Tamil News | Online Tamil News |
- ஆதார் எண், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு அதிர்ச்சி: காஸ் வினியோகத்தை துண்டித்தன எண்ணெய் நிறுவனங்கள்
- ஜெ., பிறந்த நாளில் பின்னுக்கு தள்ளப்பட்ட முதல்வர்
- ராகுல் எங்கிருக்கிறார் என்பதை தெரிவிக்க காங்., மறுப்பு
- ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசு அமைக்க உடன்பாடு: பி.டி.பி., - பா.ஜ., கட்சிகள் இணைந்து ஆட்சி
- ராமர் கோவில் பிரச்னைக்கு தீர்வு!
- மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு அதிக பங்கு
- பசுமை திட்டங்களுடன் ரயில்வே பட்ஜெட்!
- சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் ரூ.500 கோடி சொத்துகள் பறிமுதல்
- 'கதை சொல்லாதீங்க; நிரூபிச்சு காட்டுங்க': நீதிபதி காட்டம்
- நிதி நெருக்கடியில் கோடிகளை கொட்டும் சந்திரபாபு நாயுடு
- ஷாப்பிங் கிளம்பினார் காங்., - எம்.பி: காத்திருந்தது 'ஏர் இந்தியா' விமானம்
| ஆதார் எண், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு அதிர்ச்சி: காஸ் வினியோகத்தை துண்டித்தன எண்ணெய் நிறுவனங்கள் Posted: சமையல் காஸ் மானியம் பெற, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு, காஸ் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் துண்டித்து உள்ளன; இதனால், நுகர்வோர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.'சமையல் காஸ் சிலிண் டர் கேட்டு, பதிவு செய்ய, தானியங்கி சேவையை தொடர்பு கொள்ளும்போது, காஸ் சிலிண்டர் வேண்டும் கோரிக்கை பதிவாகாமல், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமையிடம் உடனடியாக அளிக்க வேண்டும்' என, தகவல் சொல்வதாக, நுகர்வோர் குற்றம்சாட்டி உள்ளனர். சந்தை விலை:தமிழகத்தில், இந்தியன் ஆயில், 91 லட்சம்; பாரத் பெட்ரோலியம், 39 லட்சம்; ... |
| ஜெ., பிறந்த நாளில் பின்னுக்கு தள்ளப்பட்ட முதல்வர் Posted: சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 67வது பிறந்த நாள் விழாவை, அ.தி.மு.க.,வினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த விழா மேடையில், அமைச்சர்கள் முன் வரிசையில் அணிவகுக்க, முதல்வர் பன்னீர்செல்வம் பின் வரிசையில் நின்றார். கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில், கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., ஆகியோர், உற்சாகமாக கலந்து கொண்டனர்.ஏற்பாடு: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது பிறந்த நாளையொட்டி, அரசு துறைகள் சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு, அமைச்சர்கள் ஏற்பாடு செய்தனர். இம்முறை, அவர் முதல்வராக இல்லாததால், அவர் பெயரை குறிப்பிடாமல் ... |
| ராகுல் எங்கிருக்கிறார் என்பதை தெரிவிக்க காங்., மறுப்பு Posted: புதுடில்லி: ''காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் இரண்டு வாரம் விடுமுறையில் சென்றுள்ளார்,'' என அந்தக் கட்சியின் தகவல் தொடர்பாளர் ரன்தீப்சுர்ஜிவாலா நேற்று தெரிவித்தார். அதேநேரத்தில் அவர் உள்நாட்டில் இருக்கிறாரா அல்லது வெளிநாடு சென்றுள்ளாரா என்ற தகவலை தெரிவிக்க மறுத்து விட்டார்.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவரான ராகுல் பங்கேற்கவில்லை. அதனால் 'பார்லிமென்டின் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்க மாட்டார். ஏப்ரல் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு நடைபெற ... |
| ஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசு அமைக்க உடன்பாடு: பி.டி.பி., - பா.ஜ., கட்சிகள் இணைந்து ஆட்சி Posted: புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், முதல் முறையாக, பா.ஜ.,வும், பி.டி.பி., எனப்படும், மக்கள் ஜனநாயக கட்சியும் இணைந்து, மார்ச் 1ல் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன. இதற்கான உடன்பாடு, இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே, டில்லியில் நேற்று உருவானது.நேற்று டில்லி சென்ற மெகபூபா, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவின் வீட்டில், அவரை சந்தித்து பேசிய போது, இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது என உறுதி செய்யப்பட்டது. இதை, இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களிடம் அறிவித்தனர்.வித்தியாசமான கூட்டணி: அப்போது, மெகபூபா முப்தி கூறியதாவது: நாங்கள் ஆட்சியை பங்கிட்டுக் கொள்வதற்காக ... |
| ராமர் கோவில் பிரச்னைக்கு தீர்வு! Posted: அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்னைக்கு சுமுக தீர்வு காணும் முயற்சியில், அந்த வழக்கில் தொடர்புடைய, கோவில் மற்றும் மசூதி நிர்வாகிகள், நேருக்கு நேர் சந்தித்து பேசி, உடன்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யில் உள்ளது அயோத்தி நகரம். ராமபிரான் அவதரித்த இடமாக கருதப்படும் அங்கு இருந்த ராமர் கோவில், சில நூற்றாண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டு, பாபர் மசூதி எழுப்பப்பட்டது. அதன் பிறகு, சில ஆண்டுகளுக்கு முன், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதையடுத்து, பிரச்னைகள் ஏற்படவே, ... |
| மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு அதிக பங்கு Posted: புதுடில்லி: மத்திய அரசின் வரி வருவாயில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவை, 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என, நிதி கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான நிதி பகிர்தலை வரையறுக்க, ஒய்.வி.ரெட்டி தலைமையில், 14வது நிதி கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன், தற்போது மத்திய அரசுக்கு வழங்கியுள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் வரி வருவாயில், மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை, தற்போதைய 32 சதவீதத்திலிருந்து, 42 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இதனடிப்படையில், மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில், 3.48 ... |
| பசுமை திட்டங்களுடன் ரயில்வே பட்ஜெட்! Posted: புதுடில்லி: பார்லிமென்டில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில், இதுவரை இல்லாத வகையில், ஏராளமான பசுமைத் திட்டங்களும், அந்த திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் அதிக அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பா.ஜ.வை சேர்ந்த அமைச்சர் சுரேஷ் பிரபு, முதல் முறையாக நாளை, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அவர், பல துறையினரையும் சந்தித்து, ஆலோசனைகளையும், தேவைகளையும் கேட்டறிந்து வருகிறார். ரயில்வே பட்ஜெட்டில், முன்னெப்போதும் இல்லாத வகையில், பல பசுமைத் திட்டங்கள் இடம்பெறும் என, ரயில்வே அமைச்சக ... |
| சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் ரூ.500 கோடி சொத்துகள் பறிமுதல் Posted: கோல்கட்டா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேலும், 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று பறிமுதல் செய்தனர்.மேற்குவங்கத்தில் செயல்பட்டு வந்த, சாரதா நிதி நிறுவனம், பொது மக்களிடம் பணம் வசூலித்து, அவர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், கோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, சாரதா நிறுவன பங்குதாரர்கள், நிறுவனர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தாவுக்கும், இந்த வழக்கில் தொடர்பு ... |
| 'கதை சொல்லாதீங்க; நிரூபிச்சு காட்டுங்க': நீதிபதி காட்டம் Posted: பெங்களூரு: "ஜெயலலிதாவுக்கு, 66.65 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதை விளக்கமாக கூற வேண்டும். கதை சொல்வதை விட்டுவிட்டு, நிரூபிக்க வேண்டும்,'' என, நீதிபதி குமாரசுவாமி காட்டமாக கூறினார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, 33வது நாளாக, நேற்றும் நடந்தது.இதில், நீதிபதி குமாரசுவாமி கூறியதாவது: உங்கள் தரப்பில் (ஜெ., வழக்கறிஞர் குமாரிடம்), சொத்து மதிப்பு எவ்வளவு, வருமானம், செலவு எவ்வளவு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். செலவை அதிகமாக கணக்கிட்டதாக கூறுகிறீர்கள். எதில் அதிகமாக கணக்கிட்டு உள்ளனர் ... |
| நிதி நெருக்கடியில் கோடிகளை கொட்டும் சந்திரபாபு நாயுடு Posted: ஐதராபாத்: ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலுங்கானா என, இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதன்பின், ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றவர், தெலுங்கு தேசத்தை சேர்ந்த சந்திரபாபு நாயுடு.பிரிவினைக்கு பின், ஆந்திர மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. அதனால், 'பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும்' என, மத்திய அரசிடம் மன்றாடி வருகிறார் முதல்வர் நாயுடு. அதேநேரத்தில், தனக்கான பயண செலவுகளை, நாயுடு எந்த வகையிலும் குறைக்கவில்லை. 'அவர் அடிக்கடி விமானத்தில் பறக்கிறார். முதல்வராக பதவியேற்ற பின், எட்டு மாதங்களில், நாயுடுவின் விமான பயண செலவு மட்டும், 20 கோடி ... |
| ஷாப்பிங் கிளம்பினார் காங்., - எம்.பி: காத்திருந்தது 'ஏர் இந்தியா' விமானம் Posted: புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யுமான, ரேணுகா சவுத்ரியின் அலட்சியத்தால், 'ஏர் இந்தியா' விமானம் புறப்படுவதில், 45 நிமிடங்கள் கால தாமதமானது. இதுகுறித்து, விரிவான விசாரணைக்கு, ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டு உள்ளது.தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த, காங்., - எம்.பி., ரேணுகா சவுத்ரி, டில்லியிலிருந்து ஐதராபாத் செல்வதற்காக, ஏர் இந்தியா நிறுவன விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். சரியாக, இரவு 7:00 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், சவுத்ரி வராத தால், விமான நிலையத்திலேயே காத்து இருந்தது.விமான நிலைய அதிகாரிகள், ஒலி பெருக்கி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 25,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |