம் கொடுத்து கொலை செய்ததாக விசாரணையில் |
| தூய யோவான் கல்லூரியில் கருத்தரங்கு Posted: 26 Feb 2015 03:50 PM PST பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பொருளாதாரத் துறை சார்பில், இந்திய பொருளாதார நிலை-உலகமயமாக்கலுக்கு பின்னர் என்ற மையக் கருத்தின் அடிப்படையில் கருத்தரங்கு நடைபெற்றது. |
| "பாளை.யில் 3 நாள்கள் திருமறைக் கண்காட்சி' Posted: 26 Feb 2015 03:50 PM PST பாளையங்கோட்டையில் திருமறைக் கண்காட்சி 3 நாள்கள் நடைபெற உள்ளது என்றார் தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டல பேராயர் ஜெ.ஜெ.கிறிஸ்துதாஸ். |
| ராணி அண்ணா கல்லூரியில் விளையாட்டு விழா Posted: 26 Feb 2015 03:50 PM PST திருநெல்வேலி பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மார்ச் 3இல் எஸ்டிபிஐ மனிதச் சங்கிலி Posted: 26 Feb 2015 03:49 PM PST மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைப்பை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 3 இல் மனிதச் சங்கிலி நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. |
| போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க சுற்றுவட்டச் சாலை Posted: 26 Feb 2015 03:48 PM PST திருநெல்வேலியில் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. |
| அகில இந்திய கூடைப்பந்து:2 ஆம் நாள் ஆட்டத்தில் கேரள அணி சிறப்பிடம் Posted: 26 Feb 2015 03:48 PM PST அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கூடைப்பந்துப் போட்டியில் 2ஆம் நாள் ஆட்டத்தில் கேரள அணி சிறப்பிடம் பெற்றது. |
| ஆட்டோக்களுக்கு திருத்திய கட்டணம்: உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த நடவடிக்கை Posted: 26 Feb 2015 03:48 PM PST ஆட்டோக்களுக்கான திருத்திய கட்டணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன. |
| ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்னா Posted: 26 Feb 2015 03:48 PM PST திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். |
| சுந்தரனார் பல்கலை. கணித விநாடி-வினா: தூத்துக்குடி கல்லூரி சிறப்பிடம் Posted: 26 Feb 2015 03:47 PM PST மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 20ஆவது கணித விநாடி-வினா போட்டியில் தூத்துக்குடி புனித மேரி கல்லூரி முதல் பரிசு பெற்றது. |
| 6 கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம் Posted: 26 Feb 2015 03:47 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் 6 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 27) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. |
| நெல்லை ஆட்டோ ஓட்டுநர் கொலையில் 3 பேர் கைது Posted: 26 Feb 2015 03:47 PM PST திருநெல்வேலியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இறந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டங்கள் புறக்கணிப்பு Posted: 26 Feb 2015 03:47 PM PST பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று முழுமையாகத் தாக்கல் செய்துள்ள முதல் ரயில்வே பட்ஜெட்டில், தென்மாவட்டங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து தொழில் வர்த்தக சங்கங்கள், பயணிகள் சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன. |
| "நெல்லையில் ரூ.1.30 கோடியில் அறிவியல் புதுமை தொழிற்கூடம் Posted: 26 Feb 2015 03:46 PM PST திருநெல்வேலியில் ரூ.1.30 கோடியில் அறிவியல் புதுமை தொழிற்கூடம் (ஐய்ய்ர்ஸ்ஹற்ண்ர்ய் ட்ன்க்ஷ) விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, பெங்களூரில் உள்ள விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியக இயக்குநர் கே.ஜி.குமார் தெரிவித்தார். |
| ஓராண்டில் ரூ.15 கோடி கைவினைப் பொருள்கள் உற்பத்தி! Posted: 26 Feb 2015 03:46 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் ஓராண்டில் ரூ.15 கோடிக்கு கைவினைப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. |
| நாளை இளம் தொழில் முனைவோர் கருத்தரங்கு Posted: 26 Feb 2015 03:45 PM PST மதுரையில் எஸ்கான் எனப்படும் இளம்தொழில்முனைவோருக்கான கருத்தரங்கு பிப்.28இல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேசனின் கீழ் செயல்படும் இளம் தொழில் முனைவோர் மையம் ஆண்டுதோறும், எஸ்கான் என்ற பெயரில் கருத்தரங்கு நடத்தி வருகிறது. தொழில் வணிகத்துக்குத் தேவையான திறமைகளை மையமாக வைத்து, பல்வேறு போட்டிகள் இந்த கருத்தரங்கில் நடைபெறும். இந்த போட்டிகளில் அனைத்து மையங்களிலிருந்தும் உறுப்பினர்கள் குழுக்களாகப் பங்கேற்கின்றனர். மேலும் தொழில் துறையில் சிறந்து |
| இயற்கை வேளாண் முறையை அதிகரிக்க வேண்டும் Posted: 26 Feb 2015 03:45 PM PST தமிழகத்தில் இயற்கை வேளாண்முறையை அதிகரிக்கவேண்டும் என, மதுரை வேளாண் கல்லூரி கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. |
