ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வரலாற்றில் இன்று - பிப்ரவரி
- ஏரிகளைப் போற்றிய முன்னோர்!
- கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்
- 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
- அவர்களுக்கு உணவு நமக்கு நஞ்சு
- “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே”
- “மால்’னா பெருமாள்!
- வேலன்:-சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் சுலபமாக கற்க
- அழகு மனைவியும் லூசு புருஷனும்
- நானெழுதிய கவிதை...............
- புற்றுநோய்... இந்தியர்களைக் குறிவைத்திருக்கும் புது வில்லன்!
- நிலக்கரியும் நிறைய அரசியலும்!
- உலகிலேயே 3G வசதியை குறைவாக பயன்படுத்தும் நாடு இந்தியா!
- தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம்
- ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது!
- இந்திய கல்வி முறையே சிறந்தது
- ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஆலங்குடி குருபகவானுக்கு தங்க கவச அலங்காரம்!
- 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!
- குழந்தை - by krishnaamma :)
- காலம் கடந்த ஞானோதயம்...............by Krishnaamma:)
- உலகப் புகழ்பெற்ற பிரஞ்சு கவிஞர் விக்டர் ஹ்யுகோ (Victor Hugo) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 26)
- தன்னம்பிக்கை சூப் 13 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- கவிழ்ந்த காணிக்கை-பாலகுமாரன்
- ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது....
- ஒரு நிமிடக் கதைகள்
- ரயில்வே பட்ஜெட் 2015
- மனைவிகளே.. ! காதல் துணைவிகளே..! (Whatsapp - கலக்கல்)
- ஷிர்டி சாய் பாபா ஷிர்டி கிராமத்திற்கு வந்த கதை
- கண்டது..!-வியப்பூட்டும் செய்திகள்
- அமிதாப் பச்சனை தொடர்ந்து கமலுடன் இணையும் தனுஷ்!
- 10 ஆண்டுகளைக் கடந்த நயன்தாரா!
- டயர்களுக்கு வயதாகி விட்டால் என்ன ஆகும்?
- புது வீடு… புது பூசணி…
- கிழவிமேல் காதல் கொள்ளடா
- புது டிரெஸ்! – ஒரு பக்கக் கதை!
- “காகிதத்தில் கப்பல் செய்து...!
- தமிழ்நேசன் அவர்களுக்கு
| Posted: 26 Feb 2015 11:23 AM PST வரலாற்றில் இன்று - பிப்ரவரி 1 1662 - ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் சீனாவின் இராணுவத் தளபதி கொக்சிங்கா தாய்வான் தீவைக் கைப்பற்றினார். 1788 - ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர். 1793 - ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது. 1814 - பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது. 1864 ... |
| Posted: 26 Feb 2015 11:13 AM PST கோடைக்கு முன்னரே அதன் வெம்மை தாக்குகிறது. பாசன பாதிப்பு மட்டுமல்ல, இனி குடிநீர் பிரச்சினைகளும் அதிகரிக்கும். நிலத்தடி நீர்வளத்தைக் காப்பதில் நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்த நீர் மேலாண்மை நுணுக்கத்தை நாம் மறந்ததன் நிதர்சன உதாரணம், இன்றைய அரியலூர் மாவட்டம் எதிர்கொண்டிருக்கும் வறட்சி. ஆழி சூழ் உலகு என்பதுபோல, அரியலூர் பகுதி ஏரிகளால் ஆனது. வடக்கை வென்ற ராஜேந்திர சோழன் தனது வெற்றித்தூணை நீர்மயமாக உருவாக்கிய பொன்னேரி என்ற சோழகங்கமே இந்த பெருமையைச் சொல்லும். இந்த வரிசையில் மற்றொன்று, 40 ஆயிரம் ... |
| கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல் Posted: 26 Feb 2015 10:59 AM PST மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு ... |
| 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Posted: 26 Feb 2015 10:49 AM PST வட- இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இந்து தேசியவாதக் குழுக்கள் கிறிஸ்மஸ் தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள மதமாற்ற நிகழ்வை அனுமதிக்கப் போவதில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலிகார் நகர மூத்த காவல்துறை அதிகாரி மோஹித் அகர்வால் கூறினார். கட்டாயப்படுத்தலும் மோசடியும் தூண்டுதலும் இன்றி மதம் மாறுவது இந்தியாவில் சட்டபூர்வமானது. கடந்த வாரம், ஆக்ரா நகரில் 50 முஸ்லிம் குடும்பங்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்து ... |
| Posted: 26 Feb 2015 10:47 AM PST பாரதநாடே, உன்னைப் பயமுறுத்தும் இன்னல் இதுவே. மேல் நாட்டாரைப் பின்பற்றி நடிக்கும் மயக்கத்தில் நீ மூழ்கியிருக்கிறாய். ஆதலால் எது நல்லது, எது தீது என்பதை இனிமேல் நீ ஆராய்ச்சியாலோ, பகுத்தறிவாலோ, விவேகத்தாலோ அல்லது சாஸ்திரங்களின் அபிப்ராயத்தைக் கொண்டோ தீர்மானிக்கப் போவதில்லை. வெள்ளையர் புகழ்கிற, விரும்புகிற எந்த ஒரு கருத்தும் அல்லது பழக்கவழக்க முறையும் நல்லனவாகின்றன. அவர்கள் வெறுக்கிற இகழ்கிற விஷயங்கள் எவையானாலும் அவை தீயனவாகின்றன. இதைக் காட்டிலும், அறிவீனத்தை நிரூபிக்கக்கூடிய மிகத் தெளிவான ... |
| “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Posted: 26 Feb 2015 10:25 AM PST சினிமா என்றதும் நடிகர்கள், வசூல், வெற்றி ஆகியவற்றைவிட, சுவாரசியமான விஷயம் சாப்பாடு. மென்பொருள் நிறுவனங்களில் நவீன கேண்டீன்களில் அது கிடைக்கும் என்றாலும், அதற்குரிய பணத்தை அவர்களின் சம்பளத்தில் பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள். உலகிலேயே சாப்பாடும் போட்டு, சம்பளமும் கொடுக்கிற ஒரே இடம் சினிமாவாக மட்டுமே இருக்கும். பத்திரிகைகளில் ஆகட்டும், ஊடகமாகட்டும், எம்.ஜி.ஆர். தன்னுடன் நடிக்கும், வேலை பார்க்கும் அனைவருக்கும் தனக்குக் கிடைக்கும் சாப்பாடே கிடைக்க வேண்டும் என்று சொல்வாராம். அஜித் படப்பிடிப்பின்போது ... |
| Posted: 26 Feb 2015 10:18 AM PST ஜனவரி 1, புத்தாண்டு தினத்தன்று எங்கு ஜாலி டிரிப் செல்வது என்று என் மகனும், மருமகளும் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர். - - என் ஐந்து வயது பேத்தி பாரதி, தன் பங்குக்கு "ஷாப்பிங் மால்' செல்லலாம் என்று சொன்னாள். நான் உடனே "அன்னிக்கு வைகுண்ட ஏகாதசி. பெருமாள் கோயிலுக்குப் போகணும்னு யாருக்காவது தோணிச்சா?' என்றேன். சட்டென என் பேத்தி பாரதி, "அதனால் என்ன பாட்டி? "மால்'னா பெருமாள்தானே, மாலுக்கு போனால் பெருமாள் கோயிலுக்குப் போனமாதிரிதானே அர்த்தம்' என்றாளே பார்க்கலாம். சிரித்துச் சிரித்து ... |
| வேலன்:-சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் சுலபமாக கற்க Posted: 26 Feb 2015 08:50 AM PST சிங்கப்பூர்,மலேசியா போன்று இலங்கையும் சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும். அங்கு நீங்கள் சுற்றுலா செல்கையில் சிங்களமும் உங்களுக்கு தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சின்ன சின்ன வார்த்தைகள் சிங்களத்தில்அறிந்துகொள்ள இந்த இணையதளம் உதவுகின்றது. இந்த முகவரிதளம்செல்ல இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 25 பாடங்கள் கொடுத்துள்ளார்கள். ஒவ்வோரு பாடத்திலும் பத்துக்கும் மேற்பட்ட உதாரணங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு உதாரணத்திற்கும் அதன் தமிழ்பெயர்.ஆங்கிலபெயர்.சிங்கள ... |
| Posted: 26 Feb 2015 08:20 AM PST அழகு மனைவியும் லூசு புருஷனும் ஒரு லேட் நைட்லே மனைவியோட மொபைல்லே 'பீப்' சத்தம் கேக்குது. கணவன் எழுந்து, அந்த மொபைலைப் பாத்துட்டு, கோபமா மனைவிகிட்ட.. " யார் இது ..இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ( beautiful ) ன்னு சொல்றது...? " ன்னு கேக்கறான் . மனைவி 'அட...! யாருடா அது....!! நம்மளையும் யாரோ அழகு. ன்னு சொல்ல்றாங்களே..' ன்னு ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!) எந்திரிச்சு மொபைலைப் பாத்துட்டு.... அவரை விடக் கோபமாய்க் கத்தினாங்க ... "அட லூஸுப் புருஷா .. # # # # # # # # # # # # # # மொதல்ல ... |
