Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மலேசியா வாசுதேவன் மறைந்த தினம் (பிப்.20, 2011)

Posted: 19 Feb 2015 11:33 AM PST

மலேசியா வாசுதேவன் (சூன் 15, 1944 - பெப்ரவரி 20, 2011) கேரளத்தை பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர்-அம்மாளு தம்பதியருக்கு மலேசியா வாசுதேவன் 8-வது மகனாக பிறந்தார். மலேசியாவில் தமிழர் இசைக்குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார். மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளை தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாக தயாரித்த 'இரத்தப் பேய்' என்ற தமிழ் படத்தில் முதன்முதலாக நடிகனாக அறிமுகமாகினார். இளையராஜாவின் 'பாவலர் பிரதர்ஸ்' ...

அன்பான வேண்டுகோள்

Posted: 19 Feb 2015 10:31 AM PST

அன்புள்ள நண்பர்களே.....
என் புதல்வியின் பாடசாலைத் தேவைக்காக
(வெண்கட்டி ) என்ற தலைப்பை. மையமாக
வைத்து ஒரு. கவிதை வரைந்து. தருமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி

பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் MP3

Posted: 19 Feb 2015 09:48 AM PST

பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் பாடலை MP3 -யாகத் தரவிறக்கம் செய்ய! தரவிறக்கம் செய்ய: OpenDrive அல்லது DropBox

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Posted: 19 Feb 2015 09:24 AM PST

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்



மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு

Posted: 19 Feb 2015 09:08 AM PST

'ஸ்மார்ட் கார்டு--புது ரேஷன் கார்டு' சென்னை: தமிழகத்தில், 'ஸ்மார்ட் கார்டு' வடிவத்தில் இன்னும் ஆறு மாதங்களில் புது ரேஷன் கார்டுகளை வழங்கும் பணி தீவிரமடைந்து உள்ளது. ஆதார் அடையாள அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்கள்அடிப்படையில், இந்த ஸ்மார்ட் கார்டுகள் தயாராகின்றன. 'ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, அடுத்த சில மாதங்களில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும்' என, சட்டசபையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நேற்று உறுதிஅளித்தார். 'ஸ்கேன்' வசதிஇருக்கும்:தமிழகத்தில், மத்திய அரசின், 'ஆதார்' விவரங்கள் அடிப்படையில், ...

முலாயம் இல்ல திருமண விழா: மோடி பங்கேற்பு

Posted: 19 Feb 2015 07:26 AM PST






புதுடில்லி: உ.பி., மாநில முன்னாள் முதல்வர் முலாயம்சிங்கின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முலாயம் சி்ங்கின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், லாலு பிரசாத் மகள் ராஜ் லட்சுமிக்கும் வரும் 21-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது

ராணுவ புரட்சி:ராஜபக்சேவுக்கு சம்மன்

Posted: 19 Feb 2015 07:16 AM PST



கொழும்பு: இலங்கையில், ராணுவ புரட்சி நடத்த திட்டமிட்டதாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், மார்ச் 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி இலங்கை சுப்ரீம் கோர்ட் ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது

1000 கிலோ திருக்கை மீன்

Posted: 19 Feb 2015 06:33 AM PST

நாம ஒண்ணு நினைச்சா...

Posted: 19 Feb 2015 05:19 AM PST

பாதாம் பார்த்தால் மூளை வளருமாம்..! பாதாம் பார்த்ததே காலேஜ் படிச்ச முடிச்ச அப்புறம்தான்..! - znrc - --------------------------------------- - நாம ஒண்ணு நினைச்சா, நாமளே வேற ஒண்ணும் நினைக்கிறோம் - mrithula - ------------------------------------- - கடவுள் உலகத்தைக் கண்காணிக்கிறார். கடவுளை கேமரா கண்காணிக்கிறது..! - thotta - ------------------------------------- - பொய் சொல்றப்ப குழந்தைகளுக்கு சிரிப்பு வந்துருது, பெரியவங்களுக்கு பதற்றம் வந்திருது..! - arattaigirl - --------------------------------------- - எனக்கு ...

எதுவும் தெரியா விட்டாலும் அமைதியாக இரு..

Posted: 19 Feb 2015 05:14 AM PST

எதுவும் தெரியா விட்டாலும் அமைதியாக இரு... தேர்வு அறையைப் போல..! - manipmp - ----------------------------------- - மயிரிழையில் உயிர் தப்புவது பேனுக்குத்தான் சாத்தியம்..! - arattaigirl - ------------------------------------ - மேத்ஸ் நோட்ல பேனாவால் ஹோம் வொர்க் பண்றவன்தான் உலகத்திலேயே பெரிய தைரியசாலி..! - miniminimeens - -------------------------------------- - நூறு வருஷங்கள் கழிச்சு ஜெனிடிக் ஆராய்ச்சி பண்ணினா போதிதர்மன் கிடைக்க மாட்டான்...நிறைய போதை தர்மன்தான் கிடைப்பான்...! - ckcbe - --------------------------------------- ட்விட்டரில் ...

வெற்றிக்குப் பின்னால் மூன்று முகங்கள்! ’பாஞ்ச் சால் கெஜ்ரிவால் பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’

Posted: 19 Feb 2015 03:45 AM PST

சொல்லி அடித்துவிட்டார் டெல்லி கெஜ்ரிவால். திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டமாக ஆகிவிட்டது தலைநகரில்! 'தேக்கோ தேக்கோ ஆம் ஆத்மி தாக்கத்து தேக்கோ... பாஞ்ச் சால் கெஜ்ரிவால்... (அஞ்சு வருஷம் கெஜ்ரிவால்) பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...' - விஷால் தத்லானி அன்கோ உருவாக்கிய இந்தப் பாட்டை கடந்த இரண்டு மாதங்களாக தேசியகீதம் போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரவர்களுக்கு பிடித்த மெட்டில் பாடிக் கலக்கினார்கள். டெல்லி நகருக்கு உள்ளேயும் புறநகர் பகுதிகளிலும் மால்கள், பஜார்கள், தெருக்கள், கிராமங்கள் என்று எங்கேயும் ...

எது தூய்மை ? - எனில் இணைய இலக்கிய இதழ் !

Posted: 19 Feb 2015 03:29 AM PST

எனில் ஒரு இணைய இலக்கிய இதழ். இந்த மாத இதழில் ' எது தூய்மை ? ' என்ற தலைப்பில் எழுதப்பட்ட எனது கட்டுரை இடம்பெற்றுள்ளது. அந்தக் கட்டுரை - http://www.eanil.com/?p=657 ...

ரசித்தவை

Posted: 19 Feb 2015 12:47 AM PST

குழந்தையிடம் உற்சாகமாக பேசுங்கள்

இறைவனிடம் மவுனமாக பேசுங்கள்

ராஜி ராணி

துன்பச்சிறை.

Posted: 19 Feb 2015 12:32 AM PST

ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன். " என்ன காரணம்?" என்று கேட்டார் ஒரு பெரியவர். "மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்" என்றான் "உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்" என்றார் பெரிவர் "அப்படியா சொல்கிறீர்கள்?" "ஆமாம்!" "அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" "மனதைப் புரிந்து கொள்... அது போதும்." "எப்படிப் புரிந்து கொள்வது?" என்றான் அவன். "இந்தக் கதையைக் கேள்" என்று அவர் சொன்னார் - "ஆசையாக ...

ரசித்தவை!

Posted: 19 Feb 2015 12:29 AM PST

புதியவன்

Posted: 18 Feb 2015 10:17 PM PST

பெயர்: முனைவர் சுரேஷ்குமார்
சொந்த ஊர்: புதுவை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பர்கள் மூலம்
பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது
தொழில்: ஆராய்ச்சி நிபுணர் கென்யா வில் வேலை பார்கிறேன்
மேலும் என்னைப் பற்றி: நான் உங்களில் ஒருவனாக இருக்க ஆசை படுகிறேன்

பேன் மாத்திரை

Posted: 18 Feb 2015 08:07 PM PST

பேன் மாத்திரை

முகநூல் /மின்னஞ்சல் மூலம் வந்தது .
அந்த நடிகைக்கு பேன் தொல்லையா ?





ரமணியன்

ந.க.துறைவன் புதுக்கவிதை

Posted: 18 Feb 2015 07:42 PM PST

சுபம்….சுகம்….!! * பேரூந்தில், நடைபாதையில் திருமணக் கூட்டம் திருமண மண்டபங்களில் மாப்பிள்ளை – பெண் வரவேற்பு கலகலப்பானப் பேச்சுக்கள் இசைக் கச்சேரியின் இரைச்சல் வரிசையில் நின்று பரிசுப் பொருள்கள் அன்பளிப்புச் செய்து வாழ்த்துபவர்கள் சிரித்த முகத்தோடு வீடீயோ, போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கைக் குலுக்குகிறார்கள். உணவு கூடத்தில் சத்தமிட்டு பரிமாறல்கள் தேவையானவற்றைக் கேட்டு விரும்பிச் சாப்பிடுபவர்களின் அவசரச் சத்தங்கள். முடித்தவர்கள் விரைந்து எழுந்துப் போய் கைகழுவி வெளியேறுபவர்களின் கைகளில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™