| 64 யானைகள் அட்டகாசம்: 3 ஏக்கர் மாந்தோப்பு சேதம் Posted: 26 Feb 2015 03:45 PM PST தேன்கனிக்கோட்டை அருகே 64 யானைகள் 3 ஏக்கர் மாந்தோப்பில் புகுந்து சேதப்படுத்தியதால், விவசாயிகள் வேதனையடைந்தனர். |
| ஊராட்சித் தலைவியின் கணவரை கைது செய்யக்கோரி பணியாளர்கள் ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம் Posted: 26 Feb 2015 03:45 PM PST தேசிய ஊரக வளர்ச்சித் திட்ட அதிகாரிகளைத் தாக்கிய உசிலம்பட்டி ஊராட்சித் தலைவியின் கணவரை கைது செய்யக் கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் வியாழக்கிழமை ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| பாலிஷ் தொழிற்சாலையில் ஆளில்லா விமானம் ஆய்வு Posted: 26 Feb 2015 03:44 PM PST கிரானைட் முறைகேடு தொடர்பான ஆய்வுப்பணியின் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை, தெற்குத்தெருவிலுள்ள பி.ஆர்.பி. கிரானைட் பாலீஷ் தொழிற்சாலையில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. |
| ராணுவ வீரர், குடும்பத்தினர் மீது வழக்கு Posted: 26 Feb 2015 03:44 PM PST மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பாலன் நகரைச் சேர்ந்தவர் லேகா(24). இவருக்கும் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் தினேஷ்(23) என்பவருக்கும் கடந்த 2013இல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கூடுதலாக |
| முறைகேடு: ரேஷன் ஊழியர்கள் மூவர் இடைநீக்கம் Posted: 26 Feb 2015 03:43 PM PST கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் மூவர் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| வாயில் மறைத்து தங்கம் கடத்தல்: இலங்கை பயணி மீது வழக்கு Posted: 26 Feb 2015 03:43 PM PST மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை, வாயில் மறைத்து 40 கிராம் தங்கம் கடத்திய, இலங்கை பயணியை விமான நிலைய அதிகாரிகள் விசாரிக்கின்றனர். |
| ரயில்வே பட்ஜெட்: வரவேற்பும், எதிர்ப்பும் Posted: 26 Feb 2015 03:42 PM PST ரயில்வே பட்ஜெட் குறித்து மதுரையைச் சேர்ந்த தொழில் சங்கங்கள், கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன்: |
| மதுரை கூர்நோக்கு இல்ல சிறார்கள் நெல்லை, திருச்சிக்கு மாற்றம் Posted: 26 Feb 2015 03:42 PM PST மதுரை கூர்நோக்கு இல்ல சிறார்கள் 17 பேர், திருநெல்வேலி மற்றும் திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| மாநகராட்சி வரி செலுத்தாதோர் கவனத்துக்கு Posted: 26 Feb 2015 03:42 PM PST மதுரை மாநகராட்சிப் பகுதியில் 2014 - 2015ஆம் ஆண்டுக்கான வரிகளை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Feb 2015 03:41 PM PST இந்திய வேதாகம சங்கத்தின் சார்பில் பைபிள் கண்காட்சி, சென்னையில் வெள்ளிக்கிழமை (பிப்.27) தொடங்க உள்ளது. |
| மதுரை காமராஜர் பல்கலை. ஓய்வூதியர்கள் கவனத்துக்கு... Posted: 26 Feb 2015 03:41 PM PST மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர்களுக்கான வாழ்வுச் சான்றிதழ் விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ர்ழ்ஞ்) பதிவிறக்கம் செய்து |
| மாநகராட்சிக் கூட்டம் ஒத்திவைப்பு Posted: 26 Feb 2015 03:41 PM PST அண்மையில் மறைந்த சென்னை மாநகராட்சி உறுப்பினர் ரவி என்கிற ராஜேந்திரனுக்கு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. |
| மதுரை மாவட்டத்தில் 30 இடங்களில் தாய்-சேய் நல மருத்துவ முகாம் Posted: 26 Feb 2015 03:41 PM PST மதுரை மாவட்டத்தில் 30 இடங்களில் தாய்-சேய் நல மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வியாழக்கிழமை தெரிவித்தார். |
| வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பாதிக்கக் கூடாது Posted: 26 Feb 2015 03:41 PM PST சமையல் எரிவாயுக்கான நேரடி மானியத் திட்டத்தில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை |
| "பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் முகவரி ஆவணமாக தனியார் வங்கிக் கணக்கு புத்தகம் ஏற்கப்படும் Posted: 26 Feb 2015 03:40 PM PST பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போது, இருப்பிட முகவரி ஆவணமாக இனிமேல் தனியார் வங்கி கணக்குப் புத்தகமும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வரராஜா தெரிவித்துள்ளார். |
| அரசு ஒப்புதல் அளித்தால் துணை மேயர் மீது விசாரணை Posted: 26 Feb 2015 03:40 PM PST திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் மீதான முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்த அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சாலை அமைத்ததில் நடந்த முறைகேடு குறித்து துணை மேயர் மீது |
| மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்க நடவடிக்கை Posted: 26 Feb 2015 03:39 PM PST மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார். |
