Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஏவப்படும் 'ஆம் ஆத்மி' அஸ்திரம்: ரகசிய வியூகத்தில் எதிர்க்கட்சிகள்

Posted:

குளிர்கால கூட்டத்தொடரில், மதக் கலவர விவகாரங்களை, சபையில் எழுப்பி, ராஜ்ய சபாவை, முழுவதுமாக முடக்கிக் காட்டிய எதிர்க்கட்சிகள், அதே பிரச்னையை, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், வேறொரு கோணத்தில் கையாள திட்டமிட்டுள்ளன. இதன் பின்னணியில், எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து ஆம் ஆத்மியும் திரை மறைவில் காய் நகர்த்தல்களை துவங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.கடந்த சில மாதங்களில், தலைநகர் டில்லியில், சர்ச்சுகள் மீது அடுத்தடுத்து நடந்த தாக்குதல்கள், பலருக்கும், அதிர்ச்சியை ஏற்படுத்தின. சட்டம் - ஒழுங்கு, டில்லி மாநகரத்தில், பெரும் சவாலான பிரச்னையாக இருந்து வருவது, அரசியல் ...

பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில் சுகாதாரத்துக்கு சொற்ப நிதி: ஒதுக்கப்பட்ட தொகையையும் வீணடிக்கும் மாநிலங்கள்

Posted:

புதுடில்லி: பன்றிக்காய்ச்சலுக்கு, இந்தாண்டில் மட்டும் இதுவரை, 663 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், சுகாதார வசதிக்கு, மத்திய அரசு மிகக்குறைந்த நிதியை ஒதுக்கி வருவதும்; அவ்வாறு ஒதுக்கியதில் கணிசமான நிதியை, மாநில அரசுகள் செலவழிக்காமல் வைத்துள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.நாடு முழுவதும், பன்றிக்காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில், இந்த நோய்க்கு, 218 பேர் பலியாகினர். இந்தாண்டில், முதல் இரண்டு மாதங்களிலேயே இந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை, இரண்டு மடங்கிற்கும் அதிகமாக ...

ஜெயலலிதா குறித்த பேச்சால் தமிழக சட்டசபையில் அமளி: தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர் முழுவதும் நீக்கம்

Posted:

சென்னை: ஜெயலலிதா குறித்த தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பேச்சால் சட்டசபையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. தே.மு.தி.க., - அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒரே நேரத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரை தாக்க முயன்றதாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் நீக்கப்பட்டு உள்ளனர். அக்கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், உள்ளிட்டோரின் செயல்பாடு குறித்து, சட்டசபை உரிமைக் குழு விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.குடிமகன்: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சட்டசபையில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ...

கனிமொழியுடன் கைகோர்த்த ஸ்டாலின்

Posted:

அழகிரியை கட்சியில் சேர விடாமல் செய்வதற்காக, கட்சியில் எதிரும் புதிருமாக இருந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும், கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழியும், திடீரென கைகோர்த்திருப்பது, கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.எலியும், பூனையுமாக...: இதுகுறித்து தி.மு.க., வட்டாரத்தினர் கூறியதாவது: தி.மு.க.,வில் கடந்த பல ஆண்டுகளாகவே, ஸ்டாலினும், கனிமொழி யும் எலியும், பூனையுமாக தான் இருந்து வருகின்றனர். கட்சியில் எப்போதெல்லாம் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் தன் ...

முலாயம் பேரன் மண விழாவில் மோடி

Posted:

புதுடில்லி: சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேரனின் திருமண விழா வில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.எடாவா தொகுதி: சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் பேரன் தேஜ்பிரதாப் சிங். இவர், உ.பி., மாநிலம் எடாவா தொகுதியின் எம்.பி.,யாகவுள்ளார். இவருக்கும், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகள் ராஜ் லட்சுமிக்கும், இம்மாத இறுதியில் திருமணம் நடக்கவுள்ளது. திருமணத்துக்கு முன்னதாக, 'திலக் சடங்கு' எனப்படும், பொட்டு வைக்கும் நிகழ்ச்சி, நாளை நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், ...

பெட்ரோலிய அமைச்சக ஆவணங்களை திருடி தனியார் நிறுவனத்துக்கு கொடுத்த 5 பேர் கைது

Posted:

புதுடில்லி: டில்லியில் உள்ள பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்தில் இருந்து, முக்கியமான ஆவணங்களை திருடி, தனியார் நிறுவனத்துக்கு கொடுத்ததாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்; இவர்களில் இரண்டு பேர் அமைச்சக ஊழியர்கள்.முக்கிய ஆவணங்கள்: டில்லி, சாஸ்திரி பவனில் மத்திய பெட்ரோலிய அமைச்சக அலுவலகம் உள்ளது. இங்குள்ள முக்கியமான ஆவணங்கள் திருடப்படுவதாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நீண்ட நாட்களாகவே, டில்லி போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ஆவணங்களை திருடியதாக ஐந்து பேரை டில்லி போலீசார் கைது ...

தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்': விஜயகாந்த் கடும் கண்டனம்

Posted:

சென்னை: 'தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்ய முடியுமே தவிர, மக்கள் மனதில் இருந்து ஒருநாளும் 'சஸ்பெண்ட்' செய்ய முடியாது' என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: மக்கள் பிரச்னையை பேசவும், அதற்கு தீர்வு காண்பதற்கும்தான் சட்டசபை இருக்கிறது. சட்டசபையில் சிறிதும் நாகரிகமற்ற முறையில், தனி நபர் தாக்குதலை நிகழ்த்தவும், அவைக்கு சம்பந்ததே இல்லாத விஷயங்களை பேசவும் தான், அ.தி.மு.க.,வினர் முயல்கின்றனர். எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் பிரச்னையை திசை திருப்பி, அவர்களை ஜனநாயக கடமை ஆற்ற விடாமல், சபையில் ...

மின் வாரியத்தில் ரூ.1 லட்சம் கோடி முறைகேடு: விசாரணைக்கு தயாராகும் அதிகாரிகள்

Posted:

மின் வாரியத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக கூறி, தொடரப்பட்ட வழக்கு விசாரணை, இம்மாத இறுதியில் வர உள்ளது. இதை எதிர்கொள்ள, மின் வாரிய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.தமிழ்நாடு மின் வாரியம், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதற்கு, அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என, கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையை சேர்ந்த செல்வராஜ் என்பவர், கடந்த மாதம், 7ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதன் விவரம்: தனியாரிடம் இருந்து, அதிக விலைக்கு மின் கொள்முதல் பெற்றது; கூடுதல் விலைக்கு, மின் உபகரணம் ...

'ரயில் கட்டணம் குறையாது': மத்திய இணையமைச்சர் உறுதி

Posted:

பரேலி (உ.பி.,): எதிர்வரும் ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டணங்கள் குறைக்கப்பட வாய்ப்பில்லை என, ரயில்வே துறை இணையமைச்சர், மனோஜ் சின்கா தெரிவித்தார்.இதுகுறித்த கேள்விக்கு, அவர் பத்திரிகையாளர்களிடம் மேலும் கூறியதாவது: ரயில் கட்டணம் ஏற்கனவே குறைவாக உள்ளது; மத்திய அரசும் மானியம் வழங்கி வருகிறது. எனவே, வரும் 26ம் தேதி, பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில், கட்டண குறைப்பு இருக்காது. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் ரயில்வே துறையிடம், நிதி ஆதார வளங்கள் குறைவாகவே உள்ளது. இதை, பட்ஜெட்டில் சரிவிகிதத்தில் கையாள வேண்டியுள்ளது. ...

பீகார் சட்டசபையில் இன்று பலப்பரீட்சை: மஞ்ஜிக்கு ஆதரவு அளிக்க பா.ஜ., முடிவு

Posted:

பாட்னா: பீகார் சட்டசபையில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்ஜி, இன்று நம்பிக்கை ஓட்டு கோருகிறார்; அவருக்கு ஆதரவளிக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது; மஞ்ஜியை தோற்கடிக்க, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ் குமார், அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். பீகாரில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்ஜி தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான நிதிஷ் குமாருக்கும், ஜிதன்ராம் மஞ்ஜிக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. சட்டசபையில், இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மஞ்ஜிக்கு, கவர்னர் கேசரிநாத் திரிபாதி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™