| நானெழுதிய கவிதை............... Posted: 26 Feb 2015 07:56 AM PST எனக்கும் இந்த கவிதைக்கும் எந்த பேதமுமில்லை .. என்னை போலவே இருக்கும் ,, பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் .. தன்னை எழுதி தொலைந்து போக வைத்த கவிஞனை தேடி அலையும் ஓர் கவிதையின் கதை..... ------------------------------------- **------------------------------------ மறதி வரம் தான் அவள் ஞாபகம் வராத வரை ... ------------------------------------- **------------------------------------ நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , , கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய பாடலின் "முதல் ... |
| புற்றுநோய்... இந்தியர்களைக் குறிவைத்திருக்கும் புது வில்லன்! Posted: 26 Feb 2015 07:27 AM PST இது ஆறு மாத சிசு முதல் 60 வயது பாட்டி வரை, வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் தாக்குகிறது. புகைக்காத, மது அருந்தாத, அணு உலைக்கு அருகில் இல்லாத, மார்பு விரியும்போது 120 செ.மீ., சுருங்கும்போது 105 செ.மீ நிலையில் உள்ள சிக்ஸ்பேக் நபர்கள் என எவருக்கும் எப்போதும் இந்த நோய் வரும் வாய்ப்பு உண்டு. அஞ்சு சுத்து முறுக்கு, வீட்டு அதிரசம் சாப்பிட்ட சமூகம் நாம். ஆனால், இப்போது எங்கு இருந்து வருகிறது, எப்படிச் செய்கிறார்கள், என்னவெல்லாம் இருக்கிறது என எதுவும் தெரியாமல் எல்லா உணவுப் பொருட்களிலும் மிளகாய் ... |
| Posted: 26 Feb 2015 07:19 AM PST '2ஜி அலைக்கற்றை ஊழலில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு' எனச் செய்தி வந்தபோது, அந்தத் தொகை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், 'நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு' என்ற செய்தி, மக்களிடம் அத்தனை அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஒப்பீட்டளவில் 2ஜி-யைவிட, நிலக்கரி ஊழல் குறித்து பேசப்பட்டது மிகக் குறைவு. மக்களின், ஊடகங்களின் இந்த மௌனத்தை, தனக்கான கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டது அப்போதைய காங்கிரஸ் அரசு. 'அரசியல் ஆசை வந்துவிட்டதால்தான் மத்திய தணிக்கை ... |
| உலகிலேயே 3G வசதியை குறைவாக பயன்படுத்தும் நாடு இந்தியா! Posted: 26 Feb 2015 07:14 AM PST புதுடெல்லி, இந்தியாவில் 3G மற்றும் 4G வசதிகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்து 2-ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் 13 சதவீத மொபைல் சந்தாதாரர்களே அவற்றை பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான Internet.org வெப்சைட் தெரிவி்த்துள்ளது. ஹை ஸ்பீடு மொபைல் டேட்டா பயன்பாடு குறித்து ஆய்வு செய்ததில் இந்தியாவில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 149 எம்.பி. அளவே 3G டேட்டா பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. கானா, தென் ஆப்பிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 3G சேவை குறைவாக பயன்படுத்தப்படுவதற்கு 5 ... |
| தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம் Posted: 26 Feb 2015 07:13 AM PST ''காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும் என்பது இயற்கையின் நியதி; வரலாற்று விதி. அதுதான் இதுவரை நடந்துகொண்டிருக்கிறது; இனியும் நடக்கும். ஆனால், எது மாறினாலும் என்னைப் பற்றி கட்டமைக்கப்பட்ட தவறான சில அபிப்ராயங்கள் மட்டும் மாறவில்லை. அதை மாறவிடாமல் தடுப்பது சில ஊடகங்கள்தான். அவை என்னைப் பற்றி தவறான பிரசாரங்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றன. சரி... பேட்டி எனக் கேட்கிறீர்கள். என் விளக்கத்தைச் சொல்ல இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்'' - கொஞ்சம் கோபம், நிறைய ஆதங்கத்துடன் தைலாபுரம் தோட்டத்தில் ... |
| ஆப்கானிஸ்தான் பனி சரிவுகளால் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது! Posted: 26 Feb 2015 07:13 AM PST ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தொடர் பனி சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் பெரும்பாலானோர் பலியாகியுள்ளனர் என மாகாண ஆளுநர் பொறுப்பு வகிக்கும் அப்துல் ரஹ்மான் கபிரி இன்று கூறியுள்ளார். கடுமையான பனி பொழிவால் பாதிக்கப்பட்ட சில நாட்களில் ஏற்பட்ட பனி சரிவுகளால் மாகாணத்தில் இருந்த 100க்கும் அதிகமான வீடுகள் அழிந்து விட்டன. எண்ணிக்கை அதிகரிக்கும் முக்கிய சாலைகள் முடங்கின. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு ... |
| Posted: 26 Feb 2015 07:12 AM PST நமது இந்திய கல்வி முறையைப் பற்றி நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால், உலகளவில் சிறந்த கல்வி முறையை நாம் பின்பற்றுகிறோம். அமெரிக்க பொருளாதாரத்தை வளர்ப்பதே இந்திய கல்விமுறையை பின்பற்றி படித்த நம் இந்திய விஞ்ஞானிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்றவர்கள் தான். இந்தியர்கள் உழைப்பாளிகள் மேலை நாடுகள், இந்தியா கல்வி நிறுவனங்களில் படித்த திறன் மிக்க மாணவர்களை அதிகளவில் பணியில் அமர்த்திக்கொள்ள முன்வருகின்றன. இந்திய மாணவர்களும் சிறந்த வாய்ப்புகளுக்காக அங்கே செல்கின்றனர். இந்தியர்களை அதிகளவில் ... |
| ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஆலங்குடி குருபகவானுக்கு தங்க கவச அலங்காரம்! Posted: 26 Feb 2015 07:11 AM PST ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஆலங் குடி குருபகவானுக்கு தங்க கவச அலங்காரம் சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற் றன. குருபகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குரு தெட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக பரிகார தலங்களில் குருபகவானுக் குரிய பரிகார தலமாக இக் கோவில் திகழ்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்த நாளையொட்டி திருவாரூர் மாவட்ட அ.தி. மு.க. சார்பில் ஆலங்குடி குரு ... |
| 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது! Posted: 26 Feb 2015 07:10 AM PST சென்னை சென்னை பி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். கட்டிட காண்டிராக்டர். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், கோவையை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பிறகு அவள் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை-பணத்தை அபகரித்து கொண்டு ஏமாற்றி விட்டு என்னை மணந்துள்ளது தெரியவந்தது. ... |
| Posted: 26 Feb 2015 06:51 AM PST அருணும் விசாலியும் மனமொத்த தம்பதிகள். கல்யாணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை பேறு கிடைக்கலை என்கிற மனவருத்தம் விசாலிக்கு உண்டு. என்றாலும் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். பேப்பரிலும், மற்றவர்களும் சொல்வதைக்கேட்டும் விசாலி தாங்களும் கருத்தரிப்பு மையத்துக்கு சென்று, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டாள். "வாழ்க்கை என்றால் அது குழந்தை மட்டும் இல்லை விசாலி, குழந்தை ஒரு பகுதி தான், நாம் நம் பார்வையை விசாலமாக்கி வைத்துக்கொண்டால் பலதும் தெரியும்...........மேலும், நாம் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலை ... |
| காலம் கடந்த ஞானோதயம்...............by Krishnaamma:) Posted: 26 Feb 2015 06:49 AM PST "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்? "..என்கிற தலைப்பில் சூடான பட்டிமன்றம் மறு ஒளிபரப் பாகிக் கொண்டிருந்தது ...........வீட்டில் யாரும் இல்லாததால் டிவியை பார்த்துக் கொண்டிருந்தார் விநாயகம். அவர் மனைவி சியாமளா காலனி இல் ஏதோ கூட்டுப் பிரார்த்தனை என்று போயிருந்தாள்...இதைப்போல மாதத்தில் பாதி நாட்கள் இது போல செல்வாள்...ஊருக்கு உபகாரி............வீட்டையும் விட்டுவிட மாட்டாள்.............ஒரே மகள் ஏதோ Walk in interview என்று ஏதோ ஒரு ஹோட்டலுக்கு போய் இருக்கிறாள்......எனவே, இன்று முழுவதும் ரெஸ்ட் ... |
| உலகப் புகழ்பெற்ற பிரஞ்சு கவிஞர் விக்டர் ஹ்யுகோ (Victor Hugo) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 26) Posted: 26 Feb 2015 05:39 AM PST விக்டர்-மாரீ ஹியூகோ (Victor Hugo, பெப்ரவரி 26, 1802 - மே 22, 1885) உலகப் புகழ்பெற்ற பிரஞ்சு கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர், மனித உரிமைகள் ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட விக்டர் ஹ்யுகோ (Victor Hugo) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 26). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * பிரான்ஸ், பெசன்கான் என்ற இடத்தில் பிறந்தவர் (1802). தந்தை ராணுவ அதிகாரி. மாவீரன் நெப்போலியனின் கீழ் ஜெனரலாகப் பணி புரிந்தவர். வழக்கறிஞராகப் பணியாற்றச் சட்டம் பயின்ற இவருக்கு இலக்கியத்தில் தான் ஆர்வம் இருந்தது. ... |
| தன்னம்பிக்கை சூப் 13 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Posted: 26 Feb 2015 05:38 AM PST இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள். சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது ... |
| Posted: 26 Feb 2015 05:38 AM PST விழுப்புரம் மாவட்டத்தில் புதுவைக்கு அருகே 'திருவக்கரை' என்னும் சிவத்தலம் உண்டு. வக்ரகாளியம்மன் திருக்கோயில் இந்தத் தலத்தின் பெருஞ்சிறப்பு. நம்மூர் பக்தி சிகாமணிகள் பெரும்பாலானவர்கள் இந்த ஊரில் நிச்சயம் கால் பதித்திருப்பார்கள்.நம் ஆன்மிக அன்பர்கள் பெரும்பாலானோர் அறியாத மற்றுமோர் சிறப்பு இந்த ஊருக்கு உண்டு. "திருவக்கரையில் கிடைக்கும் பாறைகள் போல் உலகில் வேறெங்கும் கிடைக்காது", என்பதுதான் அது. திருவக்கரை ஆதிச்சப் பெருந்தச்சனைத் தேடி ராஜராஜன் வருகிறான். பெரிய கோயில் லிங்கமும், நந்தியும் திருவக்கரையில் ... |
| ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது.... Posted: 26 Feb 2015 05:35 AM PST ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ....? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். "கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல் "கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும் பூசணிக்காய் தோறும் புகல்" ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் ... |
| Posted: 26 Feb 2015 05:21 AM PST ஜனனம்! "பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்" என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், "கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!" என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். 'சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!' என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், "என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?" என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி ... |
| Posted: 26 Feb 2015 04:55 AM PST ரயில்வே பட்ஜெட் 2015: முக்கிய அம்சங்கள் ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புக்கு இணங்க பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், புதிய ரயில் அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை. அதேவேளையில், ரயில் நிலையங்கள், ரயில்களின் சுகாதாரம், புதிய சேவை, வசதிகள் மற்றும் கட்டுமான மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது ஏன்? என்பது குறித்த விளக்கத்தை ரயில்வே அமைச்சர் தனது பட்ஜெட் உரையிலேயே வேளியிட்டார். 2015- 16 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் ... |
| மனைவிகளே.. ! காதல் துணைவிகளே..! (Whatsapp - கலக்கல்) Posted: 26 Feb 2015 04:44 AM PST மனைவிகளே.. ! காதல் துணைவிகளே..! தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே.. ! கடவுளின் துகள்களே !, தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே ! கல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்கப் பேசினீங்க... ஆனா, கல்யாணம் ஆனதில் இருந்து தட்டு டம்ளர்களை எடுத்து வீசுறீங்க … சத்தியமா நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு மாறுதலை … அதனாலதான் அரசாங்க பாருக்குத் தேடிப் போறோம் ஆறுதலை. கொஞ்சிப் ... |
| ஷிர்டி சாய் பாபா ஷிர்டி கிராமத்திற்கு வந்த கதை Posted: 26 Feb 2015 04:19 AM PST ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, பாபா வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தது, அந்த ஊர் மக்கள் செய்த அதிர்ஷ்டம். நல்லவர்கள் அதிகமுள்ள இடத்தை இறைவன் விரும்புவது இயற்கைதானே! ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வேப்பமரம். அதிகாலையில் காலாற நடந்துசென்று அந்த வேப்பமரக் குச்சியை ஒடித்து, பலர் ஒருவருக்கொருவர் பேசியவாறே பல் துலக்குவது உண்டு. அப்படியான ஓர் அதிகாலை... வேப்ப மரத்தடிக்கு வந்த சிலர் வியப்போடு மரத்தடியை ... |
| கண்டது..!-வியப்பூட்டும் செய்திகள் Posted: 26 Feb 2015 04:12 AM PST (பழனி மலை அடிவாரத்தில் ஒரு புத்தகக் கடையில்) வாசிப்பதன் மூலம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள எங்கள் அறிவாலயத்துக்கு வாருங்கள். துணிக் கிழிசல்களை ஊசி தைக்கும் மனக் கிழிசல்களை நூல்கள் தைக்கும். அறிவை வளர்க்காமல் வாழ்ந்தால் வளர முடியாது. அறிவை வளர்க்க எங்கள் அறிவாலயம் வாருங்கள். - –எம்.மாடசாமி, பழனி. - ——————————————– •••• (புதுச்சேரி வெங்கட்டா நகர் வள்ளலார் சாலையில் ஓர் உணவகத்தின் பெயர்) - கை மணம் - நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி. - —————————————– - (ஈரோடு ... |
| அமிதாப் பச்சனை தொடர்ந்து கமலுடன் இணையும் தனுஷ்! Posted: 26 Feb 2015 03:41 AM PST - தனுஷ் நடிக்கும் படத்துக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே எதிர்பார்ப்பு அவர் தயாரிக்கும் படத்துக்கும் உண்டு. காரணம் இவர் தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. இதுதவிர, இன்னும் இரண்டு தினங்களில் தனுஷ் தயாரித்த காக்கி சட்டை படமும் திரைக்கு வருகிறது. அதோடு சிம்பு நடிக்க, தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரிக்கவிருக்கிறார் தனுஷ். சமீபத்தில் தான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ... |