| ரயில்வே பட்ஜெட்: கர்நாடக பாஜக, காங்கிரஸ், மஜத தலைவர்கள் கருத்து Posted: 26 Feb 2015 03:39 PM PST ரயில்வே பட்ஜெட் குறித்து கர்நாடக பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். |
| "மாணவர்களுக்கு மத நல்லிணக்கத்தை போதிக்க வேண்டும்' Posted: 26 Feb 2015 03:39 PM PST மாணவர்களுக்கு மத நல்லிணக்க உணர்வை போதிக்க வேண்டும் என்று, கர்நாடக முன்னாள் அமைச்சர் ரகுபதி கேட்டுக் கொண்டார். |
| "கோடையில் மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நடவடிக்கை' Posted: 26 Feb 2015 03:38 PM PST கோடையில் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக மின்சாரத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். |
| குடிநீர் வரியைச் செலுத்த தவறினால் "சீல்' Posted: 26 Feb 2015 03:38 PM PST குடிநீர், கழிவுநீர் வரியை செலுத்தத் தவறினால் கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கு "சீல்' வைக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. |
| ரயில் விபத்து தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 26 Feb 2015 03:38 PM PST தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ரயில் விபத்தைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| கிளை அஞ்சல் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 26 Feb 2015 03:38 PM PST தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள பிக்கிலி, கோட்டப்பட்டி ஆகிய இடங்களில் கிளை அஞ்சல் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். |
| அரூரில் வெடிபொருள் பறிமுதல்:பட்டாசுக் கடை உரிமையாளர் கைது Posted: 26 Feb 2015 03:37 PM PST அரூரில் அனுமதியின்றி வெடிபொருள்களை வைத்திருந்ததாக பட்டாசுக் கடை உரிமையாளரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| கிருஷ்ணகிரி கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு தொடக்கம் Posted: 26 Feb 2015 03:37 PM PST கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மூன்று நாள்கள் நடைபெறும் முத்தொள்ளாயிரம் குறித்த தேசியக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. |
| ஊத்தங்கரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி Posted: 26 Feb 2015 03:36 PM PST ஊத்தங்கரையில் சஞ்சீவி அறக்கட்டளை, சென்னை சி.பி.ராமசாமி ஐயர் பவுண்டேசன் இணைந்து தேசிய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம், பேரணியை அண்மையில் நடத்தியது. |
| தமிழக எல்லை வரை மணல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் Posted: 26 Feb 2015 03:36 PM PST தமிழக எல்லை வரை மணல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மணல் லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை மனு அளித்தனர். |
| பன்றிக் காய்ச்சலுக்கு ஹோமியோபதி தடுப்பு மருந்து Posted: 26 Feb 2015 03:36 PM PST பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக ஹோமியோபதி மருந்தான "அர்சீனியம் ஆல்பம்' என்ற மாத்திரையைப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| ஒசூரில் அதிமுகவினர் பால்குட ஊர்வலம் Posted: 26 Feb 2015 03:36 PM PST ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஒசூரில் அதிமுக சார்பில் பால்குட ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூர் ரயில் நிலையம் அருகே முருகன் கோயிலில் தொடங்கிய ஊர்வலம் வட்ட |
| மத்தூரில் இன்று நலவாரிய சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் Posted: 26 Feb 2015 03:35 PM PST கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் வெள்ளிக்கிழமை (பிப்.27) நலவாரியங்களில் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. |
| அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் போட்டிகள் Posted: 26 Feb 2015 03:35 PM PST அரூர் அருகே கொளகம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. |
| அரூரில் பால்குடம் எடுத்த அதிமுகவினர் Posted: 26 Feb 2015 03:35 PM PST அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, அக்கட்சியைச் சேர்ந்த 2003 பேர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வியாழக்கிழமை சென்றனர். |
| சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம் தொடக்கம் Posted: 26 Feb 2015 03:34 PM PST தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம் வியாழக்கிழமை (பிப்.26) தொடங்கியது. |
| Posted: 26 Feb 2015 03:34 PM PST காயிதே மில்லத் கல்வி, அறக்கட்டளை சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தேசிய அளவில் அரசியல்,பொது வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிப்பவர் என்ற விருது சென்னையில் அண்மையில் வழங்கப்பட்டது. |
| Posted: 26 Feb 2015 03:34 PM PST ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பில், தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் மெக்ஜெஸ்டு-2015 என்ற தலைப்பில் வியாழக்கிழமை தொடங்கியது. |
| ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி 10,000 பெண்கள் பால்குட ஊர்வலம் Posted: 26 Feb 2015 03:34 PM PST ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, பள்ளிபாளையத்தில் மாரியம்மன் கோயிலுக்கு 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று வழிபட்டனர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பா.வளர்மதி, பி.தங்கம |
| கொசு பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை: கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல் Posted: 26 Feb 2015 03:33 PM PST டெங்கு, பன்றி காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, கல்லூரி வளாகங்களில் கொசுக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. |
| "மாணவர்கள் இலக்குடன் முயன்றால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்' Posted: 26 Feb 2015 03:33 PM PST மாணவ, மாணவியர் இலக்கை நிர்ணயித்து, தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும் என திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்தார். |
| மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் போட்டிகள் Posted: 26 Feb 2015 03:33 PM PST தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான அறிவியல் போட்டியில் ஆர்வமுடன் மாணவர்கள் கலந்து கொண்டனர். |
| கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் Posted: 26 Feb 2015 03:33 PM PST எடப்பாடி ஒன்றியத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்காக வியாழக்கிழமை நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. |
| அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி Posted: 26 Feb 2015 03:32 PM PST நாமக்கல்லில், அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. |
| ஏமாற்றம் தரும் ரயில்வே நிதி நிலை அறிக்கை Posted: 26 Feb 2015 03:32 PM PST ரயில்வே நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிப்பதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியது: |
| Posted: 26 Feb 2015 03:32 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நாமக்கல் பொய்யேரிக்கரை, மதுரைவீரன் கோயில் அருகே புதன்கிழமை இரவு நடைபெற்றது. |
| காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் Posted: 26 Feb 2015 03:31 PM PST ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகளை நகரத் தலைவர் ஆர்.முரளி நியமனம் செய்துள்ளார். நகர துணைத் தலைவர்களாக கே.ராமசாமி, டி.மோகன்ராஜ், டி.வி.எஸ்.ஆர்.சுகுமாரன், கே.மாதவன், எஸ். |
| மயானப் பாதையை மீட்கக் கோரிக்கை Posted: 26 Feb 2015 03:31 PM PST மயானப் பாதையை மீட்டுத்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல், பொட்டணம்புதூர் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் அண்மை |
| மத்திய அரசைக் கண்டித்து தொழில்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Feb 2015 03:31 PM PST தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்ற பெயரில், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, பல்வேறு கட்சிகளின் மத்திய தொழில்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சேலத்தில் அனைத்துத் தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 26 Feb 2015 03:30 PM PST மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து, அனைத்து தேசிய தொழில்சங்கங்கள் சார்பில், சேலம் தலைமை தபால் நிலையம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மனுநீதி நாளில் 273 பயனாளிகளுக்கு ரூ.7.69 லட்சம் நலத்திட்ட உதவிகள் Posted: 26 Feb 2015 03:30 PM PST ஓமலூர் அருகே மூக்கனூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 273 பயனாளிகளுக்கு ரூ.7.69 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் வழங்கினார். |
| ஜெயலலிதா பிறந்த நாள்:கேக் வெட்டிய வழக்குரைஞர்கள் Posted: 26 Feb 2015 03:30 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67-ஆவது பிறந்தநாளையொட்டி சங்ககிரியில் அதிமுக வழக்குரைஞர் அணியின் சார்பில் வியாழக்கிழமை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. |
| ஜெயலலிதா பிறந்தநாள்:அதிமுகவினர் அன்னதானம் Posted: 26 Feb 2015 03:29 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி செட்டிமாங்குறிச்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |