Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


புதுமையான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் சுரேஷ் பிரபு

Posted:

ரயில்வே பட்ஜெட் வரலாற்றில், முதல் முறையாக, குறிப்பிட்ட வழித்தடங்களில் புதிய ரயில்கள் அல்லது கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லாமல், நேற்று பார்லிமென்டில், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, 'பட்ஜெட்டில் அறிவிக்கும் அளவிற்கு, புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்புகள், முக்கியமான விஷயங்கள் அல்ல; சாதாரண நிர்வாக ரீதியான விஷயம் தான்; அவற்றை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்' என்று கூறி, ரயில்வே பட்ஜெட்டின் வித்தியாசமான அணுகுமுறையை உறுதி செய்தார்.அடுத்த ஐந்து ஆண்டுகளில், என்னென்ன மூலதன ...

தமிழக திட்டங்களுக்கு ரூ.2,434 கோடி ஒதுக்கீடு: மதுரை - குமரி இரட்டை ரயில் பாதை வருகிறது

Posted:

ரயில்வே பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 2,434 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது; இது, கடந்த ஆண்டை விட, 740 கோடி ரூபாய் அதிகம். ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்த, மதுரை - குமரி இரட்டை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டதற்கு, பயணிகளிடம் வரவேற்பு கிடைத்து உள்ளது.பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின் முழுமையான ரயில்வே பட்ஜெட், நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கடந்த ஆண்டை விட, அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.* புதிய ரயில் பாதைக்கு, 23.10 கோடி ரூபாய்; அகல ரயில் ...

ராகுல் மாயம்; தகவல் தருவோருக்கு 'மெகா பரிசு' என கிண்டல்: அலகாபாத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை

Posted:

லக்னோ: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு சென்றிருப்பதாகவும், உள்நாட்டில், உத்தரகண்ட் மாநிலம், கங்கோத்ரியில் இருப்பதாகவும் வதந்திகள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலும் தர்மசங்கடத்தை உருவாக்கும் வகையில், உத்தர பிரதேச மாநிலத்தில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அவற்றில், 'காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காணாமல் போய் விட்டார். அவரைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு, மெகா பரிசு வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.சலசலப்பு: ...

ரயில்வே பட்ஜெட்டில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள்!

Posted:

* உணவு: ரயில் பயணத்தின் போது, பயணிகளுக்கு தரமான உணவு வழங்குவதற்காக, ஆங்காங்கே, சமையலறைகள் அமைக்கப்பட உள்ளன. அந்த சமையலறைகளை, அந்தந்த பகுதியில் உள்ள, பிரபல தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணியருக்கு தரமான உணவு கிடைப்பதோடு, தனியார் நிறுவனங்களும் இந்த ரயில்வேயில் நுழைய வாய்ப்பு கிடைக்க உள்ளது. * ரயில் நிலையங்களை மறுஅபிவிருத்தி செய்யும் பணிகள் தனியாருக்கு கொடுக்கப்படுகின்றன. இதில் எந்த நிறுவனம் வேண்டுமானால் பங்கெடுத்துக்கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனம், ...

ரயில்வே பட்ஜெட்டுக்கு ஜெ., வரவேற்பு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Posted:

சென்னை: தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம், ரயில்வே பட்ஜெட்டை வரவேற்காத நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, ரயில்வே பட்ஜெட்டை வரவேற்றிருப்பது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பா.ஜ., அரசின், முதல் முழுமையான ரயில்வே பட்ஜெட், நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இது தொடர்பாக, ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: ரயில்வே அமைச்சர், பயணிகள் கட்டணத்தை உயர்த்தாதது, மகிழ்ச்சி அளிக்கிறது. பயணிகள் பாதுகாப்பு, குறிப்பாக பெண் பயணிகள் பாதுகாப்பு, தூய்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை ...

வல்லூரில் வணிக மின் உற்பத்தி துவக்கம்: தமிழகத்திற்கு கூடுதலாக 930 மெகாவாட் மின்சாரம்

Posted:

வல்லூர், மூன்றாவது அலகில், வணிக மின் உற்பத்தி துவங்கி உள்ளது. தூத்துக்குடி என்.எல்.சி., மின் நிலையத்தில், விரைவில் மின் உற்பத்தி துவங்க உள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக, 930 மெகாவாட் மின்சாரம் கிடைக்க உள்ளது.மூன்று அலகுகள்: தமிழ்நாடு மின் வாரி யம், தேசிய அனல்மின் கழகமான - என்.டி.பி.சி., இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், வல்லூரில், தலா, 500 மெகாவாட் திறன் கொண்ட, மூன்று அலகுகள் உடைய அனல்மின் நிலையத்தை அமைத்துள்ளன. இங்கு உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில், தமிழகத்திற்கு, 1,040 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வல்லூர், முதல் அலகு, அக்., 2010; ...

ஐ.மு.கூ., அரசின் சட்டம்: நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது

Posted:

புதுடில்லி: ''முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட, நிலம் கையகப்படுத்துதல் சட்டம், நாட்டின் பாதுகாப்பில், அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ திட்டங்கள் குறித்து, பாக்., தெரிந்து கொள்ள முடியும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், நேற்று ராஜ்யசபாவில் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: முந்தைய அரசு அமல்படுத்திய, நிலம் கையகப்படுத்துதல் சட்டம், பல குறைபாடுகள் உடையது. அந்தச் ...

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., - காங்கிரஸ்: 'ஆட்சியில் பங்கு' பேச்சுவார்த்தை துவக்கம்?

Posted:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு, ஓட்டுகளை தி.மு.க., பெற்றுள்ளதால், வரும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வேலையில் தி.மு.க., தீவிரமாகி இருக்கிறது. இதற்காக, தே.மு.தி.க., - காங்., போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.தமிழகம், கேரள மாநிலங்களில் தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி மாற்றம் நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, அ.தி.மு.க., ஆட்சிக்கும் மாற்றம் வரும் என, எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்புகின்றன. அந்த அடிப்படையில், அடுத்து நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சிகளுக்கே ஆட்சி அமைக்கும் ...

'தினமலர்' ஆசிரியர், வெளியீட்டாளருக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து

Posted:

சென்னை: சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில், 'தினமலர்' நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது, தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 'நாளிதழின் ஆசிரியர், வெளியீட்டாளர், அவதூறு குற்றம் புரிந்ததாகவோ, கவனக்குறைவாக செய்தி வெளியிட்டதாகவோ கூற முடியாது' என்றும், உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர், 21ம் தேதி, 'தினமலர்' நாளிதழில், 'கிடைக்குமா பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை... உற்பத்தி குறைவால் தமிழக அரசு தவிப்பு' என்ற தலைப்பில், கட்டுரை வெளியானது.இதையடுத்து, 'தினமலர்' நாளிதழ் ஆசிரியரான, டாக்டர் இரா. ...

ஆசியாவின் சிறந்த பெண் நிர்வாகிகள்: 6 இந்தியர்கள் தேர்வு!

Posted:

நியூயார்க்: போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள, ஆசியாவின் சக்தி வாய்ந்த, 50 பெண் நிர்வாகிகளில், ஆறு இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர்.பாரம்பரிய ஆணாதிக்க துறைகளின் சுவரை துளைத்து, வெற்றிப் பாதையில் முன்னேறி வரும் அந்த பெண்களின் பட்டியல் விவரம்: அருந்ததி பட்டாச்சார்யா, 58, தலைவர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' : இந்திய வங்கித் துறையின் முதல் பெண்மணி' என அழைக்கப்படும் இவர், 18 லட்சம் கோடி ரூபாய் சொத்துள்ள வங்கியையும், 22.50 கோடி வாடிக்கையாளர்களையும் நிர்வகித்து வருகிறார்.சந்தா கோச்சார், 53, தலைமை செயல் அதிகாரி, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்: அருந்ததி பட்டாச்சார்யாவைத் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™