| Posted: 26 Feb 2015 03:40 AM PST - - - சினிமாவில் கால்பதித்து 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் நயன்தாரா. 2003-ம் ஆண்டு 'Manassinakkare' என்ற மலையாளப் படம் மூலம் திரையுலகில் நுழைந்தவர் நயன். 2005-ம் ஆண்டு வெளியான 'ஐயா' படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். அடுத்த படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். பிறகு, சூர்யா, விஜய், சிம்பு, ஜீவா, அஜித், தனுஷ், ஆர்யா என தமிழின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். அதேபோல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ... |
| டயர்களுக்கு வயதாகி விட்டால் என்ன ஆகும்? Posted: 26 Feb 2015 03:39 AM PST - ஆசிரியர்: சர்க்கரை எதிலிருந்து கிடைக்கின்றது? – மாணவன்: பக்கத்து வீட்டு நிர்மலா மாமி வீட்டிலிருந்து சார்… – ஆசிரியர் : என்னடா சொல்ற…? – மாணவன் : ஆமாம் சார், எங்க வீட்ல சர்க்கரை காலியாகிட்டா பக்கத்து வீட்டுல இருந்து தான் வாங்கிக்குவோம்.. – ————————————————— – சுரேஷ்: டயர்களுக்கு வயதாகி விட்டால் என்ன ஆகும்? – ரமேஷ்: ரிடயர் ஆகும்… – ———————————————— – அம்மா: உங்க பள்ளியில நடந்த ஓட்டப்பந்தயத்துல உனக்குப் பரிசு கிடைச்சுதா? – மகன்: பயந்தாங்கொள்ளிப் பசங்க… எனக்குப் பயந்துகிட்டு எல்லோரும் ... |
| Posted: 26 Feb 2015 02:56 AM PST - உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்தி கொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்தி கொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்கவிடுகிறோம். – புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடுகின்றன. – நாம் அதைச் சாப்பிடும்போது, அது நமக்கு ... |
| Posted: 26 Feb 2015 02:55 AM PST வானொலிப் பெட்டி திறந்தேன் வந்தது பாடலொன்று கிழவி மேல் காதல் கொள்ளடா அவ்வைக் கிழவி மேல் காதல் கொள்ளடா வென்று – கிழவி மேல் காதல் கொண்டால் உதவிடுமோ அவள் அனுபவம் வாழ்க்கைக் கென்று எழுதினேன் அரைப் பக்கக் கடிதமொன்று அடுத்த வீட்டு கிழவிக்கு – ஒரு கையில் கடிதமும் மறு கையில் அப்பளக் குழவியுமாய்த் தோன்றிய அண்டை வீட்டுக் கிழவி கேட்டாள் திருட்டு நாயே காதல் வேண்டுமா உனக் கென்று – ஓடினேன் ஓடினேன் ஊர் எல்லை தாண்டி ஓடினேன் உயிர் பிழைக்க தேவையில்லை யெனக்குக் கினி காதலும் கவிதையும் என் நாளுமே — நடராஜன் ... |
| புது டிரெஸ்! – ஒரு பக்கக் கதை! Posted: 26 Feb 2015 02:54 AM PST "ஏண்டி கனகு, உன் மகன் காலையிலேயே எங்கயோ கிளம்பிப்போறானே… இன்னிக்கு ஸ்கூல் இல்லையா?' – பக்கத்துக் குடிசை தோழியிடம் வினவினாள் சுந்தரி. "இன்னிக்கு ஏதோ மாரத்தான் ஓட்டமாம்… பெருசுங்க, சிறுசுங்க எல்லாரும் கலந்துக்கறாங்களாம். அதான் ராசுவும் ஓடப்போறான்.' "ஏன்டி… விளையாட்டுன்னா உன் பையனுக்கு ரொம்பப் புடிக்குமோ? சின்ன வயசுலேயே நல்ல ஆர்வமா இருக்கிறான் போல?' "நீ வேற… அவன் ஒண்ணும் ஆர்வமா இல்லை. நான்தான் வற்புறுத்தி அனுப்பறேன்.' "ஏன்டி, பனிரெண்டு வயசுப் பையன் அவனை எதுக்குடி வேகாத வெயில்ல ... |
| “காகிதத்தில் கப்பல் செய்து...! Posted: 26 Feb 2015 01:04 AM PST "காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன்' என்ற திரைப்படப் பாடல் எல்லாருக்கும் தெரியும். ஒரு காகிதக் கப்பலைச் செய்து அதில் ஏறி உண்மையாகவே பயணம் செய்திருக்கிறார் மார்வென்னா வில்சன். இவர் இங்கிலாந்தின் புகழ் வாய்ந்த பொறியாளர். ஆரிகாமி என்ற மடிக்கக் கூடிய காகிதத்தில் இந்த கப்பலைச் செய்திருக்கிறார் மார்வென்னா. 1070 சதுர அடி பரப்புள்ள காகிதத்தில் இந்த 12 ஆடி நீளமுள்ள கப்பலைச் செய்திருக்கிறார் அவர். கப்பலின் அடிப்பகுதி மட்டும் மரத்தில் செய்யப் பட்டிருக்கிறது. 10 லிட்டர் ... |
| Posted: 26 Feb 2015 12:59 AM PST உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |