Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திரை விமர்சனம்: சண்டமாருதம் !

Posted: 24 Feb 2015 10:27 AM PST

குற்றப் பின்னணி கொண்ட கொடூர வில்லன், குடும்பப் பின்னணி கொண்ட சாகச நாயகன். இவர்கள் இருவருக்கும் இடையே போராட்டம். இடை யிடையே வில்லன் கை ஓங்கினாலும் இறுதியில் வெல்வது நாயகனே. சரத்குமார் கதை எழுதி, க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதி, ஏ.வெங்கடேஷ் இயக்கி யிருக்கும் இந்தப் படமும் அதே பழங்கஞ்சிதான். கல்வித் தந்தை என்ற போர்வையில் நிழல் உலகில் சர்வ வல்லமை படைத்தவராக கும்பகோணத்தில் சாம்ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கிறார் வில்லன் சர்வேஸ்வரன் (சரத் குமார்). தன்னை எதிர்ப்பவர்களை அதிநவீன ...

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம்!

Posted: 24 Feb 2015 10:17 AM PST

முக்கியப் பிரச்சினை, முதன்மைக் கதாபாத்திரம், அழகான ஊர்களில் டூயட், குத்துப் பாடல் என்று எதுவும் இல்லை. வெவ்வேறு கதாபாத்திரங்கள், வெவ்வேறு பின்னணிகள், வெவ்வேறு பயணங்கள் ஆகியவற்றை ஒரு புள்ளியில் இணைக்கும் திரைக்கதையுடன் களமிறங்கியிருக்கிறார் புது இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஓட்டேரியில் வசிக்கும் வசந்த் (நகுல்) எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் இளைஞன். அறிவியல் சோதனை களைச் செய்துவரும் இளம் மேதை. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 'புராஜெக்ட் ரிப்போர்ட்' எழுதிக் கொடுத்து சம்பாதிக்கிறார். ...

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Posted: 24 Feb 2015 09:33 AM PST

பரத்பூர்: அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ''அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அவர் செய்த சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்தான். மதமாற்றத்திற்காக மட்டுமே ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)

Posted: 24 Feb 2015 09:21 AM PST



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

ஜெயமோகன் எழுதிய அறம் புத்தகம் எப்படி

Posted: 24 Feb 2015 08:40 AM PST

நண்பர் ஒருவர் பரிந்துரை செய்தார்

வள்ளலார் இல்லம் பொதுமையாகட்டும்!

Posted: 24 Feb 2015 08:34 AM PST

இற்றைக்கு ஒரு நூறாண்டுக்கு முன்னர் நாட்டில் இருள் படரலாயிற்று. அவ்விருள் கடிய எழுந்த ஞாயிறு நம் இராமலிங்க சுவாமிகள்' என்று தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார் கூறினார். வள்ளலார் பிறந்த காலத்தில் தமிழகத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி வலுவாக காலூன்றி இருந்தது. அவர் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் அந்த ஆட்சிக்கு எதிராக, 1857-ஆம் ஆண்டு, முதல் சுதந்திரப்போர் வெடித்தது. அதன் விளைவாக, பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. குறுநில மன்னர்களின் ...

செம்மொழி: சில செய்திகள்!

Posted: 24 Feb 2015 08:30 AM PST

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய மொழிகள் பற்றிய ஆய்வு அதிகமாக நடைபெற்றது. 1786-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி அமைத்த இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் ஆசிய கழகத்தைத் தோற்றுவித்து, "சம்ஸ்கிருதம் ஒரு செம்மையான மொழி. அது இந்தோ - ஐரோப்பிய மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்க, லத்தீன் மொழிகளைவிட சிறந்த இலக்கண கட்டமைப்புக் கொண்டது' என்று கூறினார். அவர் கூற்று மொழியியல் துறையிலும், கலாசார ரீதியிலும் மிகுந்த கவனம் பெற்றது. பல ஐரோப்பியர்கள் சம்ஸ்கிருதம் படித்தார்கள். ...

வசூல் ராஜா MBBS !!!

Posted: 24 Feb 2015 08:10 AM PST

நல்லா சொன்னாங்க நம்ம பெரியவங்க. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று.. ஒவ்வொரு வீட்டிலும் பிரேம் போட்டு மாட்டவேண்டிய வாசகம் இது. இந்த வாழ்வு வாழ்வதற்கு நம்ம தாத்தாக்கள் ... திருவள்ளுவர், திருமூலர் போன்றவர்கள் பல சொல்லியிருந்தாலும் நம்ம விதி... இந்த அல்லோலகலப்பட வைக்கும் அலோபதியிடம்தானே மாட்டிக்கொள்ளும்படி நேரிடுகிறது. அலோபதி டாக்டர்களிடம் போய் மாட்டிக்கொள்ளாத "புண்ணியவான்களே" நமது ஊரில் இருக்க முடியாது. "ரமணா" படம் எல்லாம் சும்மாதான். அந்தப்படம் கோலிக்குண்டு அளவுதான்; நிசம் இமயமலையைவிட ...

தன்னம்பிக்கை சூப் 10 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Posted: 24 Feb 2015 08:05 AM PST

இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள். சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது ...

‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். - வாடிகன் கண்டிப்பு

Posted: 24 Feb 2015 07:47 AM PST

1929-ல் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினுக்கும் அப்போதைய போப்புக்கும் ஓர் உடன்படிக்கை உண்டானது. இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முதல் நிபந்தனையாக விதிக்கப்பட்டது 'பாராளுமன்ற கத்தோலிக்க இத்தாலிய பாப்பு லர் கட்சி' கலைக்கப்பட வேண்டும்' என்பதுதான். அரசியல் கலந்த கத்தோலிகத்தை போப் பதினோராம் பியஸ் விரும்பவில்லை. மற்றொரு முக்கிய காரணம் அந்தக் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. தவிர அந்தக் கட்சியை அனுமதித்தால் நாளடைவில் சர்ச்சுக்குள் ஜனநாயகம் புகுந்து விடும் என்கிற அச்சம் வேறு. இதன்படி பாப்புலர் கட்சி ...

ஆட்டின் எடை!

Posted: 24 Feb 2015 06:07 AM PST

பீர்பலும், அக்பரும் ஒருநாள் ஆட்டுக் கிடங்குக்குச் சென்றிருந்தனர். அங்கு ஆடுகள் மந்தை மந்தையாக இருந்தன. ஆட்டிடையன் அவைகளுக்கு, தழைகளைப் போட்டுக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட அக்பர் பீர்பலைப் பார்த்து, ""பீர்பல், இந்த ஆடுகளுக்கு வழக்கமாகத் தரும் உணவைப்போல் இரண்டு மடங்கு தந்தால் இவற்றின் எடை இரு மடங்காகும் அல்லவா?'' என்றார். ""அப்படியும் சொல்ல முடியாது! சில ஆடுகளுக்கு எவ்வளவு தீனி கொடுத்தாலும் இருக்கிற எடைதான் இருக்கும்,'' என்றார் பீர்பல். ""நீ சொல்வதை நம்பமுடியவில்லையே! எதற்கும் இந்தக் கிடங்கிலிருந்து ...

மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்!

Posted: 24 Feb 2015 03:41 AM PST

1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது / section 180. Rs.50 fine 2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine 3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine 4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine 5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine 6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. ...

Mazhai Vara Pogudhe | Video Song | Yennai Arindhaal

Posted: 24 Feb 2015 03:40 AM PST

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகக் கோப்பை கிரிக்கெட்: இரட்டை சதம் அடித்து கெயில் சாதனை

Posted: 24 Feb 2015 03:33 AM PST

- 24 February 2015 12:29 PM IST உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.1 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 329 ரன்கள் எடுத்துள்ளது. கிறிஸ்ட் கெயில் 207 எடுத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறில் இரட்டை சதம் அடித்து கெயில் சாதனை படைத்துள்ளார். - dinamani

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Posted: 24 Feb 2015 03:27 AM PST

நீதிபதி குமாரசாமி காட்டம்! 29 நாட்கள் கடந்தும் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணை அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா தரப்பு சார்பாக வழக்கறிஞர்கள் சுதந்திரம், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, பன்னீர்செல்வம், திவாகர், நாகராஜன், பரணிகுமார், செல்வக்குமார், தனஞ்செயன், மகேஷ்வரன் இவர்களோடு எம்.பி நவநீதகிருஷ்ணனும் ஆஜராகி வருகிறார்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலனும், டி.எஸ்.பியான சம்பந்தமும், இவர்கள் தரப்பு சார்பில் ...

என் காதல் கணவா..!

Posted: 24 Feb 2015 01:54 AM PST

அத்தை மகனே என் மாமனே என் பிள்ளையின் தகப்பனே நீ வேடிக்கை பார்க்கையில் நான் விதையாக இருந்தேன் நீ விளையாடும் பருவத்திலே நான் வேடிக்கைப் பார்த்தேன் நீ விறுவிறுப்பாய் வளர்ந்திடவே நான் விளையாடித் திரிந்தேன் நீ வில்அம்பாய் காதல் பார்வை வீச நான் விறுவிறுப்பாய் வளர்ந்தேன் நீ விசிய காதல்அம்பில் மனைவியாக்க நான் காதல் பார்வையை ரசித்து கரைந்தேன் நீவாழ்வின் விதையை உற்பத்தி செய்ய நான் மனைவியென உன்னுள் மூழ்கிபோனேன் நீ விதைத்த விதை வேரூன்ற பாடுபட நான் விதைக்கு பதியமிட்டு மகிழ்ந்தேன் - நீ ...

சமாதி! - கவிதை

Posted: 24 Feb 2015 01:46 AM PST

- தேசப் பிதாவே... உன் பிறந்த நாள் இறந்த நாள் மட்டுமே உன்னை நினைவு கூர்கிறோம்! உன் சிலைக்கு மாலையிடுகிறோம் வணங்கி மரியாதை செலுத்துகிறோம்! பாடல்கள் பாடுகிறோம் பஜனைகள் செய்கிறோம் ராட்டை சுற்றுகிறோம் மத ஒற்றுமை பேசுகிறோம்! ஒரு நாள் மட்டுமே இந்த நிகழ்வுகள் மறுநாளிலேயே உன்னை மறந்து விடுகிறோம்! என்ன செய்வது... எங்களால் உன்னைப் போல் எளிமையாக, இயல்பாக வாழ முடியாது! ராட்டைச் சுற்றி உடை போடத் தெரியாது வேர்க்கடலையும், வெள்ளாட்டுப் பாலும் சாப்பிடத் தெரியாது! உன் போதனைகள் சரியானதாக ...

முத்தம்

Posted: 24 Feb 2015 01:42 AM PST



--
கொடுத்ததற்கான அடையாளம்
உன்னிடமும் இல்லை
பெற்றுக்கொண்டதற்கான அடையாளம்
என்னிடமும் இல்லை
காற்றில் கறைந்து செல்கிறது
நம்
கைப்பேசி முத்தம்!
-

==========================================

-பவித்ரா

பெரிய பெரிய ஆசைகள்

Posted: 24 Feb 2015 01:38 AM PST

- மண்ணில் வாழும் மனிதனும் சரி விண்ணில் இருக்கும் தேவனும் சரி முற்றிலும் துறந்த முனிவனும் சரி ஆசையில்லாமல் இருந்தனரா? - ஆசையில் அசை போட்டு கற்பனையில் மிதந்து காற்றினிலே கோட்டை கட்டுவார்கள் சோம்பேறிகள். - ஆசையையே ருசி பார்த்து நிஜவாழ்வில் தின்று ஏப்பமிட்டு அதிர்ஷ்ட வாழ்க்கை வாழ்பவர்கள் உழைப்பாளிகள். - பிறந்த குழந்தை முதல் இறக்கும் மனிதன் வரை பூமி பிறந்த காலம் முதல் அது அழியும் காலம் வரை எங்கும் எப்போதும் இருப்பது ஆசை! ஆசை!! - ஆடையில்லாதவன் அரை மனிதன் ஆசை ...

எத்தனை மாற்றம் மங்கையரில்...!

Posted: 24 Feb 2015 01:22 AM PST

நாற்பது வயதைக் கடக்கும் மத்திம வயதிற்குரிய பெண்களுக்கு ஏதோ ரொம்ப வயதாகி விட்டது போன்ற பிரமை ஏற்பட்டு, பலவித மனக்குழப்பங்களில் இருப்பார்கள். இதில் மனரீதியான பாதிப்பை அடைபவர்களும் ஏராளம். இந்த வயதுடைய பெண்கள் என்றுமே தனது உண்மையான வயதை மனதிற்குள் கொண்டு செல்லக்கூடாது. குழந்தையாகும் மனம்: என்னுடைய நண்பர்களுள் ஒருவர் 60 வயதுக்காரர். ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். ஜிம் செல்வார். முகநூலில் இருக்கிறார். கவிதைகள் எழுதி, அதை புத்தகமாக தொகுத்து இருக்கிறார். அவரிடம் உங்களுடைய வயது என்ன என்று ...

டிராய் புதிய நடவடிக்கை எதிரொலி: தொலைபேசி கட்டணங்கள் குறைகிறது

Posted: 24 Feb 2015 12:48 AM PST

புதுடெல்லி: கைபேசி மற்றும் தரைவழி இணைப்பு தொலைபேசி கட்டணங்கள் அதிரடியாக குறைகின்றன. தொலைபேசி மற்றும் கைபேசி நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களின் எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் பேசும் போது அதற்காக தனி கட்டணம் வசூலிக்கின்றன. தற்போது இது நிமிடத்திற்கு 20 காசுகளாக உள்ளது. இந்த கட்டணத்தை தரைவழி இணைப்புகளுக்-கு முழுமையாக ரத்து செய்ய டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது. கைபேசிக்கு 14 காசுகளாக குறைக்கப்படுகிறது. இதையடுத்து கைபேசி மற்றும் தரைவழி இணைப்பு கட்டணங்கள் அதிரடியாக ...

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 23 Feb 2015 07:57 PM PST

ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*

ஒரே நாளில் 31 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 774 ஆக உயர்ந்தது

Posted: 23 Feb 2015 03:59 PM PST

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 31 பேர் பலியானதையடுத்து இந்த ஆண்டில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 774 ஆக உயர்ந்துள்ளது. எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™