Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

போதைப்பொருள் வர்த்தகத் தொடர்பு; துமிந்த சில்வாவிடம் விசாரணை!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு ஆறு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 


Read more ...

இசையால் வந்த வசை

Posted:

கடந்த வாரம் திரைக்கு வந்திருக்கிற ‘இசை’, எஸ்.ஜே.சூர்யாவுக்கு வசையாக மாறியிருக்கிறது.


Read more ...

ராஜஸ்தான்,குஜராத் இரு மாநிலம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் அபாயம்!

Posted:

ராஜஸ்தான்,குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவி அபாயத்தை .ஏற்படுத்தி உள்ளது.


Read more ...

அப்சல் குருவைத் தூக்கிலிட்டது தவறு: சசிதரூர்

Posted:

நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய அப்சல் குருவைத் தூக்கிலிட்டது தவறு என்று, முன்னாள் அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


Read more ...

டெல்லி தேர்தல் தோல்விக்கு நானே முழு பொறுப்பு: அஜய் மக்கான்

Posted:

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு நானே முழு பொறுப்பு என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்ட அஜய் மக்கான் கூறியுள்ளார். 


Read more ...

தலைநகர் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி!

Posted:

தலைநகர் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று டெல்லியில் தனித்து ஆட்சியமைக்கத் தயார் நிலையில் உள்ளது.


Read more ...

டில்லியை கைப்பற்றியது ஆம் ஆத்மி: பா.ஜ.க, காங்கிரஸ் படுதோல்வி!

Posted:

டில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பெரு வெற்றி பெற்றுள்ளது. 


Read more ...

பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக போட்டியிமாறு தனக்கு எந்தவிதமான அழைப்புக்களும் இதுவரை கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

கடன் மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது: ரவி கருணாநாயக்க

Posted:

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட அதிகளவான கடன்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டில் இடம்பெற்ற பாரியளவிலான இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவென விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை இவ்வாரத்திற்குள் அமைக்க இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

விண்வெளியில் உணவுப் பழக்கம் எவ்வாறு?:சில அபூர்வ தகவல்கள்

Posted:

பூமியின் தரை மேற்பரப்புக்கு மேலே 400 Km உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) எப்போதும் பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. நமது பூமிக்கு நிலவுக்கு அடுத்ததாக மிகப் பெரிய செயற்கைக் கோளாக விளங்கும் ISS இற்கு 2000 ஆம் ஆண்டு நவம்பரில் முதலாவது விண்வெளி வீரர் குழு விஜயம் செய்திருந்தது. இதையடுத்து இதுவரை 15 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 வீரர்கள் ISS இற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன் மையப் பகுதியில் மிதக்கும் ஆய்வு கூடத்தில் ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒரு தடவை 6 குழு உறுப்பினர்கள் பணியாற்றியும், உடற் பயிற்சி செய்தும், உறங்கியும் முக்கியமான உணவு உட்கொண்டும் வருகின்றனர். இங்கு தங்கி வரும் நாசாவின் வீரர்களுக்கு சத்துள்ள உணவு வகைகளை விநியோகிப்பதை ஹௌஸ்டனில் உள்ள ஜோன்சொன் விண்வெளி ஆய்வு நிலையத்திலுள்ள உணவு விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வீரர்கள் உண்ணும் 40% வீத உணவுக்குப் பொறுப்பான இக் குழுவின் மாயா கூப்பர் என்பவர் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப் படும் ஆரோக்கியமான விண்வெளி சூழலுக்கு உகந்த உணவு வகைகள் குறித்த அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் விபரம் கீழே:

விண்வெளி வீரர்களுக்கு அளித்து வரும் சத்துள்ள பிரத்தியேக உணவுகளில் பெரும்பான்மையானவை மிகவும் ருசியானவை ஆகும். ஆனால் சமீப காலமாக இந்த உணவு வகைகளின் மெனுவில் மிகப் பெருமளவு சோடியம் பதார்த்தங்கள் குறைக்கப் பட்டுள்ளது. இதனால் பல உணவு வகைகளது தயாரிப்பு மீள உருவாக்கப் பட்டுள்ளது! மேலும் விண்வெளியில் நாம் எமது நிறையை இழப்பதால் எமது உடலுக்கு மிக அதிக சக்தி தேவைப் படுகின்றது. அதாவது ISS இல் விண்வெளி வீரர்களின் உடல் பூச்சிய நிறையைக் கொண்டிருப்பதால் அவர்களது உடல் எப்போதும் நூறு வீத இளைப்பாறும் நிலையில் (ஓய்வில்) இருப்பதே இல்லை. இதனால் ISS இல் ஒரு வீரருக்கு ஒரு நாளைக்கு 3000 கலோரி ஊட்டச் சத்து தேவைப் படுகின்றது.

பல வருடங்களாக விண்வெளியில் உணவின் சமிபாடு அதன் தாக்கம் குறித்த பல தரப்பட்ட தகவல்கள் சேகரிக்கப் பட்டுள்ளதால் தற்போது அங்கு உணவு முறையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக சுற்று வட்டப் பாதையில் (orbit) இயங்கிக் கொண்டிருக்கும் உடலில் உணவிலுள்ள ஊட்டச் சத்தானது வெப்ப செயற்பாட்டால் நீண்ட நேரத்துக்கு சேமிக்கப் பட வேண்டிய நிலையில் விட்டமின்கள் உறிஞ்சப் படுவதால் தமது ஊட்டச்சத்தின் அளவை இழக்க நேரிடும். இது போன்ற சில சிக்கல்களை விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்குக்கும் கூப்பர் போன்ற விஞ்ஞானிகள் எதிர் நோக்க நேரிடுகின்றது.

இதன் காரணமாக பல விண்வெளி உணவுகள் திரவ நிலையிலும் மாத்திரைகள் போன்ற வடிவத்திலுமே தயாரிக்கப் படுகின்றன. ஆரம்ப காலத்தில் நாசாவின் மேர்குரி செயற்திட்டத்தின் போது தயாரிக்கப் பட்ட அரைவாசி திரவ வடிவிலான பற்பசை போன்ற உணவுகள் ஜெலட்டினுடன் சேர்த்து டியூப் மூலமாக உண்ட வீரர்களுக்கு அது பசியைப் போக்குவதாக அமையவில்லை என்ற குறை ஏற்பட்டது. ஆனால் இன்றைய நவீன விண்வெளி உணவானது கலவையாக அல்லாது மிக சுவையான பிரான்சின் 'கொர்டென் பிளௌ' போன்ற உயர் ரக உணவாக முன்னேறியுள்ளது. அதாவது இன்றைய விண்வெளி வீரர்கள் மிக சுவையான திரவ வடிவான உணவுடன் அனைத்து விட்டமின்களும் அடங்கிய ஒரு மாத்திரையை (pill) மாத்திரம் உட்கொண்டாலே போதுமானது என கூப்பர் கூறுகின்றார்.

விண்வெளி வீரர்களது உணவை பூமியில் பரிமாறப் படும் உணவு வகைகளுடன் ஒப்பிட முடியா விட்டாலும் பூமியில் உள்ளது போன்ற உணவு வகைகளுக்கு சமமாக Dessert போன்றவை விண்வெளிக்கும் வந்து விட்டன. அதாவது விண்வெளி வீரர்கள் தமது அனைத்து உணவையும் ஸ்ட்ராவ் இனால் உறிஞ்சத் தேவையில்லை. அல்லது தமது ஊட்டச் சத்துக்களுக்காக எப்போதும் ஒரே மாத்திரையையே உட்கொள்ளத் தேவையில்லை. ISS இல் குளிர் பதனாக்கிகள் இல்லை என்பதால் உணவு வகைகள் மிகக் கவனமாக சேகரிக்கப் பட வேண்டும். இதனால் விண்வெளி உணவுகள் பூமியிலேயே குளிரூட்டப் பட்டு அல்லது உலர்த்தப் பட்டே விண்ணுக்கு வருவதுடன் பின் அங்கு திரவத்துடன் (rehydrated) சேர்க்கப் படுகின்றன. மேலும் விண்வெளி வீரர்களுக்கு பூமியில் இருந்து வரும் உணவுகளில் பொதியில் அடங்கியுள்ள உணவின் அளவை விட அதில் அடங்கியுள்ள கலோரியின் அளவே முக்கியமாக கருதப் படுகின்றது.

இன்று விண்வெளியில் வீரர்களுக்குப் பரிமாறப் படும் dessert வகைகளில் இந்திய மீன் கறி, நண்டு கேக் ஆகியவற்றுடன் சேர்த்து நாசாவின் மெனுவில் சாக்லெட் புட்டிங், எலுமிச்சை தயிர் கேக் (lemon curd cake) மற்றும் சர்க்கரையால் ஆக்கப் படும் Apricot cobbler என்பவை கூட அனுப்பப் பட்டுள்ளன என்றால் ஆச்சரியப் படுவீர்கள். இதைவிட நாசா தனது விண்வெளி வீரர்களுக்கு பிறந்தநாள் கேக் கூட ISS இற்கு அனுப்பி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்து dessert வகைகளிலும் கலோரி அளவு முக்கியமாகக் கணிக்கப் பட்டே அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என்பதை மறவாதீர்கள்! மேலும் இதற்கு முக்கிய காரணமாக, 'நீங்கள் எவரும் உணவுக்குப் பின்னரான இனிப்பு (dessert) இன்றி வாழ முடியாது! ஏனெனில் அது ஒரு உளவியல் அனுபவம்!' என சிரித்துக் கொண்டே சொல்கின்றார் கூப்பர்.

நன்றி:தகவல் CNN


Read more ...

சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க கொலம்பிய பிரபஞ்ச அழகிக்கு FARC அழைப்பு!

Posted:

சமீபத்தில் பிரபஞ்ச அழகியாக (miss universe) முடி சூடிய கொலம்பியாவின் பௌலினா வேகாவை தமக்கும் அரசுக்கும் இடையே நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முன்வருமாறு அந்நாட்டின் FARC கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


Read more ...

கௌதமாலாவில் எரிமலை சீற்றத்தால் விமான நிலையம் மூடுகை!:நூற்றுக் கணக்கானவர்கள் வெளியேற்றம்

Posted:

கௌதமாலாவில் நெருப்பு எரிமலை என அழைக்கப் படும் எரிமலை சீற்றத்தால் அந்நாட்டின் விமான நிலையம் மூடப் பட்டதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் வெளியேற்றப் பட்டும் உள்ளனர்.


Read more ...

சிம்புவுடன் டூயட் பாடியுள்ள ரம்யா நம்பீசன்

Posted:

பாண்டிய நாடு திரைப்படத்தில் ஃபைஃபை பாடல் மூலம் பாடகியாக வெளிவுலகிற்கு அடையாளம் காண்பிக்கப்பட்டவர் நடிகை ரம்யா நம்பீசன்.


Read more ...

ஆல் ரவுண்டராகும் ஸ்ருதி ஹாசன்

Posted:

உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் திரையுலகில் ஆல் ரவுண்டராகத் தன்னைத் தயார்படுத்தி வருகிறார்.


Read more ...

கலவரத்தில் 30 ரசிகர்கள் கொல்லப் பட்ட பின்னரும் எகிப்தில் இறுதிவரை நீடித்த கால்பந்து போட்டி!

Posted:

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காற்பந்துப் போட்டி ஒன்று ஆரம்பமாக முன்னர் ஏற்பட்ட கலவரத்தில் 19 ரசிகர்கள் வரை கொல்லப் பட்ட போதும் குறித்த போட்டியானது இறுதி வரை நடைபெற்றதாக சர்ச்சைக்குரிய செய்தியை அந்நாட்டு சுகாதார அமைச்சு சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.


Read more ...

எனக்கு எதிராக மைத்திரி அரசு போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

சென்னை விமான நிலையத்தில் லிஃப்ட் மேடை இடிந்து விபத்து!

Posted:

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் 33 வது முறையாக விபத்து நேரிட்டுள்ளது. இந்த முறை லிஃப்ட் மேடை இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

இராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா இராஜினாமா!

Posted:

விமானப் போக்குவரத்துத்துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தபா, இன்று திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். 


Read more ...

நரேந்திர மோடி இந்த மாதம் பொதுத் தேர்வு குறித்து உரை!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் வானொலியில் பொதுத்தேர்வு குறித்து உரையாற்றுகிறார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™