Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


எதிர்பார்க்காத தேர்தல் முடிவு: உள்ளூர் பிரச்சனைகள் திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது-பா.ஜனதா கருத்து

Posted: 09 Feb 2015 11:00 PM PST

டெல்லி தேர்தல் பற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் கூறியதாவது:– டெல்லி தேர்தல் முடிவு இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த தேர்தலில் உள்ளூர் பிரச்சனைகள் தான் மற்ற

தேர்தலில் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

Posted: 09 Feb 2015 09:55 PM PST

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியது. ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சி 62

கெஜ்ரிவாலுக்கு கிரண்பேடி வாழ்த்து

Posted: 09 Feb 2015 09:44 PM PST

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த கெஜ்ரி வாலுக்கு கிரண்பெடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ''உங்களுக்கு (கெஜ்ரிவால்) முழு மதிப்பெண் கிடைத்துள்ளது. டெல்லியை மகிழ்ச்சியான நகரமாக மாற்றிக் காட்டுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐதராபாத்தில் எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம்: 52 பேர் கைது

Posted: 09 Feb 2015 09:36 PM PST

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் பொது தலைநகரமாக உள்ளது. இங்குள்ள பழைய எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம் நடப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து சிறப்பு அதிரடி படை போலீசார் நேற்று எம்.எல்.ஏ. விடுதியில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். இங்குள்ள 707, 708 பிளாக்கில்

அப்சல் குருவுக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் பலி: விசாரணை வேண்டுமென உமர் அப்துல்லா கோரிக்கை

Posted: 09 Feb 2015 09:35 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி அப்சல் குருவுக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏழைகளுக்கு 2 படுக்கை அறையுடன் இலவச வீடு: தெலுங்கானா அரசு திட்டத்துக்கு மத்திய அரசு நிதி உதவி

Posted: 09 Feb 2015 09:19 PM PST

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் கடந்த 4 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, நகர்புற வளர்ச்சி மந்திரி வெங்கைய்யா நாயுடு ஆகியோரை சந்தித்து பேசினார்.

திருவனந்தபுரம் மிருககாட்சி சாலையில் இறந்த 85 வயது பெண் யானை அரசு மரியாதையுடன் தகனம்

Posted: 09 Feb 2015 08:55 PM PST

திருவனந்தபுரம் மிருக காட்சி சாலைக்கு கடந்த 1946–ம் ஆண்டில் ஒரு பெண் யானை கொண்டு வரப்பட்டது. அந்த யானைக்கு மகேஸ்வரி என்று பெயரிட்டு மிருக காட்சி சாலையில் வளர்த்து வந்தனர். திருவனந்தபுரம் மிருக காட்சி சாலையில் வளர்க்கப்பட்டு வந்த வயதான இந்த யானைக்கு கடந்த சில

டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்: தோல்வியை சந்தித்தது மோடி-அமித் ஷா கூட்டணி

Posted: 09 Feb 2015 08:28 PM PST

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக எட்டு மணிக்கு தொடங்கியது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி வாகை சூடினாலும்,

குளிக்கச்சென்ற மாணவன் பாறைக்குழியில் பிணமாக மீட்பு

Posted: 09 Feb 2015 08:20 PM PST

கேரள மாநிலம் பாலக்காடு செப்புலச்சேரி அருகேயுள்ள கத்தச்சேரியை சேர்ந்தவர் அஸ்ரப். இவரது மகன் முகமது நவாப் (வயது 7). இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான். நேற்று முகமது நவாப் வீட்டுக்கு அருகேயுள்ள பாறைக்குழிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான்.

புகைப்படம் எடுக்க வந்த பத்திரிகையாளர்களை வீட்டு பால்கனியிலிருந்து புகைப்படம் எடுத்த கிரண்பேடி

Posted: 09 Feb 2015 08:07 PM PST

தேர்தல் முடிவால் பரபரப்பாக உள்ள டெல்லி மாநிலத்தில் இன்று காலை பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி ஐ பேடில் அதிகாலையிலிருந்தே தன் வீட்டின் முன் குவியத்தொடங்கிய பத்திரிகையாளர்களை புகைப்படம் எடுத்தார். மேலும் அவர்களை

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்- ஆம் ஆத்மி: 35, பா.ஜ.க: 11, காங்: 4

Posted: 09 Feb 2015 07:48 PM PST

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறியதற்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. காலை 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 35 இடங்களிலும், பா.ஜ.க. 11 இடங்களிலும்,

சபரிமலை கோவிலில் 12-ந் தேதி நடை திறப்பு

Posted: 09 Feb 2015 07:09 PM PST

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்தில் வருகிற 12-ந் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இதையடுத்து படிபூஜை, உதயாஸ்தம பூஜை, நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட அனைத்து சிறப்பு பூஜைகளும்

டெல்லியில் 2 நாள் கவர்னர்கள் மாநாடு நாளை தொடங்குகிறது

Posted: 09 Feb 2015 06:16 PM PST

டெல்லியில் 2 நாள் கவர்னர்கள் மாநாடு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் பாதுகாப்பு நடவடிக்கைகள், துப்புரவு பணிகள் போன்ற சில திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. டெல்லியில் 46-வது கவர்னர்கள் மாநாடு நாளை (புதன்கிழமை)

ரெயில்வே மந்திரியுடன், பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Posted: 09 Feb 2015 02:49 PM PST

மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, இணை மந்திரி மனோஜ் சின்ஹா ஆகியோரை மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.

கோவை குண்டுவெடிப்பு கைதிகளுக்கு ஜாமீன் கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 9-ந்தேதி விசாரணை

Posted: 09 Feb 2015 12:51 PM PST

1998-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தடா மூசா என்கிற மூசா மொதீன் உள்ளிட்ட 17 பேருக்கு ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் 2011-ம் ஆண்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று

கர்நாடகத்தில் 1,400 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை: மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்

Posted: 09 Feb 2015 09:52 AM PST

பெங்களூரு சேஷாத்திரபுரத்தில் சூரிய மின்சக்தி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மின்துறை மந்திரி டி,கே.சிவக்குமார் பேசும்போது கூறியதாவது:- மாநிலத்தில் 3 மாவட்டங்களை தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. மாநிலத்தில் ஆயிரம்

பீகாரில் மான்ஜியை ஆதரித்து பா.ஜ.க. திரைமறைவு வேலை: லல்லு பிரசாத் யாதவ் பகிரங்க குற்றச்சாட்டு

Posted: 09 Feb 2015 08:29 AM PST

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து இன்று நீக்கப்பட்ட ஜித்தன் ராம் மான்ஜியை முதல் மந்திரி பதவியில் நீட்டிக்கச் செய்ய பா.ஜ.க. திரைமறைவில் வேலை செய்து வருவதாக பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லல்லு கூறியதாவது:-

டெல்லி தேர்தலில் சரிவை சந்தித்தால் மோடியும் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்: காங். கருத்து

Posted: 09 Feb 2015 08:16 AM PST

டெல்லி தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. சரிவை சந்தித்தால் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடியும், அக்கட்சியின் தேசிய தலைவரான பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ்

விசாரணை அறைக்குள் அழுவதும், உணர்ச்சிவசப்படுவதும் கூடாது: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

Posted: 09 Feb 2015 08:04 AM PST

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்குகளில் ஆஜராகும் நபர்கள் அழுவதாலோ, உணர்ச்சிவசப்படுவதாலோ நீதிபதிகளின் மனநிலையை மாற்றி விட முடியாது. எனவே, இது போன்ற செய்கைகளை கோர்ட் அறைக்குள் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்

கொடுமைக்கார கணவனை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மனைவி

Posted: 09 Feb 2015 07:53 AM PST

மேற்கு வங்காளம் மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரகுநாத் கஞ்ச் பகுதியில் வசித்து வந்த ஜாகிர் ஷேக் என்பவர் தனது மனைவி தாரா பீவியை தொடர்ந்து பலவிதங்களில் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவரது செய்கையால் மனம் வெறுத்துப்போன தாரா பீவி நேற்றிரவு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். ஜாகிர் ஷேக்கின் அலறல் சத்தம் கேட்டு விரைந்துவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் தீயை அணைத்து, அவரை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™